மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 31, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 40)

ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு
அன்புள்ள பதிவு வாசகர்களே,
நேற்று ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு நமது வாசகர்களுக்காக தர இருக்கிறேன்.எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் ஆகியோருக்கு நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.


அவரின் அலைபேசி எண்கள்,
+919894912594
+919626418594
அவர் தயாரித்தளிக்கும் மருந்துகளில் சில கீழே கொடுத்துள்ளேன்.


வழுக்கைத் தலையில் 30 நாட்களில் முடி வளரவும்,பெண்களுக்கு முடி கொட்டாமல் பாதுகாக்கவும் சில மூலிகைகளைக் கலந்து(முதியார் கூந்தல்,அழுகண்ணி,தொழுகண்ணி,திரிபலாதி{கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்},கரிசலாங்கண்ணி}) ஜெல் வடிவில் தயாரித்தளிக்கிறார்.இதனால் அடைபட்ட தலைமுடியின் வேர்க் கால்கள் திறந்து மீண்டும் முடி வளர துவங்குகிறது.


இதனால் ஏற்கெனவே காப்பி,டீ அருந்தியதால் பித்தம் அதிகரித்து தலையில் ஏற்பட்டுள்ள கடும் உஷ்ணமும் தணிக்கப்படுகிறது.இத்துடன் அயப்ருங்க ராஜ கற்பம்,தேனுடன் உண்ண நன்று.இது கரிசலாங்கண்ணி சேர்ந்தது.கரிசாலை லேகியமும் பாலுடன் உண்ணலாம்.கரிசலாங்கண்ணி பற்றி தனிப் பதிவு உண்டு.அதில் அது பற்றிய சிறப்புகளைக் காணலாம்.


முடி வளருவதற்கு தைலங்களும் பல சிறந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்து அளிக்கிறார்.


மேலும் ஆண்மைக் குறைவுள்ளவர்களுக்கும்,விந்தணு குறைபாடு உள்ளவர்கள்,குறி விறைப்புத் தன்மை இல்லாதிருப்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ள ஒரு தாது விருத்தி லேகியமும் தயாரித்துக் கொடுக்கிறார்.அதை பலருக்கு நான் சிபாரிசு செய்துள்ளேன்.அதில் அஸ்வகந்தா,ஒரிதழ்த் தாமரை,நாட்டத்தி விதை,சதாவரிக் கிழங்கு,பூமிச் சக்கரைக் கிழங்கு,நிலப் பனங்கிழங்கு,பூனைக் காலி விதை,சாதிக்காய்,நீர்முள்ளி விதை,பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு,சாலாமீசரி,பேரீச்சை,கடுக்காய், நெல்லிவற்றல் , தான்றிக்காய்,விஷ்ணு கிராந்தியும் சேர்க்கிறார்.


திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக் கொணர்ந்து
மண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கருத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்
இறந்திட்ட சுவாசம்தான் இறுகியேறும்
ஏற்றமாஞ் சுழி முனையும் திறந்து போமே!!!!


விஷ்ணு கிராந்தி என்னும் மூலிகையை எடுத்து வந்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்திட்ட அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் பழம் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை ஒரு யோசனை தூரத்திற்கு தெரியும்.


மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கருத்து மின்னும்.இதுவரை கழிந்து போன சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.அவ்வளவு சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.


மூட்டு வலித்தைலமும் தயாரித்து கொடுக்கிறார், அனைவரும் பயன்பெறுக!!!!!     அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 39)


அன்புள்ள பதிவு வாசகர்களே,
இப்போது சிறு குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத பரம்பரை சித்த மருந்துவசாலை தயாரித்தளிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.

எனது அம்மாவின் தாத்தா தயாரிக்கும் மருந்துகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் தலையாய மருந்துகளும் உண்டு.அவற்றுள் சிறந்த மருந்து பாலாமிர்தம்.

அதை செய்யும் முறை பற்றி எனது முப்பாட்டன் எழுதிய கையெழுத்துப் பிரதியை அப்படியே தருகிறேன்.இதில் ஒரு விடயம் விட்டுப் போய் இருக்கிறது.அரைப்பது 3 நாட்கள் கைவிடாமல் அரைக்க வேண்டும்.பழச்சார் என்பது எலுமிச்சம் பழச்சாறு.

இதில் குறிப்பிட்டுள்ள லிங்கம் என்பது பாஷாணங்கள் 32 னனுள் ஒன்று.இது பழனி நவபாஷாணச் சிலையில் உள்ள நவ பாஷாணங்களுள் ஒன்று.இதை அரைப்பில் கொல்லுதல் என்பார்கள்.அதாவது பாஷாணத்தின் விஷத் தன்மையை 3 நாட்கள் கைவிடாமல் (கைவிடாமல் என்றால் இடைவெளியே இல்லாமல் ஆள் மாறி மாறி அரைப்பது) அரைப்பதின் மூலமாகவே மருந்தாக்குவது.அரைக்கும்போது வலஞ்சுழியாகத்தான் அரைக்க வேண்டும்.அதாவது கோயிலை சுற்றும் போது கடியாரச் சுற்றில் சுற்றுவோமே அது போல.மேற்கண்ட மருந்துகள் அனைத்தையும் சேர்க்காவிட்டாலும் மேற்குறிப்பிட்டதிலிருந்து சில மருந்துகளைச் சேர்த்து செய்யும் ஒரு பரம்பரை சித்த மருந்துவசாலை பழனி மலையப்பசாமி வைத்தியசாலை.அவர்கள் இதே மருந்தை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி) 60%, ஓமம் 20%,லிங்கம்20% சேர்த்து செய்கிறார்கள்.

அது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகிக்கும் விதமும் ஒவ்வொரு மருந்துக் குப்பியுடன் கொடுக்கப்படுள்ளது.

மேற்கண்ட மருந்துகளை கொடுத்து வந்தால் (PRIMARY COMPLEX, EOSINOPHILIA  ,COUGH) சளி, இருமல், இளைப்பு, காசம், இவை அணுகாது. இது மட்டுமல்ல அவர்களின் புத்திசாலித்தனமும், ஞாபக சக்தியும் அளப்பரியதாக இருக்கும்.எனக்கு என் தாத்தா இந்த மருந்தை எனது ஐந்து வரை கொடுத்ததால்தான் எனது ஞாபக சக்தி மிகச் சிறந்து விளங்குவதைக் காணுகிறேன்.


அது மட்டுமல்ல பின்னாளில் வரும் தோல் வியாதிகளும் வராது தடுக்கப்படும்.காரணம் என்னவென்றால் அல்லோபதி மருந்துகளால் அமுக்கப்படும் நுரையீரல் வியாதிகள் பின்னாளில் தோல் வியாதிகளாக வெளிப்படும்.சளித்தொல்லையை சிறு வயதிலேயே முற்றாக குணப்படுத்துவதின் மூலம் எதிர் கால சந்ததியை ஆரோக்கியமான சந்ததிகளாக உருவாக்கலாம்.அதுவும் இப்போதுள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பது நம் கடன் அதற்கு இந்த மருந்து கைகண்ட மருந்து. 
     
எதிர் காலக் குழந்தைகள் எல்லா உடல் நலமும் மன நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment