மொழி பெயர்ப்புக் கருவி

Monday, February 21, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11

கண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க.


கண்களுக்கு அருகிலிருந்து ஆரம்பிப்பதால் கண் பார்வைக் குறைவையும் இது போக்கும். சிறுநீர்ப்பை சக்திப் பாதையின் 11 வது புள்ளி எலும்புகளை சரி செய்யும்(INFLUENTIAL POINT FOR BONE),12 வது புள்ளி தோல் அழற்சிகளை(SKIN ALLERGY) சரி செய்யும்,13 வது புள்ளி நுரையீரலை(LUNGS) சரி செய்யும்,14 வது புள்ளி இதய உறையை சரி செய்யும்,15 வது புள்ளி இதயத்தை(HEART) சரி செய்யும்,16 வது புள்ளி அனைத்து விதமான ஒவ்வாமையையும்(ALL ALLERGY ) சரி செய்யும்,17 வது புள்ளி உதர விதானத்தையும்( DIAPHRAGM ) இரத்தத்தையும் சரி செய்யும்,18வது புள்ளி ஈரலை சரிசெய்யும்(LIVER),19வது புள்ளி பித்தப்பையை(GALL BLADDER) சரிசெய்யும்,20 வது புள்ளி மண்ணீரலை(SPLEEN),21 வது புள்ளி இரைப்பை மற்றும் வயிற்றை (STOMACH) சரி செய்யும்,22 வது புள்ளி முக்குழி வெப்பப் பாதையை(TRIPLE WARMER) சரி செய்யும்,23 வது புள்ளி சிறு நீரகங்களை(KIDNEYS) சரி செய்யும்,24 வது புள்ளி இரத்தம் ஒழுகுவதை(LUMBAGO, HEMORRHOIDS) கட்டுப்படுத்தும்,25 வது புள்ளி பெருங்குடலைச்(LARGE INTESTINE) சரி செய்யும்,26 வது புள்ளி அதீத மலப் போக்கு, மற்றும் பல வியாதிகளைப் போக்கும்(LUMBAGO, DIARRHEA, INCONTINENCE, CYSTITIS), 27 வது புள்ளி சிறு குடலைச் சரி செய்யும்(SMALL INTESTINE),28 வது புள்ளி சிறுநீர்ப்பையை சரி செய்யும்(URINARY BLADDER),29 வது புள்ளி இரத்தப் போக்கு,முறையற்ற மாதவிடாயை சரி செய்யும்(HEMORRHOIDS,IRREGULAR MENSES).


எனவே மேற்கண்ட சிறுநீர்ப்பையின் அக்குபஞ்சர் புள்ளிகள் பீஷ்மப் புள்ளிகள் என இந்திய அக்குபஞ்சர் மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.


இதே அக்கு புள்ளிகளைத் தூண்ட யோகாவில் பவன முக்தாசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உள்ளது.அதையும் கீழே கொடுத்துள்ளேன்.பவனம் என்றால் காற்று அல்லது வாயு முக்தா என்பது விடுவிப்பு ஆசனம் என்பது யோக நிலை. எனவே இது வாயு விடுவிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. இதை பயிற்சி செய்யும் ஒருவர் சீரண உறுப்புகளை மசாஜ் செய்வதோடு வயிறு மற்றும் குடல்களில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்றுகின்றனர்.மேலும் அதிக பயனாக உடலின் உள்ளுறுப்புக்களுக்கு அதீத பலத்தையும் அளிக்கின்றனர்.அத்துடன் மேலதிக ஆயுளையும் பெறுகின்றனர்.இத்துடன் முதுகை நன்கு தரையில் உருட்டினால் மிக மிக நன்று.பக்கவாட்டுப் புறளல் செய்தால் அது மிக மிக நன்று.  

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 10

பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

மகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப்படைக்குத் தலைமையேற்றார். அர்ச்சுனன் அம்புகள் அவர் உடல் முழுவதும் துளைத்தன.


ஆனாலும் தனக்கு எப்போது மரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்ற வரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப் பிடித்தபடி நாட்கள் உயிரோடு கிடந்தார். அவருக்கென்று அம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்ச்சுனன்.

தட்சிணாயணம் என்பது தேவர்களுக்கு இரவு பீஷ்மர் இந்தக்காலததில் மரணத்தைத் தழுவ விரும்பவில்லை.
தேவர்கள் விழித்து வரும் நாளான உத்தராயணக் காலம் வரை அம்புப் படுக்கையில் இருந்தார். அந்த நேரத்தில் தான் தருமருக்கு அறங்கள் பற்றி உபதேசித்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்தது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.

பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி. அந்த மகானின் நினைவாக அர்க்கியம் விடுவது வழக்கம். மாக மாதம் என்று சொல்லும் தை லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம் செய்வது வழக்கம்.பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக் கொண்டு பீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

சக்தியுள்ள சிறு நீர்ப்பை சக்திப் பாதையைப் பற்றிய பதிவே இது. உடலில் உள்ள உறுப்புக்களை, உறுப்புக்களாக மட்டுமே பார்க்கும் அல்லோபதி வைத்திய முறை.அது அறிவற்ற மருத்துவம்.அது அதீத வயது முதிர்ச்சியில்லாத அனுபவமில்லாத வைத்திய முறை.சமீபமாக சுமார் 200 வருடங்களே அதன் வயது.


ஆனால் அக்கு பஞ்சர் என்பது மிகப் பழைமையானது.சுமார் 5000 வருடங்கள் பழைமையானது.நமது சித்த வைத்தியம் அதைவிட பழைமையானது.நமது சித்த வைத்தியத்திலும் குத்தூசி வைத்தியம் என்ற பெயரில் கையாளப்பட்டு வந்துள்ளது.

உடலின் உள்ளுறுப்புக்களை பஞ்ச பூத சக்திப் பிறப்புகளின் இருப்பிடமாகவும்( ORGANS ),இன்றியமையாச் சக்தியோட்டங்களின் வாய்க்கால்களாவும் இருக்கின்றன.

பீஷ்மரின் மரணத்தை தள்ளிப் போட்டது அவர் தகப்பனாரின் வரமென்றால் அர்ச்சுனரின் அம்புப்படுக்கை தேவையில்லையே!


அந்த அம்புப் படுக்கையால்தான் சிறுநீர்ப் பையின் சக்திப்பாதையில் உள்ள உள்ளுறுப்புக்களின் புள்ளிகள் துளைக்கப்பட்டு அதன் மூலம் உடலின் இன்றியமையாச் சக்தி(VITAL FORCE) பெறப்பட்டு அதன் மூலமே ஆயுள் நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது புலனாகும்.   


படங்கள் உதவி மற்றும் தகவல் உதவிக்கு  http://www.educationalservice.net/2010/february/es20100212_beeshma-ashtami.php  இணைய தளத்துக்கு மிக்க நன்றி.

இணைய தளத்துக்கு மிக்க நன்றி.


சிறுநீர்ப்பையின் உட்புறத் தோற்றம்.


பதிவு பெரியதாகப் போனதால் அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 10,அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11 இரட்டைப் பதிவாக ஒரே நாளில் வெளியிடுகிறேன்.பார்த்துப் பயன் பெறுங்கள். 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

Wednesday, February 16, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் 6(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 2)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும். 

''வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.''

விளக்கம்;-வாதம் என்பது பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது.பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்
கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்
கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது.காலைப் பருவமாகிய பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.
   
45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில்,
சிலேற்பன 
கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வர, 

உடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது.இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது.கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது.  இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3)'' என்ற பதிவில் தொடரும்.அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment