மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, December 29, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 6

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான  விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

திரு மூ.ஆ.அப்பன் அவரது 30 தாவது வயதில் கர்ம வியாதியான குஷ்டத்தில் அவதிப்பட்டு தன் அண்ணனான திரு மு.ராமகிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்க அவர் இயற்கை உணவினை உண்டால் குணம் பெறலாம் என்று கூறினார்.முன்பெல்லாம் பெரு வியாதியஸ்தர் உள்ளே வரக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பொது இடங்களிலும் எழுதி வைத்திருப்பார்கள்(பெரு வியாதி என்பது குஷ்டம்,ஷயரோகம்,புற்று நோய்,பெண்வியாதி(V.D.R.L)).அவ்வளவு கொடுமையானது இவ்வியாதி.

திரு மு.ஆ.அப்பன் அவர்கள் எல்லா இயற்கை உணவையும் பரீட்சித்து பார்த்துவிட்டார்.ஆனாலும் வியாதியின் வேகம் குறைந்தது,ஆனால் அதிகம் குறையவில்லை.கைகளில் நகம் காணாமல் போய்விட்டது.விரலும் காணாமல் போக ஆரம்பித்தது.பின் அவர் சிந்தித்தார்.இறைவனுக்கு படைப்பது எது தேங்காயும்,வாழைப் பழமும்,அதையே நாமும் உண்டாலென்று எண்ணி அதையே உண்ண ஆரம்பித்தார்.தற்போது அவர் குணமானது போல் பல பெரு வியாதியஸ்தர்களை பலரை குணமாக்கி வருகிறார்.பல குஷ்ட ரோகிகளையும்,எய்ட்ஸ் நோயாளிகளையும்,ஷயரோகம்(T.B),புற்று நோய்(CANCER),பெண்ணால் வரும் வியாதியான மேகக் கிரந்தி(V.D.R.L),செம்மேகக் கிரந்தி(A.I.D.S) நோயாளர்களையும் சாப்பிடும் உணவாலேயே குணப்படுத்தி வருகிறார்.

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.வரும் ஜனவரி மாதம் 21-01-2011,22-01-2011,23-01-2011 ஆகிய தேதிகளில் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.    
மேலும் ஒரு முக்கிய விடயம்.காயகல்பத்திற்கு ஒரு போதுண்பதினால் மீதி இரு வேளைகளிலும் தேங்காயும் பழமும் உண்டால் அதன் மகிமைதான் என்ன.

இதோ எனது நீரோட்ட குருநாதரான திரு பால் வாசனின் பிரதம சீடரான திரு ஆசீர் ஜோசப் அவர்கள் நீரோட்டம் பற்றிய சில விடயங்களை உணர்த்தினார்.அதில் ஒன்று தேங்காயை வைத்து நீரோட்டம் பார்ப்பது.கையில் தேங்காயை வைத்துக் கொண்டு நீரோட்டம் ஓடும் இடத்தில் கால் வைக்க
தேங்காய் எழுந்து நிற்கிறது.கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
கையில் படுத்திருக்கும் தேங்காய்
 நீரோட்டமுள்ள இடத்தை கால் பெரு விரலால் தொட்டவுடன் எழுந்து நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள்.

மேலும் நீரோட்டமுள்ள இடத்தில் தேங்காயை படுக்கை வசமாக வைத்து அதன் மேல் தரையில் கால் படாமல் ஏறி உட்கார தேங்காய் நம்மையும் சேர்த்து சுற்றுகிறது.தேங்காயின் மகத்துவம்தான் என்னென்று சொல்வது.அவ்வளவு உயிரோட்டம் உள்ள தேங்காயை உண்டால் நம் உயிரின் ஓட்டம் எவ்வளவு முன்னேறும் யோசியுங்கள்.

கற்றிடுவோம் சாகாத கல்வி!!!  


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

16 comments:

 1. /// கற்றிடுவோம் சாகா கல்வி ///

  தலை வணங்குகிறேன் உங்கள் முயற்சிக்கு, பெரும்பொருள் பாரம்பொருள் ஆசி ஐயா நீவிர் பெற்றது.

  ReplyDelete
 2. தேவன் நல்ல ஜால்றா.. சிங்சா.. சிங்சா..

  ReplyDelete
 3. /// hi said
  தேவன் நல்ல ஜால்றா.. சிங்சா.. சிங்சா.. ///

  அன்பரே hi,
  நல்லோர் ஆக்கத்திற்கு எப்போதும் எனது கருத்து நல்ல ஜால்றா தான்.

  எவ்வளவு கலை நயத்தோடு பாராட்டியிருக்கிறீர்கள்... நன்றி...

  ReplyDelete
 4. இது போன்ற யாரும் வெளியிடாத கருத்துக்களை
  உயர் திரு சாமீ அழகப்பன் அவர்கள் எந்த பிரதிபலனும் எதிர் பாராமல்
  அவர்களுடைய நேரத்தை செலவிட்டு பதிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை

  நண்பரே இது போன்ற பதிவுகளை படித்து தெரிந்து கொள்ள இன்னும் முயற்சியும், அறிவும்,
  குருவருளும், எல்லாம் வல்ல இறையின் அருளும் தேவை

  நீங்கள் இது போன்ற வலை தளங்களை நக்கலடிக்க பயன் படுத்தாதீர் நண்பரே

  கண்டனத்துடன்
  ஷரீப்

  ReplyDelete
 5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, இறைவன் பல விடயங்களை அறிய சந்தர்ப்பங்களை வழங்கி உள்ளார்.ஒரு கவிஞனின் கையில் உள்ள பேனா,தான் கவிதை எழுதியதாக சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா? அது போல தெரிய வைத்த,தெரியும் சந்தர்ப்பமளித்த இறைவனுக்கே அந்தப் பெருமை!எல்லாப் புகழும் இறைவனுக்கே! மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. ஹைக்குள் ஒளிந்திருக்கும் நண்பரே தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி,
  கருத்துரை உங்கள் கருத்தை தெரிவிக்கிறது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
  மாணிக்க வாசகர் இலங்கையில் இருந்து வந்த புத்த பிக்குகளை வாக்கு வாதத்தால் வென்ற போது,அவர்கள் மாணிக்க வாசகரை வெறும் தோற்றத்தை வைத்து,கேலி செய்தார்கள்.விளைவு அவர்கள் மன்னன் ஊமை மகள் பேசி,இவர்களை வாதித்து தோற்கடித்தாள்.மீண்டும் புத்த பிக்குகள் வெறும் கேலி கிண்டலடித்தபோது இறைவா,என்னை வாழ்விக்கும் நிலை இதுவா என அவர் இறைஞ்சியபோது,அனைத்து பிக்குகளும் ஊமையாயினர்.இது மாணிக்க வாசகத்தில் திருச்சாழல் என்ற பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது.இதை விளக்கவே இந்த கருத்துரை எழுதி இருக்கிறார் இந்த ஹை!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  கோபம் கொள்ளக் கூடாது.எந்த இறை என்னை எழுதத் தூண்டியதோ! அந்த இறையே அந்த இறையே அவரையும் எழுதத் தூண்டி உள்ளது.புண்ணியம் சேர்க்க வழி உள்ளது போல,பாவம் சேர்க்கவும் வழி உண்டு.அது அவரவர் வழி.வள்ளலார் பல பாடல்களை பாடி உள்ளார்.அதற்கான இணைப்பு இதோ.
  http://www.vallalar.org/Tamil
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 9. திரு. சாமீ அய்யா அவர்களுக்கு தேங்காயின் மகத்துவத்தை பற்றி எங்களுக்கு உணர்த்தியமைக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் எளிமையாக கிடைக்கும் தேங்காயினை எந்த அளவில் எந்தெந்த வகையில் உணவிற்கு பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று தாங்கள் பதிவிட்டால் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். மற்றபடி அந்த ஹை - யைப் பற்றியெல்லாம் இங்கு கண்டுகொள்ளவே தேவையில்லை அவை போன்ற அறிவிலிகளுக்கு தாங்கள் பதில் எழுதி தங்கள் பொன்னான நேரத்தை செலவிட வேண்டாம்.

  மிக்க நன்றியுடன்
  சு. மணிகண்டன்.

  ReplyDelete
 10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சு. மணிகண்டன் வருடம் முழுவதும் கிடைக்கும் தேங்காயைப் பற்றி ஒரு பதிவு நிச்சயம் உண்டு.வியாதிகளற்ற ஆரோக்கியமான சமுதாயம்,மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உறுதியாக இருக்கும்.அதை நிறுவ நமது வலைப் பூ பாடுபடும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 11. அருமையான பதிவு அன்பரே ,
  . பகிர்தமைக்கு நன்றி !!!! தேங்காய் --- தேன் எனும் காய் | தேகத்தை காய்யாக்குவது ஆதலால் தேங்காய் ...!!!
  மிக்க நன்றி ...,!!!

  இப்படிக்கு
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம்

  ReplyDelete
 12. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே, தேங்காய் பூத்து காயாகி தேங்காயாக மாற,மனிதன் கருவறையில் வளர்ந்து குழந்தை ஆக ஆகும் காலம் போலவே பத்து மாதங்கள்தான்.மாதம் ஒரு பாளை விடும்.வருடம் முழுவதும் காய் கொடுக்கும் கற்பக விருட்சம்.தேங்காய் அந்த உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் உடையாது,தண்ணீரில் கிடந்தாலும் அழுகாது,மூழ்காது,மிதந்து ஒதுங்கும்(SHOCK PROOF,WATERPROOF).மற்ற பழங்களுக்கு இந்த சிறப்பு கிடையாது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 13. சிகரத்தை நோக்கிய பயனம்
  துயரஙகல் பலவும் தரும்
  துயரஙகல் தரும் பாடம்
  உன்னை சிகரததில் ஏட்ரி நிருத்தும்
  சிகரதில் ஏரிய தருனம்
  உன் துயரம் பரந்தோடும்

  சிகரதை அடய வாழ்துகல்

  I am sorry for the spelling mistakes. this is the first time i am typing in tamil. anyhow its a great job. All the best for your journey.

  ReplyDelete
 14. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு M அவர்களே,
  மிக்க மகிழ்ச்சி.தங்களின் கருத்துரை எழுதும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 15. வணக்கம் குரு,
  தங்களின் கட்டுரை வாயிலாக அறிமுகம் பெற்று, தங்களை குருவாக ஏற்றுக்கொன்டதின் மூலமாக நான்
  தங்களுடைய அசிர்வாதத்தையும், மனதில் ஒரு இடத்த்யும் பெற்று இறைவணை நோக்கி செல்கிறேன், தங்களுடைய கருத்தை தவறாக புரிந்து கொன்டு பேசிய தோழனுக்கும் அறிவுரை வழங்கி நல்வழிப் படுத்த நினைக்கும் தங்களின் பாதம் பனிகிறேன்.

  (ஹய் என்ற பெயரில் எழுதும் தோழனே எனது குருவை பற்றி சாதரனமாக நினைக்காதே, வேன்டாம் விசப்பரிட்சை
  குரு நிந்தனை செய்யாதே, குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை)

  என்றும் குருவழியில்,

  நமசிவாயம்ராஜசேகர்

  ReplyDelete
 16. அன்புமிக்க திரு ந.ராஜசேகர் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!
  ஒருவரது நல்வினைகளும் பிறவிக்கு காரணம் ஆகும்,அதே போல ஒருவரது தீவினைகளும் பிறவிக்கு காரணம் ஆகும்.அதனால்தான் வள்ளுவர்

  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

  நல்வினையும் பிறவிக்கு காரணம் ஆகும்.ஆதலால் இந்த இருவினைகளையும் இருள்சேர்ந்த வினைகள் என்கிறார் வள்ளுவர்.எனவே யோகிகளையும், ஞானிகளைகளையும் புகழ்பவர்களையும், பணிபவர்களையும், அவர்கள் ஆசீர்வதிக்கும் போது அவர்களுடைய நற்கருமத்தால் விளைந்த புண்ணிய பலனை கொடுத்துவிடுகின்றனர். அதே போல அவர்களின் பாவ கர்மத்தால் விளைந்த தீக்கருமத்தை அவர்களை கிண்டல் செய்பவர்களையும், அவமதிப்பவர்களையும் சென்று சேருமாறு ஆசீர்வதிக்கின்றனர். இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் புண்ணிய பலனை ஏற்க நிறைய பேர் தயாராக இருப்பார்கள்.தீக்கருமத்தை ஏற்க இது போன்ற ஆட்கள்தான் தேவை.இன்னும் சொல்லப் போனால் தீக்கருமத்தை ஏற்கும் இவர்களே எங்களுக்கு மிகவும் நன்மை புரிபவர்கள்.இவர்கள் இல்லையேல் ஞானிகளது தீக்கருமங்கள் இல்லாது ஆக்க இயலாது.அப்படி இல்லாது ஆக்க இயலவில்லை எனில் (NEUTRALIZED STATE)இறைவனுடன் இறண்டறக் கலக்கவோ, முக்தி அடையவோ முடியாது.எனவே இவர்கள்தான் எங்களுக்கு உற்ற நண்பர்கள்.அவர்களை தடை செய்யாதீர்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்