மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 24, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(36)


யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 6)

அன்புள்ள பதிவு வாசகர்களே,

அடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்? என்று பார்ப்போம்.


விளங்கி நின்ற மற்றேழு மிராசியோர்கள்
வெறும் பேச்சாய்த் திரிவார்கள் சித்தியில்லை
புளங்கிநின்ற பூசைக்கு வருவோமென்பார்
புகுந்தாலும் மாயசித்தே புணர்ச்சி செய்வார்
தளங்கி நின்ற வாதத்தை சுட்டுமாய்வார்
சாஸ்திரமுங் குருதேடார் தான்தானென்பார்
அளங்கிநின்றும் மலைவார்கள் அறிந்துகொள்ளு
அவரேழுமிரா சியோர்அறைந் திட்டேனே. 
           -அகஸ்தியர் மஹாதிராவகம் 5-
விளங்கிநின்ற மற்றேழு இராசியோர்களின் ( ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், ) கிரக அமைப்புகள் ஞான மார்க்கத்துக்கு சாதகமாய் அமைந்தவையல்ல. 


இந்த ஏழு இராசியோர்களுக்கு தான் என்ற அகங்காரம் முனைப்புடன் வந்து வழி கெடுக்கும் என்கிறார் அகத்தியர்.


எந்த ராசியில் பிறந்தவர் ஆனாலும் முறைப்படி தவம் செய்யாத ஒருவரை முத்தியடையச் செய்ய இறைவனாலும் இயலாது.எனவே எந்த இராசியானாலும் தவ முயற்சியானது உழைப்புக்கேற்ற பலன் தரும் என்பது சித்தர்களின் வாக்கு. பெரு மதிப்பிற்குரிய விசுவாமித்திரருக்கு அவர் அகங்காரத்தினால் தனது சக்தியை செலவிட்டு பலமுறை சக்தியை இழந்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஞானம் அடைந்தார்.


அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

 1. இது ராசிக்கா அல்லது லக்கினத்துக்கா?? எனக்கு கும்ப லக்னம் மீன ராசி.. இருந்தாலும் ஓரளவுக்கு தொடர்ந்து தியானம் செய்ய முடிகிறது.

  சற்று விளக்கினால் தேவலை.

  பகிர்வுக்கு நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!! தங்கள் ராசிதான் மீனம் என்று கூறிவிட்டீர்களே!அதுதான் சொல்லிவிட்டேனே,ராசிதான் உடல்,அதில்தான் ஞானம் இருக்கிறதே!!!பின் ஏன் இந்த குழப்பம்.உயிர் லக்கினம்.உடலில் இருந்து உயிருக்கு ஞானத்தை ஏற்றுங்கள்.இறைவன் தென்பட்ட பின்னர் இதெல்லாம் தேவையில்லை!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. வணக்கம் சாமீ உங்களை பற்றி தோழி பதிவில் படித்தேன். வாள்த்துக்கள் எனக்கு சில தெளிவுகள் வேண்டும் உதவ முடியுமா?

  ReplyDelete
 4. சாமீ
  நானும் அந்த குறையுடைய ராசி தான்...ரிஷபம்கிரக அமைப்புகள் ஞான மார்க்கத்திற்கு சாதகமாய் இல்லை என நீங்கள் சொன்னதில் சற்று ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.
  அன்புடன்
  ஜெய் மணிகா

  ReplyDelete
 5. அன்புமிக்க திரு அனாதி அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!!
  தங்களால்தான் தோழி எனது வலைப்பூவின் இணைப்பை கொடுத்திருப்பதை அறிந்தேன்.என்ன உதவி வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.உதவுகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. அன்புமிக்க திரு ஜெய் மாணிக்கா அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!!
  தங்கள் ராசி ரிஷபம் என்று கூறிவிட்டீர்கள்.லக்கினமான உயிர் எந்த பிரிவில் உள்ளது என்று கூறவில்லையே!!!மேலும் இன்னும் பல விடயங்கள் உள்ளன.அவற்றில் எல்லாம் இந்த அமைப்பு இல்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள்.இதிலெல்லாம் இல்லாவிட்டாலும் மேற் சொன்னதைக் கவனியுங்கள்.
  ///எந்த ராசியில் பிறந்தவர் ஆனாலும் முறைப்படி தவம் செய்யாத ஒருவரை முத்தியடையச் செய்ய இறைவனாலும் இயலாது.எனவே எந்த இராசியானாலும் தவ முயற்சியானது உழைப்புக்கேற்ற பலன் தரும் என்பது சித்தர்களின் வாக்கு.///
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்