மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 18, 2010

ஒளி உருவச் சித்தர்கள்

அன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் கருதி எங்களுக்குத் தெரிந்த அனைத்து ஆன்மீக ரகசியங்களை வெளியிட முடிவு செய்து இன்று முதல் விஷயமாக எங்களது தற்போழ்து வாழ்ந்து வரும் ஆன்மீக குரு திருமிகு ஆன்மீகச் செம்மல் சர.கோ.பார்த்தசாரதி அவர்களின் தந்தையாரான அருள்மிகு ஆன்மீக குரு சர.கோட்டைசாமி அவர்களின் ஜீவ சமாதியில் அவரது குரு பூஜையன்று எடுக்கப்பட்ட புகைப் படத்தில் அவர்கள் தனியாக ஒளி உருவமாகவும்,ஒளி உருவமாக சப்த ரிஷிகளுடன் காட்சியளிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ மேலே

Post Comment

14 comments:

 1. இந்தியாவில் மட்டும்தான் இது மாதிரியான சித்தர்களின் சூட்சும வருகை அமையும் என்பதற்கு தங்களின் படங்கள் ஒரு ஆதாரமாகும்.

  ReplyDelete
 2. One of the best pictures in collections. Kindly post other higher beings photos also.

  ReplyDelete
 3. Dear Sir,

  Which siddhar samadhi is this and where is this samadhi. Could you identify who could have come as the light streaks. I have posted comments in various heading in this blog. Kindly reply to them.

  Thanking you

  S. Ananthakrishnan

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு HOLISTIC எஸ்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களே, எங்கள் குருநாதரின் குருநாதரும்,குருநாதரின் தகப்பனாரும் ஆன எங்கள் சபை ஸ்தாபகருமான திருமிகு கோட்டைச்சாமி அவர்களின் ஜீவசமாதியே இது.அது எங்கள் சித்த ஞான சபையில் உள்ளது.அந்த ஆசிரமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில்,பரமக்குடி தாலுக்காவில்,நயினார் கோவில் அருகே பாண்டியூர் என்ற தெய்வீகத் திருத்தலத்தில் அமைந்துள்ளது.ஒவ்வொரு மாதம் இரவுப் பௌர்ணமியில் அங்கே சபைக் கூட்டம் நடை பெரும்.அதில் சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்படும்.மதம் ஒரு தடையில்லை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. வந்ததோர் வருகையாளர், வாழ்வளிக்க வல்லவர்!!

  திருவடிகள் போற்றுவோம்..

  ReplyDelete
 6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, எனது வலைத் தளத்தில் தங்கள் வருகையை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.இறைவன் செய்யும் எல்லாச் செயல்களும் தன்னால் செய்ய முடியும்(எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே)என்று முழங்கியவர்.அவர் மச்ச முனிச் சித்தரின் வழியைக் கடைப் பிடித்துத் தேறியவர்.அவரே கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று கடையை ஏறக்கட்டிவிட்டேன் என்கிறார்.என் வலைப் பூவில் உள்ள விஷயங்களை எல்லோரும் பார்த்தாலல்லவா அது பயனாகும்.மக்கள் மனம் முன் போலில்லாமல் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதுதான் என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.யாருமே பார்க்காததை நான் எழுதித்தான் பயன் என்ன!என் வலைப் பூவிற்கு வந்த எந்த வருகையாளரும், என் வலைப்பூவிற்கு வாழ்வளிக்க வந்தவர்.அதன் மூலம் அவரின் ஞானத்திற்கான வழி திறக்க வந்தவர்.எனக்கும் வலைப்பூ போதும் என ஒரு சலிப்பு ஏற்பட்ட போது ஊக்கம் கொடுத்தவர்கள் திரு ஜாய் மாணிக்கா,திரு வினோதினி ஆகியோர்தான்.இல்லாவிட்டால் இந்தவலைப் பூ ஒருவேளை வெகுநாட்களுக்கு முன்பே நின்று போயிருக்கலாம்.கொத்து புரோட்டா,விஜிடபிள் கொத்து புரோட்டா இவற்றுக் கிடையில் ஞானத்தேடல் எவ்வளவு இருக்கப் போகிறது என்று எண்ணினேன். ஆனால் அலெக்ஸா ரேங்க் 1கோடிக்கு மேல் இருந்த சித்தர் வலைப் பூ இன்று உலக அளவில்7 லட்சம் என்ற இலக்கையும்,இந்திய அளவில் 37,000 என்ற இலக்கையும் எட்டியிருக்கிறது எனில் அது சித்தர்களின் அருட் கடாட்சமும் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆன்மீக, அறிவுத் தேடலும்தான் காரணம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. அருமையா ன பதிவு..தொடரட்டும்

  ReplyDelete
 8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு வித்யா ஷங்கர் அவர்களே,
  மிக்க மகிழ்ச்சி.எனது பதிவுகள் முழுதும் படித்துப் பாருங்கள்.2010 ம் ஆண்டில் 71 கட்டுரைகளும்,2011 ம் ஆண்டில் 8 கட்டுரைகளும்,இது வரை எழுதி உள்ளேன்.படித்துப் பார்த்து பயன் பெறுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. அய்யா வணக்கம்,
  தங்கள் வலை பூ மிகவும் சிறப்பாக இருக்கிறது .
  தொடர்ந்து தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் மற்றும் சித்தர் பெருமக்களின் ஆசிகலை வேண்டுகிறேன்

  ReplyDelete
 10. அய்யா
  இந்த கலிகாலத்தில் மனங்கள் அனைத்தும் கெட்டுகிடக்கிறது அதை சீர் படுத்த
  இது போன்ற வலை பதிவு கண்டிப்பாக வேண்டும்
  தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள்

  SHENTHIL.RAMANATHAPURAM
  maha2037072@gmail.com

  ReplyDelete
 11. அண்ணாக்கு எங்கு உள்ளது, சுழு முனைக்கும் அண்ணாக்கு என்பதற்கும் சம்பந்தம் என்ன.குண்டலினி என்பது ஒரு காற்றா இல்லை உணர்வா? விளக்குங்கள்

  ReplyDelete

 12. ANBU ANAITHAIYUM VELLUM!
  ------------------------
  Anbu vanakkam!
  muthalmuraiyaga thangal valaipoovirku vanthean. viyanthuponean. THOLUKANNI, ALUKANNI parti theadi alainthean. ethilum thirupthi illai. Aanaal intha valaipoovil kidaitha viayangal enaku manathirupthiyai thanthathu. RORMAVIRUCHAM, KARPOORAVILLVAM PHOTO VIDEO irunthaal veliida Anpoadu veandukirean!mikka nanri! jebasamy@gmail.com
  mbl No. 9443553331

  ReplyDelete
 13. வலை பூ அல்ல மாலை ?! நன்றி பல .நல்ல சேவைக்கு

  ReplyDelete
 14. உயர்ந்த சேவை நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்