மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, November 28, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்7


என்னுடைய சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம்6) ஆன கீழ்க்கண்ட பதிவில்

ஈரலை இப்படிக் கொடுத்தால் கண் எப்படி சரியாகும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுவது போல் எனக்கும் ஏற்பட்டது.அதற்கு அக்கு பஞ்சர் விடை அளித்தது.

அக்குபஞ்சர் தத்துவத்தில் ஈரல் கண்களில் திறக்கிறது(LIVER OPENS IN EYE) என்பார்கள்.ஒரு சோடா புட்டி கண்ணாடி அணிந்திருக்கிறார் என்றால் அவர் ஈரல் பழுதுள்ள மனிதர் என்று பொருள்(LIVER MAN).ஈரலை சரி செய்தால் கண் சரியாகத் தெரியும்.

அதை விட்டு விட்டு அல்லோபதி மருத்துவம் கண்ணில் லேசர் போன்றவற்றால் பொசுக்கி (கண்ணில் நின்று இயங்கி வரும் பிராணனை கெடுத்து உயிரை நாசம் செய்கிறது.இதன் விளைவால் கண் தெரிந்தாலும் உயிரின் ஆயுள் குறையும்.)

இப்போது புரிகிறதா கண் சரியாக தெரியவில்லை என்றால் ஈரலில் இருக்கிறது குறைபாடு.சித்த வைத்தியத்தில் 'ஊனுக்கு ஊன்என்ற சித்தாந்தம் உண்டு.எந்த உறுப்பு மனிதனுக்கு பழுதாகி இருக்கிறதோ அந்த உறுப்பையே வேறு மிருகத்தில் இருந்து(ஏற்றது வெள்ளாடு,நாட்டுக் கோழி) மூலிகைகளின் மூலம் பக்குவம் செய்து கொடுக்க அந்த உறுப்பின் குறைபாடு நீங்கும்.அதன் விளைவாக அந்த பேறுறுப்பின்(ORGAN) பாதுகாப்பில் உள்ள உறுப்புக்களின் குறைபாடுகளும் நீங்கும். 

அக்கு பஞ்சரில் இந்தக் குறைபாட்டிற்கு கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகளில் சிகிச்சை அளிக்க மண்ணீரலும்,கல்லீரலும் பலப்பட்டு நோய் நீங்குகிறது.

மேலும் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு கால் பெருவிரலில் எந்தக் காயமும் அடியும் படாமலே பெருவிரலில் புண் உண்டாவதும்,பெருவிரல் அழுகுவதும் கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகள் உயிரோட்டம் அற்றுப் போவதேயாகும்.

இதை அல்லோபதி மருத்துவம் கால் பெருவிரல் இதயத்தில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால்தான் கால் பெருவிரல் இரத்தம் கிடைக்காமல் புண் வருகிறது என்று கற்றுத் தருகிறது.அதையே அல்லோபதி மருத்துவர்களும் சொல்லி வருகிறார்கள்.

ஆமாம் நான் கேட்கிறேன் இத்தனை நாளும் அதே தூரத்தில் இருந்த கால் பெருவிரல் நகம் சர்க்கரை நோய் வந்தவுடன் இதயத்தில் இருந்து மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம், அதிகம் ஆகிவிட்டதா!சர்க்கரை நோய் வருவதற்கு முன்னாலும் பின்னாலும் தூரம் மாறாதபோது எப்படி இந்த விஷயம்(LOGIC)சரியாக இருக்க முடியும்.

இப்படி முட்டாள்தனமான கோட்பாடுகளைக் கொண்ட அல்லோபதி வைத்தியத்தை மக்கள் பின்பற்றி அதன் பக்க விளைவுகளையும்,பின் விளைவுகளையும் பார்க்க பார்க்க கண்களில் இரத்தக் கண்ணீர்தான் வருகிறது.'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்' என்ற பாரதியாரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

புண் வந்து எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாதபோது,(ஏனெனில் அல்லோபதி மருந்துகள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உபயோகித்துத்தான் குணப்படுத்தும்.அதற்கென தனியாக எந்த குணப்படுத்தும் சக்தியும் கிடையாது)கால் பெருவிரலை வெட்டி எடுப்பதோ,காலையே வெட்டி எடுப்பதோ நடக்கும்.பாவம் சர்க்கரை நோயாளர்கள்.


சர்க்கரை நோயாளர்களுக்கு புண்,மற்றும் புரை வரும்போது மத்தன் தைலம் என்ற தைலம்,TAMPCOL,IMPCOPS போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான மருந்து.இதை வெளிப் பிரயோகமாக பிரயோகித்து புண்ணை ஆற்றிக் கொள்ளலாம்.


அல்லோபதி மருத்துவத்தில் உபயோகிக்கும் மருந்துகளில் பல ANTI-BIOTIC.அதாவது உயிர்ச் சக்திக்கு எதிரானது என்று பொருள். அப்படி உயிர்ச் சக்திக்கு எதிரானதை தலைவலி,காய்ச்சல்,உடல்வலி(நமது உயிர்ச்சக்தி கிளர்ந்து எழுவதே இவை) போன்றவற்றிற்கு உபயோகித்து,நமது உடலில் உள்ள  உள்ளுறுப்புகளை சேதாரம் ஆக்கி பல பெரிய வியாதிகளை வலுவில் வாங்கிக் கொள்கிறோம்.

மண்ணீரல் மற்றும் கல்லீரல்(SPLEEN,LIVER), பூச்சி மருந்தடித்த,உரம் போட்ட உணவுகளை உண்பதாலும், அல்லோபதி மருந்துகளை உண்பதாலும் சீரழிகிறது.அதுவே இந்த உறுப்புகளின் சக்திப் பாதையில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக PARACETAMOL என்பது PARA- ACETO-AMINO-PHENYL ஆகும்.அதன் பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகளைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்.


அப்போ அல்லோபதி மருந்துகள் சாப்பிடாவிட்டால் எப்படி வியாதிகளை குணப்படுத்திக் கொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.பதிவுகளைப் பாருங்கள்,அனைத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதில்கள் கொடுத்து வருகிறேன்.பயன் பெறுங்கள்.
  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்


  

Post Comment

Saturday, November 27, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(9)

கார்த்திகை மாதமிது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் ஏற்றிக் கொண்டாடும் காலம்.இது எதற்காக ஏற்றப்படுகிறது என்ற விவரம் ஏற்கெனவே http://machamuni.blogspot.com/2010/11/3.html என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


இப்போது குறிப்பிடுவது சொக்கப்பன் கொளுத்துவது என்று ஒரு சடங்காக எல்லா சிவன் கோவில்,முருகன் கோவில் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.பொருள் புரியாமல் நடத்தப்படும் சடங்குகள் நமது தமிழர் வாழ்வியலில் நிறைய ஆகிவிட்டன.
  
அதை விளக்கவே இந்தப் பதிவு.சோத்துக்குள்ளே இருக்கிறான் சொக்கன் என்பார்கள்.சொக்கன் என்றால் தூக்கம் என்று ஒரு பொருள்.இன்னொரு பொருள் சொக்கநாதர் ஆகிய இறைவன்.


சொக்கப்பன் ஆன தூக்கத்தை கொளுத்துவதே சொக்கப்பன் கொளுத்துவது.இதையே சித்தர்கள் 'தூங்காமல் தூங்கி சுகம் பெருவது எக்காலம்' என்று இறைவனிடம் வரம் கேட்டு வாடுகிறார்கள்.
 
ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.


திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.


தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்

உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே.
          -அகத்தியர்-
உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.

வள்ளலார் இதை

பசித்திரு!
தனித்திரு!
விழித்திரு!

பசி ஒரு திரு(திரு என்றால் செல்வம்),தனித்திரு (தனிமையாக இருப்பது ஒரு செல்வம்,இதையே அவ்வையார் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று தனிமையைப் போற்றுகிறார்),விழித்திரு(விழிப்போடு இருப்பது ஒரு செல்வம்).

பசியோடு இருந்தால் தூக்கம் வராது,விழிப்போடு இருப்பதான செல்வம் தானே வரும்.தனிமையான செல்வத்தை ஏற்படுத்திக் கொண்டு இறையை தியானம் செய்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.(இதையே அவ்வையார் அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் என்கிறார்)

எனவே தூக்கத்தை குறைக்கும் வழி அறிந்து குறைத்தால் மூச்சு விரயம் குறைந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Thursday, November 25, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(8)

எனது நண்பர் ஒரு அல்லோபதி மருத்துவர்(அவர் பெயர் வேண்டாம்,ஏனெனில் அல்லோபதி மருத்துவர்களுக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் அவர்கள் பெயர் வெளியே தெரிந்து மூக்குடைபடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்). அவர் என்னிடம் ஒரு நாள் சித்த வைத்தியத்தைப் பற்றி பெருமையாக சொல்லுகிறீர்களே!நான் ஒரு நபரை கூட்டிக் கொண்டு வருகிறேன்,அவருக்கு 15 வருடங்களாக மாலைக்கண் நோய்.மாலை 6 மணியானால் கண் தெரியாது.அவரை குணப்படுத்த முடியுமா என்று கேட்டார்.

குணப்படுத்த எனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்,நான் குணப்படுத்துகிறேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் அதற்கு அவர் எவ்வளவு செலவாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் பணம் தரச் சொல்கிறேன் என்று கூறினார்.நான் அதற்கு ஒரு SCAN,M.R.I  இதற்கு எவ்வளவு வாங்குகிறீர்கள்.ஒன்றும் குணப்படுத்தாமல் வெறும் படங்காண்பிப்பதற்கே ரூ30,000/= வரை வாங்கும் நீங்கள் ஏன் குணப்படுத்துவதற்கு ஒரு லட்சம் ஏன் கொடுக்கக் கூடாது என்று கேட்டேன்.

கடைசியில் பெரும் வாக்கு வாதத்துக்குப் பின் அதற்கு ஒத்துக் கொண்டார்.அவரை ஒரு ஞாயிற்றுக் கிழமை நோயாளரை வரச் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவர் எங்கே இருக்கிறார் அவர் ஆணா,பெண்ணா என்ற விவரங்களைக் கேட்டேன்.

அந்த நோயாளர் ஒரு ஆண்.அவர் திருச்சியைச் சேர்ந்தவர். அவரை அரியலூருக்கு வரும்போது ஒரு பெட்டை வெள்ளாட்டின் ஈரலை (ஆணுக்குப் பெண் வெள்ளாடு,பெண்ணுக்கு ஆண் வெள்ளாடு) வாங்கி வரச் சொன்னேன்.

இங்கு ஞாயிற்றுக் கிழமை மதியம் மூன்று மணிக்கு வந்தார்.அவர் கொண்டு வந்த பெண் வெள்ளாட்டின் ஈரலை நன்கு கீறி மேலும் கீழும் ஆவாரை இலை பரப்பி நன்கு வெதுப்பி எடுத்துக் கொண்டு,நன்றாக பசுவின் நெய் விட்டு வதக்கி,அப்படி வதக்கும்போது,காட்டுச் சீரகம் என்ற (சன்னி நாயகம்),நன்கு சுத்தி (தண்ணீரில் கழுவி,கல் மண் நீக்கி நிழலில் உலர வைத்தது)செய்தது.10 முதல் 20 கிராம் வரை தூவி கொடுத்தோம்.

அன்று மாலை அந்த நோயாளர் எனக்கு எல்லாம் தெரிகிறது என்றார்.விட்டமின் A&D எல்லாம் கொடுத்துப் பார்த்திருக்கிறேனே!ஒருவேளை வெள்ளாட்டு ஈரலில் உள்ள விட்டமின் A&D தான் இது போல பார்வைக் குறைபாட்டை நீக்குகிறதா!இது இன்னும் எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அந்த நோயாளர்,கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு பல்பை சுற்றி சிறு வெளிச்சம் தவிர எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் எனக்கு இன்று எனக்கு எல்லாம் தெரிகிறது என்றார்.டாக்டர் என்னிடம் இது சாத்தியமில்லை, இது மாய மந்திரம் போல இருக்கிறது.இவருக்கு தொடர்ந்து பார்வை தெரியுமா?நீங்கள் வேறு ஒரு லட்சம் கேட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன்.இது பழந்தமிழர்களான சித்தர்களின் விஞ்ஞானம் இது.உங்கள் அல்லோபதி வைத்தியக் கண்ணோட்டதில் இதைப் பார்த்தால் இது உங்களுக்கு புரியாது.ஆயுளுக்கும் இந்த ஒரு வேளை மருந்தே போதுமானது .  நீங்கள் எங்கள் சித்த வைத்தியத்தின் பெருமை உணரவே இதை செய்தேன். வாழ்நாள் முழுவதும் இரவு நேரத்தில் கண் தெரியாமல் இருக்கும் ஒருவர் அதற்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் தகும்,அல்லவா! சொல்லப் போனால் இது வைத்தியமே அல்ல.இது மூலிகைகளின் சக்தி ஊட்டப்பட்ட சிறப்பு உணவேதானே தவிர மருந்தொன்றுமில்லை.இதன் அருமை தெரிய வேண்டித்தான் இது போன்றதொரு கட்டுப்பாட்டினை நான் விதித்தேன் என்று கூறினேன்.


எனக்கு பணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

நாளது தேதி வரை அந்த நபருக்கு அன்று போன மாலைக்கண் நோய் திரும்ப வரவே இல்லை.இந்த பதிவு இதன் முன்னர் உள்ள பதிவில் திரு அனாதி கேட்ட கேள்வியின் பலனாக எனது அனுபவத்தை கொடுத்துள்ளேன்.நான் தெரிந்து கொண்ட பல விடயங்களை நமது வலைப்பூ அன்பர்களுக்கு தொடர்ந்து தந்து கொண்டே இருப்பேன். 

இதே போலவே மாலைக் கண் நோய்க்கு ஆண் நோயாளருக்கு(கலப்படமில்லாத நாட்டுக் கோழிதான் உபயோகிக்க வேண்டும்) பெட்டைக் கோழியின் பித்தையும்,பெண் நோயாளருக்கு சேவலின் பித்தையும் வாழைப் பழத்துக்குள் வைத்துக் கொடுக்க அன்றே மாலைக் கண் நோய் தீரும். 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Tuesday, November 23, 2010

சித்தர்களின் விஞ்ஞானம்பாகம்( 7)


சித்தர்கள் விஞ்ஞானத்தில் மிக முக்கியமானது பரிபாஷை என்பது.இது மிகப் புரியாததும் கூட.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்தந்த சித்தர்களின் நிகண்டுகளைப் படித்து மனப்பாடம் செய்வதோடு, மூலிகைகளின் குணபாடத்திலும் விற்பன்னராக இருந்தால் மட்டுமே பாடல்களுக்கு சரியான பொருள் தெரிந்து கொள்ள முடியும். 


நிகண்டு என்றால் ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்களைக் கொண்ட பரிபாஷைத் தொகுப்பே.அதில் போகர் பாடல்களைப் படிக்க போகர் நிகண்டு படித்துத் தேர்ந்தால் மட்டுமே போகர் பாடல்களுக்கு தெளிவான,சரியான விளக்கம் பெற முடியும்.எடுத்துக் காட்டாக கீழ்க் கண்ட பாடலைப் பாருங்கள்.

யானைக்கண் ஒரு பிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை மேற்தோலும் காலில் பிடியாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்
தமிழும் வடுகும் குணமாகும்.

யானைக்கண் ஒரு பிடியும்=யானைக்கு இன்னொரு பெயர் அத்தி,யானையைப் போல் பலம் கொடுப்பதாலும்,யானைக் கண்ணின் வடிவத்தை ஒத்திருப்பதாலும் அத்திப்பழத்தை யானைக்கண் என்றும் கூறுவார்கள். அத்திப் பழம் ஒரு கைப்பிடியும்

அரசன் விரோதி இளம்பிஞ்சும்=கனிகளின் அரசன் எலுமிச்சம் பழம்,அதன் விரோதி புளி.அதாவது புளியம்பிஞ்சு
கானக் குதிரை மேற்தோலும்=மாம்பழம் பழுத்துவிட்டால் அதனுள் இருக்கும் கொட்டைக்குள் இருக்கும் பருப்பு ஆடும்,காற்றடிக்கும்போது மொத்த மாம்பருப்புக்களும் ஆடும்போது குதிரைகள் ஓடுவது போல சத்தம் வரும் எனவே மாம்பழத்திற்கு கானக்குதிரை என்று பெயர்மாம்பழத்தின் மேற்தோலும்( இதையே அமுக்கிறாக் கிழங்கின் தோல் என்றும் கூறுவார்கள்.ஆனால் அமுக்கிறாக் கிழங்கிற்கு அசுவம்,குதிரை,என்றுதான் கூறுவார்களே தவிர,கானக் குதிரை என்று கூற மாட்டார்கள்)
காலில் பிடியாய் மாட்டியதும்=விளாம் பிசின் காலில் ஒட்டினால் போகவே போகாது.தோல் உரிந்தால்தான் போகும்.எனவே இது விளாம் பிசின் 
தாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்=தாயைக் கொல்வது வாழை,பக்கக் கன்றுகள் வந்துவிட்டால் தாய் வாழை சாய்ந்துவிடும்,எனவே வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால்
தமிழும் = தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்
வடுகும் குணமாகும் = வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும். 

அத்திப் பழம் ஒரு கைப்பிடியும்புளியம்பிஞ்சுமாம்பழத்தின் மேற்தோலும்,விளாம் பிசினும்,வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால்தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்,வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 3


நமது முன் பதிவான இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் http://machamuni.blogspot.com/2010/10/blog-post.html என்ற பதிவில் குறிப்பிட்டது போல இம்மாதம் நவம்பர் 19,20,21 ம் தேதி நடந்த இயற்கை நல வாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.


மிக மிக அற்புதமான அனுபவம்,எத்தனையோ பேர்கள் இயற்கை உணவு என்றால் என்னென்னவோ விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.ஆனால் திரு மூ.ஆ.அப்பன் அவர்கள்,கொடுக்கும் விளக்கம் போல இது வரை கேட்டதுமில்லை.கண்டதுமில்லை.
NATURAL FOOD SHOULD BE IN NATURAL FORM.அதாவது இயற்கையில் உள்ள உணவு இயற்கையாகவே அதன் வடிவம் தன்மை மாற்றப்படாமல் மனிதர்களுக்கு தரப்பட வேண்டும். அவ்வாறே உண்ணப்படவும் வேண்டும். 

திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள குறள்கள் அனைத்தும் மருந்தைப் பற்றி இல்லை.உணவைப் பற்றியும் நோயணுகா விதியைப் பற்றியும்,எது செய்ய வேண்டும்(நியமம்),எது செய்யக்கூடாது (இயமம்) என்பது பற்றியும்தான் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
941
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
943
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
945
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
947
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.
950 இதில் 
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

என்ற குறளை எடுத்து திரு மூ.ஆ.அப்பன் அவர்கள் சொன்னது,பிறந்ததில் இருந்தே இயற்கையில் இருந்து மாறுபாடு இல்லாத வடிவத்தில் கிடைக்கும் உணவை மட்டுமே உண்டால் உயிருக்கு ஊறுபாடில்லாமல் சாகாமல் வாழலாம்.மற்ற உணவை மறுத்துண்டு வாழ வேண்டும்.இவ்வாறு வாழ்ந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்கிறார் இந்த தேங்காய்ப் பழச் சித்தர்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

Tuesday, November 16, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(6)

கருப்பட்டியின் நன்மைகளும் சீனியின் கெடுதல்களும்
நான் 2001ம் ஆண்டு ராஜ் T.V.யில் ஒளிபரப்ப தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி 2001வருடம், நான் பல விடயங்களைத் தயார் செய்து கொண்டு போனேன்.அதில் கடைசியாக நானே ஒளி பரப்ப ஏற்றவை என்று, முடிவான முடிவுக்கு குறிப்பிட்ட ஏழு விடயங்களை தயார் செய்து கொண்டு போனேன்.

அந்த ஏழு விடயங்களில் இரண்டை மட்டும் ஒளி பரப்பினார்கள்.அதில் ஒன்று (1)என் நாடித்துடிப்பை நிறுத்திக் காண்பித்தது.மற்றொன்று(2)மூலிகைகளின் உதவியால் கண்ணாடியை வாயில் போட்டு மென்று காண்பித்தது.ஒளி பரப்பப்பட்ட அந்த இரு விடயங்களை பின்னொரு சமயம் ஒளிக்காட்சியுடன் வலைப் பூவில் இடுகையாக இடுகிறேன்.இப்போது அந்த ஏழுள் ஒளிபரப்பப்படாத ஒரு  விடயம் பற்றி என் வலைப்பூ அன்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.

 கந்தகப் பொடியை சாம்பிராணிக் கரண்டியில் தீக் கங்குகளை வைத்து புகை போட்டு அந்தப் புகையில் ரோஸ் நிறம் உள்ள ,ஒரு ரோஜாப் பூவைக் காண்பித்தால்,ரோஜாப்பூ  கந்தகத்தின் விஷத்தன்மையால் வெள்ளையாக மாறிவிடும்.

பனைவெல்லத்தை (பனங் கருப்பட்டியை) இதே போல் புகை போட்டு, மீண்டும் அந்த வெள்ளையான ரோஜாவை கருப்பட்டியை நெருப்புக் கங்கில் இட்டதால் வரும் புகையில் காட்ட,கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சின் காரணமாக, நீங்கிய தன் பழைய நிறமான ரோஸ் நிறத்தை மீண்டும்  ரோஜா அடைகிறது. கருப்பட்டிப் புகை கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நச்சை நீக்குவதால் ரோஜா தன் நிறத்தை அடைகிறது.

மேற்கண்டதை,மந்திரவாதம்(HERBAL MAJIC) போல் இதை நீங்களும் செய்து பார்க்கலாம்.மற்றவர்களுக்கும் வேடிக்கை காட்டலாம். இது போலவே மூலிகைகளை வைத்துச் செய்யும் வித்தைகளை கண்கட்டு வித்தை இரண்டாயிரம் என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


எனது நண்பரின் தாய் இறந்து போனபோது எரியூட்டும் நிகழ்வுக்கு,போய் இருந்தேன்.வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்தது.மழை சற்று சிறு தூற்றலாய் வேறு விழுந்து கொண்டிருந்தது. 

சுடு காட்டில் பிணம் எரிக்க மட்டும் சிறு கூரை மட்டுமே இருந்தது.வேறு ஒதுங்கக் கூட இடம் கிடையாது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிணத்தை எரிக்க பிண மேடையில் வைத்து மண்ணெண்ணெய் போன்றவற்றை துணிகளில் நனைத்து பிணம் நன்றாக எரிய, எல்லாப் பக்கமும் வைத்து பற்ற வைத்தார்கள்.

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன், பிணம் எரிக்க வைத்த நெருப்பு தணிய ஆரம்பித்து அணையும் நிலைக்குப் போனபோது,வெட்டியான் சீனியை எடுங்க,சீனியை (வெள்ளைச் சர்க்கரை என்றும் சென்னையில் அஸ்கா சர்க்கரை என்றும் அழைக்கப்படுவது)எடுங்க என்று அவசரப்படுத்தினான். உடனே சீனியை எடுத்து அந்தப் பிணம் எரியும் நெருப்பில் தூவியதும்,அந்தப் பெரு மழையிலும் நெருப்பு சட சட வென தாவி எரிய ஆரம்பித்தது.

சாதாரணமாக எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் எரியும் பிணம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் சுத்தமாக வெந்து சாம்பலாகிவிட்டது.அதே சமயம் கொஞ்சம் கருப்பட்டியை எந்த நெருப்பில் இட்டாலும் அது நெருப்பை அணைக்கும் செய்கையைத்தான் செய்யும்.புரிகிறதா!

இது போலவே சீனி நம் உடலில் உள்ள வெப்பத்தை கடுமையாக கிளர்ந்து எழ வைத்து,உயிரோடு பொசுக்கும் வேலையை திறம்பட செய்து சாப்பிட்டவரை ஒரு வழி செய்துவிடும்.பிறகு அவர் உயிரோடு எரிவது போலத்தான்.

ஆனால் கருப்பட்டியை(பனை வெல்லம் என்னும் கருப்புத்தங்கம்) உணவில் எப்படி சேர்த்தாலும்,நம் உடம்பில் சேர்ந்த நஞ்சை நீக்கி,உஷ்ணத்தை தணித்து உடலை உரம் பெறச் செய்யும்.

வெள்ளையாய் இருந்து உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நஞ்சு வேண்டுமா! அல்லது கருப்பாய் இருந்து உடலை வளப்படுத்தும் கருப்பட்டி வேண்டுமா! நமது வலைப்பூ வாசக அன்பர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நான் சீனியைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.அப்ப நீங்க!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Sunday, November 14, 2010

அன்புக்குரிய அன்பருக்கு ஓர் இரங்கல்

என் அன்புக்குரிய அன்பர் திரு அருணாசலம் அவர்கள் காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் மருந்தாளுநர் ஆக பணி புரிந்து வந்தார்.அவர் ஒரு அருமையான நண்பர்.தன்னலமில்லாத அருமையான மனிதர்.

இந்தக் காலத்தில் அரசுத் துறையில் கையூட்டு பெறாமல் பலருக்கும் உதவிய கரங்கள் இவர் கரங்கள்.இப்படி ஒரு தன்னலமில்லாத மனிதரை நான் வாழ் நாளில் பார்த்ததில்லை.


அவர் இளமைக் காலத்தில் தந்தை இல்லாமல் கடும் கஷ்டப்பட்டு தானே வேலை பார்த்து படித்துபாளையங் கோட்டையில் சித்த மருந்தாளுநராக படித்து அவரே பணியில் அமர்ந்தவர்.  அவர் இன்று மதியம் 2.30 க்கு இறைவனடி சேர்ந்தார்.


இவர் மகன்கள் இருவரும் இன்னும் எந்தப் பணியிலும் அமரவில்லை.அவருக்கு இந்த துயரம் அவர் இறக்கும் வரை கடுமையாக இருந்தது.

இவரின் மூத்த மகன் திரு அ.இராஜ நாயகம் கம்யூட்டர் படிப்பில் M.C.A படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறார்.அவருடைய கைபேசி எண் கீழே உள்ள எண்களில் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எண்+919942707400.அவருக்கு உதவும் மனம் உள்ள அன்பர்கள் யாரேனும் இருப்பின் அவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவவும்.

அவர் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு இது பேருதவி புரிந்ததாகும்.     

அவருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கலை என் குடும்பத்தாருடன், கண்களில் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்.
அவர் சபை அன்பர். எனவே சபை அன்பர்கள்(மட்டுமல்ல எல்லோரும்) அவர் பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலை கீழ்க் கண்ட எண்ணில் தெரிவிக்கலாம்.
+919788981005
+919842056820
+919942707400

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்    

Post Comment