மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, December 12, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்

தெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள்,மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன.

மந்திரப் பிரயோகங்களில் எட்டு வகையான மந்திரப் பிரயோகங்கள் உள்ளன.

(1)வசியம்(எதிரியை மந்திரப் பிரயோகத்தால் வசியம் செய்து தன் சொற்படி கேட்க வைத்தல்)
(2) மோகனம்
(3) வித்துவேஷணம்
(4)உச்சாடனம்(தேவதைகளை மந்திர  உச்சாடனத்தால் அழைத்து கட்டளையிடுதல் )
(5)ஆகிருஷணம்(எதையும் தன்னை நோக்கி ஆகிருஷணம்(இழுத்தல்) செய்தல்)
(6)தம்பனம்{(ஸ்தம்பனம்) எதிரியை மந்திரப் பிரயோகத்தால் ஸ்தம்பிக்க வைத்தல்}
(7)பேதனம்(எதிரிகளுக்கிடையில் பேதித்து உறவுகளை பிரித்தல்)
(8)மாரணம்(எதிரியை மந்திரப் பிரயோகத்தால் கொல்லுதல்)
மேற்கண்ட எட்டில் சில தவிர மற்றவை துன்மாந்திரீகத்தின் பால் பட்டவை.இவற்றில் இருந்து காத்துக் கொள்ளவே கீழ்க்கண்ட மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

எனது தாத்தாவின் மந்திரப் பிரயோகங்கள் நல்ல உபயோகத்திற்காக பிரயோகம் செய்து வெற்றி கண்டுள்ளேன்.அதில் தன்னைப் பேணிக் கொள்ள என்ற மந்திரங்கள் செய்வினை,ஏவல்,பில்லி சூனியத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்கள்.அதையே திரு ஷரீஃப் அவர்களுக்காகவும்,நமது வலைப் பூ அன்பர்களுக்காகவும் இதோ கீழே.

 தெற்கே தெஷ்ணா மூர்த்தியும் ஈஸ்பரர் பாதங்காவல்,வடக்கே வடபத்திரகாளியும் வீரபத்திரபாதங் காவல்,கிழக்கே பூமி தேவியும் ருத்திர மூர்த்தி பாதங் காவல்,மேற்கே விக்கினஸ்பரரும் வல்லபையும் காவல்,நாற்கோணத்தில் நமச்சிவாய்யும் ஆ-ஊ- என்ற ஆகாயம் பூமி காவல்,ஓம் காளி-ஓம் பிடாரி ஓம் சுவாகா! 
என்று 108 முறை மனம் சிதறாமல் ஜெபம் செய்ய வேண்டும்.மந்திரத்துக்கு மேலே கண்ட அஷரத்தை ஒரு3''*3'' தாமிரத் தகட்டில் எழுதி அதற்கு முன்னால் பொரி,அவல், வாழைப்பழம் பூ வெற்றிலை பாக்கு வைத்து தினம் 108 நாட்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.அப்போதுதான் மந்திரம்சித்தியாகும்.பிறகு பிரயோகிக்கும்போது தினம் ஒரு முறை சொன்னால் போதும்.
 தன்னைப் பேணிக்கொள்ள உடற்கட்டு மந்திரம்,
ஓம் என் மேனி ஈஸ்பரநார் காவல்,இரு புசங்களும் பரமேஸ்வரி காவல்,உன்னிதமான உடலும் முப்பத்திரண்டு உருவங்களும் ஓம் அஷரங்காவல்,சென்னியில் வீரபத்திரன் காவல்,சிரப்புடன் இருந்து சித்தமே மகிந்து பொன்னிரமாக நிற்கச் சிவாஹா!மாகாளி வயிரவன் முற்றிலுங் காவல்!


எந்தத் தொழில் செய்தாலும் மேற்கண்ட மந்திரத்தை 3-5-7-9 தடவை சொல்லிப் பணிந்து செய்யலாம்.
விபூதி அணிந்து கொள்வதற்கு


கொண்ட கொண்ட நீர்,கோலஞ்சமைந்த நீர் கொடியதோர் வெண்ணர்களை குடலைப் பிடுங்கும்நீர்,சுடர்விட்டெரியும் நீர்,சொல் பெரிய மூடர்களைத் துண்டித்த நீர்,காலா காலாநீர்,கபால மூர்த்தி தந்த நீர்-குருபாதங் கண்டநீர்-சிவ சாம்ப சிவா.மேற்கண்ட மந்திரஞ் சொல்லி விபூதி அணிந்து கொள்ள எந்த துன்மாந்திரீகமும் அணுகாது.


ஆனால் குளித்து முடித்தவுடன் தினம் ஒரு முறையாவது மேற்கண்ட மந்திரங்களில் ஏதாவது ஒன்றை சொல்லிவிட வேண்டும்.(இதை என் தாத்தா குளித்து முடித்தவுடன்தான் வழக்கமாக செய்வார்.குடுகுடுப்பை மந்திரவாதி என் தாத்தா குளித்து முடிக்கும் முன் கட்டுக் கட்டும் வேலையை செய்ததனால்தான் அவரிடம் செய்ய முடிந்தது)


மனத் தாக்குதல் கொடுக்கும் விதம் பற்றிய யூ டுயுப் வீடியோ கீழே பாருங்கள். K.G.B.மனத்தாக்குதல் கொடுப்பது பற்றி கீழ்க் காணும் தகவல்கள் உங்களுக்கு மட்டுமல்ல செய்வினை,ஏவல்,பில்லி சூனியம் பொய் என்பவர்களுக்கு இது ஆதாரமாகவும் திகழ்கிறது.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

26 comments:

 1. thank u saamee ji

  ReplyDelete
 2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி என்ற ஷரீஃப் அவர்களே, 'ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்'நான் நீங்கள் என்று அறிந்தது சரிதானா ஷரீஃப்.ஆயிரம் அனாதிகளாக வந்தாலும் இது ஷரீஃப் என்று நான் அறிவேன்.சரிதானா ஷரீஃப்!பதில் கூறவும்.நீங்கள் இதே அனாதி ஆனால்.ஆகாவிட்டாலும் பதில் கூறலாம்.மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்
  By

  ReplyDelete
 3. yes saamee ji ungal paarvai thappuma

  ReplyDelete
 4. பேரன்புடைய சாமீ ஜி அவர்களுக்கு

  தங்களுடைய எங்கும் காணக் கிடைக்காத பதிவை கண்டு மனம் மகிழ்ந்தேன்


  கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதுக்கு என்றும்
  நன்றி உடையவனாக நிச்சயம் இருப்பேன் சாமீ ஜி

  எனக்கு ஒரு சந்தேகம் சாமீ ஜி
  (தாங்கள் கோபித்து கொள்ள கூடாது)

  நான் ஒரு இஸ்லாமியன் தாங்கள் கொடுத்த
  மந்திரங்கள் நான் பயன்படுத்தினால்
  உருவ வழிபாடும் செய்வதால், ஈமான் பறிபோகுமே

  நான் என்ன செய்வது ???

  அல்லது அரபியில் ஏதேனும் சூராக்கள் இதுபோல் உள்ளதா (நிச்சயம் தாங்கள் அறிவீர்கள்)

  கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதுக்கு என்றும்
  நன்றி உடையவனாக நிச்சயம் இருப்பேன் சாமீ ஜி

  என்றும் நன்றியுடன்
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  நான் இதற்கு முன் எழுதிய பதிவுகளில் எம்மதமும் ஓர் மதமே என்ற ப்திவையும்,முஸ்லீம் அன்பர்களுக்கு ஓர் அன்புப் பரிசு,என்ற பதிவையும் படித்த பின்னும் இந்த கேள்வி உங்களுக்கு எழுகிறதே!ஆனாலும் உங்கள் கேள்விக்கு பதில் 3வது,மற்றும் 7வது சூராவை ஓதி வர பலன் கிடைக்கும்.எனக்கு இராமநாதபுரத்தில்,வெளிப்பட்டணத்தில் வசித்த ஒரு 95 வயது முஸ்லீம் பெரியவர்,இது போன்ற இந்து மத தெய்வங்களை குறிப்பிடுகின்ற மந்திரங்களை,கற்றுக் கொடுத்துள்ளார்.அவர் இது போன்ற கருத்தை என்னிடம் கூறியதில்லை.அது மட்டுமல்ல கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளைக் கல்லூரியில்தான் பயின்றேன்.எனது முஸ்லீம் நண்பர்களும் இது போன்ற கருத்தைக் கூறியதில்லை.ஞானம் பொதுவானது.மதம் சார்ந்த விஷயம் அன்று.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. ஐயா, தங்கள் பதிவு மிகவும் அருமை. மிக எளிமையான மந்திரங்களாக உள்ளது. தினமும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா அல்லது வேண்டும் போது மட்டும் பயன்படுத்தலாமா என தெரிவிக்கவும்.

  நன்றி.
  சு. மணிகண்டன்
  நெய்வேலி.

  ReplyDelete
 7. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 8. கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே,
  ஏதாவது ஒரு மந்திரத்தை,சித்தி செய்து கொண்டு தினம் குளித்து முடித்த பின்,ஒருமித்த மனத்துடன் ஒரு முறை சொன்னால் போதும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. சித்தி செய்வது என்றால் எத்தனை முறை சாமீ ஜி
  ஒவ்வொரு மந்திரத்திற்கும் எண்ணிக்கை மாறுமா ?

  உங்கள் அன்பன்
  ஷரீப்

  ReplyDelete
 10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி என்ற ஷரீஃப் அவர்களே,
  முத்ன்முதலில் கொடுத்துள்ள மந்திரத்தோடு கூடிய அட்சரத்தை தாமிரத் தகட்டில் எழுதி 108 நாட்கள்,108 முறை மனம் சிதறாமல் ஜெபிக்க சித்தியாகும்(ஏனெனில் தகட்டிற்கு ஜபிக்க,ஜபிக்கவே சக்தி கூடும்).அதே போல கீழுள்ள இரண்டாவது மந்திரத்திற்கு,108 முறை ஒரே ஒரு தடவை ஜபித்தாலே சித்தி.மூன்றாவது மந்திரத்திற்கு விபூதி அணியும்போது ஒரு முறை சொன்னாலே போதும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 11. அன்பு ஐயா,
  தமிழவேள வணக்கங்கள்.
  மனிதர்கள் தமக்குள் இத்தனை ஆற்றல் இருப்பதை புரிந்து அதை நனமைக்கு பயன்படுத்தினால் சிறப்பு, மகிழ்ச்சி.
  ஆரோவில் இயற்கை விவசாயி பெர்னாடு (நம்மாழ்வார் மூலம் அறிமுகம்) இறைவழியில் காய்கறி உற்பத்தி செய்கிறதை பார்த்திருக்கிறேன். அவற்றின் சுவையும் தரமும் இணையில்லாதிருப்பதை உணர்ந்தேன்.
  அடுத்த பயனத்தில் அவரை பார்த்து வரலாம் ஐயா.

  இது போன்ற அழிவுக் கருவிகளுக்கும் மறைவான ஆற்றலை ப்யன்படுத்த தான் எத்துணை ஆராய்ச்சி. இதற்கு மனித அறிவு போதாதா?

  தங்கள் இடுகைகள் மேலும் மேலும் இனிமையாகவும், சிறப்பாகவும் வருகின்றன. உங்களிடம் நேரில் பேசும் மகிழ்சியைத் தருகிறது.
  நன்றி ஐயா.

  அனபை மறவா சீடன்
  தமிழவேள்.

  ReplyDelete
 12. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தமிழவேள் அவர்களே,
  நமது உள்ளார்ந்த சக்திகளை உணர்ந்தாலாவது,நாம் பிச்சைக்காரர்கள் என்ற எண்ணம் மாறி,நாம் ராஜாக்கள்,நாம் கடவுளுக்குச் சமமானவர்கள் என்ற எண்ணம் எழாதா!என நானும் படாத பாடு படுகிறேன்,ஆனால் தாங்கள் பிச்சைக்காரர்கள் என்ற எண்ணத்தை விட்டு விடுவதற்கு பெரும்பாலானவர்கள் மறுக்கிறார்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 13. வனக்கம் ஐயா,

  என்னை போன்ற மூடர்களுக்கும் புரியும் வகையில் ஆன்மீகத்தை கொன்டு சேர்கும் உங்களுக்கு என்னுடைய பனிவான வனக்கம்,

  ந.ராஜசேகர்

  ReplyDelete
 14. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராஜ சேகர் அவர்களே,
  மூடர்கள் என்று யாரும் இல்லை.அறிவுக் குறை உள்ளவர் போல இந்த ஆன்மாக்கள் நடிக்கின்றன.அந்த நடிப்பை உயிர்களுக்கு இது நடிப்பு என்று உணர வைத்தாலே போதும்.அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் இறை கட்டளைப்படி.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 15. அய்யா,
  long back, I heard some nation is developing such devices.. and especially Russia is developing such devices to communicate with astronomers or rockets of very distance travels. I thought those are rumors, and also it is impossible to create such devices.
  By seeing these videos I'm fearing where the world is going.
  தங்களின் பதிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 16. Namaskaram Swami ji

  I would like to know how to Rectify the "Dhosam"
  Particularly Pazhaka Dhosam

  Thank you Swami ji
  Balamurugan Subramanian
  chennai

  ReplyDelete
 17. Namaskaram swami ji

  I would like to know to rectify "Dhosam"
  Particularly pazhaka Dhosam ., what is the Basis with this?

  ReplyDelete
 18. எளிய முறையில், அழகாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் நன்றாக உள்ளது , தொடரட்டும் உங்கள் சீரிய பணி ,

  வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

  ReplyDelete
 19. ayya vannakkam nanbarkalidam nan kodutha kadan varavillai please panam thirumpa nalla oru vali koorunkal
  ippoluthu nan rompa kasdathil ullean nandri ayya.

  ReplyDelete
 20. dear sir i would like to know more and contact with u pl call me 9489797592 or send your details to hramuthan@gmail.com

  ReplyDelete
 21. pl send me your contact No to 9489797592


  Thank you
  V.Amuthan

  ReplyDelete
 22. dear sir i would like to know more and contact with u pl call me 9489797592 or send your details to hramuthan@gmail.com

  ReplyDelete
 23. மிக அருமையான பதிவு . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. தனக்கு தெரிந்ததை ,தான் அறிந்ததை ,தான் வாழும் போது தகுதியானவருக்கு அறிய செய்யாதவன் மனிதன் எனும் தகுதியை கூட இழந்துவிட்டவன் -எனும் கூற்றை ஒப்பிடும்போது, சாமீ அழகப்பன் =மனிதன் .................

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்