மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, December 22, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(16)

யோகாவும்,பரதமும்,
(TAI-CHI)டாய்-சீ யும்


நமது பாரத நாட்டில் யோகம் என்பது சித்தர்களும்,  ஞானிகளும்ரிஷிகளும் பல விடயங்களைக் கண்டறிந்துள்ளனர்,அதில் முக்கியமானது யோகாவும்,  பரதமும்.

பல விலங்குகளின்அங்க அசைவுகளை அடிப்படையாக வைத்து பல உடல் அசைவுகளை கண்டுபிடித்துஅவற்றுக்கு ஆசனங்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

இந்த அங்க அசைவுகளை மேற்கொள்வதன் மூலம்,உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களும்புத்துணர்வு அடைந்துநோய் வருமுன் உடலைக் காப்பதோடு,நோய் வந்தால்,அதை குணப்படுத்தவும் செய்கின்றன.இந்த யோக சாதன முறைகளை அட்டாங்க யோகம் என்று வகைப்படுத்தி குறிப்பிடுவர்.அதாவது எட்டு வகையான யோக சாதன படித்தரங்கள் உள்ளன.

அதில் முக்கியமானவை யமநியமஅனுஷ்டானம் என்பவை.யமம் என்றால் எவையெல்லாம் எமன் நம்மிடம் வரும் வழியோ அவைகளை செய்யாமல் இருப்பது.அதாவது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பது.இதையே திருப்பாவையில் ஆண்டாள் தன் பாசுரத்தில் ''செய்யாதன செய்யோம்''
என்கிறார். 

நியமம் என்பது எவைகளெல்லாம் செய்யக்கூடியவைகளோ அவைகளை அனுதினமும் செய்வது.அனுஷ்டானம் என்பது செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருப்பதும்செய்யக் கூடியவைகளைச் செய்வதுமான பழக்க,வழக்கங்களை பழக்கத்திற்கு கொண்டு வருவது.

இதன்மூலம் உடலை நோயை அணுகவிடாது காத்து வந்துள்ளனர்.உடலை சுத்தப்படுத்தும் முறைகளான பிரணாயாமம்பஸ்திகுடல் சுத்தம்உடல் சுத்தம் (குளியல்) , விரதங்கள்(குடலுக்கு வாரத்தில் ஒரு நாளோ இரு நாட்களோஉண்ணாமல் நோன்பிருப்பது),
இதையே வட மொழியில் ''லங்கணம் பரம ஔஷதம்'' என்பார்கள்,அதாவது பட்டினியே சிறந்த மருந்து என்பார்கள்.

எனவேதான் தந்தை இறந்தபின்அவர் மக்கள் அமாவாசை விரதம் அனுஷ்டிக்கின்றனர்.அதாவது இன்று வரை உன்னைக் காக்க உன் தகப்பன் இருந்தார். இன்று முதல் உன்னை இந்த விரதம்தான் காக்கும் என்று பொருளாகும்.

சந்திரன் உடல் காரகன்,சந்திரனின் சக்தி பரிபூரணமாக இல்லாத அமாவாசை திதியில் உடலின் சீரண சக்தி குன்றும். அப்போது நீங்கள் உண்ணா நோன்பிருந்தால்உடல் தன் சோர்விலிருந்து விடுபடும். எனவே இந்த விரதத்தை தகப்பன் இல்லாதவர்கள் மட்டுமல்லபக்கத்தில் பெற்றோர் இல்லாத சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும்இந்த அமாவாசை விரதம் இருக்கலாம்.இது பெற்றோர் உடனிருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்குச் சமம்.










அட்டாங்க யோகத்தைப் போலவே பரதமும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.வலது பக்க செயல்பாடும் இடது பக்க செயல்பாடும் ஒன்றாக்கப்படுவதே இதன் சிறப்பு.

அதாவது வலது பாகம் சிவ பாகம்இடது  பக்கம் சக்தி பாகம்.இவை ஒன்றாக இரு பக்கமும் இயக்கப்படும் போது மூளையில் உள்ள வெள்ளை நிறப் பொருளும்(WHITE MATTER),சாம்பல் நிறப் பொருளும்(GREY MATTER) நன்கு இயக்கம் பெறுகின்றன.இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீர்பெறுகிறது.அதாவது YIN-YANG சீராக்கப்படுகிறது.

பக்க வாதம் என்பது இந்த YIN-YANG IMBALANCE ஆல்தான் வருகிறது என்று அக்கு பங்சர் தத்துவம் சொல்கிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் பக்க வாதம் மட்டுமல்ல அனைத்து நோய்களுமே இந்த ஒத்தியைவு அற்றதால் மட்டுமே வருவது.இதை சரி செய்தால் உடலில் உள்ள எல்லாமே சரியாகும்.







YIN-YANG IMBALANCE ஐ சரி செய்ய சீனத் தத்துவம் TAI- CHI என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.நாம் மேலே சொன்ன அதே போன்ற மென்மையான அசைவுகளில்,பறவைகள் மற்றும் விலங்குகளின் அங்க அசைவுகளை வைத்து உருவாக்கப்பட்டதே
TAI - CHI.சீன ஆன்மீக தத்துவ மேதை டாவோ இதை உருவாக்கினார் என்றும்,பழங்காலத்திலிந்தே இது சீன மக்களால் கையாளப்பட்டு வருகின்றது என்றும் இரு வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள்.






எது எப்படி ஆனாலும் இது மிகவும் மேம்பட்டது.இது மெதுவான அங்க அசைவுகளைக் கொண்டது,வேகமான அங்க அசைவுகளை கொண்டதல்ல.மிருதுவான தொடுதல்களை உள்ளடக்கியது.அதன் மூலம் வலுவான தாக்குதல்களை உள்ளடக்கியது.



அதாவது ஒரு தாய் சீ ஆசான் தாக்கினால் வெளிக்காயம் ஏதும் இருக்காது.ஆனால் முக்கிய உள் உறுப்புக்கள் சிதைந்து போகும்.நமது வர்மத்தில் மெய் தீண்டாக்காலம் என்ற ஒன்று உண்டு. அதாவது உடலை தொடாமலே வர்மத் தாக்குதல் தொடுப்பது. அதை நோக்கு வர்மம் என்பார்கள். அதாவது பார்வையாலேயே வர்மத் தாக்குதல் தொடுப்பது. இந்த முறையில் பல நூறு பேர்கள் வந்தாலும் ஒரே நேரத்தில் தாக்கலாம்.

அது போலவே TAI - CHI யில் TOUCH LESS THROW என்ற ஒன்று உண்டு. அதாவது தொடாமலே தூக்கி எறிதல்.எதிரி நம்மைத் தாக்க வரும்போதே எதிரியின் சக்தி நம்மை நோக்கி வர ஆரம்பிக்கும் அதை அன்போடு வாங்கி அவருக்கே எதிராக அவர் சக்தியை பிரயோகித்து தூக்கி எறிதலே இதுவாகும்.

இது தாக்குவது என்றெல்லாம் போவதால் இது தற்காப்புக் கலைகலுள்ளும் வருகிறது.ஆனால் நான் இங்கு கூற விரும்புவதுஅக்கு பங்சர் தத்துவத்தின்படிஇது நம் உடலில் உள்ள 12 உள்ளுறுப்புக்களுக்கான சக்தியோட்டப் பாதைகளின் சக்தியை சீர் செய்கிறது. இதனால் நோய் இருந்தால் குணமாகிறது.வராமல் காக்கப்படுகிறது.இந்த டாய்-சீயைவூ-சூ(VU-SU) என்றும்,உடாங் கலை (VUDANG),என்றும் அழைக்கிறார்கள்.

இதனால் சீனாவில் இது பெருமையாக போற்றப்படுகிறது. இதன் பெருமையை உலகம் அறியவும்சீன மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் குழுமியிருந்து இந்த டாய்-சீ யை செய்தார்கள் இது 24,48,84,124 வகையான பறவைகள் மற்றும் மிருகங்களின் நகர்வுகளாகச் சொல்லித் தரப்படுகின்றது.இந்த வார புதிய தலைமுறைப் புத்தகத்தில் இதைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.பதிவு பெரிதாகப் போய்விட்டதால் அதை இங்கே வெளியிடவில்லை.இதைக் கொண்டு பஞ்ச பூத சக்திகளையும் கட்டுப்படுத்தலாம்.கீழே கொடுத்திருப்பதையும் பாருங்க.




அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

10 comments:

  1. அய்யா, அருமையான விளக்கம் மற்றும் விடியோக்கள். சில வரிகள் repeatஆகியுள்ளது. பார்த்துக்கொள்ளவும். Raghav

    ReplyDelete
  2. ஐயா, தாங்களது அனுபவமும் அறிவாற்றலும் எங்களை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதிய விஷயத்தை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு பெற்ற நாங்கள் இப்பிறவியில் மிகவும் பேறு பெற்றவர்களாவோம். மிக்க நன்றி.

    பதிவில் உள்ள எழுத்துக்கள் மிகவும் அளவு பெரியதாகவும், சில இடங்களில் பத்திகள் திரும்பவும் வருகிறது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது திருத்தம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

    நன்றி.
    சு. மணிகண்டன்

    ReplyDelete
  3. SUPER SAAMEE JI

    SHAREEF

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராகவன் அவர்களே,
    மீண்டும் மீண்டும் வந்திருந்த வரிகள்,
    நீக்கப்பட்டுவிட்டன,
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே,
    எனது கணினியில் சிற்சில பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன,எனவேதான் இந்தக் கோளாறுகள்.தவறுகள் திருத்தப்பட்டுவிட்டன.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    எளிமையான கருத்துரை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராஜ் கமல் அவர்களே, முதன் முதலில் எனது வலைப்பூவிற்கு வந்துள்ளீர்கள்.தொடர்ந்து வருகை தந்தால் தங்களுக்கு மிக்க பயன் விளையும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. அன்பரே ,
    மிகவும் அருமை !!!! ., தமிழ் கலாச்சாரம் , தமிழர் பண்பாடு , பண்டைய தமிழர்களின் நாகரிகம் , இவ்வற்றிலிருந்து தெரித்தது தான் இன்று உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்திருக்கிறது ஆனால் நாம் போகம் ஒன்றே வாழ்க்கையென பிறந்து இறந்து பிறக்கிறோம் !!!
    இனிமேல்லாவது நம் தமிழ் வழியில் பின்ப்ற்றுவோம் முதலில் இறைவனிடத்தில் தமிழில் வணங்குவோம் ., புரியாத சமஸ்கிருதத்தை கஷ்டப்பட்டு மந்திரத்தை உரைபதை தவிருங்கள் . திருமண மாங்கல்ய வேதத்தை தமிழில் ஓதுவோம் .கணபதி ஓமம் தமிழில் ஓதுவோம் . சமஸ்கிருதம் என்பது தமிழிலிருந்து வந்தது தான் என்பதை உணர்வோம் .!!

    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை ,
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே,
    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடி.பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது என்கும் காணேன் என்கிறார்.மேலும் சுத்தத் தமிழில் உபயோகப் படுத்தப்படும் பல சொற்கள்,வடமொழியில் மட்டுமல்ல,பல தென்னிந்திய மொழிகளில் உள்ளன.எனவே தமிழே எல்லா மொழிகளிலும் தலை சிறந்த மொழி என்பதில் சந்தேகமேயில்லை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்