மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, July 5, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(30)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் பெயர் கருஞ்சீரகம்.இதனில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கருஞ்சீரக எண்ணெய் (KALONJI OIL), என அழைக்கப்படுகிறது . இவற்றின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.
கருஞ்சீரகம்  
கருஞ்சீரகத்தால் கரப்பனோடு புண்ணும்
வருஞ்ராய்ப் பீநசமு மாறும்- அருந்தினாற்
காய்ச்சல் தலைவலியுங் கண்வலியும் போமுலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை
         (பதார்த்த குண விளக்கம்)
குணம்:-
கருஞ்சீரகமானது மண்டைக் கரப்பான், விரணம், சிராய்ப் பீநசம், உட்சூடு, சிரநோவு, கண்ணோய் இவைகளை நீக்கும் என்க.
செய்கை:-உதரவாதஹரகாரி( வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும் மருந்து{ CARMINATIVE }),சுரஹரகாரி( சுரத்தை நீக்கும் மருந்து { FEBRIFUGE }),கிரிமிநாசினி( வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை வெளியாக்கும் மருந்து { ANTHELMINTIC }),
ஜடராக்கினிவர்த்தினி(பசித் தீபனத்தையுண்டக்கும் மருந்து{ STOMACHIC })
உபயோகிக்கும் முறை:-கருஞ்சீரகத்தை கல்,மண் முதலியவைகள் இல்லாமல் சுத்தப்படுத்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வேண்டும் போது 5-10 குன்றி எடை வெல்லத்துடன் கூட்டிக் கொடுப்பதுண்டு.இதனால் வாயு,உதிரச் சிக்கல், சிறு நீர்க்கட்டு,நீர்க்கோவை குணமாவதுமன்றி, முலைப்பால் சுரப்பும் உண்டாகும்.

சிறிது அளவு அதிகப்படுத்திக் கொடுக்க ஸ்த்ரீகளுக்கு சிசு வயிற்றில் மரித்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தும். இது குன்மம், மார்பு வலி, இருமல், வாந்தி, ஓக்காளம், வீக்கம், காமாலை முதலிய ரோகங்களுக்கு அதிகமாக உபயோகப்படும்.இதை காடியில் அரைத்துக் கொடுக்க வயிற்றிலுள்ள கிருமிகள் சாகும்.
இதைத் தினந்தோறும் ஒரு வேளை தேக திடத்திற்கு ஏற்றவாறு 1-1 1/4 வராகனெடை காடியில் கரைத்து 3-7 நாள் கொடுக்க வெறி நாய்க்கடி முதல் பல விஷப் பூச்சிக் கடிகளினால் உண்டான உபத்திரவத்தையும் நிவர்த்தி செய்யும். இதைச் சிறிது சுத்த சலம் விட்டரைத்து தேன் கூட்டிக் கொடுக்க மார்பு அடைப்பு,பெருமூச்சு,கல்லடைப்பு தீரும்.

இதை வெந்நீரில் அரைத்துக் கட்டிகளுக்கு,பூசக் கட்டி பழுத்துடையும்.

இதுவுமல்லாமல் தோலைப் பற்றிய தடிப்பு கீல்களில் உண்டாகும் வாதப் பிடிப்பு, தலைவலி, இவைகளுக்கும் பூச விரைவில் நற்குணத்தை யுண்டாக்கும்.இதனைத் துணியில் முடிந்து கசக்கி மோந்து கொண்டிருந்தால் சலதோடம் போம்.இது விஷேஷமாக நரம்பைப் பற்றி ரோகங்களுக்கு அதிகமாக உபயோகப்படும்.

இந்த கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை கீழ்க்கண்டவாறு பல நோய்களுக்கு பலவித அனுப்பானங்களுடன் உபயோகப்படுத்தலாம். 



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

7 comments:

  1. அன்புமிக்க திரு ரா.சின்னதுரை அவர்களே,
    கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  2. வனக்கம் குரு,

    தங்களின் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை, இது எல்லா பொது மக்களையும் சென்று அடைந்தால்
    அவர்களின் வாழ்க்கை செம்மை படுத்த உதவும்.

    நன்றி,
    என்றும் பனிவுடன்,
    ந.ராஜசேகர்.

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ந.ராஜ சேகர் அவர்களே,
    இறைவன் மிக மிக வல்லவன்.அவனே எல்லா உயிர்களையும் படைத்து,எல்லா உயிர்களிலும் நிறைந்து, எல்லா உயிர்களையும் வழி நடத்துகிறான்.நாம் எல்லா விடயங்களையும் நாம் செய்வதாக நினைத்துக் கொண்டு செய்து வருகிறோம்.ஆனால் செய்பவன் இறைவன்.இதை உணர்ந்தாலே நமக்குத் துன்பம் ஏதுமில்லை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. வணக்கம்
    மிகவும் பயனுள்ள பதிவு, மிக அருமையாக இருந்தது. ஆனால் கருஞ்சீரக எண்ணெய் தாயாரிப்பதைப்பற்றி எந்தவொரு பதிவிலும் தெளிவுகள் இல்லை. தாங்கள் அதை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  5. வணக்கம்
    மிகவும் பயனுள்ள பதிவு, மிக அருமையாக இருந்தது. ஆனால் கருஞ்சீரக எண்ணெய் தாயாரிப்பதைப்பற்றி எந்தவொரு பதிவிலும் தெளிவுகள் இல்லை. தாங்கள் அதை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்