மொழி பெயர்ப்புக் கருவி

Monday, December 20, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(15)

யானை வணங்கியும்,பூனை வணங்கியும்
நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது.முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம்.
யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.

இதையும் பாருங்கள்

யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும்,கடும் நீர்க்கடுப்பும் வரும்.அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை
தின்று தங்கள் நீர்க்கடுப்பும்,நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும்,யானை நெருஞ்சில் என்றும் பெயர்.மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!


யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால்,சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும்.யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால்,மேலே சொன்ன பிணிகள் அகலும்.

அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான்.இதை கசக்கி பூனை அருகில் போட்டால்,பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.


ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது.மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும்.அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும்.பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும்.எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.


இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன்,பூனை வணங்கி,அனந்தம்,கோழிப் பூண்டு சங்கர புஷ்பி,மேனி
 
குப்பை மேனி
குப்பை போன்ற போன்ற மேனியையும் பொன்மேனியாக்கும்.எனவே இதன் பெயர் குப்பை மேனி.உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்.

ஒரு முறை ஒரு ஆறு மாத குழந்தையை என்னிடம் தூக்கி வந்தார்கள்.அந்தக் குழந்தையின் நுரையீரல் எல்லாம் சளி நிறைந்து இருக்கும் X-RAY படத்துடன் வந்தார்கள்.இந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் 30 நாட்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர் கூறினார்.பணம் ரூ25,000/= எடுத்து வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள்.

நான் குப்பைமேனிச் சாற்றை உப்புடன் வைத்துக் கசக்கி 4 சொட்டுகள் மட்டும் எடுத்து,அந்தக் குழந்தைக்கு கொடுக்க 3 நிமிடங்களில் அத்தனை சளியையும் வாந்தியாக எடுத்துவிட்டது. பொதுவாகவே,பெரியவர்,சிறியவர் என்ற பேதமில்லாமல்,X-RAY படம் அதிகம் எடுக்கக் கூடாது.அதிலும் சிறு குழந்தைக்கு சில தடவைகள் கூட எடுக்காதீர்கள்,அது இரத்தச் சிவப்பணுக்களை கொல்லும்,என்று கூறி அனுப்பினேன்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு X-RAY எடுத்துப் பார்த்தோம்.நீங்கள் கூறியது போல சளி குறைந்திருக்கிறதா? என்று பார்த்தோம்.படத்தில் குறைந்துவிட்டது என்று தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி என்றார்கள்.நான்தான் X-RAY எடுக்க வேண்டாம் என்றேனே? அவர்கள் சரியானதை உறுதிப்படுத்த எடுத்ததாகக் கூறினார்கள்.மக்களின் அறியாமையை எண்ணி எனக்குள் நொந்து கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.
  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்   

Post Comment

14 comments:

  1. தங்களின் பதிவை படிக்கும் பொழுது ஏனோ
    தெரியவில்லை ஆனந்த கண்ணீர் கண்களில்

    அன்றும் அன்புடன்
    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  2. என்னுடைய சிறுவயதில் இருந்தே அலோபதி மருத்துவத்தை
    வெறுத்து ஒதுக்கி வந்திருக்கிறேன்

    இயற்கை மூலிகையின் மீது அளவு கடந்த பற்று மற்றும்
    தங்களை போன்ற சித்தர்களிடம் தெரிந்து கொள்ள அளவு கடந்த
    ஆர்வம் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் கண்டிப்பாக நடக்கும்

    தங்களின் ஞானக் கடலின் கரையில் நிற்கும் மாணவன்

    அன்றும் அன்புடன்
    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  3. ஐயா, தங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது மிகச்சாதாராணமாக கிடைக்கும் குப்பைமேனிச் செடி புண்களை ஆற்றும் என தெரிந்தது தான் ஆனால் அது சளியை குணப்படுத்தும் என்பது புதிய செய்தியாக உள்ளது. சாதாரணமாக மழைக்காலத்தில் சளிபிடித்தால் குப்பை மேனி செடியின் சாற்றை மிக குறைந்த அளவு பயன்படுத்தலாமா என விளக்கவும். சளியால் மூக்கடைப்பு, காய்ச்சல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் எதனை பயன்படுத்தலாம் என தெரியப்படுத்தவும். மிகவும் உபயோகமான விஷயங்கள் மிக்க பயனுள்ளதாக இருந்தது.

    நான் அலுவலகத்தில் இணையம் வழியாக தங்கள் பதிவுகளை பார்வையிடுகிறேன். சில சமயங்களில் அலுவலகத்தில் இணையம் சரிவரை கிடைப்பதில்லை மேலும் வீட்டில் மொபைல் வழியாக கணிணிக்கு இணைய இணைப்பு கொடுத்து பார்ப்பதால் இணைய இணைப்பு வேகம் மிகவும் குறைவாக இருக்கும் முடிந்தவரை எனது கருத்துரைகளை தங்களுக்கு எழுதுகிறேன். மேலும் அனைவரது கருத்துரைகளுக்கும் தாங்கள் விளக்கம் எழுதினால் தங்களின் பொன்னான நேரம் விரையமாகும் எனவே இவற்றிற்காக கவலைப்பட வேண்டாம். தங்களின் தளம் மட்டுமே காண்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மற்றவர்கள் எல்லாம் தேவையற்ற விஷயங்களை எழுதி அவர்களிடம் விஷயம் இருப்பதை போல் காட்டிக்கொள்கிறார்கள். தங்களின் எல்லா பதிவுகளையும் மொபைல் வழியாகவே பார்த்துவிடுகிறேன். தங்களின் தன்னலம் கருதா தொண்டு மிகவும் உயர்வானது.

    மிக்க நன்றி
    சு. மணிகண்டன்

    ReplyDelete
  4. தாங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் ஐயா, தங்களின் கடுமையான பணி இடையேயும் இடைவிடாத உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. உங்கள் கூற்றில் நேர்மையுள்ளது ஒப்புக்கொள்கிறேன். இனி சரியாக எனது கருத்து பதிவிட்டு செல்வேன்.

    இப்பதிவு மிக அருமை. நான் சித்தர் வழியில் மிக நாட்டமுள்ளவன் தங்களின் பணி என்னை நெகிழ வைத்தது. யானை வணங்கி பற்றிய தகவல் புதுமை. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    இயற்கையான மூலிகைகளால் குணமடைவதை விட்டுவிட்டு,கடும் விஷங்களை மருந்து என்ற பெயரில்,உள்ளுக்கு கட்டாயப்படுத்தி,சிறு குழந்தைகள் முதற்கொண்டு கொடுத்து உடலை,குணப்படுத்துவதற்கு பதிலாக,பெரும் வியாதியஸ்தராக மாற்றிக் கொண்டுள்ளோம்.நமது குழந்தைகள் நாம் அவர்களை எந்த சூழ்நிலையிலும் விஷமிட மாட்டோம் என்று எண்ணித்தான் நம்பிக்கையோடு,நாம் கொடுக்கும் பொருளுக்கு வாய் திறக்கின்றன.அந்தக் குழந்தைகளுக்கு நாம்,நமது அறியாமையால் மருந்து என்று நம்பி விஷத்தைப் புகட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே,
    தோலில் எந்தமூலிகைகள் வேலைசெய்கிறதோ,அவைகள் நுரையீரலிலும் வேலை செய்யும்.ஏனெனில் நுரையீரல்தான்,தோலைப் பார்த்துக் கொள்ளும் பேருறுப்பு.குப்பை மேனியை சளியைக் குறைப்பதற்கும் பயன்படுத்தலாம்.குப்பை மேனியின் பெருமையை விளக்க ஓர் பதிவிடுகிறேன்.பாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    ஒரு கட்டுரை எழுத பல கட்ட தயாரிப்பில் இறங்கிய பின்தான்,நான் எழுதுகிறேன்,சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(4),இன்னும் முழுமை பெறாத தயாரிப்பில் உள்ளது,தமிழர் அளவையியல்,காலக்கணிதம் பற்றி எழுதத் துவங்கியது இன்னும் முடிவு பெறாததால் வெளியிடப்படவில்லை.அதற்குக் காரணம் எனது வேலைப் பழு,சில புத்தகங்களை இன்னும் பார்க்க வேண்டியுள்ளது.தமிழர் காலக்கணிதம் தமிழ் விக்கிபீடியாவிலேயே,தப்பும் தவறுமாக உள்ளது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. சேவை செய்து வாழ்வதே வாழ்வு. இந்த விசயங்களில் எனது உதவி தேவைப்பட்டால் கூறுங்கள். என்னால் முடிந்தவரை தங்களுக்கு உதவுவேன். மிக்க நன்றி ஐயா,

    என்றும் நட்புடன்
    தேவன்

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    தங்கள் வலைப் பூவிற்கு சென்று வந்தேன்.எனது கணினியில் சில DLL FILE களைக் காணவில்லை என்று சொல்லி எனது கணினி மெதுவாகிவிட்டது.என்னால் புகு பதிவே இட முடியவில்லை.எனவே என்னால் இனி பதிவு இட முடியாது போல் தெரிகிறது.உங்களால் முடிந்தால் இதை சரி செய்ய வழி சொல்லுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. அருமையான பதிவு அன்பரே ,

    ReplyDelete
  11. கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே, தங்களப் போல் சிறப்பான நபர்களின் வருகையால் என் வலைப்பூ வளமையடைகிறது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  12. Dear Sir,

    Do you have clinic in chennai, i have some personal problems, so i would like to meet you directly, kindly reply to my mail ID: keerthyvas@gmail.com

    Thanks @ Regards
    Keerthivasan.u

    ReplyDelete
  13. Dear Sir,

    Do you have clinic in chennai, I have some personal problems, so i would like to meet, please kindly reply to my Mail ID : keerthyvas@gmail.com

    Thanks & Regards,
    Keerthivasan.U

    ReplyDelete
  14. ஒரு அருமையான வலை பூ. எல்லா தகவல்களை பார்த்து கொண்டிருகின்றேன் . அருமையான பதிவுகள். வெகு நாட்கள் கழித்து ஒரு அருமையான வலை தளம் பார்த்த திருப்தி

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்