மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, December 28, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(18)


காயகற்பம் உண்ணுதலும் முறைமைகளும்
காயகல்பம் எனபது பொய்யான காயத்தை மெய்யாக்குவது.அதாவது சித்தர்கள் உபயோகித்த மரணம் மாற்றும் மூலிகைகளை உபயோகித்து மரணமும் ஒரு வியாதி என்றும், அதையும் குணமாக்கலாம்(அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்) என்பதை விவரிப்பதே காயகல்பப் பிரயோகம்.

காயத்தை மெய்யாக்கு!காயத்தை மெய்யாக்கு! என்பது சித்தர்கள் முழக்கம்.காயத்தை எப்படி மெய்யாக்குவது.ஓடும் மூச்சை ஓடவிடாமல் நிறுத்த பிரணாயாமம்,யோகா,தியானம்,போன்றவற்றால் கழிந்து போகும் பிராணனை,கழியாமல் நிறுத்துவது.
இதில் கழிந்து போன பிராணனை உபாயமிட்டு அழைக்க ஒரு வழி சொல்கிறார் சிவவாக்கியர்.அதை இங்கே விவரிக்கப் போவதில்லை.

இனிப் போக இருக்கும் பிராணனை போகாமல் காக்கவே காயகல்பம் உதவும்.12 வயதிற்குள் ஒரு மாமாங்கம் கற்பம் உண்டால் உடல் வஜ்ர தேகமாகும்.24 வயதிற்குள் கற்பம் உண்டால் கற்பம் பலிதமாகும்.48 வயதிற்குள் கற்பம் உண்டால் 12 வருட தியானத்திற்காகும்.60 வயதிற்குள் கற்பம் உண்டால் மறுபிறவிக்கு இந்த ஞானம் தொடரும்.
முதிய வயதில் அதாவது 90 வயதிற்கு மேல் 
காயகல்பம் உண்டால் பயனில்லை.


எனவே இளமையில் காயகல்ப மூலிகைகளை எப்படி உண்ண வேண்டும் என்பதை கற்று உண்டால் முதுமையில் மண்ணோடு மண்ணாகிப் போக வேண்டியது இல்லை.''அங்கமடா உன்னுடம்பு தங்கமாகும்,பூமியிலே புதைத்திட்டாக்கால் மண் தின்னாது''.


காயகல்பம் உண்ண கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கவும்.


உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒரு சேர சமைத்துண்டு ஒரு போதையா!
பண்ணியே ராமானு பாலைக் கொள்ளு,
பணியாரம்,சிறுபயறு,பழமும்,தேனாம்,
குன்னியே கோரக்கர் கற்பமாகும்.
போமென்றே புளிமேல் ஆசையானால்,
புளியாரை,புளியரணை,சீக்காய்க் கொழுந்து,
நேமென்ற நெல்லிக்காய் பசலைக் கீரை நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு,
ஆமென்ற பயரோடு யிளநீருங் கரும்பும்,
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே!

அதாவது பால்,நெய்,தேன்,பணியாரம், சிறு பயறு,பழம்,தேன்,ஆவின்(பசுவின்) பால்,இவற்றைச் சேர்க்கலாம்.சமைத்த உணவை ஒரு போது மட்டும் உண்ண வேண்டும்.புளி,போகம்(பெண் சம்போகம்),லாகிரி(போதை தரும் வஸ்துக்கள்) நீக்கி மனதை இறையிடம் நாட்டி தியானம் புரிய வேண்டும்.

வெயிலில் அலைதல் கூடாது.குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும் குளிக்கவும் உபயோகிக்க கூடாது.இளஞ் சூடான வெந்நீர்தான் உபயோகிக்க வேண்டும்.

புளி மேல் ஆசைப் பட்டால் நல்ல புளிப்புச் சுவையான புளியாரை,புளியரணை,சீயக்காய்க் கொழுந்து,நெல்லிக்காய்,பசலைக் கீரை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

பயறு வகைகள்,இளநீர்,கரும்பு,குளிர்ந்த தண்ணீர் கற்பமுண்ண ஆகாது.கடும் உடலுழைப்புக் கூடவே கூடாது.

இந்த வகையாய் 48 நாட்களுக்கு ஒரு கற்பம் வீதம் காயகற்பம் உண்டு 12 வருடங்கள்(ஒரு மாமாங்கம்) பல வகையான கற்பங்களை உண்டு வந்தால்,உயிர் அழியாது உடலில் நிலைத்து நிற்கும்.மூச்சு அளவில்லாமல் ஓடாமல் குறையும்.         

திறந்திட்ட விஷ்ணுகரந்தை தனைக் கொணர்ந்து செப்பமாய் மண்டலந்தான் பாக்களவு பாலிரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும் மாசற்ற யெலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கருத்துமின்னும் கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்,
றந்திட்ட சுவாசமெல்லா மிருகியேறும்
ஏற்றமாஞ் சுழிமுனையுந் திறந்துபோமே!!!
விஷ்ணு கிராந்தியை வேரோடு(சாப நிவர்த்தி மந்திரங்களைச் சொல்லி) பறித்துக் கொண்டு வந்து,அனு தினமும் பாக்களவு ஆவின் பாலிலோ(பசுவின்),அல்லது ஆட்டுப் பாலிலோ அரைத்துண்ண, மறந்த அனைத்து நினைவுகளும்(மறந்த பழைய நினைவுகளில் சென்ற பிறவி நினைவுகளும் அடங்கும்) மீண்டும் நினைவுக்கு வரும், அஸ்தி சுரம் என்ற எலும்பைப் பற்றிய சுரம் போகும்,கரைந்து போன தேகம் கருத்து இரும்பு போல மின்னும்,கண்ணொளி ஒரு யோசனை தூரம் (ஒரு யோசனை என்பது 100 காத தூரம்,ஒரு காதம் என்பது 4 கூப்பிடு தூரம், ஒரு கூப்பிடு தூரம் என்பது நாம் அதிக பட்சக் குரலால் கத்தினால் கேட்கும் தூரம்)தெரியும்.(கண் தெரிய எந்த மூலிகைகள் எல்லாம் உதவுகிறதோ அந்த மூலிகைகள் எல்லாம் மரணம் மாற்றும் மூலிகைகளாகவும் இருக்கும் எ.கா;- பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி).இறந்திட்ட சுவாசம் என்பது அழிந்து,கழிந்து போன சுவாசம்,அது இறுகி ஏற்றங் காணும்.சுவாசம் ஏற்றங் காணக்காண சுழிமுனையான ஏழை வாசல் திறக்கும்.(இது அறுத்தடைத்த வாசல்) இதை திறக்க சாவி இதுவும் ஒன்று!பிறகென்ன மரணமில்லாப் பெருவாழ்வுதான்!


இதில் காயகல்பத்துக்கு உபயோகிக்கும் மூலிகைகளை பச்சையாக உயிரோடு(சாப நிவர்த்தி மந்திரங்களைச் சொல்லி பறிக்கும் போதுதான் மூலிகையின் உயிர் அதன் உடலில் தங்கி இருந்து நம் உயிரை வளப்படுத்த வரும்) பறித்த உடன்,உபயோகிக்க வேண்டுமேயல்லாது,கடைகளில் விற்கும் சூரணங்களை வாங்கி உபயோகிக்க கூடாது.     


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த

பதிவில் சந்திக்கிறேன்.




மிக்க நன்றி


என்றென்றும் பேரன்பினால்


சாமீ அழகப்பன்

Post Comment

17 comments:

  1. ஆகா, அற்புதம் அருமையான பாடல்கள், விளக்கங்கள் தங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பதிவிலும் புதிய புதிய விஷயங்கள் எழுதும் தங்களின் அறிவுக்கு தலை வணங்குகிறேன்.

    நன்றியுடன்
    சு. மணிகண்டன்.

    ReplyDelete
  2. அருமை அருமை சாமீ ஜி


    மிக்க நன்றி சாமீ ஜி
    ஷரீப்

    ReplyDelete
  3. //தேகமது கருத்து மின்னும்//

    சும்மாவே நான் கருப்பு கலர்
    செகப்பா மாற எதாவது வழி சொல்லுங்க சாமீ ஜி

    மிக்க நன்றி
    ஷரீப்

    ReplyDelete
  4. கற்பம் உண்ணுதல் முறைகளை விளக்கும் பாணி அருமை ஐயா.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே, சித்தர்கள் சேர்த்து வைத்த சொத்து இவையெல்லாம்.இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு,முட்டாள்தனமான ஆங்கில வைத்திய முறைகளை பின் பற்றி அழிந்து போவதை எண்ணி,எண்ணி வருந்தாத நாளே இல்லை.குறிப்பாக ஸ்டீராய்டுகள் SCHEDULE H ல் வரும் மருந்துகள்(விஷங்கள்)மருத்துவரின் பரிந்துரையின் படி மட்டுமே கொடுக்க வேண்டிய மருந்துகள்(விஷங்கள்) பரிந்துரைகளே இல்லாமல் கொடுப்பதோடு,இப்போது விளம்பரமும் செய்து வருகிறார்கள்.நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்தை,அமெரிக்காவிலேயே தயாரிக்க அமெரிக்க கம்பெனிகளுக்கு அனுமதி உண்டு.விற்பது எங்கே!இங்கே!இந்தியனைப் போல இளிச்சவாயர்கள் உலகிலேயே கிடையாது என்பது அவர்கள் எண்ணம்.அதை நாமும் பொய்யாக்குவது இல்லை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    தேகம் கருத்து மின்னும் போது நமக்குத் தேவையான சத்துக்கள் நமது உடலில் சேர்ந்துவிட்டது என்று பொருள்.நரை,திரை(உடலில் சுருக்கம் விழுதல்),மூப்பு (உடல் வயதாதல்)வந்த பின்தான் சாக்காடு(சாவு) வருகிறது.நம் முடியின் உண்மையான நிறம் வெண்மை.அதை மெலனின் என்ற சத்துதான் கருப்பாக வைத்துள்ளது.மெலனின் குறையும்போது தலைமுடி தன் வெண்மை நிறத்துக்கு வந்துவிடுகிறது.இதையே முடி நரைத்துவிட்டது என்கிறோம்.தோலின் ஈரம்,எண்ணெய்ப் பசை உணர்ந்து போய்விட்டால் உடலின் மேல்தோலில் ஓடும் அக்கு பங்சர் சக்தியோட்டப் பாதைகளின், ஓட்டம் நின்றுவிடும்.இதுவே உயிரோட்டம்.அவை நின்றால் உயிரும் உடம்பைவிட்டு ஓடிவிடும்.மேலும் மெலனின் அதிகமாக இருக்கும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும்,மெலனின் குறைவாக இருக்கும்(உங்கள் பார்வையில் சிவப்பானவர்)நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எனவேதான் காயகற்பங்கள் இந்த நன்விளைவுகளை ஏற்படுத்தி உயிர் அழிந்து போகாமல் காக்கின்றன.போதுமா!!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, கற்பம் உண்ண வேண்டும்.அதற்கு கடமைகள் முடிய வேண்டும்.அதற்குள் காலன் அழைக்காமலிருக்க வேண்டும்.நிறைய வேண்டும்கள்.ஏனெனில் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்,ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.என்று ஏன் வேண்டாம்,வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.வேண்டும்,வேண்டும் என்றே கேட்போம் என்கிறார் தாயுமானவர். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்,உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்,மருவு பெண்ணாசையே மறக்க வேண்டும்,பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும்,பொய் பேசாதிருக்க வேண்டும்,என்று பல வேண்டும்களை வேண்டுகிறார்.நாமும் வேண்டுவோம். மிக்க நன்றி என்றென்றும் பேரன்பினால் சாமீ அழகப்பன்
    By

    ReplyDelete
  8. எனதை வேண்ட சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா, மிக்க நன்றி.

    ReplyDelete
  9. melanin kulla ivvalavu vilakkama
    super saamee ji

    wish you very happy new year saamee ji

    shareef

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, மீனாட்சியம்மை சிறு பிள்ளை வடிவில் வந்து திருமலை நாயக்கர் அரசவையில் இருக்கும்போது,அவர் மடியில் அமர்ந்து கொண்டு, குமரகுருபரரை நோக்கி'வேண்டுவது எல்லாம் எது?'என்று அம்மை கேள்வி கேட்கிறாள்.அதற்கு குமர குருபரர்;-ஆண்டாண்டு காலமாய் அழிகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும்.
    அம்மை;-அது சரி அது ஏழைக்கு,உனக்கு என்ன வேண்டும்?
    குமர குருபரர்;-ஆணவக்காரர்கள் நெஞ்சிலே தான் என்ற அறியாமை நீங்க வேண்டும்.
    அம்மை;-சரி அது ஆணவக்காரர்களுக்கு,உனக்கு என்ன வேண்டும்?
    குமர குருபரர்;-வேண்டாத குணங்களை விட்டுவிட்டு என்றுமுனை வேண்டிடும் உள்ளம் வேண்டும்,வேறென்ன வேண்டும் என நீ நினைந்து அதனை விரைந்தோடி தரவும் வேண்டும். எனக்கு வேண்டியதை ஓடி வந்து கொடுக்கச் சொல்கிறார். நாமும் அப்படியே வேண்டுவோம் இந்தப் புத்தாண்டில்.ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, மெலனின் உற்பத்தியை தூண்டும் காயகற்பங்களை சித்தர்கள் உருவாக்கினார்கள்.அவை தாவர இனங்களில் கருப்பு என அழைக்கப்படும்.இப்போதும் கருமஞ்சள்,கரு நொச்சி என்பவை,போலியாக அதீதமான விலை வைத்து,சில கும்பல்களால் விற்கப்பட்டு வருகின்றன.ஏமாற்றவும் செய்கிறார்கள்.தயவு செய்து ஏமாற வேண்டாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  12. அருமையான பதிவு அன்பரே ,
    கற்பம் பற்றிய உண்மையான விழிப்புணர்வு அவசியம் தேவை . பகிர்தமைக்கு நன்றி !!!!

    மரணத்தை வெல்ல முடியும் என்று முதல் குரல் கொடுத்தவர்கள் யார் ? தமிழ்ச்சித்தர்களே !!! . சாவாமைக்கு முதல் முதலாய் மருந்து கண்ட விஞ்ஞானிகள் தமிழ்ச்சித்தர்கள் தான் . வள்ளுவர் கூட " விருந்து புறத்தாத் தானுடல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று " என்கிறார் .!!

    ReplyDelete
  13. அன்பரே கருத்துரை பெரியதாக இருப்பதால் ,
    ஒரு பதிவை போட்டுவிட்டேன் : http://pulipanisithar.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  14. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே, சாகாக் கலைக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரே வழி சித்தர்களின் வழியே!சாதாரண நோய்களுடன் மற்ற வைத்திய முறைகள் போராடிக் கொண்டு இருக்கும் போது,மரணமும் ஒரு வியாதி என்றும்,அதையும் வெல்லலாம் என்று கூறுகிறது.அதை நிரூபித்துக் காட்டியும் உள்ளது.தங்கள் வலைப் பூ சென்று வந்தேன்.
    அருமை,மிக அருமை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  15. super sir i read your all story, really useful every one carry on god bless you ............................,,,,,,,,,,ok sir what is the sapa nevarthi manthiram please replay me i want to try kaya kalppam, this is my email id,(anburaja1015@gmail.com) sir please replay me

    ReplyDelete
  16. அன்பரே, இப்போதும் கருமஞ்சள்,கரு நொச்சி என்பவை உண்டா ? உண்மையானதை எப்படி அடையாளம் காணுவது..?

    ReplyDelete
  17. திரு சாமீ அழகப்பன் அவர்களே,
    என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். உங்களின் இந்த தன்னலமற்ற தொண்டு தொடரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உண்மையான, மிக அரிய பொக்கிஷங்களான விஷயங்களை தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு வெப்சைட் கிடைக்குமா என்று வலைதடத்தை தேடிக்கொண்டிருக்கும்போது உங்களுடைய வெப்சைட் பார்த்தேன். வறட்சி காலத்தில் மழையை கண்டது போல இருந்தது. உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    உங்களின் தன்னலமற்ற தொண்டு தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

    தாசன்
    ஜானகிராமன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்