மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, January 5, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 1) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


கோயிலின் வாஸ்து வேறு வீட்டின் வாஸ்து வேறு என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அடிப்படை ஒன்றே!அவற்றை மட்டுமே சிற்ப சாஸ்திர சிந்தாமணி என்ற நூலில் விளக்கி இருப்பதை சுலபமாக்கி கொடுத்துள்ளேன். 

பழங்கால கிழக்குப் பார்த்த சிவன் கோவிலுக்குச் சென்றால்,உள்ளே நுழைந்தவுடன் இடது கைப்பக்க மூலையில் மடப் பள்ளி உள்ளது.(அதுவே சமையலறை வைக்க உகந்த இடம். அக்னி மூலை என்றழைக்கப்படும் தென் கிழக்கு மூலையே அது),அதில் கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள் சமைக்கிறார்கள்.வீட்டிலும் அது போலவே மனையாளும் கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும். 

பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)

அடுத்து அமைந்துள்ளது முருகன் சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான்தான்.சம்பந்தம் புரிகிறதா!இந்த மூலை கன்னிமூலையை(தென்மேற்கை) அடுத்த உயரமாக அமையலாம்.கன்னி மூலை தோதாக அமையவில்லையானால் இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.


அடுத்து தீர்த்தத் தொட்டி,தண்ணீர் விழுவது கிழக்கானாலும் வெளியேறுவது வடகிழக்குத் திசையில்தான் வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத் திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு, கிழக்குத் திசையில் இருந்து வரும் காந்த சக்தியை தேக்க முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஆகியவை அமைக்கலாம்.இந்தத் திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும் திசை.


மூலைகளில் கழிவறை அமைக்க வேண்டாம்.அவை தேவதைகளின் இருப்பிடம்.அது போல மனையின் நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று பெயர் அந்த இடத்தையும் முக்கியத்துவம் கொடுங்கள். கழிவறைகளை வீட்டின் கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில் அமையுங்கள்.வீட்டின் ஈசானியத்தை எவ்வளவுக்கெவ்வளவு திறப்பாக வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வரும்.அது வீட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் நல்லது. அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில் ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.


வீட்டின் ஈசானியத்தில் வாசல் வைப்பது, வடக்கு, கிழக்குத் திசைகளில்,சன்னல் வைப்பது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வர ஏதுவாக இருக்கும்.தென்மேற்கு மூலையான,கன்னி மூலையில்(அல்லது தெற்கு,மேற்கு திசைகளில்),பரண் அமைப்பது,கனமான பொருட்களை வைப்பது,அந்தத் திசையை மூடுவது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே போகாமல் தடுக்கும்.


பீரோ,பணம் வைப்புப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைப்பது இந்தக் காரணத்துக்காகவே.வடக்கு குபேரன் திசை எனவும் அங்கிருந்து செல்வம் வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும் திசையான தென்மேற்கில் பணப்பெட்டியை வைத்து பிடித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.


கீழ்க்கண்ட இணைப்பில் சில வாஸ்து சாஸ்திர அனுபவங்களை வலைப்பூ அன்பர் திரு ராமானந்த சுவாமிகள் கொடுத்துள்ளார்!பாருங்கள்!


http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_26.htmlபதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் மூன்றில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

19 comments:

 1. படிச்சிட்டு வர்றேன் சாமீ ஜி

  ஷரீப்

  ReplyDelete
 2. அருமை சாமீ ஜி
  இதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தவன்

  1. ஈசான்யம் உயரமாக இருந்தால் என்ன ஆகும் ஜி ?
  2. கிழக்கு பார்த்த வீட்டில் உள் வாசல் கதவு நடுவில் அமைந்தால் என்ன ஜி ?

  உங்கள் அன்பன்
  ஷரீப்

  ReplyDelete
 3. தாங்கள் விளக்கிய விதம் எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது

  உங்கள் அன்பன்
  ஷரீப்

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  ///1.ஈசான்யம் உயரமாக இருந்தால் என்ன ஆகும் ஜி ?///
  காந்த சக்தியும் சூரிய சக்தியும்தான் செல்வம் அது தடைப்பட்டால் கடன் வந்து சேரும்.வந்த கடன் தீராது.அல்லது சம்பாதிப்பவர் ஆணாலும்,பெண்ணானாலும்,சரி வீட்டில் தங்க முடியாது.///2. கிழக்கு பார்த்த வீட்டில் உள் வாசல் கதவு நடுவில் அமைந்தால் என்ன ஜி ?/// இந்தக் கேள்விக்கு பதில் வீட்டின் முழு அளவுகளும்,வீட்டில் எந்த இடத்தில் வாசல் இருக்கிறது எனபதை வைத்தே வைத்தே சொல்ல முடியும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார்.

  http://enganeshan.blogspot.com/2011/01/59.html#comment-form

  சாமீ ஜி
  இந்த பிரபஞ்ச அறிவை அடைந்து கொள்வது எப்படி விளக்க முடியுமா ?

  ReplyDelete
 6. வணக்கம் சாமீ ஐயா அவர்களே, தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

  தாங்கள் சிவன் ஆலயத்தோடு வீட்டின் அமைப்பை ஒப்பிட்டு விளக்கியது மிக எளிமையாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

  நான் ஜோதிடம் குறித்து ஓரளவு அறிந்திருந்தாலும் வாஸ்து பற்றி சிறிதும் தெரியாமல் இருந்தேன் தங்கள் பதிவு மூலம் வாஸ்து பற்றிய அடிப்படையை அறிந்து கொண்டேன்.

  ஈசான்ய மூலையில் இருந்து வரும் சூரிய, காந்த சக்திகளை கன்னி மூலையில் தடுத்து வீட்டில் தேக்கி வைத்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது.

  அடுத்த பதிவில் இன்னும் அதிக தகவல்களை விளக்குவீர்கள் என்ற ஆவலோடு உள்ளேன். தாங்கள் விளக்கியதை வரைபடமாக அளித்தால் மிகவும் உபயோகமாகவும், நினைவில் நிற்க கூடியதாகவும் இருக்கும்.

  நன்றியுடன்.
  சு. மணிகண்டன்

  ReplyDelete
 7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷரீஃப் அவர்களே,
  சித்தர்கள் விஞ்ஞானம் என்பதே ஒருவரை பிரபஞ்ச அறிவை அறிய தயார் செய்வதே.அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திருநடம் நான் காண வேண்டும்,என்று திரு அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுகிறார்.சிவனுக்கு விடை ஏறியோன் என்று பெயர்.எல்லாக் கேள்விகளுக்கும் விடையாக இருப்பதற்கும் மேலானவன் என்கிறனர்.எனில் அந்த சிவத்தை அறிந்தால்,அல்லது அல்லாவை அறிந்தால்,அல்லது பரலோகத்தில் இருக்கும் பிதாவை அறிந்தால்,எக்காலத்திற்கும் விடை பகருதல் கடினமேயில்லை.விதியை ஏற்படுத்தியவரை அறிந்தால்,விதியை அறியலாம்,விதியை மாற்றலாம்,விதியை மீறவும் செய்யலாம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,
  வாஸ்து என்பது ஒரு பெரும் கடல்.தேவ தச்சன் மயனுக்கும்,தேவ சிற்பி ஐந்தொழில் ஆற்றும் விசுவகர்மாவுக்குமே வாஸ்துவுக்குள்ள அத்தனை விதி முறையும் தெரியும்.இவர்கள் ஒரு நொடிக்குள் ஆயிரமாயிரம் மாட மளிகைகளும் கூட கோபுரங்களும் கட்ட ஆற்றல் உள்ளவர்கள்.இராவணனுடைய இலங்கையையும்,இலங்காபுரிக் கோட்டையையும்,சூரபதுமனுடைய வீர மகேந்திர புரிப்பட்டணத்தையும் நிர்மாணித்தவர்கள் இவர்களே!
  இவர்கள் நிர்மாணிக்கும் போதே இந்த நகரமும், மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும்,இத்தனை ஆண்டுக்காலம்தான் ஆயுளுடன் இருக்கும்.இதற்குப் பின் இப்படித்தான் அழியும் என்று அந்தமாட மாளிகைகளுக்கும் கூட கோபுரங்களுக்கும் பிறந்த சாதக பலன்களையும் கணிக்கலாம்.அப்படி விதிப்படித்தான்,அவைகள் அழியும் வண்ணம் அவர்கள் சமைத்தார்கள்.இதில் எத்தனையோ பேர் அதைச் செய்யாதீர்கள்,இதைச் செய்யாதீர்கள்,இப்படிச் செய்யுங்கள்,அப்படிச் செய்யுங்கள் என்று குழப்புவார்களே அல்லாது ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லவும் மாட்டார்கள்,காரணங்கள் என்னென்ன என்று கூறவும் மாட்டார்கள்.வலைப்பூவை பார்த்து வாருங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,
  வாஸ்து என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதால்தானே மிக அதிகமான ஆசாமிகள் மக்களை மிக அதிகமாக ஏமாற்றுகிறார்கள்.நான் மீன் பிடித்துத் தர மாட்டேன்.ஆனால் மீனைப் பிடிக்க கற்றுக் கொடுக்கின்றேன்.கற்பவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்.ஆனால் நீங்கள் இணைப்பின் வாயிலாக நிறைய மீனைப் பிடித்துக் கொடுத்திருப்பதாக திரு பாவா ஷெரீஃப் கூறியுள்ளார்.வட கிழக்குத் தாழ வேண்டும் என்று எத்தனை இடங்களில் கூறியுள்ளார் ஆனால் ஏன் தாழ வேண்டும் என்று ஒரு இடத்திலாவது கூறியுள்ளாரா?தெற்கே ப்ரண் வைக்க வேண்டும்,கனமான பொருட்களை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளவர்,ஏன் வைக்க வேண்டும் என்று ஒரு இடத்திலாவது கூறியுள்ளாரா?ஒரு விடயம் முழுதாகத் தெரிகிறதோ இல்லையோ விளக்குகிறோம் பேர்வழி என்று சிலர் கிளம்பி ஏற்கெனவே குழம்பி உள்ள மக்களை மேலும் குழப்புகின்றனர்.அது விடயம் இல்லை என்றாலும் புரிய மாட்டேனென்கிறது.நான் தமிழ்ப் பேராசிரியரின் புதல்வன் இது போல வாஸ்து புருஷன் கதைகள் நிறையத் தெரியும்.அதைச் சொல்லுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தேன் என்றால் வலைப்பூவும் குப்பையாகும்,உங்கள் மனமும் குப்பையாகும்.அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்களோ அதைக் கண்டுபிடித்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷரீஃப் அவர்களே,
  வாஸ்து பற்றி எண்ணற்ற விடயங்களைத் தெரிந்து கொண்டதாகக் கூறும் நீங்கள் முக்கிய ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டே இரண்டு விடயத்தை மட்டுமேதான் அவர் மாற்றி,மாற்றி சொல்லி உள்ளார்.அவை(1)வட கிழக்குத் தாழ வேண்டும்(2)தெற்கே பரண் வைக்க வேண்டும்,கனமான பொருட்களை வைக்க வேண்டும் தென்மேற்கு உயர வேண்டும் என்பது மட்டும்தான்.அதுவும் ஏன் என்றும் கூறவில்லை. மற்ற விடயங்கள் அத்தனையும் குப்பை மட்டுமல்ல தப்பும் தவறுமாக உள்ளது.///கழிவறைக்குள் மலம் கழிக்கும் கோப்பையை வடக்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்க வேண்டும்.கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைப்பது தீமையை உண்டு பண்ணும்./// வடக்கு நோக்கி மலம் கழிக்கும் கோப்பையை அமைப்பது நல்லதா?கெட்டதா? எனது வலைப் பூவில் பாருங்கள் உள்ளதைக் காணுங்கள்?
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 11. தாமதமானது எனது வருகை, இருப்பினும் பதிவும் செய்திகளும் புதுமை. நன்றி ஐயா.

  ReplyDelete
 12. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, மீத சித்தர் விஞ்ஞானமும் அடுத்த பதிவாக தயாராகிக் கொண்டு இருக்கிறது.பார்த்துப் பயனடையுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 13. சாமீ ஜி

  விதியை அறிந்தவர்கள் விதியை நல்ல காரியத்திற்காக மாற்றலாம்
  ஆனால் தவறு செய்வதற்கு மட்டும் விதியை மீறினால் அது ஆண்டாவனால்
  தண்டனைக்கு ஆளாகும் செயலா ? இல்லை இறையை அறிந்தவன் என்று இறைவன்
  தண்டிக்காமல் விட்டு விடுவானா ?

  ReplyDelete
 14. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,
  நீங்கள் பிடித்துக் கொடுத்த மீனுடன் அவர் எவ்வளவு காலம் சாப்பிடுவார்.நாங்கள் இறைவனின் அன்பைப் பெற்ற புதல்வர்கள்.எங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிகள் வேறு.எங்களுக்கு பல சலுகைகள் உண்டு.வேண்டுமானால் சாதாரண மனிதர்களால் முடியாத ஏதாவது ஒன்றை என்னிடம் பரிசீலித்துப் பாருங்கள்.நீங்கள் எதிர்பாராத எதிர்விளைவிற்கு நான் பொறுப்பல்ல.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 15. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷரீஃப் அவர்களே,
  விதியை அறிந்த எங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிகள் வேறு.எங்களுக்கு பல சலுகைகள் உண்டு.விதியை அறிந்தவர்கள் செய்வதேதும் தவறாகவே இருக்காது.பின் எப்படி அதற்கு தண்டணை இன்ன பிற எல்லாம்.கீழே இருந்து பார்த்தால் தெரியாதது எல்லாம் மேலே போய் பார்த்தால் தெரியும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 16. சாமி ஜி

  நான் தங்களை போன்றவர்களை சொல்ல வில்லை
  எனக்கு செய்வினை செய்த அந்த மந்திரவாதியை தான் சொல்கிறேன்
  எனக்கு விதிப்படி நடந்து கொண்டிருந்த நல்ல விசயங்களைஎல்லாம்
  தடுத்து அவன் நினைத்ததை நடத்தி முடிப்பது என்பது ஆண்டவன் விரும்பும்
  செயலா ?

  ReplyDelete
 17. அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறியீர்
  உய்வினை நாடாதிருப்பது உந்தமக் கூனமன்றே
  கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
  செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
  எனக்கு நண்பன் கடவுள் என்றால் விதிகளே மாறும், எனில், விதிகளுக்குட்பட்டு செய்யப்படும் செய்வினை ,ஏவல்,பில்லி சூன்யம் என்பவை சூரியனைக் கண்ட பனி என விலகும்.எல்லாப் புகழும் இறைவனுக்கெ.உங்களுக்கு இப்படி அனுபவத்தைக் கொடுத்து தன்னை உணரும் வாய்ப்பை இறைவன் வலுவில் அளித்துள்ளான்.நீங்கள் அதைத் துன்பம் என்று கருதி வீணில் வாடியுள்ளீர்கள்.எதிரே நிமிர்ந்து பார்த்திருந்தால் இறைவன் இருப்பது தெரிந்திருக்கும்.உங்கள் துன்பங்களும்,துயரங்களுமே உங்களுக்கு பெரிதாய்த் தெரிகையில்,இறைவனின் அருகாமை உங்களுக்குத் தெரிந்திருக்காது.அழுத பிள்ளைகுத்தான் தாயே பால் கொடுக்கிறாள்.எனில் தொழுத கைகளுக்குளே இறைவன் வருகிறான்.
  கேளுங்கள் தரப்படும்,தட்டுங்கள் திறக்கப்படும். உங்கள் துன்பங்களெல்லாம் தீர்க்கப்படும்
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 18. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷரீஃப் அவர்களே,
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்