மொழி பெயர்ப்புக் கருவி

Friday, July 15, 2011

மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்

மதிகெட்ட மத்தியஅரசும், அரசாங்கத்துக்கு(ஆரோக்கியம் பற்றி) ஆலோசனை கூறும் மதியில்லா அரசியல் ஆலோசகர்களும்(பாகம்1)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
என்ன இந்தப் பதிவின் தலைப்பு இவ்வளவு கடுமையாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?முதலில் இப்படி தலைப்பு அமைத்ததற்காக என்னை மத்திய அரசாங்கம் மன்னிக்கவும்.

ஆனால் இப்படி தலைப்பு அமைக்கக் காரணமாக விளங்கும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் மக்களின் நலனைப் பொறுத்தவரை மிக முட்டாள்தனமாகவும், மோசமாகவும், அமைந்துள்ளன.அதன் விளைவோ மிகக் கொடூரமானது.தெரியாது என்று இப்படி நடந்து கொண்டால்,தலைப்பு சரிதான், தெரிந்தே இப்படி அரசு நடந்து கொண்டால் அது கொடூரத்திலும் கொடூரம்.

இனி எங்க வீட்டில் இரண்டு பேருக்கு காய்ச்சல்,உங்க வீட்டில் எத்தனை பேருக்கு தலைவலி என்பது பழங்கதையாகி,எங்க வீட்டில் இரண்டு பேருக்கு புற்று நோய் ( CANCER ) , உங்க வீட்டில் எத்தனை பேருக்கு புற்று நோய் என்று கேட்பது சகஜமாகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது . அதன் பாதிப்பு நம்மைக் கவ்வும் சூழ்நிலையும் உருவாகிவிட்டது.இந்தச் சூழ்நிலையை உருவாக்கி வரும் மத்திய அரசை நான் இப்படி அழைப்பது தவறில்லையே ????? இது பற்றி எச்சரிக்கை செய்யும் பதிவே இது.  

நான் சொல்ல வரும் விடயம் என்டோ சல்பான் என்ற பூச்சி மருந்தையும்,அணு உலைகளால்தான் தன்னிறைவடைந்த மின் உற்பத்தியை எட்ட முடியும் என்று கூறிக் கொண்டு கொலைக் களங்களைத் (அணு உலைகளை) தயாரித்து வரும் மத்திய அரசின் போக்கைத்தான்.

இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவது, ஆளப்போவது மக்களையல்ல, மக்களின் சமாதிகளைத்தான் இவர்கள் ஆட்சி செய்யப் போகிறார்கள். அந்த அளவுக்கு பசுமைப் புரட்சி என்ற பெயரில் உற்பத்தி செய்து வருவது உணவையல்ல, விஷங்களைத்தான். ஒருவனை நஞ்சிட்டு கொல்வது குற்றமென்றால், மத்திய அரசு செய்து வருவது, என்டோ சல்பானை தடை செய்யாமல் விவசாயத்தின் மூலம் நஞ்சிட்டு பல பேரை கொல்லும் குற்றத்திற்கு துணை போவது வேறென்ன!!!!!!!!!!

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடரும் முன் இந்த இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.

http://sukratv.com/details.php?id=4826


அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

3 comments:

 1. ஜி உங்கள் கோபம் மிகச் சரியானதே

  என்ன ஆட்சியா நடத்தறாங்க?

  ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு நாலு சிலிண்டர்
  போதுமாம் (என்ன கண்டுபிடுப்பு இதற்கே அவய்ங்களுக்கு அவார்டு குடுக்கணும்)

  மிச்ச சிலிண்டர் ரூ 800 (தனியார் விற்கும் விலையில்)
  வாங்க வேண்டுமாம்

  ஒரு வருடத்தில் எதனை தடவை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்

  அப்புறம் என்ன ......துக்கு இவங்க ஆட்சியில இருக்கணும்

  எல்லாம் மக்கள் பார்த்துட்டே இருப்போம் சரியான நேரத்தில(தேர்தல்) வைப்போம் ரிவிட்டு

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.!!!!!!
  இந்த ஆட்சியாளர்களை நினைக்கையில் மக்கள் நிலை ஐயோ பாவம்!!!!!!இறைவா எம் மக்களைக் காத்து ரட்சி,மக்களுக்கும் அறிவையும்,சிந்திக்கும் திறனையும்,விழிப்புணர்வையும்,ஆட்சியாளர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும் மன நிலையும் கொடு என்று இறைஞ்சும் நிலை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. குருஜி,

  நீங்கள் தயவு செய்து மன்னிப்பு கோராதீர்கள், யார் தவறு செய்தாலும் அதனை சொல்லி திருத்தும் உரிமை எல்லோருக்கும்
  உன்டு, அரசியல்வாதிகள் தங்களின் கருத்தை வாசிக்க கூட நேரம் இல்லாமல் அவர்களின் பணியை (ஊழல்) செய்து கொன்டு இருப்பார்கள், இவர்களை பொதுப்பணி செய்ய அனுப்பினால் இவர்கள் தங்களின் சொத்தை அதிகப்படுத்தி கொள்கிறர்கள்,இறைவனன்றி இவர்களை யாராலும் திருத்த முடியாது.

  என்றும் தங்களின்,
  ந. ராஜசேகர்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்