மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, July 21, 2011

என் குருநாதர்களில் ஒருவர்(பாகம் 1)


யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 5)

அன்புள்ள பதிவு வாசகர்களே,

புலிப்பாணி முன்னூறு என்ற நூலில் புலிப்பாணி சித்தர் நூலின் விடயங்களின் தீவீரத்தை சொல்ல என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றி கூற விழைகின்றேன்.எனது சோதிட குருவாகவும் திகழும்  திரு சடாட்சரம் அவர்கள் எனது சித்தப்பா ஆவார்கள்.


ஒரு முறை அவர் என்னிடம் உள்ள புலிப்பாணி முன்னூறு நூலை வாங்கிச் சென்றார்.என்னிடம் இது வரை பலர் என்னிடம் (13 பேர்) வாங்கிச் சென்றிருக்கிறார்களே தவிர திருப்பித் தந்ததில்லை.அவர் என்னிடம் வாங்கிய நூலில் ஒரு பாடலைக் குறிப்பிட்டு புலிப்பாணி 81- அது தன் மூத்த மகள் ஜாதகத்துக்கு பொருத்தமாக இருப்பதாக மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்.


அந்தப் பெண் என் பாச மிகு ஒன்று விட்ட தங்கை. மிகப் பாசமான பெண். என் மனைவியின் உடன் படித்த பெண். மிகவும் அடக்கமான பெண்.எனக்கோ பெரும் சோகம்.நான் அவரிடம் கேட்டேன் '' இதைத் தவிர்க்க முடியாதா என்று?''.அவர் விதி எப்படியோ அப்படியே ஆகட்டும் என்றார்.


அந்த பாடல்
மருந்தால் கண்டம்  
சொல்லுகிறேன் இருநாலில் செவ்வாய் தோன்ற
சூரினா ராவுடனே சேர்ந்துநிற்க
வில்லவே விஷந்தீண்டி சாவான் சென்மம்
விதமான களத்திரத்தால் வேதைமெத்த
நல்லவே லெக்கினேச னாராமாதி
நஞ்சுள்ள கரும்பாம்பு சேர்ந்திட்டாலும்
புல்லவே மருந்தாலே கண்டம் சொல்லு
பூதலத்தில் புலிப்பாணி களறிட்டேனே!!!
                   -புலிப்பாணி முன்னூறு 81-


மேற் சொன்ன கவியின் வாயிலாக சொன்னது போலவே என் சகோதரி விஷத்தினாலேயே மாண்டார்.
எனது சித்தப்பா இது போல பல விடயங்களினால் பாதிப்புற்றாலும் இப்போதும் மனம் கலங்காது வாழும் ஓர் மதிப்புள்ள பொக்கிஷம்.பல விடயங்களில் விற்பன்னர்.


மனையடி சாஸ்திரம்,சிற்ப சாஸ்திர சிந்தாமணி போன்ற நூல்களை கரைத்துக் குடித்தவர்.குறிப்பாக சோதிடத்தில் ஒரு சூரப்புலி.இது போன்ற பல விடயங்களில் அனுபவப்பட்டு தெளிந்த ஒரு ஞானி.
அவரின் அலை பேசி எண் +919965195144.


பேசுபவர்கள் மேற்கண்ட விடயத்தை அவரிடம் கேட்க வேண்டாம்.அவர் மனம் வருந்தும்.சோதிட மற்றும் மனையடி சாஸ்திர சம்பந்தமான விடயங்களுக்கான விளக்கங்களை பெறலாம்.


மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் தனக்கென எதுவும் பெற்றுக் கொள்ளாத பெருந்தகையாளர்.அன்பர்கள் யாரேனும் அவரை நேரிடையாக சந்தித்தால் ஜாதக பலன்களைப் பெற்று, தங்களுக்கான உதவியைப் பெற்றுக் கொண்டு அவருக்கான பொருளுதவியை அவர் கேட்காமலே செய்ய வேண்டுகிறேன்.

அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

7 comments:

 1. தங்கள் சித்தப்பாவின் முகவரியும் தெரிவித்திருக்கலாம். பெரும்பாலானோர் தொல்லைபேசியில் இதைக் கேட்டுப் பெறுவதை தவிர்க்கலாமே...

  மேலும் இப்படிப்பட்டவர்களிடம் நேரில் சென்று மரியாதையுடன் தங்களுக்குத் தேவையானவற்றைப் பற்றி கேட்டறிந்துகொள்வது சாலச் சிறந்தது என்பதலாயே இந்த ஆலோசனை.. தவறாக எண்ண வேண்டாம்.

  பகிர்வுக்கு நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!! அவருக்கு இப்போது நிலையான முகவரி இல்லை.அவர் பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் செலவுகளுக்காக ராஜபாளயத்தில் இருந்த அத்தனை சொத்துக்களையும் விற்றுவிட்டார்.எனவேதான் அது பற்றி குறிப்பிடாமல் விட்டு விட்டேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. குருஜி,

  உலகில் எல்லா மனிதர்களுக்கும் துயரங்கள் உள்ளன, அவைகளை தீர்த்து வைக்கதான் சரியான நபர் இல்லை
  நீங்கல் அனுமதி அளித்தால் தங்களின் ஜோதிட ஆசானை எனது நண்பர்களிடமும், உறவினர்களிடம், அறிமுகம் செய்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அனுமதி வழங்க வேன்டுகிறேன்.

  தங்களின்
  ந.ராசசேகர்

  ReplyDelete
 4. அன்புமிக்க திரு ந.ராஜசேகர் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  என்து சோதிட ஆசானை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளவேதான்,அவர் அலை பேசி எண்ணை கொடுத்துள்ளேன்.எனது பூரணமான அனுமதி உண்டு.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. குருஜி,

  அனுமதி அளித்ததற்க்கு மிகவும் நன்றி, எனக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் தங்களை ஏற்றுக்கொன்டேன்,
  இனி உங்களை சார்தே எனது பயணம். தங்களின் தொடர்பு கிடைத்ததர்க்கு இறைவனுக்கு எனது நண்றியை
  கானிக்கை ஆக்குகிறேன்.

  தங்களின்,
  ந.ராசசேகர்

  ReplyDelete
 6. I am happy to see your site. Thanks a lot for this wonderfull service.
  I wish to get your Guru's Consultation.

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்