மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, August 25, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(1)

சித்தர்களின் மெய்ஞானத்தினால் கண்ட விஞ்ஞானப் பேருண்மைகளை அலசி ஆராய்ந்து கண்ட உண்மைகளை இங்கு விரித்துக் கூறுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

அவன் அவள் அது எனும் மூவினைமயிற் 
தோற்றிய திதியேஒடுங்கி மலத்து உள
ஆதி அந்தம் என்பனார் புலவர்.(சிவஞான போதம் முதற்சூத்திரம்)

அவன் என்றால் சிவன் =  புரோட்டான் (PROTON) 
அவள் என்றால் பார்வதி = எலக்ட்ரான்(ELECTRON)
அது  என்றால் மாயா =  நியூட்ரான் (NEUTRON)

அவன் என்பது சும்மா இருக்கும் (சக்தி இல்லாவிட்டால் சிவனேன்னு சும்மா கிட) , அணுவின் உட் கருவுக்குள் புரோட்டான் சிவனைப் போல் சும்மா இருக்கும் ,(உமா காந்தாய ,காந்தாய காமிகார்த்தப் ப்ரதாயினே)அதே சமயம் அணுவின் உட்கருவை சுற்றி வரும் சக்தியான எலக்ரானை இழுத்து வைக்கிறது .இந்த ஈர்ப்பே அணுக்கட்டமைப்பை தீர்மானிக்கிறது.இந்த உலகத்தை கண்ணுக்கு தோற்றம் பெற வைக்கிறது.
சக்தி என்பது இயக்கத்தின் இருப்பிடம்,இயக்கத்தின் பிறப்பிடம்,சக்தியின் உறைவிடம்.இது அணுவின் உட்கருவை இடைவிடாமல் சுற்றி வருகிறது.
ஒரு குடத்திற்குள் இரண்டு பந்தைப் போட்டு சுழற்றினாலே ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமலோ தொடர்ந்து இயக்க சக்தி கொடுக்காமல் சுழன்று கொண்டே இருக்கச் செய்யவோ முடியாது.


ஆனால் எலெக்ட்ரானை ஆரம்ப இயக்க சக்தி எங்கிருந்து வந்தது.எங்கேயிருந்து தொடர்ந்து இயக்க சக்தி அதற்கு வருகிறது ,எது இத்தனையும் செய்கிறது.இத்தனை அண்ட பேரண்டங்களையும்,சூரிய,சந்திர நட்சத்திர கூட்டங்களையும் ஒன்றோடொன்று மோதாமல் அந்தந்த நிலைகளில் நிலை நிறுத்துவது எது .இந்த அண்ட பேரண்ட விதி முறைகளை உருவாக்குவது எது.


ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உண்டான ஒன்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது அதன் எல்லையைத் தெரிந்து கொள்ள முடியாது.மனிதன் 
இயற்கையை புரிந்து கொண்டு அதன் விதிகளை நகல் எடுக்க முயற்சித்தால் இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும்.
அதையே திரு வள்ளுவர் 


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்.


 இயற்கையான ஊழை (இயற்கை விதிகளை) எது வெற்றி கொள்ளும்?
அப்படி ஒன்று வெற்றி கொள்ளுமாறு வந்தாலும் அதன் முன்னர் இயற்கை, தனது இயற்கை விதிகளை மாற்றிக் கூட வெற்றி கொள்ள வந்த ஒன்றை தான் வெற்றி கொள்ளும்,அது விஞ்ஞானமாக இருந்தாலும்.


ஒரு புரோட்டான் (PROTON)  ஐ அதி வேகத்துக்குள்ளாக்கி மற்றொரு புரோட்டான் (PROTON)  னுடன் மோதவிட்டால் பெருவெடிப்பின் போது என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் எண்ணி செயல்பட்டார்கள், இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும் என்பதற்கேற்ப அங்கே ஒன்றுமே நடக்கவில்லை.


அந்த புரோட்டான் (PROTON), எலக்ட்ரான்(ELECTRON), நியூட்ரான் (NEUTRON)
என்பவை அனைத்தும் உயிரற்ற வஸ்து என நினைத்து செயலாற்றிக் 
கொண்டிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அஞ்ஞானிகள்.


 புராதான இந்துக்களுக்கும்,சித்தர்களுக்கும் அணுவின் கட்டமைப்பைப் பற்றியும் அவற்றை ஒன்றிலிருந்து (ஒரு உலோகக் கட்டமைப்பில் இருந்து ஒரு உலோகக் கட்டமைப் பிற்கு)ஒன்றிற்கு மாற்றும் வல்லமையும் பெற்றிருந்தார்கள்.
திரு ஆன்மீகப் பேரொளி பரமஹம்ச யொகானந்தரின் ஒரு யோகியின் சுய சரித்தத்தில் அஃறிணைப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.அந்தப் பக்கங்களை அப்படியே நகலாகத் தருகிறேன்.நன்றி .ஒரு யோகியின் சுய சரிதம்.


தாவர வர்க்கங்களினால் தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றினார்கள்.நம் நாட்டில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் இல்லை.எனில் எங்கிருந்து வந்தன நம் நாட்டில் இவ்வளவு தங்கமும்,செல்வமும். இந்த உலோகம் மாற்றும் வித்தையை ரச வாதம் என்றும் தங்கம் செய்யும் வித்தையை வகார வித்தை எனவும் பரிபாஷையில் அழைத்தனர்

சித்தர்களின் ரச வாதம் என்பதை மிக மிக ரகசியமாக வைத்திருந்தார்கள்
 இதோ ஒரு சித்தர்களின் ரகசியம். 
இது எனது முப்பாட்டனார் காலத்தில் கடுக்காய் மையினால் ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுத்தப்பட்ட கையெழுத்துப் பிரதி.அந்தப் பக்கங்களை அப்படியே நகலாகத் தருகிறேன்.இது போன்ற சித்த ரகசியங்களை இனி அதிகம் காண்போம். இட்டால் செம்பை(தாமிரம்{COPPER}),பொன்னாக்கும் {GOLD} தங்கப் பச்சிலையைப் பற்றிக் கூறி பட்டணத்துப் பரதேசிகளைப் பனங்காட்டைச் சுற்றி தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளச் சொல்கிறார்.அப்படி மிக எளிமையாக கிடைக்கும் மூலிகையே அது என்கிறார்.எனில் நம் நாட்டில் தங்கத்திற்கு குறைவேது.


மேலே கண்டதும் ரச வாத சூத்திரமே.ஞானம் அறிந்தவர்களுக்கு அறியும்படிக்கு கைகூடும்.
மேலே கண்டுள்ளதும் தங்கம் செய்யும் வித்தையான வகார வித்தையே.
தங்கத்தை பத்து என்றும்,சொக்கம் என்றும்,பத்தரை மாற்றுப் பசும் பொன் என்றும்,பிரம்மன் என்றும்,காஞ்சிரம் என்றும்,பறி என்றும், வகாரம் என்றும் அழைப்பர்.


அடர் கந்தக அமிலமும்,ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்ததை ராஜத்திராவகம் என்பர். அது கண்ணாடியைத் தவிர எல்லாவற்றையும் கரைக்கும்.அது போல எல்லாவற்றையும் உருக்க சித்தர்கள் குரு என்ற ஒன்றை வைத்திருந்தனர்.
முட்டாள் சீடன் ஒருவனை அதி புத்திசாலியாக்குபவர் குரு.அது போல் 
கீழ்நிலையில் (மகா முட்டாளாய்) இருக்கும் உலோகத்தை மேல் நிலைக்கு மாற்றுவதே குரு.இதில் வைத்திய குரு, வாத குரு ,ஞான குரு(முப்புளி) என மூன்றாகக் கூறுவார்கள்.
அதுபற்றி இனி வரும் தொடர்களில் காண்போம்.   

                                                                         

Post Comment

Sunday, August 22, 2010

சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)7

பேசா மந்திரம் பற்றி இங்கு காண்போம்.
அகத்தியர் தமது அடுக்கு நிலைப் போதத்தில் இவ்வாறு கூறுகிறார்.
சொல் பிறந்த விடமெங்கே ,முப்பாழ் எங்கே
சொல் பிறக்குமிடம் இந்த மறைமுகமான இடம்.இந்த இடத்தில் பேச்சு நடந்து கொண்டே இருக்கிறது.'இந்தப் பேச்சு நடப்பதையே ' 'பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி'.உயிர் இருப்பதின் அடையாளமான இந்த இடத்தில் பேச்சு நடந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது, யமன் என்ற பெரும்பூனை உயிரை எடுக்க வரும் போது இந்த இடம் பேசாமல் இருக்கும் என்பதையே கூறுகிறார்கள்.


"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 1579.

பேச்சற்ற இன்பம் அதுவே மவுனம்.அதன் இன்பமான முடிவு சமாதி,சிவானுபத்தில் சாலோகம் ,சாமீபம்,சாயுச்சியம் என மூன்றாக கூறுவார்கள்.சாலோகம் என்பது இப்போது நாம் செத்துக் கொண்டிருக்கும் லோகமே.சாமீபம் என்பது சிவனுக்கு சமீபமாக(பக்கத்தில்) செல்வது.சாயுச்சியம் என்பது இறையனுபவத்தின் உச்சியேயாகும்.
அந்த சாயுச்சியம் என்பது சிவமாகவே ஆகிறதாகும்.அந்நிலை அடைந்தால் (மாள்வித்து) செத்தாரைப் பொலாவோம்.செத்தாரைப் போலத்திரி என்று சித்தர் பாடல்களில் குறிப்பிடும் அந்த நிலைஅடைந்தால் செத்தாருக்கு இருப்பதைப் போல் சிந்தனையற்று, நம்மில் உள்ள ஓரிடம் மாறும்.
அதற்கு காச்சற்ற சோதியான ரவி,மதி ,சுடர் முச்சுடர் கைக்கொண்டு வாய்த்த புகழ் மாள தாள் என்ற (சாகாக்கால்)காலைத் தந்து மன்னும் ( பூமியில் நிலைபெற வைக்கும்) 


'பார்வதி என்றொரு சீமாட்டி அதில் பாதியைத் தின்றதுண்டு
இன்னும் பாதி இருக்குது பறையா நீ போய்ப்பார் என்றுத்தாரம் தாரும் தாரும்'
என்று நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் கூறுகிறார்.

பறையன் என்பவர் சொல்லுபவர்(விண்டவர்,பறைதல் என்றால் சொல்லுதல்).பார்ப்பான் என்பவர் பார்ப்பவர்(கண்டவர்;பார்ப்பான் என்றால் பார்ப்பவர் ).கண்டவர் விண்டிலர்.பார்ப்பவர் சொல்ல மாட்டார். சொல்பவர் பார்க்க மாட்டார்

'பிறந்த இடம் நோக்குதே பேதை மட நெஞ்சம்
கரந்த இடம் நாடுதே கண்'

இந்தப் பாடல் மேலோட்டமாகப் பார்த்தால், நாம் பிறந்து வந்த இடமாகிய
யோனித்துவாரத்தின் மூலம் கிடைக்கும் சிற்றின்பத்தை நோக்குதே மட நெஞ்சம்,பால் கரக்கும் இடமான முலைகளை நோக்குது கண் என்ற பொருள்படும்.
 ஆனால் உண்மைப் பொருள் ,மூச்சுப் பிறக்கின்ற இடத்தை நோக்குகிறது மனம்.மனமே கரந்து (மறைந்து) மறைந்திருக்கும் இடம் இதுதான்.மனம் என்பது
எண்ணங்களின் தொகுப்பே . மூச்சு உள்வாங்கும் போதோ அல்லது வெளியே விடும்போதோதான் மனம் புலன்களின் வழியே வெளியே பாய்கிறது.
  
இஸ்லாம் கூறுகிறது ,இறைவன் நம்மிடம் கலீமா வாகவே இருக்கிறான்.பேசா மந்திரத்தை 'இஸ்முல் அஹிலம்' என்பார்கள்.இதை ஒருவர் கீழ்க்கண்டவாறு தவறாக விளக்கம் அளிக்கிறார்,மனம் ஒத்து மந்திரத்தை வாய் திறவாது மனதிற்குள் இடைவிடாது ஜபித்துக் கொண்டே இருப்பது என்கிறார்.

மனதின் திறமே மந்திரம் .'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ,மனமது செம்மையானால்வாசியை உயர்த்த வேண்டாம்.' என்று சிவவாக்கியர் கூறுகிறார்.இதனால் மனத்தில் நினைப்பது என்ற செயல் நடக்க ஆரம்பிக்கும் போதே மூச்சு விரயம் ஆரம்பித்துவிடும் . பிறகு எங்கே மனம் ஒருமைப்படுவது.தியானம் கைகூடுவது.

அசைத்துக் கொண்டே இருப்பது அசபை.அசையாமல் இருப்பது அஜபா.
இதையே விநாயகர் அகவலில்
'குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி'

குண்டு போன்ற ஒரு இடம்.அதுவே மூலாதாரம் .அதில் மூண்டெழு கனலாகிய 'சி'காரம் இருக்கிறது . அதில் அசபை கூடி நிற்கிறது.அது பேசினால் அது அசபை ,அது பேசாமல் இருந்தால் அது அசபா.அதை 'சாகாக்காலால்' எழுப்ப வேண்டும்.அமுத நிலை மதியாகிய நிலவோடு எப்படி தொடர்பு பெற்று இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த அமிர்த நிலை பற்றி யாழ் இணையம் பண்டுவமும் (அறுவை மருத்துவமும்) காலமும் என்ற தலைப்பில் நன்கு விவரிக்கிறது.அதற்கான லிங்க் இதோ
http://www.yarl.com/forum3/index.php?showtopic=62448

இந்த அமிர்த நிலைஆண்களுக்கு பவுர்ணமியில் தலையில் இலங்கும்.பெண்களுக்கு அமிர்த நிலை அமாவாசையன்று தலையில் வரும்போது உயிரும் அங்கே இலங்கும்.இந்த அமிர்த நிலை இப்படி  ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர் எதிராக இயங்குவதால்தான் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு காமம் உண்டாகிறது.

நெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் ஆண், இந்த அமிர்த நிலை ஆண்களுக்கு பவுர்ணமியில் தலைக்கு வருவதால்  ஆண்களுக்கு பவுர்ணமியில் மரணம் நேரும் என்றும், நெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் பெண், இந்த அமிர்த நிலை அமாவாசையன்று பெண்களுக்கு தலைக்கு வருவதால் பெண்களுக்கு அமாவாசையில்  மரணம் நேரும் என்றும், கூறுகிறார்கள்.

Post Comment

Sunday, August 15, 2010

சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)6

எனக்கு கடந்த வாரம் இரண்டு கட்டுரைகளில் ஞான விஷயங்களை சற்றே பட்டவர்த்தனமாகவே எழுதி வெளியிட கட்டளை கொடுத்தால் ,வலைப்பூ
வெளியிட மறுத்து பல மணி நேரம் செலவிட்டு எழுதிய கட்டுரைகளை அப்படியே விழுங்கிவிட்டு SIGN OUT  ஆகி வெளியே வந்துவிட்டது.

இந்த அனுபவம் சற்றே விசித்திரமாகவே இருந்தது.ஆனால் சட்டைமுனி செய்த விஷயங்களைப் பார்த்த போது இது அவர் தடுத்ததாகவே எண்ணுகிறேன்.

ஒரு முறை சித்தர்கள் திருக்கூட்டம் சதுர கிரி மலையில் நடக்கும்போது; மகா சித்தரான காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 3,00,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை தான் இயற்றி கொண்டு வந்ததாக அரங்கேற்றினார்.
அப்போது அங்கிருந்த சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்தால் அதைப் படித்தவர்கள் அனைவரும் ஞானியாகிவிட்டால் உலக விருத்தி (காமம் அற்றுப் போய் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால்) இல்லாமல் சித்தர்கள் அனைவரும், பராசக்தியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.
 தன்உழைப்பு  வீணானாலும் மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,00,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
அரங்கேற்றினார்.
மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்ததால் அனைவரும் ஞானியாகிவிடுவார்கள்,  என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.

உலக மக்கள் ஞானம் அடைய செய்ய வேண்டும் என்பதற்காக, தான் செய்த உழைப்பு  வீணானாலும், மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 10,000 பாடல்களில் எழுதி ,அந்த  ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
அரங்கேற்றினார்.

மீண்டும் பழைய கதையே நடந்தது.மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டார்.மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,000 பாடல்களில் எழுதி ,அதற்கு காக புசுண்டர் பெருநூல் காவியம் என்று பெயரிட்டு ,அந்த  ஞான நூலை தனது சீடர்களிடம் பல படி( copy) எடுத்து கொடுத்து;இதை கொண்டு சென்று மக்களிடம் பரப்புங்கள்,எப்படி இருந்தாலும் மீண்டும் சித்தர் சட்டைமுனி கிழித்துப் போடப் போகிறார்,அதற்கு முன்னர் அந்த நூல் மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடட்டும்,என்று கூறி சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும் அரங்கேற்றினார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 278- 282)

மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டு; காக புஜண்ட மகரிஷியே! தாங்கள் சித்தர்களின் முன்னம் அரங்கேற்றி ஆசி பெரும் முன்னர் அதைப் படி( copy) எடுத்து உங்களது சீடர்களிடம் கொடுத்து அனுப்பினாலும் அது ஆயிரம் பாடல்களைக் கொண்டிருந்தாலும்,ஆயிரம் ஆண்டுகள் அந்நூல் பிரபலம் ஆகாது என்று கூறினார்.
அதே போல அந்நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து திருவில்லிபுத்தூர் அறங்காவலர் குழுவில் இருந்த ஆன்மீக அன்பர்கள் சேர்ந்து 1925 ம் ஆண்டு 100 பிரதிகள் வெளியிட்டனர்.அதில் ஒரு பிரதியை எனது தாத்தா வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன்.அந்த நூறில் ஒரு பிரதியைக் கொண்டு தாமரை நூலகம் சென்னை, அதை பல பிரதிகளாக வெளியிட்டனர்.அதை ஆன்மீக அன்பர்கள் வாங்கி படித்துப் பயன் பெறுங்கள்.அவர்களது முழு முகவரி தாமரை நூலகம் ,7,என்.ஜீ.ஓ காலனி,வட பழனி,சென்னை,இவர்கள் சித்தர் நூல்களை வெளியிடுவதில் முதல் நிலையில் உள்ளார்கள்.அவர்களின்
புண்ணியப் பணி மேலோங்கட்டும். சித்தர்களின் ஆசி இவர்களுக்கு உண்டாகட்டும். 
காக புஜண்ட மகரிஷி பல பிரளயங்களைக் கண்டவர்.பிரளய முடிவில் காக உருவம் கொண்டு பறந்து திரிந்ததனால் காக புஜண்டர் எனப் பெயர் பெற்றார்,
ஒரு முறை சிவலோகத்தில் சித்தர்கள் எல்லாம் கூடியிருந்தபோது சிவபெருமானார்க்கு ஒரு சந்தேகம் வந்தது.ஊழி முடிவில் உலகம் அடங்குவது
எங்கே என்று கேட்டார். அப்போது அங்கிருந்த சித்தர்கள் எல்லாம் பல ஊழி முடிவும்,பல பிரளயங்களையும் கண்டவர் மகரிஷி காகபுஜண்டரே! அவருக்கே
இது பற்றித் தெரியும், என்று கூறினர்.
காக புஜண்ட மகரிஷியும் தான் ஊழி முடிவில் கண்ட காட்சியை இந்த காக புசுண்டர் பெருநூல் காவியத்தில் விவரித்துள்ளார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 923)(காக புசுண்டர் ஞானம் 80 ல் பாடல்கள் 40-42)

கூறுகின்றே னென்மகனே வாசி நாதா
குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே எங்கேதான் இருப்பா ரென்று
விமலருந்தான் விஷ்ணுவயும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
கண்டு மிகப் பணிந்து மினிக்  கருது வானே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-40)
கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானுங்
கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்ற னுடைக் கமலந் தன்னில்
ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியாய் எனை அழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-41)
பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற  சித்தருடன் முனிவர் தாமுந்
திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
கூடியே அடைந்திருப்பர் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரு
 (காக புசுண்டர் ஞானம் 80 ல்-42)

சிவபெருமானார்க்கு ஊழி முடிவில் உலகம் அடங்குவதுஅவரது உந்திக் கமலத்தில் எனக் கண்டேன் எனக் கூறுகிறார் 'காக புஜண்ட மகரிஷி'
சிவபெருமானார்க்கே ஊழி முடிவில் உலகம் அடங்குவது எங்கே எனக் கூறிய
காக புஜண்ட மகரிஷியின் நூல்களே பல முறை கிழித்தெறியப்பட்டது என்றால் எனது வலைப் பூவில் சித்தர்களின் விதி முறைகளை மீறி என்னால் எதுவும் வெளியிட முடியுமா?
எனவே சித்தர்களின் விதி முறைகளை மீறாமல் அவர்களது பரிபாஷையிலேயே இனி எனது விளக்கங்கள் இருக்கும்


  இது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு7ல்)காண்போம்

     
.


Post Comment

Tuesday, August 10, 2010

சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)5

நான் திருச்சியில் மலைக்கோட்டை அருகே தெப்பக்குளம் பக்கத்தில் நடந்து கொண்டு இருந்தபோது எனது நண்பர் ஒருவர் திடீரென்று இந்தக் கடையில்
ஞானப் புத்தகங்கள் கிடைக்கும் என்றார்.
      அந்தக் கடையோ வெளிநாட்டுப் பொருள்கள்  விற்கும் கடை போல் இருந்தது.இங்கேயா புத்தகங்கள் கிடைக்கும் என்றேன்.பிறகு அந்தக் கடையில் (நம்பிக்கையில்லாமல்தான்) புத்தகங்கள் கிடைக்குமா என்று  கேட்டேன்.

அந்தப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தால் அத்தனையும் ஞானப் புத்தகங்கள்.
அதை எனக்குக் கொடுத்தவர் நல்ல தம்பி என்பவர்.தற்போது அதில் சில புத்தகங்களே உள்ளன.அந்தப் புத்தகங்களை எழுதியவர் வீர உலக நாதன் என்ற
மஹா ஞானி(மேலே உள்ள படத்தில் இருப்பவர்).மிக அரிய ஞான விஷயங்களை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி இருந்தார்.அந்த புத்தகங்களை படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கிய நண்பர்கள் திருப்பித் தரவேயில்லை.

அவரை எனது வாழ்நாளில் சந்திக்க இயலாமல் போனது எனது துரதிருஷ்டமே.
அவரது புத்தகங்களை மீண்டும் பார்த்துப் படிக்க இயலுமா என்பது தெரியவில்லை.எனெனில் நமது ஆன்ம நிலை உயர,உயர படித்த அதே விஷயங்களை மீண்டும் படிக்கும்போது ,அவ்வப்போதுள்ள ஆன்ம நிலைகளுக்குத் தகுந்தவாறு வேறு வகையாக பொருள் விளங்குகிறது.

இதில் வேறொரு விஷயமும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மஹா ஞானி வீர உலக நாதன் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.அவரது மனைவி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலத்தில் இந்தப் புத்தகங்களை விற்று வரும் பணத்தில் தனது வாழ்நாளை ஓட்டி வந்தார். திருவண்ணாமலையில் இருந்து
வந்திருப்பதாகக் கூறிய ஒருவர் அவரது புத்தகங்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அதற்கான பதிப்புரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டு
போனவர் போனவர்தான். திருமதி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலம்
வரை அந்த நபர் அதற்கான பணம் கொண்டு வருவார் எனக் காத்திருந்து மரணத்தைத் தழுவினார்.

'இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்கா ஞானம் கிட்டும்'


இயற்கையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் (பிருதிவி,அப்பு,தேயு,வாயு, ஆகாயம்) எப்படி அமைந்துள்ளனவோ அதற்கு நேர் தலைகீழாக நம் உடலில் அமைந்துள்ளன.

இயற்கையில் ஆகாயம் பெரிய அளவில் இந்த உலகம் மற்ற கோள்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பெரிய அளவில் உள்ளது. அதற்கடுத்ததாக காற்றும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக நீரும்,
அதற்கடுத்ததாக மண்ணும் உள்ளன.

ஆனால் உடலில் பெரிய அளவில்  நீர் அதிகம், அதற்கடுத்ததாக மண்ணும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக காற்றும், அதற்கடுத்ததாக ஆகாயமும் உள்ளன.
 இயற்கையில் உள்ளது போல்,நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களை அளவீடுகளை ஆக்க முடியுமானால் நமதுடலும் இயற்கையைப் போல் அழிவில்லாமல் அழியாமல் இருக்கும்.

அதாவது நமது வழக்குச் சொல்லில் 'அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் 'என்பார்கள். உயிர் உடலைவிட்டு பிரியும்போது ஆகாயம் உயிருடனே ஓடிப்போகும்,துருத்தியில் வாசித்து (ஊதிக்) கொண்டிருக்கும் மூச்சுக்காற்றானது அதன் பின்னோடிப் போகும்,அதன்பின் காற்றுள்ள வரையிருந்த நெருப்பு அணைந்து போகும்.மண்ணும், நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல்தான் இயற்கையிலேயே இருக்கிறது.பழுதுள்ளவை மூன்றும் ஒடிவிடுவதால் மண்ணும் நீரும் பிணம் என்னும் பேர் பெற்றுக் கிடக்கின்றன்.

( எனவேதான் உடலை திருப்பூந்துருத்தி என்பார்கள்,திருவையாறு அருகே இந்தப் பெயருள்ள ஒரு திருத்தலம் உள்ளது .அங்கே ஒரு ஞானியின் ஜீவ சமாதி உள்ளது.அவர்தான்.பாடகர் உயர்திரு ஜேசுதாஸ் அவர்களுக்கு அருள் புரிந்தவர்.இவரது கிருஷ்ண தரங்கினி பாடல்களை ஞானியின் ஜீவ சமாதியில் பாடிய பின்னரே அவரது புகழ் உலகளாவிப் பரந்தது என்று அவரது ஜீவ சமாதியைப் பராமரிப்பவர்கள் கூறினார்கள்).

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கருத்தமைந்த பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
'நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிரண்டொன்று விண்.(அவ்வைக் குறள் 5)

முன்னிக் கொருமகன் மூர்த்திக்கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர்மு னாளில்லை
கன்னியை கன்னியே காதலித் தாரே(திருமந்திரம்2152)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்(திருக்குறள் 6)


ஓதலும் வேண்டாம் உயிர்குயி ருள்ளாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினால்
போத்லும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே(திருமந்திரம் 1633)


மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்(து) இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித் தேனே(திருமந்திரம்31)


இது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் காண்போம்

Post Comment

Saturday, August 7, 2010

சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு,வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் ;சிறியதொரு கடுகு போல் உள்ளம் கொண்டார்; தெருவார்க்கும் உதவாத சிறிய உள்ளம்,
தன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரையுள்ளம்;தென்னையுள்ளம் ஒன்றுண்டு,அது தன்னாட்டு சுதந்தரத்தால் பிறர் நாட்டு உரிமை கோடல்;
தூய உள்ளம்,பெரிய உள்ளம் அன்பு உள்ளம்,தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் அங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!"உவப்பின் நடுவிலே,
ஓர்கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!
பொதுத்தொண்டு செய்தோமா


?

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு
?

இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை


ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையாலான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்தி 
நினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

நன்றி பாரதி தாசன்
மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் கதாபாத்திரங்களில் , கதாபாத்திரங்கள் அனைத்தும்,உயர்ந்த அறிவும்,பொது நல நோக்கு பேசும், பாரதி தாசன் கவிதைகளையும், கீட்ஸ்ன் கவிதைகள் மட்டுமல்ல ஒரு உயர்ந்த மன நிலையில் சமுதாயம் பற்றிய வேறு கண்ணோட்டத்தில் பேசும்.அது இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் குரலே!  
மேன்மை மிகு இயக்குனர் பாலச்சந்தர் அவ்ர்களுக்கும் இந்த வீடியோ வெளியீட்டு உரிமையாளருக்கும் நன்றி.


சித்தர்கள் பலமருத்துவ, வான சாத்திரம்,கர்ம காண்டம்,ஜோதிட நூல், சரநூல் சாத்திரம்,நாடி சாஸ்திரம் இப்படி ஆயிரக் கணக்கான நூல்களை படைத்து இன்று வரை வழி காட்டியும் வருகின்றனர்.இது போல நாமும் கொஞ்சம் சுயநலமின்றி பொது நல நோக்கில் செயல்பட்டால் 
நன்று. 
கீழே கண்டுள்ள கட்டுரையும் மனதால் உறங்கும் மக்களைத் தட்டி எழுப்பும் முயற்ச்சியில்,இதே நோக்கிலும்,பார்வையிலும் எழுதப்பட்டுள்ளது.  


நன்றி ;-புதிய தலைமுறை
நம் சுயநலம் கண்டே சித்தர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.எனவே மேலே உள்ள விஷயங்களை படித்த பின் நம் எண்ணம் சற்றே மாறினால் சித்தர்கள்மிகவும் மகிழ்வார்கள். அவர்கள் ஆசி நமக்குண்டு.
 எனது சீடரான தமிழவேள்(அக்கு புஞ்சர்,சித்தா,மற்றும் இறை வழி மருத்துவம்)அவர்களின் வலைப் பூ முகவரி இது.விரும்புபவர்கள் பார்வையிடலாம். 
http://siddhahealer.blogspot.com/

Post Comment

Tuesday, August 3, 2010

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்

இயற்கையை மனிதன் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுக்கிறான்,.
விவசாயி ஏன் இவ்வளவு ஏழையாயாக இருக்கிறான் தெரிகிறதா.விவசாயி மனிதர்கள் வாழும் வகைக்கு பாடுபடும் வரையில் அவன் திருவள்ளுவர் மதிக்கும் வண்ணம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அஃதின்றது 
உழன்றும் உழவே தலை.
என்று மனிதனை வாழ்விக்கும் வண்ணம்  இருந்தவன் சுய நலத்துக்காக உரம் பூச்சி மருந்து கீழ்க்காணும்  ரசாயனங்கள் என உபயோகிக்க ,உபயோகிக்க,மனிதனை வாழ்விக்கும் விவசாயம் மனிதனை கொல்கின்றது.
எனில் விவசாயி வாழ்வானா.

இன்றைய(02-08-2010) தினமலரில் வந்துள்ள செய்தி இது

நன்றி தினமலர்

நீங்கள் சாப்பிடும் திராட்சையை கொத்தோடு பல முறை பூச்சி மருந்தில் முக்கி
எடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.

எனது நண்பர் ஒருவர் இந்த திராட்சைகளை கழுவாமல் சாப்பிட்டு,இந்த நஞ்சின் பாதிப்பிற்கு ஆளாகி,  அதன் விளைவாக நீர்த்தடுப்பு உண்டாகி(URINARY ARREST,ETC)  அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்காளாகி அதற்கான மருந்தினை உட்கொண்ட பின் இன்று வரை அதன் சிரமம் அறவே நீங்காது அவஸ்தையுற்று வருகிறார்.
 போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!
உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்குஇயற்கை உரங்கள். 

           மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

             இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடேதற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி.பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள்தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம்டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள்தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுகரைந்து போகாமல் தங்கி விடுவதேமோசமான விளைவுகளுக்குக் காரணம். எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்திஉடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இயற்கை உரங்களின் பட்டியலில்நுண்ணுயிர் உரங்கள்மண்புழு உரங்கள்வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

           இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில்இயற்கை உரங்கள் என்ற பெயரில்பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.எள்ளுப் பிண்ணாக்குமணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்துவேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.திரவ வடிவில் அசோஸ்பிபாஸ்போமிக்ஸ்பொட்டாஷ் ஆக்டிவாஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

            பன்னாட்டு நிறுவனங்களும்உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்துபயிர் வளர்ச்சி உரங்கள்இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம்பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெறரூ.300 கட்டணம் செலுத்திவேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.ரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள்நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது. 

                    எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள்அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிதரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர்விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும்அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில்,

            ""மாதம் முதல் டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும்நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள்பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது'' என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

                  ""இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்'' என்றார் அவர்.

இதில் பெரிய அவஸ்தையாக அமெரிக்காவின் மான்சாண்டோ அதன் தற்கொலை விதைகளை அறிமுகப்படுத்த இந்திய விவசாயிகளையும் (விவசாய கல்லூரி பேராசிரியர்களையும்) அவர்களுக்கு சாதகமாக பேசி செயல்பட விலைக்கு வாங்கி வருகிறது.ஒரு முறை விதைத்து விளைந்து வரும் ,விதைகளை மறுமுறை விதைத்தால் விளையாது.

அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும் ,இந்தியா அசரவில்லை,ஏனெனில் விவசாயம் நமது முதுகெலும்பாக இருந்த்தது.எனவெ இந்தியாவின் மீது மறை முகமாக இந்த மலட்டு விதைகளை  விவசாயிகள் மூலம் ,விதைக்க ஏவி வருகிறது.

ஏற்கெனவே மலடாகி வரும் மனிதனுக்கு மலட்டு விதைகள்.இதில் ஏதாவது
மனிதனின் உற்பத்திக்கு பங்கம் வருமா,பாதகம் வருமா.இந்த பிரச்னை நாட்டுப்
பிரச்சினை அல்ல.எனது வீட்டுப் பிரச்சினை.நாளை எனது மருமகனோ,மகனோ ஆண்மை உள்ளவனாக இருப்பானா.இது இந்த மாதிரி விதைகளையும்,பூச்சி மருந்துகளையும்,உரங்களையும் போட்டு பயிர் செய்யும்
விவசாயிக்கும் உள்ள பிரச்சினை.இதனுடன் மகரந்த்தச் சேர்க்கை உறும் எந்த தாவரமும் மலடாகும்.இத்தகைய
சித்த வைத்தியத்திற்கு மூலாதாரமாக  உள்ள தாவரங்களைக் குறி வைத்து  ஏவி உள்ள இந்த தந்திரமான போரை சித்தர்களின் நோக்கில் மிக கடுமையாகப்
பார்க்கிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணமாக உள்ள விவசாயிகள் அப்பிராணிகளாக(INNOCENT)
என்னால் மட்டுமல்ல ,சித்தர்களாலும் கருத்தப்படாததாலும் ,அவர்கள் தங்கள் நிலையில் சுயநலமில்லாது சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் சந்ததி மட்டுமல்ல  இந்தியாவில் யாருடைய சந்ததியுமே எதிர்காலத்தில் இருக்காது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சித்தர்கள் சும்மா இருப்பார்களா.அவர்கள் தூண்டுதலினால் அல்லவோ இந்தக்கட்டுரையே

நன்றி

சாமீ அழகப்பன் 

Post Comment