மொழி பெயர்ப்புக் கருவி

Monday, December 6, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(12)அஷ்ட கர்மம் ஆடல்

எனது குருநாதரின் அப்பாவும் எனது தாத்தாவும் ஆன எங்கள் சித்த ஞான சபையின் ஸ்தாபகருமான தெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயாஅவர்களின் ஜீவ சமாதியின் படம்தான் முதல் பதிவான ஒளியுருவச் சித்தர்கள் என்ற பதிவில் காணும் படங்கள்.

தெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள்,மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன.இந்த மந்திரம் என்பது மனதின் திறமே மந்திரம்.வெளி மனத்தின் செயல்பாடு நமக்குத் தெரியும்.ஆனால் ஆழ்மனத்தின் செயல்பாடுகள் நமக்கு சரிவர தெரிவதில்லை.


நம் மனத்தைப் பற்றி இப்போதுதான் பாரா சைக்காலஜி என்ற துறை ஆராய்ந்து வருகிறது.அதில் மன எண்ண விதைப்பு(MIND SEEDING),மனத் தாக்குதல்(PSYCHIC ATTACKS),மனப் பெரு வெளி(SUPPER MIND) அல்லது உலகப் பெரு மனம்(THE GREAT MIND OF WORLD) போன்ற விஷயங்களை சித்தர்கள் அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள்.


அவர்கள் விஞ்ஞானத்தை பொருத்த வரை புதியதாக கண்டுபிடிக்க ஒரு வியாதியும் கிடையாது,ஒரு புதிய விஷயமும் கிடையாது.அவர்கள் விஞ்ஞானமானது முழுமையடைந்த ஒரு விஞ்ஞானம்.அவர்கள் விஞ்ஞானம் நமக்கு புரியவில்லை என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, அது முடியாதது நடவாதது என்று சொன்னால் நம்மைப் போல் முட்டாள்கள் உலகில் இல்லை.


நமது சித்தர்கள்,மற்றும் ஞானிகள் எழுதிய ஏட்டுப் பிரதிகள்,பல நூல்கள் இலண்டன் ஆவணக் காப்பகம்,ஜெர்மனி ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.அதில் வேதங்களிலும்,சித்தர்கள் சொல்லும் பலவித யாகங்களைச் செய்து அதில் கிடைத்த சாம்பல்களைக் கொண்டு பலவிதமான வியாதிகளையும் குணமாக்கி வருகிறார்கள்.இதற்கு வேதிக் தெரபி என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.


சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்றார் பாரதி,ஆனால் நிலைமையோ வேறாக இருக்கிறது.


நமது இருக்கும் சித்தர்களின் கலைச் செல்வங்களை அழியாமல் காத்தாலே போதும்.அவ்வளவு விஷயங்கள் உள்ளன எனக்குத் தெரிந்தே!எனில் தெரியாத பொக்கிஷங்கள் எத்தனை கோடி இருக்கும்.


தென்னாடுடைய சிவனே போற்றி என்றழைக்கப்படும் சித்தர்களின் தலைவனான எம் இறைவா என் நாட்டு மக்கள் மனங்களை என்று மாற்றப் போகிறாய்!


சரி விஷயத்துக்கு வருவோம்.தெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் ஒரு சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்க எண்ணி உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டு வெயிலில் ஒரு மணைப் பலகையில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.


அப்போது ஊருக்குள் நுழைந்த ஒரு குடுகுடுப்பைக்காரன் சர.கோட்டைச்சாமி ஐயா அவர்களிடம் வந்து ஐயா தானம் செய்யுங்கள் என்று கேட்டான்.அதற்கு அவர் நான் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்,எனவே எண்ணெய்க் கையோடு தானம் செய்யக் கூடாது(ஏன் என்ற காரணம் எனக்குத் தெரியாது),எனவே ஊருக்குள் போய் தானம் பெற்று வா,பிறகு நான் நீ போகும்போது தானம் தருகின்றேன்,என்று கூறினார்.உடனே அந்தக் குடுகுடுப்பைக்காரன் வரும் வரையில் அப்படியே இரு என்று கூறிவிட்டு ஊருக்குள் சென்றுவிட்டான்.


அவன் ஊருக்குள் சென்ற பின் சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் குளிக்க எழுந்தபோதுதான் குடுகுடுப்பை மந்திரவாதி அவரைக் கட்டிவிட்டுச் சென்றது தெரிந்தது.அவர் பின்புறம் இருக்கையோடு ஒட்டிக் கொண்டது.இருக்கை தரையோடு ஒட்டிக் கொண்டது, அவரால் எழுந்திருக்க முடியவில்லை.


சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் தன் மனைவியைக் கூப்பிட்டு ஒரு தேங்காயை எடுத்து வரும்படி கூறினார்.அவரும் தேங்காயை வாங்கி மந்திரம் ஓதி உருட்டி எறிந்தார்.


அந்தத் தேங்காய் அந்த குடுகுடுப்பை மந்திரவாதி இருக்கும் திசை நோக்கி உருண்டு ஓடி அந்த குடுகுடுப்பை மந்திரவாதியைத் தாக்கத் துவங்கியது.தலை உடல் எல்லா இடங்களிலும் அடி கொடுக்கத் துவங்கியது.குடுகுடுப்பை மந்திரவாதி சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் வீட்டின் திசைப் பக்கமாக நகர்ந்தால் குறைந்த அடியும்,வேறு பக்கம் நகர்ந்தால் அதிக அடியும் கொடுத்து அவனை இவர் முன்னால் கொண்டு வந்தது,ஆனாலும் அடி நிற்கவில்லை.அவன் இரத்தம் வழிந்த முகத்துடன் ஐயா காப்பாற்றுங்கள் என்று கதறினான்.


அப்போது சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள், எனக்குப் போட்ட மந்திரக்கட்டை அவிழ்த்துவிடடா என்று கூறினார்.(இப்போது நம் வாசக அன்பர்களுக்கு ஒரு கேள்வி பிறக்கும்,இவ்வளவு சக்தி வாய்ந்தவருக்கு அந்தக் குடுகுடுப்பை மந்திரவாதி போட்ட கட்டை அவிழ்க்க இயலவில்லையா என்ற கேள்விதான் அது.எனக்கும் அந்தக் கேள்வி பிறந்தது,பதில் அடுத்த பதிவுடன் வருகிறது.குடுகுடுப்பை மந்திரவாதியும் மந்திரக் கட்டை அவிழ்த்து விட்டுவிட்டு,காப்பாற்றுங்கள் ஐயா என்று காலில் விழுந்தான்.அது வரை தேங்காய் அடி விடவில்லை.


அப்போது சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள், ஏனடா நானே பெரிய மந்திரவாதி,என்னிடமே உன் குடுகுடுப்பை மந்திரவாதத்தை காட்டுகிறாயே,கொல்லன் பட்டறையிலேயே வந்து ஊசி விற்கப் பார்க்கிறாயா! என்று கோபமாகக் கேட்டார்.


என்னிடமே இப்படி வேலை செய்தால் அப்பிராணி சப்பிராணிகளிடம் என்னென்ன வேலை செய்ய மாட்டாய்,என்று கூறி அவன் மேல்,கீழ் முன்பல் இரண்டையும்(இவை இல்லையென்றால் மந்திரங்களை ஸ்பஷ்டமாக உச்சரிக்க முடியாது) தட்டச் சொல்லி தேங்காய்க்கு கட்டளையிட்டார்.பின்,அவன் மேல்,கீழ் முன்பல் இரண்டையும் தட்டிய பின் ஓடிப்போ என அவனை ஓட்டிவிட்டார்.


இப்படிப்பட்ட பெரிய மாந்திரீகவாதியான சர.கோட்டைச்சாமி ஐயா அவர்களிடம் , ஒரு சித்தர் வந்து நமக்கு ஏனடா இந்த வேலை என்று கூற அதோடு இந்த வேலையை அவர் விட்டு விட்டார்.அவருடைய ஏட்டுப் பிரதிகள் அனைத்தையும் வைகையாற்றில் விட்டுவிட்டார். அதில் தப்பித்து மீதமான சில விஷயங்களே இப்போது என் குருநாதர் திரு சர.கோ.பார்த்தசாரதி அவர்கள் என்னிடம் கொடுத்து என்வசம் உள்ளது.


முக்கிய விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.மாந்திரீகத்தில் சன்மாந்திரீகம், துன்மாந்திரீகம் என்ற இரண்டு வகை உண்டு. சன்மார்க்கம்,அதாவது உயிர்களுக்கு தீங்கிழைக்காத, உயிர்கள் படும் துன்பத்திலிருந்து விடுபட செய்யும் மாந்திரீகம் சன்மாந்திரீகம். உயிர்களை துன்புறுத்துவதற்காக செய்யப்படும்
மாந்திரீகம் துன்மாந்திரீகம்
என்ற மற்றொன்று.


இதில் இரண்டாவதான துன்மாந்திரீகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்வது மனித இயல்பு.ஆனால் துன்மாந்திரீகவாதிகள் அதீத பலமோ,சக்தியோ கொண்டவர்கள் அல்லர்.அவர்கள் தங்களது மன ஒருமையால் காரியம் ஆற்றுகின்றனர். இவர்களைவிட ஆன்மீகத்தில் தொடக்க நிலையில் உள்ளவர்கள்கூட நல்ல மன ஒருமை கொண்டவர்களாக இருந்தால்  துன்மாந்திரீகவாதியான இவர்களை ஒரு நொடியில் பஸ்மீகரணம் செய்துவிட முடியும்.


சூரியக் கதிர்கள் பரந்து விழும்போது நம்மைக் கூட சுடக் கூட சக்தியற்றதாக உள்ளது.அதே சூரியக் கதிர்கள் ஒரு ஆடியின் மூலம் குவிக்கப்படும் போது பஞ்சினை எரிக்கும் ஆற்றல் பெறும்.


நீங்கள் ஒரு ராஜா.ஆனால் தற்போது பிச்சைக் காரனைப் போல வேஷம்தான் போட்டிருக்கின்றீர்கள்.நாடகம் முடிந்துவிட்டது.நீங்கள் ராஜா என்பதை உணருங்கள்.


எனது தாத்தாவின் மந்திரப் பிரயோகங்கள் நல்ல உபயோகத்திற்காக பிரயோகம் செய்து வெற்றி கண்டுள்ளேன்.அதில் தன்னைப் பேணிக் கொள்ள என்ற மந்திரங்கள் செய்வினை,ஏவல்,பில்லி சூனியத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்கள்.அதையே திரு ஷரீஃப் அவர்களுக்காகவும்,நமது வலைப் பூ அன்பர்களுக்காகவும்.அடுத்த பதிவில் வெளியிட இருக்கிறேன்.


தயவு செய்து பொருத்தருள்க!ஏனெனில் பதிவு பெரிதாகப் போய்விட்டது.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

14 comments:

 1. அன்பரே ,.
  ஆஹா !!! எவ்வுளவு விசியங்கள் தங்களிடத்தில்!
  மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர் !!!
  மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகாண் !!!
  மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை !!!
  மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே !!!
  --- சிவவாக்கியர்
  விளக்கம் :
  மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே !! மந்திரம் என்பது மனிதன் திறமே . மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும் மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் போது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றே அமைக்கபட்டது .அதனால் வாசி மலாய் ஏறி பிராணசக்தி கோடி மரணமில்ல பெரு வாழ்வு அடைவார்கள் . மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியானிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே.அனைத்து மந்திரகளும் சத்கி வாய்ந்தவையே ., மனத்தை நேர்கோட்டில் வைத்து .,மந்திரங்களை தியானித்தால் அதிர்வலைகள் கிடகபெரும் ., . நீங்கள் நினத்ததெல்லாம் நடக்க பெரும் .., !! இது என்னுடைய அனுபவ உண்மை .

  இப்படிக்கு ,
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம் .

  ReplyDelete
 2. சாமீ ஜி .............வார்த்தைகள் இல்லை
  என்னுடைய கண்ணீரை தங்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன்

  நன்றி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 3. ஐயா புலிப்பாணி அவர்களே
  உங்கள் விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்

  நன்றி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 4. அன்பரே ,
  " மிக்க நன்றி ஷரீப் "

  இப்பெற்ப்பட்ட .,பரம்பரை வழி வந்ததால் தான் ., தங்களால் இவ்வுளவு மகத்துவமான விசயங்களை பெரும்தன்மையுடன் .,எவ்வித தன(ன்)லமும் .,பிரதிபலனும் பாராமல் வெளியிடமுடிகிறது .,!! மேலும் எப்பெற்ப்பட்ட குருவானாலும் "குருதட்க்ஷனை" இல்லாமல் கூட சொல்லி கொடுப்பார் ., ஆனால் "குருசேவை" இல்லாமல் எந்த குருவும் இவ்வுளவு அரிதான விசயங்களை சொல்லி கொடுக்கமாட்டார் ., மிக்க நன்றி !!!

  " நீங்கள் ஒரு ராஜா.ஆனால் தற்போது பிச்சைக் காரனைப் போல வேஷம்தான் போட்டிருக்கின்றீர்கள்.நாடகம் முடிந்துவிட்டது.நீங்கள் ராஜா என்பதை உணருங்கள். "

  அஹஹா!!! ., எவ்வுளவு ஒரு பெரிய உலகியல் பிரபஞ்ச தத்துவம் !!!

  இப்படிக்கு ,
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம் .

  ReplyDelete
 5. /// என்னிடமே இப்படி வேலை செய்தால் அப்பிராணி சப்பிராணிகளிடம் என்னென்ன வேலை செய்ய மாட்டாய் ///

  சரியான கேள்வி, நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா,

  ReplyDelete
 6. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
  மந்திரங்கள் எல்லாம் சரி,கற்றுணைப் பூட்டி கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்றால் கல் மித்ந்தது.நாம் அப்படிக் கூறி கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்தால் கல் மிதக்குமா என்ன?அப்போது அதில் ரகசியம் இருக்கிறது எனில் அது என்ன என்பதை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  என்க்கு என் ஆருயிர் நண்பன் திரு ஷரீஃப் அவர்க்ள் என்பவன்தான் இஸ்லாத்தில் உள்ள பெருமை மிகு அத்துணை விஷயங்களையும் கற்றுக் கொடுத்தவன்.அதனாலேயே எனக்கு எல்லா மதங்களிலும் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது.புறச் சமய விலக்கல் என்பது சைவத்தில் ஒரு அங்கம்.அதில் இருந்து மீண்டு வந்து மற்ற மதங்களில் என்ன இருக்கிறது என்று பார்க்கத் தூண்டியது எனது வகுப்புத் தோழன் திரு ஷரீஃப் அவர்களின் தொடர்பே என்று கூற விழைகின்றேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
  பரம்பரை என்று எல்லாம் ஒன்றுமில்லை.சித்தன் போக்கு சிவன் போக்கு.இறைவன் அருட்கருணை இருந்தால் எதுவும் ஒன்றுமில்லை.அது இல்லாவிட்டால் ஒன்றுமில்லாததுவும் பேரிடர் ஆகும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. தெய்வத்திரு சாமீ அழகப்பன் அவர்களே ,

  கோடான கோடி நன்றிகள் ..!!!

  இப்படிக்கு ,
  சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம் .

  ReplyDelete
 10. thangal tholamaikku
  en nanrigal

  thanks saamee ji
  shareef

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
  நீங்கள் நினைப்பது போல் இந்த வலைப் பூவில் கருத்துரை எழுதும் ஷரீஃப்,என் வகுப்புத் தோழன் முகமது ஷரீஃப் அல்ல.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 13. தவறாக புரிந்தமைக்கு வருந்துகிறன் .

  ReplyDelete
 14. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/


  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்