மொழி பெயர்ப்புக் கருவி

Friday, October 7, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்


சித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
                          -திரு வள்ளுவர்-
நோயணுகா விதிகள் என்றால் என்ன என்றும் அதை எப்படி வரவிடாமல் தடுப்பது என்றும் கீழே விவரமாகக் கொடுத்துள்ளேன்.பஞ்ச பூத சக்திகளை எப்படி நம் உடலில் தேவையான அளவிற்கு மட்டும் சேர்ப்பது என்ற ரகசியம் தெரிந்தால் நோயே இல்லை.


ஔவையிடம் முருகன் கொடியது என்ன என்று கேட்கிறார்.


அதற்கு ஔவைப்பிராட்டி கூறுகிறார்
கொடியது கேட்கின் நெடியவெவ்வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது!
அதனினுங் கொடிது இளமையில் வறுமை!
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்!
அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர்!
இன்புற அவர் கையி லுண்பது தானே!
என்பார் அவ்வளவு கொடியது நோய்.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலாவெண்ணிய மூன்று.
                           -திரு வள்ளுவர்-


வளி(காற்று),அக்னி(பித்தம்),சிலேற்பனம்(நீர்), கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் என்பார்கள் கிராமத்தில்.


மண்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் ஐந்துக்கு, இரண்டு மட்டுமே பழுதில்லாதது.மற்றவை மூன்றும் பழுதுள்ளது.மனிதன் மரணித்தால் ஆகாயம் உயிரோடு ஓடிப்போகும்.வாசியாக வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ஓடிப் போகும்.காற்றில்லாவிட்டால் நெருப்பும்(உடல் சூடு அணைந்து,உடல் சில்லிட்டுப் போகும்) ஓடிப் போகும்.


மண்ணும் நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.இந்த பிணத்துடன் மீந்திருக்கும் வாயு வீங்கல்(அல்லது வெடி வாயு) வாயுவான தனஞ்ஜெயன்.அது உடலுடன் தங்கியிருந்து உயிர் போன பத்தாவது நாழிகையிலிருந்து உடலை வீங்க வைத்து வெடிக்க வைத்து உடலை அழிக்கும்.


ஒரு ஜென் பௌத்தக் கதை:-
இரு சீடர்கள் பேசிக் கொண்டார்கள்.


முதலாமவன் சொன்னான் என் குருநாதரைப் போல உன் குருநாதரால் அற்புதங்களும் அதிசயங்களும் செய்ய முடியுமா,என்று கேட்டான் முதல் சீடன்.


இரண்டாம் சீடன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது சாப்பிடுகிறார்,தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்கின்றார்,தூக்கம் வரும்போது தூங்குகின்றார், என்றான்.


முதலாமவன் சொன்னான் இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்றான்.



இரண்டாமவன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது மட்டும்தான் சாப்பிடுவார்,சாப்பிடும் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(EATING MEDITATION)


தாகம் எடுக்கும் போதுமட்டும்தான் தண்ணீர் குடிப்பார்.அப் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(DRINKING MEDITATION)

தூக்கம் வரும்போது தூங்குவார்.{(அறிதுயில்) தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுதல்(MEDITATION ON SLEEP)}.

இதையே சித்தர்கள் ""மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு மனிதனுக்கு அவ்வளவு தெரியாதப்பா???"" என்பார்கள். மாடு தண்ணீர் குடிக்கப் போனால் அதற்கு தண்ணீர் மட்டும்தான் தெரியும், மாட்டின் சொந்தக்காரன் நின்றால்கூட அது கவனிக்காது மிதித்துவிட்டு சென்றுவிடும். அதன் சிந்தனை நோக்கம் வேறாக இருக்காது. அது போல மனிதனுக்கு அவ்வளவு தெரியாமல்தான் துன்பத்திலும் துயரத்திலும் உழலுகின்றான்.   

உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.     


1)உணவு(மண்):-
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும். 
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.  
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. 
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும். 
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. 
():-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
():-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.


2)குடி தண்ணீர்(நீர்):-

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.  


3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.


4)காற்று (வாயு):-
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது. 
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.


5) உழைப்பு (நெருப்பு):-
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .


ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும்.நோயிலிருந்து விடுவிக்கும்.எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.

இவற்றையேதான் திரு ஹீலர் பாஸ்கர் வலியுறுத்திக் கூறுகிறார்.அந்த விடயங்களைக் கேளுங்கள். நோயின்றி வாழுங்கள்.






ஹீலர் பாஸ்கர் அவர்களின் இந்த இணைப்பைப் பார்வையிடுங்கள். 
http://anatomictherapy.ning.com/events/the-art-of-self-healing-1
அவர் வெளியிட்டுள்ள அந்த ஐந்து DVD க்களை வாங்கி,போட்டுப் பார்த்து கேட்டு, அவைகளக் கடைப் பிடித்தால் உங்கள் வீட்டில் ஆரோக்கியம் பொங்கும்.நோய் போகும். 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

10 comments:

  1. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
    கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

    ReplyDelete
  2. அன்புள்ள சாமீ ஜி

    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்
    உணவு சாப்பிடும் போது மூன்றில் ஒரு பாகம் உணவும்
    ஒரு பாகம் நீரும் ஒரு பாகம் வெற்றிடமாகவும்
    சாப்பிட சொல்லி இருகின்றார்கள்


    ===============================================
    நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
    வாய் நாடி வாய்ப்பச் செயல்
    ================================================
    உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
    அப்பால் நாற்கூற்றே மருந்து
    ================================================
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்
    ================================================


    எங்களுக்கு ஆசானாகவும்,
    குருவாகவும், அன்பு நண்பராகவும்
    விளங்கும் தங்களுக்கு நன்றிகள்

    பதிவு மிக அருமை

    என்றும் அன்புடன்
    ஷரீப்

    ReplyDelete
  3. எங்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவராகவும்
    துன்பத்தின் போது தீர்வு சொல்லும் நண்பராகவும்

    விளங்கும் தங்களை என்னவென்று பாராட்டுவது

    ReplyDelete
  4. ஜி

    முடியை பற்றிய பதிவை காணோமே ???

    ஆவலோடு எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  5. அருமை மிக அருமை !!!
    சரியான கருத்துகள் ., வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவுயிடுங்கள்

    "ஆற்றோணக் " நோய் என்றால் என்ன ., கொஞ்சம் விளக்குங்கள்

    ReplyDelete
  6. ///"ஆற்றோணக் " நோய் என்றால் என்ன ., கொஞ்சம் விளக்குங்கள்///ஆற்ற முடியாத அல்லது போக்க முடியாத வியாதி என்று பொருள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. Wonderful and valuable informations for everyone. ....
    ----Ragavan...sydney.

    ReplyDelete
  8. Wonderful and valuable information...
    Ragavan, sydney.

    ReplyDelete
  9. Very use full information keep it up

    ReplyDelete
  10. Very use full information keep it up

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்