மொழி பெயர்ப்புக் கருவி

Monday, July 11, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(32)

யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 2)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
அடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்? என்று பார்ப்போம்.



முதலில் லக்கினம்,ராசி என்றால் என்ன என்று கூறுகிறேன். லக்கினம் என்றால் உயிர்(காரகன்)நின்ற இடம்.ராசி என்றால் உடல்(காரகன்) நின்ற இடம்.
உடலிலோ அல்லது உயிரிலோ ஞான வாசனை இருந்தாலே போதும், அது ஞானப் பேற்றை உண்டாக்கும்.


கூறியதோர் கன்னியுமே மீனத்தோன்தான்
கொள்கியவன் வணிகனைப் போல் கூர்ந்து செய்வான்
ஆறியதோர் மனம் பார்த்து பின்பு கொள்வான்
ஆசை கொண்டு வெகுமனதாய் ஆலோசிப்பான்
தேறியதோர் வாசியிலே மூழ்கி நிற்பான்
தேவியது பூசையிலே திறமோ கொஞ்சம்
மாறியதோர் மனம் பிடித்தால் வாத சித்தாம்
மயக்கமற்றால் காய சித்தி வருகுந்தானே!
             -அகஸ்தியர் மஹாதிராவகம் 3-


கன்னி மற்றும் மீன ராசி மற்றும் லக்கினகாரர்கள்
வணிகனைப்(முருகன் என்றும் சொல்லலாம்) போல 
கூர்மையாக பல காரியங்களை செய்வார்கள். மனம் கொதிப்போடு அலைபாயும் மனத்தோடு இருப்பவர்களை விலக்கி, ஆறிய, அடங்கிய மனம் கொண்டவர்களைத் தேடிப் போய்க் குருவாய்க் கொள்வார்கள்.


ஞானத்தின் மீது ஆசை கொண்டு வெகு மனதாய் ஆலோசித்து சிந்தையை ஒடுக்குவார்கள். தேறிய வாசி யோகத்தில் நிலைத்து மூழ்கி நிற்பார்கள்
உலக நாயகியான பார்வதி தேவி பூசையில் சிறிது திறம் காட்டுவார்கள். மாறிக் கொண்டே இருக்கும் மனத்தை மாறாமல் இறுக்கிப் பிடித்தால் ரச வாதம் போன்ற சித்துக்கள் கைவரும்.


உலக மயக்கம் அற்றால் காய சித்தி (உடல் அழியாமல் இருக்கும்.{எடுத்துக் காட்டாக, திருவரங்கக் கோயிலில் இருக்கும் ராமானுஜ உடையவர் சன்னதியில் இருக்கும் ஸ்தூல உடல், திருவாரூர் மடப்புரத்தில் இருக்கும் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஸ்தூல உடல்}) 


ரச வாதம் என்பது தாழ்வான உலோகங்களை (இரும்பு, செம்பு போன்றவற்றை),உயர்வான (தங்கம், வெள்ளியாக) உலோகங்களாக மாற்றுவது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தங்கச் சுரங்கங்களே இல்லாத இந்திய நாட்டில் எப்படி இவ்வளவு தங்கம்??? 


பத்மநாபபுரம் ஆலயம் ஒரு உதாரணம் அவ்வளவே!!!
இது போல கோடிக்கணக்கான தங்கம் சித்தர்கள் உண்டாக்கி வைத்து இருக்கிறார்கள்.இந்த தங்கம் செய்யும் வித்தையை வகார வித்தை என்றும் , தங்கத்தை ஆட்கொல்லி! என்றும் அழைக்கிறார்கள்.எனெனில் தங்கம் செய்யத் தெரிந்த எவரையும் உலகம் உயிரோடு விடாது.எனவே தங்கம் செய்யத் தெரிந்தாலும் வெளியே யாரிடமும் சொல்லாதே என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.!!!!


அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

10 comments:

  1. நன்றாக இருக்கிறது swamy..thanks

    ReplyDelete
  2. இவ்வளவு தங்கமும் வகார வித்தையின் மூலமே
    உருவாக்கி இருக்கிறார்களா ?

    ரொம்ப ஆர்வமாக இருக்கிறது ஜி
    தொடருங்கள்

    ReplyDelete
  3. குரு,

    நீங்கள் சொல்வது உன்மைதான் மனிதன் உலோகத்தின் மீது வைக்கும் ஆசையை இறைவன் மேல் வைத்தால்
    எந்த கவலையும் இன்றி வாழலாம். தொடரட்டும் உங்களின் ஆன்மீகப்பணி, என்னை போல் உள்ளவர்களுக்கு
    வழிகாட்டியாக இருந்து கடைத்தேற்றுருங்கள்.


    தங்களின்
    ந.ராஜசேகர்.

    ReplyDelete
  4. Thanks ji. Look forward to further articles. Is there a way to reach you by email. I had sent an email to the address you had provided, not sure if you received, thanks sir

    ReplyDelete
  5. திரு. சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

    தாங்கள் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் ஜோதிடம் பற்றிய தாங்கள் எழுதியுள்ள பாடலும் அதற்கான விளக்கமும் மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து உங்களின் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜோதிடம் குறித்து மேலாதிக்க தகவல்கள் மற்றும் சித்த புருஷர்களின் ஜோதிட பாடல்கள் தங்களிடம் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன்.

    நன்றி

    அன்புடன்
    S. மணிகண்டன்

    ReplyDelete
  6. அன்புமிக்க திரு ராம்குமார் அவர்களே,
    சித்தர்களின் அத்தனை விடயங்களும் அற்புதமே!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.
    ஒன்றுமேயில்லாததிலிருந்து ஒன்றை உருவாக்குபவர்களுக்கு,ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்குவது கடினமல்ல!!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. அன்புமிக்க திரு ந.ராஜசேகர் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி.
    அழியும் பொருள்களின் மேல் வைக்கும் அன்பு இறைவனிடமிருந்து நம்மை தள்ளி வைக்கிறது.இறைவன் மேல் வைக்கும் அன்பு அழிவில்லாத வாழ்வுக்கு இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்கிறது!!!!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. அன்புமிக்க திரு பாஸ்கரன் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.தங்களது மின்னஞ்சல் கடிதம் கண்டேன்.அதில் பதில் தெரிவிக்க என்று கேள்விகள் ஏதும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்!!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. அன்புமிக்க திரு மணிகண்டன் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி.இறைவன் கட்டாய ஓய்வு அளித்துவிட்டான்.மீண்டும் அனுமதித்துவிட்டான்.எழுதுகிறேன்.!!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்