மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 31, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 40)

ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு
அன்புள்ள பதிவு வாசகர்களே,
நேற்று ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு நமது வாசகர்களுக்காக தர இருக்கிறேன்.எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் ஆகியோருக்கு நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.


அவரின் அலைபேசி எண்கள்,
+919894912594
+919626418594
அவர் தயாரித்தளிக்கும் மருந்துகளில் சில கீழே கொடுத்துள்ளேன்.


வழுக்கைத் தலையில் 30 நாட்களில் முடி வளரவும்,பெண்களுக்கு முடி கொட்டாமல் பாதுகாக்கவும் சில மூலிகைகளைக் கலந்து(முதியார் கூந்தல்,அழுகண்ணி,தொழுகண்ணி,திரிபலாதி{கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்},கரிசலாங்கண்ணி}) ஜெல் வடிவில் தயாரித்தளிக்கிறார்.இதனால் அடைபட்ட தலைமுடியின் வேர்க் கால்கள் திறந்து மீண்டும் முடி வளர துவங்குகிறது.


இதனால் ஏற்கெனவே காப்பி,டீ அருந்தியதால் பித்தம் அதிகரித்து தலையில் ஏற்பட்டுள்ள கடும் உஷ்ணமும் தணிக்கப்படுகிறது.இத்துடன் அயப்ருங்க ராஜ கற்பம்,தேனுடன் உண்ண நன்று.இது கரிசலாங்கண்ணி சேர்ந்தது.கரிசாலை லேகியமும் பாலுடன் உண்ணலாம்.கரிசலாங்கண்ணி பற்றி தனிப் பதிவு உண்டு.அதில் அது பற்றிய சிறப்புகளைக் காணலாம்.


முடி வளருவதற்கு தைலங்களும் பல சிறந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்து அளிக்கிறார்.


மேலும் ஆண்மைக் குறைவுள்ளவர்களுக்கும்,விந்தணு குறைபாடு உள்ளவர்கள்,குறி விறைப்புத் தன்மை இல்லாதிருப்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ள ஒரு தாது விருத்தி லேகியமும் தயாரித்துக் கொடுக்கிறார்.அதை பலருக்கு நான் சிபாரிசு செய்துள்ளேன்.அதில் அஸ்வகந்தா,ஒரிதழ்த் தாமரை,நாட்டத்தி விதை,சதாவரிக் கிழங்கு,பூமிச் சக்கரைக் கிழங்கு,நிலப் பனங்கிழங்கு,பூனைக் காலி விதை,சாதிக்காய்,நீர்முள்ளி விதை,பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு,சாலாமீசரி,பேரீச்சை,கடுக்காய், நெல்லிவற்றல் , தான்றிக்காய்,விஷ்ணு கிராந்தியும் சேர்க்கிறார்.


திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக் கொணர்ந்து
மண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கருத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்
இறந்திட்ட சுவாசம்தான் இறுகியேறும்
ஏற்றமாஞ் சுழி முனையும் திறந்து போமே!!!!


விஷ்ணு கிராந்தி என்னும் மூலிகையை எடுத்து வந்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்திட்ட அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் பழம் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை ஒரு யோசனை தூரத்திற்கு தெரியும்.


மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கருத்து மின்னும்.இதுவரை கழிந்து போன சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.அவ்வளவு சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.


மூட்டு வலித்தைலமும் தயாரித்து கொடுக்கிறார், அனைவரும் பயன்பெறுக!!!!!     அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

5 comments:

 1. சாமீ ஜி

  முடி உதிர்வதை பற்றி தங்களிடம் கேட்க வேண்டும்
  என்று நினைத்திருந்தேன் அதற்குள் பதிவா??

  உங்களை நான் என்னவென்று சொல்வது

  மிக்க நன்றி ஜி
  என்றும் அன்புடன்
  ஷரீப்

  ReplyDelete
 2. Ayya -intha kelvi inge idam peralama enru theriyavillai. Mannikavum.
  Goraknath enru sollum Natha siddharum Korakkar enru naam kooram 18 sitthargalil oruvaranavarum Onra? Illai veru veru siddhargala?
  Thayavu koornthu sollavum

  nanri
  raj

  ReplyDelete
 3. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. அன்புமிக்க திரு விக்ராஜ் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!
  கோரக்கநாத்ர் என்ப்வரோ,கோரக்கர் என்பவரோ சொன்ன விடயங்களை ஆராய்ந்து கேள்விகள் உதித்து உங்கள் சிந்தையில் ஏற்றம் பெற்றால் நல்லது.நல்லது கேள்விக்கு வருவோம் கோரக்க நாதர் நவ நாத சித்தர்களில் ஒருவராகவும்,கோரக்கர் பதிணென் சித்தர்களில் ஒருவராகவும் கூறப்பட்டுள்ளனர். இருவரது கருத்துக்களும் ஒன்றாக இருந்தாலும், சொல்லும் விதம் வேறுவேறு விதமாக இருப்பதை வைத்தும் பாடல்களின் கால பேதங்களை வைத்து இருவரும் வேறு வேறு என்று கூறுவார்கள்.பெயரை வைத்து இருவரும் ஒருவரே என்று கூறுபவர்களும் உண்டு.அவர்கள் சொன்ன கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவர்களை விட்டுவிடுவோம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. விஷ்ணு கிராந்தி செடியை எந்த பாலில் அரைக்க வேண்டும்? பசும் பாலிலா அல்லது எருமை பாலிலா அல்லது தேங்காய் பாலிலா

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்