மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, July 13, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(33)

யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம் 3)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
அடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்? என்று பார்ப்போம்.

தானென்ற மேஷமுமே தனுசோன் கேளு
சாதகமாய்க் கொண்டேறித் தாயைப் போற்றி
வானென்ற சமாதியிலே நின்று தேறி
வாதசித்தும் வாசிசித்தும் வரவே செய்வான்
கோனென்ற குருபதத்தை அடுத்துக் காப்பான்
குறையாமல் சாஸ்திரத்தை விளங்குவானே!
வேனென்ற மாய்கையிலே மனது கொள்ளான்
வேதாந்த சாஸ்திரத்தை விளங்குவானே.
            -அகஸ்தியர் மஹாதிராவகம் 4-

மேஷம் மற்றும் தனுசு ராசி மற்றும் லக்கினகாரர்கள்,
சாதகமாய் யோகசாதன முறைகளினால் உலக நாயகியான பார்வதி தேவியைப் போற்றி,ஆகாயக் கூறை வளப்படுத்தும் சமாதியில் நின்று அதில் தேர்ச்சி அடைவார்கள்.


பிறகு அதன் மூலம் வாத சித்தும் வாசி சித்தும் கைவரப் பெறுவார்கள்.கோன் (அரசன் என்றும் தெய்வம் என்றும் பொருள்படும்) ஆகிய குருவின் பதத்தை அடுத்து,அந்த நிலையைக் காப்பான்.சாஸ்திர பாண்டித்தியத்தில் குறையாமல் விளங்குவான்.வீணான மாயையில் மனதை வீணாகச் செலுத்த மாட்டான்.வேதாந்த சாத்திரத்தை கரைத்துக் குடித்த விற்பன்னனாக திகழ்வான்.
  
அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

 1. பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு ராம்குமார் அவர்களே,
  எனக்கெதற்கு நன்றி!!!எனக்கு இத்தனை விடயங்களையும் தெரிய வைத்து அதை கேட்க இத்தனை நபர்களையும் அனுப்பி வைத்த இறைவனுக்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. அன்புமிக்க திரு சிவ.சி.மா.ஜானகிராமன். அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. அன்புமிக்க திரு ஜகதீஷ் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்