மொழி பெயர்ப்புக் கருவி

Friday, December 24, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(17)

இந்தப் பதிவில் மிக மிக முக்கியமான மூலிகையான விஷ்ணு கிராந்தி,விஷ்ணு கரந்தை என்றும், விஷ்ணுவின் பெயரால் அழைக்கப்படுகிறது.விடாத காய்ச்சலுக்கு விஷ்ணுக் கிராந்தி என்பார்கள்.மரணம் வரும் வேளையில் சிலருக்கு யமலோகக் காய்ச்சல் என்று ஒன்று வரும் எந்த மருந்தாலும் தணிக்க முடியாத இந்தக்காய்ச்சல்,விஷ்ணுக் கிராந்திக்கு தணியும்.
விஷ்ணு கரந்தை
என்ற விஷ்ணுக் கிராந்தி 
இதில் இந்தக்கரந்தையை மூன்றாகக் குறிப்பிடுவர், விஷ்ணு கரந்தை,சிவ கரந்தை,கொட்டைக் கரந்தை.இதில் விஷ்ணு கரந்தை நீலப் பூ பூக்கும்,சிவ கரந்தை வெள்ளை நிறப்பூ பூக்கும்,கொட்டைக் கரந்தை யானை நெருஞ்சியின் காயளவுக்கு கூட்டுக் காயாய் இருக்கும்.இவை மூன்றுமே மிக அரிய காய கல்ப மூலிகைகள்.மூன்றுமே அஷ்ட கர்ம மூலிகைகள்.இவை மூன்றுமே பூக்கும் முன் எடுக்க வேண்டும் அப்போதுதான் காயகல்பத்துக்கு ஆகும்.மருந்திற்கு எந்த நிலையிலும் எடுக்கலாம்.

அஷ்ட கர்ம மூலிகைகள் என்பவை,அஷ்ட கர்மமான எட்டு வகையான மந்திரப் பிரயோகத்திற்கு அவசியமான மூலிகைகள்.அஷ்ட கர்மம் விபரம் காண காண்க.

மிக அருமையாக நாம் செய்த கர்மத்தையும், அதனால் விளையும் கர்ம வியாதியைகளையும் தீர்க்கும்.(சாதாரண மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களை கர்ம நோய்கள் என்பார்கள்.எ-கா குஷ்டம்
LEPROSY ),பால்வினை நோய்கள்(V.D),ஷய ரோகம(T.B))

செய்ய மாலின் கிராந்தி தீராத வல்ல சுரத்
தைய மறுக்கும் மனற் தணிக்கும்-பையவரு
காச மிருமலையுங் கட்டறுக்கும் வாதத்தா
லூசலா டும்பிணிபோக் கும்.
-பதார்த்த குண சிந்தாமணி-
இதன் சமூலத்தை(சமூலம் என்றால் வேர் காய்,பூ,இலை,தண்டு முதலான பஞ்ச(ஐந்து) அங்கங்கள் இணைந்த மொத்தச் செடியும்) ஒன்று முதல் ஒன்றரைப் பலம்(ஒரு பலம் என்பது 35கிராம்) வரை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பாண்டத்தில் போட்டு 1/2 படி தண்ணீர் விட்டு 1/4 படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி,வேளைக்கு 2-3 அவுன்ஸ் வீதம் தினம் 3வேளை பெரியவர்களுக்கு  கொடுக்கலாம்.அல்லது ஒரு கொட்டைப் பாக்களவு(1/2 ரூபாயெடை) அரைத்து,பாலில் கலக்கி வடிகட்டிதினம் 3 வேளை கொடுக்கலாம்.இவற்றால் சீதபேதி,சுரம்,மேகம்,ஷயம்,காசம்,இருமல்,ஈளை,வாத பித்த ரோகங்கள் எல்லாம் தீரும்.இன்னும் கண்களுக்கு பிரகாசம் அதிகரிக்கும்.

கப ரோகங்களுக்கு கியாழமிடும்(மேற்கண்டவாறு கஷாயம் போடும்போது) சமயம் சிறிது சிற்றரத்தை, துளசி கூட்டிக் கொள்வது சாலச் சிறந்தது.சுரத்துடன் காணப்படுகின்ற சீதபேதி,அஜீரண பேதி முதலியவைகட்கு இத்துடன் சிறிது சீரகம்,லவங்கப்பட்டை கூட்டிக் கஷாயம் போட நல்லது.


விவசாயப் பெருமக்களுக்கு ஒரு வேண்டு கோள் இது போல வரப்போரம் வளர்ந்து கிடக்கும் மூலிகைகளின் தெரியாமல்தான் போய்விட்டோம்,அவற்றைக் கொல்லாமல் இருக்கலாமல்லவா!களைக் கொல்லி என்ற ஒரு விஷத்தை இது போன்ற செடிகளின் மேல் அடிக்கிறார்கள்.நம் உயிரை வளர்க்கும் இது போன்ற செடிகளை அழிக்கலாமா!


உங்கள் வலைப் பூவை எந்த விவசாயி பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கும் வாசக அன்பர்களே நீங்கள்தான் இந்த விஷயத்தை அந்த அறிவுக் குறைவான விவசாயிகளிடம் சொல்ல வேண்டும்.தாய்ப்பால் முதல் அனைத்தும் விஷ மயமாகி வருகின்ற வேளையில்,மேலும் விஷங்கள் தேவையா!இறைவா இவர்கள் அறியாது செய்கின்றார் மன்னியும் நீர்.  

அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக மிக முக்கிய விஷயமான விஷ்ணு கிராந்தியை காயகல்பப் பிரயோகத்திற்கு பயன்படுத்துவது பற்றி... அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

12 comments:

 1. புதுமையான பல விசயங்கள் பயனுள்ளது.

  தெரிந்த செடி தெரியாத பெயர்..

  நன்றி ஐயா.

  ReplyDelete
 2. //காய்ச்சலுக்கு மூலிகை மருந்து //

  சாமீ ஜி இந்த செடி நிறைய பார்த்திருக்கிறேன்
  அதனை எப்படி பயன்படுத்துவதை என்பதை
  தங்கள் மூலம் அறிந்து கொண்டது
  மிகுந்த மகிழ்ச்சி

  மிக்க நன்றி சாமீ ஜி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 3. சாமீ ஜி

  திரும்ப திரும்ப ஒரு முறை படிக்கும் பொழுது
  நிறைய விஷயங்கள் விளங்குகின்றது

  அஷ்ட கர்ம மூலிகைகள் என்றால் மந்திர பிரயோகத்திற்கு
  எப்படி பயன் படும் என்பதையும் விளக்கமாக பதியுங்கள் சாமீ ஜி

  மிக்க நன்றி சாமீ ஜி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
  தங்கள் பெயர் தோழியின் வலைப் பூவில் வந்துள்ளது நேற்றுத்தான் கண்டேன்.நீங்கள் திரு புலிப்பாணி அவர்களிடம் சொல்லி சித்தர் பாடல்கள் ஒலிப் பேழைகள் வாங்கி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சிறக்கட்டும் உங்கள் தொண்டு.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  விஷ்ணு கிரந்தியின் புகழ் பாட ஆயிரம் வாய் இருந்தாலும் போதாது.அஷ்ட கர்ம மூலிகைப் பிரயோகம் நமக்கு வேண்டாம்.எனெனில் இயற்கையாக நடக்கும் எந்த விஷயத்தையும் மாற்ற நமக்கு வல்லமை இறைவன் கொடுத்துள்ள சூழலில்தான் நாம் சற்று ஜாக்கிரதையுடன் நடக்க வேண்டும்.எனது வாசகியரில் ஒரு பெண் என்னிடம் ஒரு பையனை தான் விரும்புவதாகவும் அந்த பையனை வசியம் செய்து தர வேண்டும்,என்றும் அவன் கிடைக்காவிட்டால் தான் செத்துவிடுவதாவும் கூறியுள்ளார்.அவர் பெயரை நான் வெளியிடாவிட்டாலும்,அவர் இதைப் படிப்பார்.எனக்கு இந்த வழி தெரிந்திருந்தாலும் செய்வதில் உடன்பாடில்லை.இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் செல்வங்களைவிட நாம் இன்புற வேறு தேவையில்லை.இயற்கையில் உள்ளதில் நமது வாரிசுகளை உருவாக்கவே இல்லறம்.இது காம வயப்பட்டு இவ்வளவு மோகத்துடன் உருவாகும் உயிர் மேலும் அதிக காம வயப்பட்டுத்தான் தீரும்.நாம் இப்போதுள்ள சூழலில் சுய நலமில்லாத உயர் குணமுள்ள நபர்கள் ஆயிரக் கணக்கில் தேவை.அதற்காக நம் மனத்தை பக்குவம் செய்வோம்.சுற்றுப்புறத்தையும் மாற்றுவோம்.மக்கள் மனம் மாற பாடுபடுவோம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. ஐயோ???
  சாமீ ஜி அந்த பெண் செய்ய நினைப்பது தவறு தான்.

  ஷரீப்

  ReplyDelete
 7. விஷ்ணு கரந்தை

  திறந்திட்ட விஷ்ணுகரந்தை தனைக் கொணரிந்து
  செப்பமாய் மண்டலந்தான் பாலிரைத்துண்ணு
  மறிந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
  மாசற்ற யெலும்ப்புக்குள் கரந்தான் போகும்
  கறந்திட்ட தேகமது கருத்துமின்னும்
  கண்ணொளிதான் யோசனைதூ ரந்தான்காணும்
  பிறந்திட்ட சுவாசமெல்லா மிருகியேரும்
  ஏற்றமாஞ் சுழிமுனையுந் திறந்துபோமே !!! -- போகர் கற்பம்

  இப்பெய்ற்பட்ட அரிய " விஷ்ணு கரந்தை " மூலிகை பற்றி அருமையான பதிவு அளித்ததற்கு கோடான கோடி நன்றிகள் !!!

  இப்படிக்கு
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம்

  ReplyDelete
 8. கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே,
  இந்தப் பாடலுடன் மேலும் பல விஷயங்களத் தர எண்ணியுள்ளேன் அடுத்தடுத்து வரும் பதிவுகளைப் பாருங்கள்.தங்களின் ஆலோசனைகளையும் கூறுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. நண்பரே மிகவும் அருமையான பதிவு நன்றி

  ReplyDelete
 10. ஐயா சாமீ அழகப்பன் ஐயா வணக்கம் .நானும் உங்களிடம்சேர்ந்து பயனிக்களாமா..

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்