மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 17, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(34)

யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 4)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
என்ன இது வரை பல அறிவு பூர்வமான விடயங்களையே எழுதி வந்த நான் இப்போது இது போன்று சோதிட விடயங்களை எழுதி வருகிறேனே என்று எண்ணுகிறீர்களா?

இவை பொய்யில்லை.கிரகங்களின் இருப்பை வைத்து சித்தர்கள் பல கணிதங்களை கொடுத்துள்ளனர்.இந்த கணிதத்தை விளக்கப் புகுந்தால் நமக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. இன்றைய விஞ்ஞானம் உறுதி செய்கின்ற பல கிரக இருப்புக்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கண்டு விளக்கி இருக்கிறார்கள்.இதிலிருந்து நான் அனுபவத்தில் கண்ட பல விடயங்களை வைத்து சில விடயங்களை ஆராய்ச்சி செய்து அந்த விடயங்களையும் சேர்த்து தருகிறேன்.

இதுவும் சித்தர்களின் விஞ்ஞானத்தோடு சேர்ந்ததே.நான் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் இரத்தப் பிரிவை சொல்லி அசத்துவதுண்டு.

பொதுவாக செவ்வாய் தனது வீட்டில் நின்று ஆட்சியோ(மேஷம்,மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால்) Rh typing + ve மற்றும் "" O""ஆக இருப்பதுடன் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பொது நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

இந்த ரத்தப் பிரிவை"UNIVERSAL DONOR" என்பார்கள்.இதே போல இவர்களும்,உலக நன்மைக்காக பாடுபடுவதிலும் முதன்மையான ஆட்களாக(பொதுவாக மருத்துவர்,பொறியியல் வல்லுனர்கள், இராணுவ அதிகாரிகள்,கணித மேதைகள்,வான சாஸ்திர வல்லுனர்கள்,அறிவியல் வல்லுனர்களாக இருப்பார்கள்).


செவ்வாய் ரத்தம், போர், போராட்டம் இவற்றுக்கு அதி தேவதை.இந்த செவ்வாய்க்கு அதி தேவதை முருகன். சூரனை அழிக்கவென்றே பிறந்தவன் அல்லவா!!!!!!!!மருத்துவர்களாக இருப்பவர்களுக்கு செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, குறைந்த பட்சம் நட்பாகவோ இருந்தால்தான் கைஇராசி மருத்துவர் என்று பேரெடுக்க முடியும். 


மருத்துவராகும் முன் இதை கவனித்து செய்தால்தான் மருத்துவம் வாசியாகும்.மேலும் போகருடைய சீடர் புலிப்பாணி முன்னூறு என்ற நூலில் புலிப்பாணி சித்தர் இந்த முன்னூறு பாடல்களில் சொன்னதைத் தவிர சோதிடம் என்பது வேறில்லை என்றும் மற்ற விடயங்கள் எல்லாம் அவரவர்கள் பணம் பறித்து பிழைக்கச் செய்யும் மார்க்கங்களே என்று கீழ்க் கண்ட பாடலில் கூறுகிறார்.


கேளப்பா ராசிபனி ரெண்டுக்குள்ளே
கனமுள்ள கோள்கள் நிலையரியாமல்தான்
பாழப்பா பலவாறாய் சக்கரம் பூட்டி
பணம் பறிக்கும் விந்தையது பாரிலேதான்
சூழப்பா சோதிடமும் முன்னூறுக்குள்
சுகமாகப் பாடி வைத்தேன் நுணுக்கமாக
நீளப்பா போகருட கடாட்சத்தாலே
நீணிலத்தில் புலிப்பாணி நிகழ்த்தினேனே.
          -புலிப்பாணி முன்னூறு 299- 


அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

 1. தற்போது ஜோதிடம் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது... ஆனால் இதை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களால் அதற்கு இழி பெயரும் ஏற்படுகிறது... சித்தர்கள் ஆசியால் ஜோதிடம் பொலிவு பெற வேண்டுவோம்.

  பகிர்வுக்கு நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. ஆளப் பார்த்தே ரத்த வகையை சொல்ல முடியுமா?
  புதிய தகவல்

  என்னோட ரத்த வகையை கண்டுபுடிங்க ஜி

  நன்றி சாமீ ஜி

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்