மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, July 28, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(37)


யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 7)

அன்புள்ள பதிவு வாசகர்களே,

அடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்? என்று பார்ப்போம்.

ஜனன நட்சத்திர பலன்
அரைந்திட்டார் நட்சத்திர விபரங்கேளு
அப்பனே உத்திரமும் அஸ்தந்தானும்
நிறைந்திட்ட சித்திரையும் சுவாதியாலும்
நிலைக்குமடா காயசித்தி யோகசித்தி
பறந்திட்ட மூலமுமே உத்திராடம்
பாங்கான அஸ்வினியும் பரணிதானும்
உறந்திட்டு நின்றதொரு உத்திரட்டாதி
உத்தமனே ரேவதியும் மெத்த நன்றே.
          -அகஸ்தியர் மஹாதிராவகம் 6 -


உத்திரம்,அஸ்தம்,சித்திரை,சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு காயம்(உடல் அழியாது) சித்தியாகும்,யோகம் சித்தியாகும்.


அழியாத உடலுக்கு இருவரின் தூல உடல்களை இன்றும் உள்ளதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.ஒன்று உடையவர் என்று அழைக்கப்படும் ராமானுஜரின் திருவுடல் இன்றும் திருவரங்கக் கோவிலில் உள்ளது.அங்கு உடையவர் சன்னதி என்ற இடத்தில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ளது கற்சிலையல்ல ராமானுஜரின் தூல உடலே.


மேலும் திருவாரூர் என்ற இடத்தில் மடப்புரம் என்ற இடத்தில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்பவரின்  தூல உடல் உள்ளது.முன்னர் சுவாமிகளின் தூல உடல் எப்போதும் பார்வையில் இருந்தது.ஆனால் தற்போது இவரின் தூல உடலை குறிப்பிட்ட சில நாட்களில்தான் தரிசிக்க இயலும்.


செல்லுபவர்கள் அவர்களின் உடலை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு கிள்ளுவது குத்துவது போன்ற துன்புறுத்துதல் கூடாது.அது பெரும் பாவத்தைச் சேர்க்கும்.இந்த தரிசனம் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்.மேற்சொன்ன விடயத்திற்கு சாட்சி இவையே!!!!   

மூலம்,உத்திராடம்,அஸ்வினி,பரணி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கண்ட காயசித்தி,யோகசித்தி ஆகியவை உண்டாகும்,
என்று அகத்தியர் தனது மஹாதிராவகம் என்ற நூலில் கூறுகிறார்.

அன்பர் ஜெய் மணிகா அவர்கள் கீழ்க்கண்டவாறு கருத்துரை இட்டிருந்தார்.
///சாமீ நானும் அந்த குறையுடைய ராசிதான்...ரிஷபம் கிரக அமைப்புக்கள் ஞான மார்க்கத்திற்கு சாதகமாய் இல்லை என நீங்கள் சொன்னதில் சற்று ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.அன்புடன் ஜெய் மணிகா///

ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இராசி என்பது உடல்,லக்கினம் என்பது உயிர்.லக்கினமோ அல்லது ராசியோ மேற்குறிப்பிட்ட ஐந்தனுக்குள் இருந்தாலும் மேலும் மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்குள் இருந்தாலும்,இன்னும் விளக்க இருக்கும் பாடல்களின் தகுதிகளின் அடிப்படையில் இருந்தாலும் ஞானம் சித்திக்கும்.

மேலும் அப்படி அமைப்பேதும் இல்லாவிட்டாலும் இந்த பிறவிக்குத்தான் இந்த ஜாதக அமைப்பு.இந்த பிறவியில் செய்யும் தியானம்.அடுத்த பிறவியில் இந்த ஜாதக அமைப்பில் பிறக்க வைக்கும். எத்தனையோ பிறவிகள் வீணாக்கிய நமக்கு இந்த பிறவியாவது பயனுள்ள பிறவியாய் அமையட்டும்.

அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

 1. ஆனால், ராமானுஜர் திருவாதிரை நக்ஷத்திரம் அல்லவா?

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு பிரகாஷ் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!! மீண்டும் சொல்கிறேன்.மேலும் சில விடயங்களைக் கூறிய பின்னர் இது போன்ற கேள்விகளுக்கே இடம் இருக்காது என்று எண்ணுகிறேன்.எனவே பொறுமையாக மற்ற பதிவுகளையும் பார்த்த பின் கருத்துரை இடுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. நன்றி..தொடர்ந்து வாசிப்போம்..

  ReplyDelete
 4. அன்புமிக்க திரு ப்ரகாஷ் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்