மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, December 1, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 4

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சிறிது சிறிதாக வெளியிட்டு வர இருக்கிறேன்.அதனுடன் என் கருத்துக்களையும் கூறி வர இருக்கிறேன்.
  
மனிதனது உணவியலை அடிப்படையாகக் கொண்டு
(1)அசைவ உணவு உண்போர்(NON-VEGETARIAN),
(2)பால்,பால் பொருட்களும் அடங்கிய சைவ உணவு உண்போர்( LACTO VEGETARIAN),
(3)பால்,பால் பொருட்களும் தவிர்த்த சைவ உணவு உண்போர்(VEGETARIAN OR VEGAN),
(4)பச்சை உணவு உண்போர் (RAW EATERIAN),
(5)பழ உணவு உண்போர்(FRUITARIAN),
(6)கொட்டைப் பருப்புண்போர்(NUTARIAN),
(7)தண்ணீர் மட்டும் அருந்தி வாழ்வோர்(WATERARIAN),
(8)காற்று மட்டும் சுவாசித்து வாழ்வோர்(BREATHERIAN),
எனப் பிரிக்கிறார்.


அதில் முதல் இரு பிரிவில் உள்ளவர்கள் என்ன மாதிரியான உடல் அமைப்புடன்,துயர் உறுகிறார்கள் என்பதை கீழுள்ள தி இந்து நாளேட்டில் நவம்பர் 11,2010 அன்று வந்துள்ள தகவலை கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி தி இந்து
ஐந்தாவது வகையான பழ உணவு உண்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அதே நாள், தி இந்து நாளேட்டில் நவம்பர் 11,2010 அன்று வந்துள்ள தகவலை கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி தி இந்து
இது ஒரு பக்கம் இயற்கை உணவால் இன்னோர் நன்மை பற்றிக் கூறுகிறேன்.உங்களுக்கு சாதக ரீதியாக எந்தக் கிரகம் சரியில்லை என்று சொன்னாலும் சரி.நீங்கள் இயற்கை உணவாளராக இருந்தால் இது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.ஏன் என்றால் நவ கிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் நவ தானியங்களை, சமைத்துண்ணும் வரை மட்டுமே நம்மீது பாயும்.

நவ தானியங்களை நாம் சமைத்து உண்ணுவதை விட்டு விட்டால் நவ கிரகங்களும் நம்மை தொடவே முடியாது விட்டுவிடும்.(சூரியன்=கோதுமை, சந்திரன்=அரிசி,குரு=கொண்டை கடலை,ராகு=உளுந்து,புதன்=பச்சைபயிறு அல்லது பாசிப்பயறு,சுக்கிரன்=மொச்சை,கேது=கொள்ளுசனி=எள்,செவ்வாய்=துவரை).
மேலும் மூச்சை வைத்தே ஆயுள் என்று உங்களுக்கு ஏற்கெனவே கூறியுள்ளேன்.இயற்கை உணவுக்கு மாறியவுடன் ப்ராணாயாமம் செய்யாமலே மூச்சு ஆழமாகவும் குறைந்த எண்ணிக்கையிலும் ஓடுவதால் ஆயுள் விருத்தியாகிறது.நோய்களும் பறந்து ஓடுகிறது.


இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 1ல் கூறிய விஷயங்களைப் பற்றி நல்ல மீண்டும் திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் எழுதிய ஒரு கடிதத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.
திரு.மூ.ஆ.அப்பன் கடிதத்தை உங்கள் பார்வைக்கே தருகிறேன்.
மேற்கண்ட விஷயங்களைப் பார்த்த பின் உங்களுக்கு அன்பர் மு.ஆ.அப்பன் அவர்களைச் சந்தித்து,தங்கள் ஆரோக்கியத்தை நிலை நாட்டிக் கொள்ளுங்கள்அதற்கான வாய்ப்பு உங்களுக்கு வலுவில் வாய்த்திருக்கிறது. வாய்ப்புக்கள் கதவைத் தட்டும்போது உபயோகித்துக் கொண்டால் நலம் பெறலாம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இன்னும் பல விஷயங்களை விளக்க அடுத்து ஒரு பதிவுடன் அதில் பல விஷயங்களை விளக்க இருக்கிறேன்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 
Post Comment

8 comments:

 1. நேற்று இரவு அப்பன் அவர்களை தொடர்பு
  கொண்டு நலம் விசாரித்தேன் சாமீ ஜி


  காது இரைச்சலுக்கு மிக விரைவில் தீர்வினை
  தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

  மிக்க நன்றி சாமீ ஜி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 2. மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி

  ReplyDelete
 3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
  திரு மு.ஆ.அப்பன் அவர்கள் மிக நல்ல ஒரு ஆன்மீகவாதி எனில் ஏதும் பட்டையோ,கொட்டையோ அணியாத ஆன்மீகவாதி.உங்கள் பிரச்சினை தீர உறுதியாக உங்களுக்கு பதிவு உண்டு.இடுகைகளை கவனித்து வாருங்கள்.மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅன்பு மிகு செல்வம் அவர்களே,உங்கள் வலைப்பூ தேர்வுகளில் ஈழத்தமிழர் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.இறைவா இவர்கள் துயர் தீர்க்க வழி செய் என்று வேண்டிக் கொள்கிறேன்.இப்படி கையறு நிலையில் தமிழர்களை இறைவன் வைத்ததற்காக மிகவும் வருந்துகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. // நவ தானியங்களை நாம் சமைத்து உண்ணுவதை விட்டு விட்டால் நவ கிரகங்களும் நம்மை தொடவே முடியாது விட்டுவிடும் //

  அப்பிடிஎன்றால் நன்மை தீமை எப்பிடி நடக்கும் சாமீ ஜி
  தெளிவாக விளக்குங்களேன்

  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
  நன்மை தீமைகளை நவகிரகங்கள் நடத்த,நடத்த,மீண்டும்,மீண்டும், அதன் விளைவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.ஒரு நல்வினைக்கு மீண்டும் ஒரு பெரிய நல்வினை,ஒரு தீவினைக்கு ஒரு பெரிய தீவினை என விளைவுகளை உண்டாக்கிக் கொண்டே போகிற சுழலில் இருந்து விடுபட நவகிரகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.ருசிகளில் மனதை செலுத்தி மீண்டும் நவகிரகங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டே இருக்கும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. அன்பரே ,
  ஈழ தமிழர் விசயத்தில் ., நான் அழுது புரண்ட காலங்கள் பல ., நம் இனம் அழிகிறதே ., அரசியல்வாதிகளும் ., தமிழ் தமிழ் ., சுயநலத்திற்காக கூவி ., ஈழம் விடுதலை என்ற சொல்லே ஒரு பெரும் தீண்டத்தகாத சொல்லாக வர்ணித்து ., எதிர்ப்பை கூட இயலாத நிலையில் ., நான் சித்தர்கள் திட்டி திர்த்தேன் .,

  சீனாவை சேர்ந்த, போகர் ., புலிப்பாணி ., மற்ற நாடுகளை சேர்ந்த சித்தர்களே., தமிழகத்தில் உங்களுக்கு சமாதி மட்டும் வேண்டும் ., எம் இனத்தை ஒரு சர்வாதிகாரன் அளிக்கிறான் வேடிக்கை பார்க்கறிர்களே ., என்று நொந்த நேரத்தில் ., ஒரு அதிகாலை என் கணவில் ., சதுரகிரி மலை உச்சியில் ஒரு சித்தர் தோன்றி "மகனே அழுகாதே புலம்பாதே ., ஈழம் மலரும் ., நாங்கள் இருக்கிறோம் " ., என்று சொன்னார்கள் ., அதன் பிறகு தான் நிம்மதி நிலைத்தது ., ஈழம் மலரும் அன்பரே ., கலங்காதிர்கள்
  மேலும் ., தமிழக அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்களை www.savukku.net என்ற இணையதளம் ஆதராங்களுடன்., வெளியிடுகிறது .,

  இப்படிக்கு ,
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம் .

  ReplyDelete
 8. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
  தமிழர் வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் கண்டு,துயர் தீர்க்க ஓடோடிச் சென்று போர் தொடுத்தான் அன்று,ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன்,கருணாகர பல்லவன் ஆகியோர் அன்று.அந்தக் கதையை வருணிப்பதே சாண்டில்யன் எழுதிய கடல் புறா.அன்றைய ஆட்சியாளர்கள் அப்படி,இன்றைய ஆட்சியாளர்கள் இப்படி.எது எப்படி ஆயினும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இலங்கை படைத் தளபதி பொன்சேகா தமிழர்கள் வாழ்வை அழித்தான்,தற்போது அவன் நிலை என்ன.இதே நிலை இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேக்கும் கூடிய சீக்கிரம் வரும் என்பது நிச்சயம்.தன் காலில் நிற்காத பச்சோந்தி இந்த ராஜபக்க்ஷே.இந்த நாய் அன்று தமிழர் வாழ்வு அழிக்கப்படுவதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தான். அதன் மூலம் தமிழர்களின் ஆதரவைப் பெற்று, தமிழர்களை ஏமாற்றி பதவியில் அமர்ந்தவன்.பின்பு தமிழர்களையே அழிக்கத் துணிந்தான்.இவன் தன் நிலை தாழ்ந்து மிக மோசமான நிலையில் அழுந்துவான் என்பது நிச்சயம்.என்ன நீங்கள் எப்படிப்பட்ட ஞானி தமிழர் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறீர்களே என்று கேட்காதீர்கள்.எங்கு மனித குலம் கஷ்டத்திற்கு உள்ளாகிறதோ அங்கு சித்தர்களின் கனிவான பார்வை விழுந்தே தீரும்.அதில் மொழி,இன,சாதி என்பதெல்லாம் இல்லை.ஒடுக்கப்பட்ட இனம் என்பதே வரலாற்றில் இல்லை.அழுத்தமாக காற்றடைக்கப்பட்ட பந்து எகிறியே தீரும்.பதிலுக்கு பதில் எப்போதும் உண்டு.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்