மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, December 2, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(4)

சித்தர்களின் காலக்கணிதமும்,நம் தமிழ் மக்களின் காலக்கணிதம்,என்பதும் நம் உயிர்ச் சக்தியின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே.அந்தக் கணிதத்தைக் கொஞ்சம் பார்ப்போமே!
(A) ஒரு கலை=ஒரு கண் மூடுதல் அல்லது திறத்தல்
(B)1கண்ணிமை=ஒரு விகலை=ஒரு கண்மூடித் திறத்தல் = 1 மாத்திரை
(C)1கைநொடி = 1 மாத்திரை
(D)2 கண்ணிமை = 1 நொடி
(E)2 மாத்திரை = 1 குரு
(F)2 குரு = 1 உயிர்
(G)2 உயிர் = 1 சணிகம்
(H)12 சணிகம் = 1 விநாடி(0.24 நிமிடம்,14.4 செகண்ட்)
(I)60 விநாடி = 1  நாழிகை= 24 நிமிடம்
(24 நிமிஷம்= 1 நாழிகை)
(J)ஒரு ஓரை=1 1/4 நாழிகை
(K)2 1/2 நாழிகை =அல்லது ஒரு மணி
(L)3 3/4 நாழிகை=1.5 மணி = 1 முகூர்த்தம்
(M)6 நாழிகை = 1 சாமம்(2மணி நேரம்)

(N)10 நாழிகை = ஒரு சிறு பொழுது(240 நிமிடம்= 4 மணி ஒரு சிறு பொழுது நேரம்,காலை(சந்தி),நண்பகல்,மாலை(சந்தி),யாமம்,எற்பாடு,வைகறை இவையாவன ஆறும் சிறு பொழுதுகள் ஆகும்)
  
(O)5 சாமம்(30நாழிகை) = 1 பொழுது(பகல் ஒரு பொழுது,இரவு ஒரு பொழுது)
(P)2 பொழுது(60நாழிகை,10 சாமம்)=24 மணி நேரம் = 1 நாள்=16 முகூர்த்தம்
(Q)15 நாள் ((O)அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை) = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்(தேவர்களுக்கு இரண்டு மணி நேரம்,மார்கழி மாதம் தேவர்களுக்கு காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை(தேவர்களின் பிரம்ம முகூர்த்தம்),எனவேதான் மார்கழி மாதம் முழுவதும் நாம் பஜனை பாராயணம் என்று கழிக்கிறோம்)
(R)இரண்டு மாதம்= ஒரு பெரும் பொழுது(கூதிர் காலம்,முன்பனிக் காலம்,பின் பனிக் காலம்,இளவெனில் காலம்,முது வேனிற் காலம்இவை ஆறு பெரும் பொழுதுகள்)
(S)6 மாதம் = 1 அயனம்(உத்தராயனம் 6மாதம்,தட்சிணாயனம்6மாதம்)(தேவர்களுக்கான ஒரு பகல்,தேவர்களுக்கான ஒரு இரவு ஒரு அயனம்)
(T)2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு=1 தேவ நாள்
(U)60 ஆண்டு = 1 வட்டம்
(V)ஒரு யுகம் =4,32,000 வருடங்கள்
(W)இதுபோன்ற நான்கு சதுர் யுகங்கள் ஒரு பிரளயம்.
(X) ஒரு மனித வருடம் = ஒரு தேவ நாள்  
(Yஒரு தேவ வருடம் = ஒரு பிரம்ம நாள்
(Zஒரு பிரம்ம வருடம் = ஒரு விஷ்ணு நாள்
(EXTRA 1ஒரு விஷ்ணு வருடம் = ஒரு சிவ நாள்
(EXTRA 2) நூறு சிவ வருடம் = ஒரு பிரளயம்
எல்லாம் சரி உங்களுக்காக இந்த வலைப்பூ,தமிழுக்காக எனது ஒரு வலைப்பூ இருக்கிறதே! அதையும் கொஞ்சம் பாருங்களேன்.அதிலும் நிறைய ஞான விஷயங்களை கொடுத்து வருகிறேன்.அதன் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.தயவு செய்து தமிழ் விரும்பிங்க பாருங்க!


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன் சாமீ அழகப்பன்

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்