மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 10, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(31)

யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம்1)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
பஞ்சமாபாதகங்களை விட்டுவிட்டு அளவோடு உண்டு அளவோடு உறங்குவது மட்டுமே ஞான மார்க்கத்தை விரும்பும் சீடரின் தகுதிகளாகும்.

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்,
தெய்வ நிலை ஒருவருமே காணார்;காணார்;
ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ!
ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே!
                 -அகத்தியர் ஞானம்(1:3)
ஞானம் அடைவது அரிதினும் அரிது என்பதோடு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஞான வேட்கை ஏற்பட்டு ஞானம் கிட்டும் என்பார் அகத்தியர்.

அத்துடன் அகத்தியர் கூறும் ஞானம் அடைபவரின் மற்ற தகுதிகள் பற்றிய விடயங்களைப் பார்ப்போம்.

செப்புவேன் துலாத்தோர்க்கு தேவி முதல் சித்தி;
சிவனோடு மந்திரங்கள் எல்லாம் சித்தி;
ஒப்புவேன் வாத சித்தி குளிகை சித்தி
உயர்ந்து நின்ற காயசித்தி உறுதியாகுந்
தப்புவேன் என்றாலுந் தவறிடாது
சாதகமாய் வாசியது தானே தூக்கும்.
கொப்புவேன் உலகத்தில் தசதீட்சை பெற்ற
கொடிய சிவயோகி எனக் கூறுவோரே,
             -அகஸ்தியர் மஹாதிராவகம் 2-
துலாம் ராசியையோ,லக்கினத்தையோ ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு,பார்வதி தேவியின்(உலக நாயகியின்) அருள் பூரணமாகக் கிட்டும். சிவன் அருள் கிடைப்பதோடு, மந்திரப் பிரயோகங்கள் எல்லாம் சித்தியடையும். வாசியானது, வாசியோகம் போன்றவை செய்யாமலேயே தூக்கும்(அதாவது ஞானம் சித்திக்கும்) உலகத்தில் தச தீட்சை பெற்ற கொடிய சிவயோகியாக இவர்கள் திகழ்வார்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.

அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

8 comments:

 1. நீண்ட இடைவேளிக்குப் பிறகு தங்கள் பதிவு படிப்பது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. THANK YOU SWAMY FOR SHARING VALUABLE INFORMATION WITH US.

  ReplyDelete
 3. அன்புள்ள அய்யா அவர்களுக்கு
  மிகவும் முக்கியமான தலைப்பு
  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதன் தொடர்ச்சியை விரைவில்.

  என்றும் அன்புடன்
  பொடியன்

  ReplyDelete
 4. இறைவனின் நாட்டமும் நம்முடிய முயற்சியும் வேண்டும்
  என்பதனை அறிந்தேன்

  நன்றி சாமீ ஜி

  ReplyDelete
 5. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி.இறைவன் சற்று ஓய்வு கொடுத்துவிட்டான்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. அன்புமிக்க திரு ராம்குமார் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி.இறைவன் பல விஷயங்களை கொடுத்து இருக்கிறான்.நம் கண் முன்னே தெரிந்தாலும் நாம் அவற்றை சற்றும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.ஏனென்றால் அவற்றை விட நமக்கு பல வேலைகள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. அன்புமிக்க திரு வெங்கடேஷ் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி.இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நேர ஒதுக்கீடும் தந்தால் பல விஷயங்கள என் வலைப்பூ வெளியிடும்.எதுவும் இறைவன் சித்தம்.அது என் பாக்கியம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.இறைவன் அனுக்கிரகம் இல்லாமல் ஒன்றும் நடவாது.நம் முயற்சி என்று ஏதும் இல்லை.அப்படி முயற்சி என்று ஒன்று வெற்றி பெற்றால் அதுவும் இறைவன் சித்தமே!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்