மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 31, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 6(ஆன்மீக கேள்வி மற்றும் பதில்களும்))அக்கு பஞ்சர் என்பது நம் உடலில் தடையான உயிர்ச் சக்தி ஓட்டத்தை மீண்டும் சரியாக ஓட வைப்பதே ஆகும்.எனில் ஏன் அது தடை ஆகிறது.ஓடிக் கொண்டே இருந்தது,ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே!ஏன் தடை ஆகிறது.தடை ஆக வேண்டிய காரணம் என்ன?

இது பற்றி அக்கு பஞ்சர் என்ன காரணம் சொல்கிறது?மற்றொருவர் மேல் கொள்ளும் வெறுப்பு,துவேஷம், காழ்ப்புணர்ச்சி, ஆழ்ந்த பகை நமது உயிர்ச் சக்தி ஓட்டத்தில்தடையை ஏற்படுத்துகிறது.


நான் இது பற்றி ஆராய்ந்து சித்தர்களின் கொள்கை அடிப்படையில் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன்.அதை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.இது என்னுடைய பல பல்லாண்டு சித்தர் தத்துவங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில்,ஏற்படுத்தப்பட்டுள்ள இயற்கை நியதிகளை அப்படியே கூறுகிறேன்.மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறலாம். 

நேயர்கள் பெயர் வெளியிடாமல் சில சந்தேகங்களை நிவர்த்தி பண்ண சொல்லிக் கேட்டுள்ளார்கள்.அதற்கான விடையாகவும் இது அமையட்டும்.
கேள்வி  01;-
ஆன்மா பரிசுத்தமானது, ஆதி அந்தம் இல்லாதது நித்தியமானது. அதனுடன் ஆணவம் சேர்ந்ததாலேயே அது உலகில் பிறந்தது, அறியாமை தான் அதன் வீழ்ச்சிக்கு காரணம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. புனிதமான இறைநிலை ஆன்மாவே ஆணவமயப்பட்டது என்பது தானே அதன் அர்த்தம். உலகில் பிறந்த ஆன்மாக்கள் மிகுந்த சிரமப்பட்டு முன்னேறி தன்னைப்புரிந்துகொண்டு புனிதமாகி இறைநிலை எய்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, இத்தனை சிரமத்தின் பின் புனிதமடைந்த ஆன்மா மீண்டும் ஆணவமயப்படாது, அறியாமை வசப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்இதன்படி பார்த்தால் பிறப்பது பின் இறைநிலை அடைவது பின் பிறப்பது என்று சுழன்றுகொண்டிருக்க வேண்டியது போலல்லவா உள்ளது? ஆன்ம விடுதலைக்காக பட்ட கஷ்டமெல்லாம் வீண் தானே?
பதில்;-
இறைவனுடன் நாமும் இணைந்திருந்து, நாமும் ஈடில்லாத இன்பத்தை பேரான்மாவோடு இணைந்து அனுபவித்திருந்தோம். ஆனால் இனிப்பு சாப்பிட்டவுடன் காரம் சாப்பிடுவதுதான் நம் இயல்பல்லவா?

அதுபோல அந்த ஈடில்லாத இடைவெளி இல்லாத இன்பம் திகட்டிவிட்டது! உடனே நாம் எப்படி கஷ்டங்களையும், துன்பங்களையும்,நோய்களையும் அனுபவிக்க வேண்டும் என்று வரமாக இறைவனிடம் வேண்டி கேட்டுப் பெறுகிறோம்?காரத்தில் எத்தனை வகைகள்?கார வகைகளில் மிக்சர்கார சேவுபக்கோடாகார சீவல் அது போல கஷ்டங்களையும்துன்பங்களையும்நோய்களையும் வகை வகையாய் கேட்டுப் பெறுகிறோம்.

கிராமத்தில் இன்றும் 'நான் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்' என்று சொல்வார்கள்.அதுபோல வரமாய் வாங்கி வந்த துன்பங்களை அனுபவிக்கிறோம்.எனவேதான் தான் வாங்கி வந்த நோயை எந்த நோயாளரும் அவ்வளவு எளிதாக விடுவதில்லை?

சித்த வைத்தியம் இது போன்ற கஷ்டத்தை வரமாக வாங்கி வந்த நோயாளர்களுக்கு மருந்து சொல்லவில்லை. இந்த சுழலில் இருந்து விடுபட முயற்சிக்கும் ஆன்மாக்களுக்கே மருந்துகளும் வழிமுறைகளும் கூறியிருக்கிறார்கள்.

யாராவது வியாதியையும் துன்பத்தையும் வரமாகப் பெறுவார்களா? என்று கேட்பீர்கள்.ஆன்மாவின் இந்த நிலைதான் கேவல நிலை என்று சைவ சித்தாந்தத்தில் வர்ணிக்கப்படுகிறது.

தான் எங்கேயிருந்து வந்தோம்?எதற்காக வந்தோம் எங்கே போகப் போகிறோம்?தான் என்னவாக இருந்தோம்?எப்படி இந்த சுழலில் இருந்து மீள்வதுஎன்பது தெரியாத நிலையே கேவல நிலை.

உண்மையில் யோசித்துப் பாருங்கள் இது புரியும்.மறுபடியும் பதில் எழுதுங்கள்.

இப்போது மேலே கேட்ட அக்குபஞ்சர் கேள்விக்கு வருவோம். நாம் அடுத்தவர் மேல் செலுத்தும் வெறுப்பு,துவேஷம்காழ்ப்புணர்ச்சிஆழ்ந்த பகை  நம்மீது நாமே செலுத்திக் கொள்ளும் வெறுப்பு, துவேஷம்காழ்ப்புணர்ச்சி,  ஆழ்ந்த பகைதான்,ஏனென்றால் நானும் அடுத்தவரும் ஒரே பிரம்மமான பேரான்மாவில் இருந்து தோன்றியவர்கள்தான்.

எனவே நாம் அடுத்தவர்மேல் கொள்ளும் இந்த வெறுப்பு, துவேஷம்காழ்ப்புணர்ச்சிஆழ்ந்த பகை நம்மையே தண்டிக்கிறது.இதையே கணியன் பூங்குன்றனார்,
'யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!'
என்று கூறுகிறார்.

இதையே பகவத் கீதை கர்ம யோகத்தில் 'நாம் மனம் வாக்கு,காயத்தால் செய்யும் நல்ல மற்றும் கெட்ட மற்றும் நல்ல காரியங்கள் பல மடங்காக பெரிதாக மாறி,நம்மிடமே திரும்பி வருகின்றன'என்று கூறுகிறது.

அதென்ன மனம், வாக்கு, காயம்.பதிவு பெரிதானால் படிப்பவருக்கும் சிரமம்,எனவே அடுத்த பதிவில் மீதியை பார்ப்போம்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்  

Post Comment

ஒரு குட்டிச் சித்தர்


எனது குல தெய்வம் அழிசோடைக் கருப்பசாமி, இராஜபாளையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி காட்டுக்குள்,மலை அடிவாரத்தில் இருக்கிறது.எங்களது குடும்பத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு மட்டுமே அங்கே பூஜைப் பாத்தியதை உண்டு(பூஜை செய்யும் உரிமை).


அந்தக் காலத்தில் பெரும் காடாய் இருந்த இடம்தான் இந்தக் கோயில். இதனால் கருப்பசாமி எங்கள் 7 குடும்பத்துக்கும் ஒரு வரம் அருளியிருக்கிறார்.அதன்படி பூஜை புரிய வரும்போது காட்டு விலங்குகளாலோ,இயற்கை சீற்றங்களாலோ எங்கள் உயிருக்கு அபாயம் நேராது என்று வரம் அருளியிருக்கிறார்.

எனது தம்பியும் நானும் எங்களது குடும்பத்துடன் மேற்படி குல தெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.அங்கு எனது தம்பியின் பையன் குட்டிச் சித்தர் போல கைகளை வைத்துக் கொண்டு தன்னை படம் எடுக்கச் சொன்னார்.அப்போது எடுத்த படம்தான் இது.

அவருக்கு இன்று பிறந்த நாள் .எனது வலைப் பூவின் வாசக அன்பர்களோடு என் வாழ்த்துக்களும் அவருக்கு சேரட்டும்.பின்னாள் ஞானிக்கு இந்நாள் ஞானிகளின் வாழ்த்துக்கள்.


அவர் உட்கார்ந்திருக்கும் நிலை கைகளை வைத்திருக்கும் முறை போன்றவற்றை ஊன்றிக் கவனியுங்கள்.இது போல் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஏதும் கூறாமலே அவர் இது போல் பாவனை செய்கிறார்.
பின்னால் இருக்கும் படம் சில கோவில்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.அது ஸகஸ்ரார சக்கரத்தைக் குறிக்கும்.ஞானம் அடையும் நிலையை அடைவதற்கு அடையாளமாக தலைக்கு மேல் மூன்று சக்கரங்கள் தோன்றும்.அதன் பிரகாசம் சில சமயம் புகைப் படங்களிலும் தெரிவதுண்டு.பின்னொரு சமயம் அது உரியவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

Saturday, October 30, 2010

கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)

கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)

எல்லா கோவில்களிலும் ஒவ்வொரு மூலிகை  பிரசாதமாக  கொடுக்கப்படுகிறது. ஒவ்வோர் மூலிகைக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. முன்பு ஆரோக்கியத்திற்கும் கோவில் ஓர் இருப்பிடமாக இருந்துள்ளது.

கோவில்களில் அடிக்கப்படும் பூங்காவி கிருமிகளை அழித்தொழிக்கும். தீய பூச்சிகளை நெருங்க விடாது. முன்னால் பொங்கலன்று வீடுகளுக்கும் பூங்காவி அடிக்கும் பழக்கம் இருந்தது.

சிவன் கோவிலுக்குப் போனால்,அங்கே வில்வம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. சிவனுக்கு குழந்தைகள் இருக்கிறது. எனவே குழந்தைகள் வேண்டுமா?வில்வத்தை சாப்பிடுங்க குழந்தை பிறக்கும்.

வில்வம் மேகரோகங்களைத் தீர்க்கும்.(மேகங்கள் 21,அவற்றுள் ஒன்று மதுமேகம்,என்றழைக்கப்படும் . சர்க்கரை நோய்,பால்வினை நோய்களும் மேகத்தின் கீழேயே வரும்,மேகம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் அலைவது போல மேகங்கள் உடலெங்கும் அலைந்து , அதன் நோய் குறிகுணத்தைக் காட்டும்.

இது 21 தலை முறைக்கு {ஞானமும் இப்படியேதொடர்ந்து வரும் மேகரோகங்களை  நம் தலை முறையில் அனுபவிக்கவில்லை என்றாலும் ( CARRIER ) , அடுத்தடுத்த பின்வரும் தலைமுறைகளுக்கு போய்ச் சேர்ந்துயாருக்காவது இடர் அளிக்கும்) எனவே பெற்றோர்கள் வில்வம் சாப்பிட்டால் முன்னோர்கள் கொண்டுள்ள மேகரோகங்களில்லாமல்பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

சிவன் பழைய பாவத்தைத் தீர்க்கிறாரோ இல்லையோ.வில்வம் முன்னோர் செய்த பழைய பாவத்தையும்   தீர்க்கும்,பல தலைமுறை தொடரும் வியாதியையும் தீர்க்கும்.(இன்னோர் முக்கிய தகவல் மஹா வில்வம் என்று ஒன்று இருக்கிறது.அது கேன்சரையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.)
மஹா வில்வம்
  
விஷ்ணு கோயிலுக்கு செல்வோம்.அங்கே என்ன  கொடுக்கிறார்கள். விஷ்ணுவுக்கு குழந்தைகள் இருக்கிறதாஇல்லை.குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமாதுளசி சாப்பிடுங்கள்.அந்த விந்தணு உற்பத்திக்கு செலவிடப்படும் ஜீவ சக்தி மீதம் ஆவதால,அந்த ஜீவ சக்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உபயோகப்படுவதால்காய்ச்சல் உடல் வலி சளி போன்றவை குணப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைப் பிரயோகத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தப்படுகிறது. இந்த துளசி இயேசு கிறித்துவின் சமாதியில் (கபாலக் குகையில்) வளர்ந்துள்ளதை எனது MEL(MANKIND ENLIGHTMENT LOVE) குருவான SISTER அமலாவதி அவர்கள் கூறியுள்ளார்.
துளசி
  கண்களில் உள்ள வட்டத்திற்கு நந்தி வட்டம் என்று பெயர்.கண்களிலும்,கண்கருவிழியிலும் ஏற்படும் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் வன்மை வாய்ந்தது.எல்லா சிவன் கோவில்களிலும் இருக்கும்.அடுக்கு நந்தியாவட்டை என்றும்,சாதாரண நந்தியாவட்டை என்றும் இருவகை உண்டு. இதில் சாதாரண நந்தியாவட்டைக்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்களை இரவில் தண்ணீரில் போட்டு,காலையில் எழுந்தவுடன்,அந்தப் பூக்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டு,அந்தப் பூக்கள் ஊறிய தண்ணீரில் கண்களை கழுவி வந்தால்,கண்ணில் உண்டாகும் கண்குற்றங்கள்(96 வகை என திருநேத்திர சிந்தாமணி கூறுகிறது) அனைத்தும் தீரும்.கண் வலியும் தீரும். 

நந்தியாவட்டை

நீலாஞ்சனக்கல் என்பது அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் கண்கள் நன்றாகத் தெரிவதற்காக கண்களின் கீழ்ப் பட்டையிலும்,மேல் பட்டையிலும்,புருவத்திலும் தீட்டி வந்துள்ளனர்.அபிராமி அம்மையை அஞ்சன விழியாள் என்று அழைப்பர்.

இந்த நீலாஞ்சனக்கல்லை பன்னீருடன் உரசி கண் உள்பட்டை,மேல் பட்டை போன்ற இடங்களில் தடவி வந்தால் இறக்கும் வரை கண்பார்வை மங்காமல் இருக்கும்.  

இந்த நீலாஞ்சனக்கல்லை முஸ்லீம் அன்பர்கள் சுருமாக்கல் என்று அழைப்பர்.குர் - ஆன் ல் இதை ஒவ்வொரு தொழுகையின்போது கண்களுக்குத் தடவுவது தலையாய கடமைகளாய் சொல்லி வைத்துள்ளார்கள்.
ஆனால் தற்போது கடைகளில் விற்கப்படும் கண்மை காரீயத்தை அடிப்படையாகக் கொண்டது.இதனால் மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். கண்பார்வையும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே கீழ்க்கண்ட கண்மையை உபயோகித்தால் இது போன்ற மோசமான விளைவுகள் இல்லாமல் நல்ல விளைவுகள் உண்டாகும்


நீலாஞ்சனக்கல்


மேலும் நீலாஞ்சனக் கல் பற்றி தெரிந்து கொள்ள சித்தர் ராச்சியம் தோழி அவர்களின் இடுகையைப் பார்வையிடவும்.
http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_25.html
 மஞ்சள் கரிசலாங் கண்ணி

கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில்(மஞ்சள் கரிசலாங் கண்ணி,அல்லது வெள்ளைக் கரிசலாங்கண்ணிச் சாறு) கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, மீண்டும் கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, இப்படி பல தடவை செய்து பிறகு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை சிற்றாமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
சிற்றாமணக்கு விதை


மேலும் முன் பதிவில் கூறிய மூலிகைகள் பற்றி அன்பர்கள் எனது அடுத்த பதிவான காய்ச்சல்,கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -3) என்ற பதிவைப் பார்க்கவும்.

கொள்ளை நோயின் தூதுவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க மேன்மேலும் வழிகள் தரப்படும்.
மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, October 27, 2010

காய்ச்சல், கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்,வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி

இப்போது மழைக் காலம்,வெப்பமும் ஈரப்பதமும் ஒரு சேர இருந்தால் அங்கே கிருமிகள் தழைத்துப் பெருகும். 
ஆங்கில மருத்துவர்களுக்கும் கொண்டாட்டமான காலம்.ஏனெனில் காய்ச்சல் கண்வலி சீசன்.ஆங்கில மருத்துவர்களுக்கும் வசூல் மழை பொழியும்.காரணம் கீழே.


நன்றி தினமலர்.
பதிவுக்கு போகும் முன் இந்த உரத்த சிந்தனை தினமலர் 24-10-2010 ல் வெளியானது.கொஞ்சம் படித்துவிட்டு மேலே தொடருங்கள்.திரு தே.மா.முகுந்தன்,சிந்தனையாளர் அவர்களுக்கு நன்றியும் தெரிவியுங்கள்.


நிலவேம்புக் குடிநீர் என்ற ஒன்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அதை முடிந்தால் நான்கைந்து பாக்கெட்டுகள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.அதைக் கஷாயமிட்டு(முடிந்தால் அத்துடன்,குப்பை மேனி,விஷ்ணு கரந்தை,வெள்ளருகு,கிரந்தி நாயகம்,ஆடா தொடை சேர்த்தால் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் மூன்றே நாட்கள்தான்,விருந்தும் மருந்தும் மூன்று நாளே!ஒரு விஷயத்தில் கவனம் தேவை.பூச்சி மருந்து அடித்த வயல் பக்கம் இருக்கும் மூலிகைகளை எடுக்காதீர்கள்,எடுத்த மூலிகைகளை நன்றாக சுத்தமான நீரில் கழுவிய பின் உபயோகிக்கவும்) அருந்தினால் காய்ச்சல் பறந்து போகும்.


புகை போட மேலே கண்ட நிலவேம்புக் குடிநீருக்கான பொடி, சதகுப்பை,வெண்குங்கிலியம் (கோயில்களில் முன்பு இதைத்தான் புகை போட உபயோகிப்பார்கள்,குங்கிலியக் கலய நாயனார் என்றும் ஒரு நாயனாரே உண்டு),சிங்கப்பூர் சாம்பிராணி என்று கேட்டு வாங்குங்கள்,(கடையில் இப்போது சாம்பிராணி என்ற பெயரில் விற்பது பென்சாயின்),இத்துடன் அகில் கட்டைப் பொடி,சந்தனத்தூள் சேர்த்து புகை போட்டு வர வீட்டில் உள்ள கெட்ட கிருமிகள் மட்டும் அழிந்து,(கவனிக்கவும் நன்மை புரியும் கிருமிகள் அழிவதில்லை) நம் நோய் எதிர்ப்பு சக்தியும் வளரும்.
காய்ச்சல் அதிகம் இருந்தால் நிலவேம்புக் குடிநீருக்கான பொடி, சதகுப்பை,குப்பை மேனி, வேப்பிலை,எலுமிச்சை இலை,தும்பைச் செடி,விஷ்ணு கரந்தை,வெள்ளருகு,கிரந்தி நாயகம்,தைவேளை(நல்வேளை) ,ஆடா தொடை, இவற்றில் கிடைத்தவற்றைப் போட்டு தண்ணீரில் பானையை மூடி கொதிக்கவிட்டு,ஒன்று அல்லது இரண்டு போர்வையை இடைவெளி இல்லாமல் நோயாளர் மூடிக் கொண்டு அந்தப் பானையையும் உடன் உள்ளே வைத்துக் கொண்டு ஆவி பிடிக்கவும்.சூடு குறைந்தால் நான்கைந்து செங்கற் துண்டுகளை அடுப்பில் சிவக்க காயவிட்டு அந்தப் பானையில் ஒன்றன் பின் ஒன்றாக கரண்டியால் முகத்தில் வெந்நீர் தெரிக்காமல் போடவும்.நன்கு வியர்த்து காய்ச்சல் உடனே குறையும்.


மேற்கண்ட மூலிகைகள் தெரியாது என்னும் அன்பர்கள் எனது அடுத்த பதிவான காய்ச்சல்,கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2) என்ற பதிவைப் பார்க்கவும்.


அடுத்ததாக கண்வலிக்கு இந்தப் புகையே கண்வலி பரவாமல் தடுக்கும்.கண்வலி வந்தால் இம்காப்ஸ் மருந்துகளில் பன்னீர்(ரோஸ் வாட்டர்),படிகார நீர் கிடைக்கும்.படிகார நீர் 2 பங்கும்,பன்னீர் 3 பங்கும் சேர்த்து கண்ணிற்கு விட்டு வர கண்வலி நீங்கும்.

சாதாரண நாளிலும் வெறும் ரோஸ் வாட்டரை மட்டும் விட்டு,பஞ்சில் நனைத்து கண்ணின் மேலே வைத்து வர கண் குளிர்ச்சியாகும்.இதிலும் ஒரு எச்சரிக்கை நான் கூறியது மெடிசினல் உபயோகத்திற்கான பன்னீர் இதைத்தான் உபயோகிக்க வேண்டும்.கடைகளில் பன்னீர் என்ற பெயரில் விற்கும் சாதாரண பன்னீரைப் பயன்படுத்திவிட வேண்டாம். 
    
கொள்ளை நோயின் தூதுவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க மேன்மேலும் வழிகள் தரப்படும்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

Tuesday, October 19, 2010

காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் தொடர்ச்சி...

இந்த பதிவுகள் எல்லாம் எனக்குள் தோன்றிய கேள்விகளின் பதில்களே.வாத வைத்தியத்திற்கும்,வாதம் வகை 80 ற்கும் (கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கும்,பக்க வாதத்திற்கும்,கை கால் செயல்படாமல் இருக்கும் நிலைகளுக்கும்) சித்த வைத்தியர்கள்,சிறுநீர் பெருக்கிகளையும் (DIURETICS), பெருமலம் போக்கிகளையும் (PURGATIVES) ஏன் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.

அப்படி இருந்த போது அக்கு பஞ்சரில் இதற்கான கேள்விகளையும் அதற்கான விடையையும் கொடுத்தார்கள் எனது அக்கு பஞ்சர் குருநாதர்கள் ஆன நெல்லிக்குப்பம் திருDr M.N.சங்கர் , சேலம் ஷண்முகா மருத்துவமனையில் பணிபுரியும் திரு Dr ஜோசப்பால் , திரு Drஆன்டன்ஜெயசூர்யா(LATE) (CHAIRMAN MEDICINA ALTERNATIVA), ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.அவர்களுக்கு இந்த இடுகையை சமர்ப்பணமாக்குகிறேன்.

அக்கு பஞ்சரில் என்னை முனைவர் பட்டம் பெறச் செய்ததோடு மட்டுமில்லாமல் எனக்கு எல்லா அக்கு பஞ்சரின் அதி நுட்பங்களைக் கற்பித்தவர்கள் இவர்களே!அக்கு பஞ்சரில் என் கட்டுரையில் வித்துவத்துவம் ஏதேனும் தென்பட்டதென்றால் இவர்களே காரணம்.


காப்பி, டீயால் பித்தம் அதிகரிப்பது மட்டுமல்ல,காப்பியிலும்டீயிலும் காஃபீன் என்ற நஞ்சு உள்ளதுகுடித்த எட்டு மணி நேரத்திற்கு மேல் இது ரத்தத்தில் இருந்து தன் கெடுதல் பணியை தொடர்ந்து நடத்துகிறது.

காப்பிக் கரைகள் நமது ஆடைகளில் பட்டாலே பல முறை துவைத்தாலும் போவதில்லை.அவ்வளவு தூரம் கரையை ஏற்படுத்தும் இவற்றை பல ஆண்டுகளாக குடித்து வரும் நம் குடல்களில் எவ்வளவு கறை படியும். யோசித்துப் பாருங்கள்.

சென்ற பதிவின் இடுகையின் திரு தோட்டக்காரன் அவர்களின் பதிலில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை இங்கே மிக விரிவாகத் தருகிறேன்.டீயில் கிரீன் டீ என்ற ஒன்று உண்டு.அது டீயின் கொழுந்து இலைகளை அப்படியே பறித்து நொதிப்பிற்கு உட்படுத்தாமல்,மிதமாக சூடாக்கப்பட்டு நொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு நிழலில் உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. இதனால் அதில் உள்ள 'பாலி பீனால்கள்சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.இவை கேன்சரையே தடுக்கும், குணப்படுத்தும் வல்லமை உள்ளவை.

சைனாவில் தங்கள் குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் குரு தட்சிணையே,இந்த டீதான்இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இலைத்தேயிலையில் தயாரிக்கப்பட்டு எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கப்பட்டு இனிப்பு கலக்காமல் பரிமாறப்படுகிறது,என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த டீ மல்லிகை மணத்துடன் இருக்கும்.இந்த டீ கேன்சரைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்(ANTI OXIDENTS) களை உள்ளடக்கியது.

நமக்கு டீ என்ற பெயரில் டீ இலைத் தூசிகள்தான்(DUST TEA)வழங்கப்படுகிறது, தனியாக செயற்கை மணம்,திடம்,நிறம் ஊட்டப்பட்டு வருகின்றன.இதில் போலிகள் வேறு.பல டீக்கடைகளில் பழைய டீத்தூளை வாங்கிச் சென்று மீண்டும் மேற்கண்ட மூன்றும் ஊட்டப்பட்டு புத்துணர்வுடன் திரும்பி வருகின்றன, நமக்கு புத்துணர்வூட்ட!குப்பையில் போட வேண்டியதை எல்லாம் வேளை தவறாமல் குடித்து வருகிறோம்.

மேலும் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் சுண்ணாம்பை (CALCIUM)அடிப்படையாக கொண்டது.இதுதான் நம் உடலைத் தூக்கி நிறுத்துகிறது. இந்த எலும்புச் சட்டகத்தை அரிப்புக்கு உள்ளாகாமல் காக்கவே நம்து இரத்தம் காரத்தன்மையோடு(BASE NATURE)உள்ளதாக இறைவனால் வைக்கப்பட்டுள்ளது.அதன் காரத்தன்மை மாறி அமிலத்தன்மைக்கு(ACID NATURE)மாறினால் எலும்புகள்ஆங்காங்கே அரிக்கப்படும்,குறிப்பாக மூட்டுகளில் இந்த சேதம் அதிகம் இருக்கும்.

இதில் உடலின் இரத்தத்தை காரத்தன்மையில் இருந்து அமிலத் தன்மைக்கு மாற்றும் முக்கிய மூன்று காரணிகளைப் பார்ப்போம்.

(A) குளிர் பானங்கள்
(B) நன்றாக மென்று உமிழ் நீரோடு கலந்து தின்னாமல் அப்படியே விழுங்குவது 
(C) வேகங்கள் ஐந்தனுள் ஒன்றான சிறுநீரை அடக்குவதால் ஏற்படுவது
இந்தக் காரணிகள் எப்படி இந்தப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அவற்றை விளைவுகளை எப்படி மாற்றுவது,அல்லது தடுப்பது என்று பார்ப்போம் 

(A)முதலில் குளிர் பானங்களுக்கு வருவோம்.இவை பொதுவாகவே கரிய மில வாயுவை பானங்களில் கரைத்தே குளிர் பானங்கள் உருவாக்கப்படுகின்றன. கரியமில வாயு(CARBAN DI OXIDE )தண்ணீரில் கரைந்தால் அமிலமாகவே மாறுகிறது (CARBOLIC ACID).  இவைகளை அருந்துவதால் நம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பால் வயிற்றின் இரைப்பை,குடல் இவற்றில் புண் உண்டாகி,அதன் பின் இரத்தத்தில் அமிலத் தன்மை உயர்கிறது.

(B)மேலும் நாம் உண்ணும்போது சீரணம் நம் கைகளில் ஆரம்பித்து வாயில் நடைபெற்று வயிற்றில் முடிவடைகிறது என்பார்கள்.

இதையே நம் ஆன்றோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்பார்கள்.

வாயில் காரத்தன்மை என்ற {சுண்ணாம்புச் சத்தை (CALCIUM)} அடிப்படையாகக் கொண்ட வாணி என்றழைக்கப்படும் எச்சில் என்ற உமிழ்நீர் உள்ளது.

நாம் உண்ணும் உணவினை நன்றாக மென்று அரைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால்,அது வயிற்றில் போய் உணவு வயிற்றில் இரைப்பையில் உள்ள அமிலங்களால்(HYDRO CHLORIC ACID) கரைக்கப்பட்டு சீரணம் ஆன பின் உமிழ்நீரில் உள்ள காரத்தன்மை{சுண்ணாம்புச் சத்தை( CALCIUM) அடிப்படையாகக்
கொண்டது அமிலத்துடன் வினைபுரிந்து அதை சமநிலைப்படுத்துகிறது.

இப்படி இல்லாமல் அப்படியே உணவை விழுங்கும்போது உணவுடன் உமிழ்நீருடன் கலக்காததால் வயிற்றில் இரைப்பையில் உணவு சீரணமான பின்,சீரணத்துக்குப் பின் எஞ்சி இருக்கும் அமிலம் உமிழ் நீர் அதை நிலைப் படுத்த இல்லாததால் குடலின் சுவர்களை அரிப்பதோடுநெஞ்செரிச்சல் (HEART BURNING) போன்றவைகளை உண்டாக்கிஇரத்தத்தின் அமிலத்தன்மையையும் உயர வைக்கின்றன.

(C)மூன்றாவதாக இங்கு நான் குறிப்பிடுவது நம் உடலில் வேகங்கள் ஐந்து. இவை 96 உடற் தத்துவங்களில் அடங்கும்.அவை வேகமாக வெளியேற முயற்சிக்கும்போது அடக்குவதனால் வரும் விளைவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1)இருமல்
2)தும்மல்
3)விந்து வெளியேறுதல்,நாதம் வெளியேறுதல்
4)மூத்திரம் வெளியேறுதல்
5)மலம் வெளியேறுதல்

இதில் நான்காவது வேகமான மூத்திரத்தை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.வேகமாக வெளியேற முயற்சிக்கும் மூத்திரத்தை அடக்குவதால்,சிறுநீரகம் தனது கழிவுகளை வெளியேற்றும் பணியின் மூலம் வெளியேற்றி தேக்க இடம் இன்றி சிறு நீர்ப்பை நிறைந்து இருப்பதால்அது தன் வேலையான கழிவு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.உடனே நமது உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்கிறது.

நமது சிறுநீரகம் நம் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை குறிப்பாக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்ற உடலுக்கு தீங்குபயப்பவற்றை  நீக்கிகாரத்தன்மையை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.இதைப் பற்றி ஏற்கெனவே முன்னொரு பதிவில் விளக்கமாக எழுதிவிட்டேன்.

யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்வதன் விளைவாகஇந்த அமிலங்கள் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் நெளிந்து வளைந்து செல்லுவதால் அங்கேயே படிந்துவிடுகின்றன. பின்பு அந்த மூட்டுக்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.இதனால் மூட்டுக்கள் தேய்ந்துவிடுகின்றன. அதனால் மூட்டுக்களில் வலி ஏற்படுகின்றது.

எனவேதான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்ற வழக்குச் சொல் வந்தது.

மூட்டுகள் என்பவை தேய்ந்து போக கதவின் கீல்கள் அல்ல.அவற்றைத் தேய்மானம் செய்யும் காரணிகளை நீக்கினாலே,உடல் தன்னைச் சரி செய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது,மூட்டுத் தேய்மானம் என்பதே இல்லாமல் போய்விடும்.மேலும் தக்காளியில் அதிக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) இருப்பதாலேயேமூட்டு வலி உள்ளவர்கள் அதை சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்படி வைத்தியர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையே ஆங்கில வைத்தியத்தில் மூட்டுத் தேய்மானம் என்று கூறி மூட்டுகளில் போய் வைத்தியம் பார்ப்பதும்.வோவிரான் ஜெல்,மற்றும் வோவிரான் ஊசி மருந்துகள் பொடுவதால்,சிறுநீரகத்தின் பழைய பாக்கியிருக்கும் வேலையோடு புதியதாக இந்த மருந்தின் தொல்லையைச் சமாளிக்கும்அதிக வேலைப் பளுவின் காரணமாக சிறுநீரகம் பழுதடைகிறது.நோய் மேலும்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.

வைத்தியன் காரணம் புரிந்து வைத்தியம் செய்தாலே குணம் கிடைப்பது தாமதம் ஆகும்.காரணமே புரியாமல் வைத்தியம் பார்த்தால் என்ன ஆகும்.
காரணமே புரியாமல் வைத்தியம் புரிவதையே ஆங்கில வைத்தியம் செய்கிறது.
சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல இடம் அதிகம் எடுத்தால் படிப்பவர்க்கு சலிப்பு தட்டும் எனவே,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment