மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 2, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்8

அக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை  அக்கு பஞ்சரைப் (PRACTICAL ACUPUNCTURE) பார்ப்பதில் உள்ளது. அவற்றையே இங்கு நான் விளக்கி வருகிறேன்.


அக்கு பஞ்சர் என்றால் ஊசியைக் குத்தி வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல.வியாதியின் அடிப்படையை களையும், அவற்றைக் களையும் பழக்க வழக்கங்கள், உணவுகள் இவற்றையும் நம் சித்தர்களின் சித்த வைத்தியம் போலவே கூறுகிறது.(போகர்தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் போய் இது போன்ற விடயங்களை அங்கே கற்றுக் கொடுத்தார் என்று கூறுகிறது சரித்திரம் எனவே இதுவும் சித்தர் விஞ்ஞானமே.)


அந்தக் காரணங்களை சித்த வைத்தியத்திலும், பழந்தமிழர் வாழ்வியலிலும் சரியாக விளக்கிக் கூறாறததால் பலவற்றை நானே மூட நம்பிக்கை என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கிறேன்.


பிறகு காரணங்கள் விளங்க விளங்க, பின் எந்த பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.


பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.


அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக 
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.


பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.


அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.


சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.


இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.


விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.


மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.


இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



இப்போதுதான் பதிவிடப்பட்டுள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம் 4 ன் இணைப்பு இதோ.அது வெகு காலமாக கோழி முட்டையை அடைகாப்பது போல் காத்து இன்று வெளி வந்திருக்கிறது.அது பழந்தமிழரின் கால அளவைகள்.பார்த்து இன்புறுங்கள்.தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.எனென்றால் இது நான் மிகவும் யோசித்து இட்ட பதிவு.


http://machamuni.blogspot.com/2010/12/3.html


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  


Post Comment

13 comments:

  1. சாமி ஜி மிக அருமை
    பயனுள்ள பதிவு
    இனி ஜன்னல் திறந்து தூங்குகிறேன்

    ஷரீப்

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, காற்றோட்டமான இடத்தில் தூங்கியதால்தான் நம் முன்னோர்கள் நல்ல பலசாலியாகவும்,நல்ல உடல் நலத்துடனும் திகழ்ந்தார்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. அருமையான பதிவு அன்பரே ,
    ஓதுகின்ற மலக்கட்டை ஊழியவைத்தால்
    உடலிலுள்ள வாதையெல்லாமொடுங்கிப் போகும்
    தாதுற்ற சிறுநீரைத் தெளியவைத்தால்
    சடத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து போகும்
    கோதுற்ற உமிழ்நீரை முரியவைத்தால்
    கூட்டிலுள்ள பகையெல்லாங் குலைந்துபோகும்
    கோதடந்த இவைமுன்றும் களங்கமற்றால்
    கொல்லவந்த காலனையும் வெல்லலாமே !!!

    எப்படி என்ன சிந்த்திருந்தேன் ., தங்களின் பதிவுகண்டு மகிழ்தேன் ..!! கோடான கோடி நன்றிகள் !!

    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை ,
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,
    ஓதுற்ற மலக்கட்டை ஒழிய வைத்தால் என்றிருக்க வேண்டும்.மலக்கட்டு ஒழிப்பதும்,பெருங்குடல் பற்றியும் பல விடயங்களையும் அடுத்தடுத்துக் காண்போம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. நகர வாழ்க்கையில் திருட்டு பயத்தால் ஜன்னல் திறந்து தூங்க முடியவில்லை. தங்கள் பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,
    தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளான கம்பி வலை,க்ரில் கம்பி என்பவற்றை ஏற்படுத்தி கொசுக்களிடம் இருந்தும் திருடர்களிடமிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.காற்று மிகமிக முக்கியம்.அது நம் உயிர் காக்கும் கடவுளல்லவா?
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. உண்மையை அன்பர் மணி அவர்கள் வெளிப்படையாக தனது கருத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    காற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா,

    நல்லபதிவு நன்றி. ஐயா.

    ReplyDelete
  8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    உண்மை! உண்மை!கொடுக்கிற காலம் வந்துவிட்டதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது,என்ற பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் என்று உண்மையாகிறதோ அன்றே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆகும்.சித்தர்களின் விருப்பமும் அதுதான்.சுயநலமில்லாத சமுதாயம் உருவாக பாடுபடுவோம்.இது பற்றி மாஸ்லோவின் தேவைகளின் தத்துவம் பற்றி ஒரு பதிவு உண்டு.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. தெளிவான விளக்கம் ஐயா, மிக்க நன்றி

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு JAIMANIKA அவர்களே, வெகுநாட்களாக உங்களை இந்தப் பக்கம் காணோம் என்று எண்ணினேன்.வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறீர்களா?என்னால் மறக்க முடியாத நபர் நீங்கள் அடிக்கடி கருத்துரை எழுதுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. குருவே சரணம்,

    நான் இதுநாள் வரை வீட்டின் சன்னல்களை மூடிவைத்துதான் தூங்குகிறேன். எவ்வளவு பெரிய தவறை செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். இனி திருத்திகொள்கிறேன்.
    இதுபோல் தெளிவாக விளக்கி சொல்வதற்கு யாரும் இல்லாதால்தான் இன்று பல வீடுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை செவிமடுப்போர் யாரும் இல்லை.
    எல்லாம் வல்ல இறையருளால் இது நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.

    குருவருள் காக்க,
    சரவணன்,
    நன்றி,

    ReplyDelete
  12. மிக்க நன்றி நல்ல கருத்துரை

    ReplyDelete
  13. Thank you very much for sharing this.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்