மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, December 18, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(14)அஷ்ட கர்மம் ஆடல்

நான் இப்போது சொல்லப் போகும் விடயம் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதாகும்.என்னை எல்லோரும் சதுரகிரி போய் வந்தீர்களா என்று தனியாக எனது மின்னஞ்சலிலும்,நேரிலும் வினவுகிறார்கள்.


எனது வலைப் பூவை குறுகிய காலத்தில் மிக அதிகம் பேர் பார்க்கிறார்கள்.ஆனால் பதிவில் கருத்துரை எழுதுபவர்கள் மிக மிகச் சிலரே!மற்றவர்கள்? சுய நலம் மிக்கவர்கள் நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னோடு போகட்டும் என்று எண்ணுபவர்கள்.இவர்கள்கூட பரவாயில்லை.நான் பார்த்த விஷயம் எனக்குத்தான் சொந்தம் என்று எண்ணுபவர்களை என்னென்பது?


அப்படித்தான் ஒருமுறை சதுரகிரி சென்றிருந்த போது சாப்டூர் பாதையில் நின்றிருந்த எனக்குத் தெரிந்த வரை இருந்த ஒரே ஒரு மரமான நிழற்சாயா விருட்சத்தை(அந்த மரத்தின் நிழல் தரையில் விழாது) அடையாளம் காட்டி எனக்கு இருந்த   சித்தர்கள் மரணம் மாற்றும் மூலிகை பற்றிய அத்தனை அறிவையும் காட்டிக் கொண்டேன், விளைவு நாங்கள் சதுரகிரியில் இருந்து வந்த இரண்டாம் நாளே அந்த மரம் வெட்டப்பட்டது.


எனவே,என் தவளை வாயை சதுரகிரியைப் பொருத்த வரை மிக எச்சரிக்கையாய்த்தான் திறப்பேன்.சதுரகிரி எனது சித்தப் பயிற்சிக்கான ஆடுகளம்.அங்கே எனது அத்தனை திறமைகளும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டன.நானும் எனது அத்தனை அதீத ஆத்மானுபவங்களை அங்கேயே அனுபவித்தேன். ஆனால் அவை அனைத்தும் எனது ஆத்மாவிற்கான அனுபவங்கள்.அவற்றை வெளியிடுவதற்கான அனுமதியும் கட்டளையும் வந்தால் வெளிப்படும்.


இப்போது மரணம் மாற்றும் மூலிகைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயம் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.மரணம் மாற்றும் மூலிகைகளை காயகல்பம் என்பர்.அதை போகர் உபயோகித்த முதல் 100 கற்பங்களை போகர் கற்பம் 100 ல் காணலாம், இதே போல் கொங்கணவர் கற்பம் 100, புலஸ்தியர் கற்பம் 100, திருவள்ளுவ நாயனார் கற்பம் 100, திருமூலர் கற்பம் 100, கருவூரார் கற்பம் 100, எனப் பல நூல்கள் உள்ளன.


கற்பம் பத்து கோடியுண்டவர் சிவன், கற்பம் கோடியுண்டவர் விஷ்ணு, கற்பம் லட்சம் உண்டவர் பிரம்மா, கற்பம் பத்தாயிரம் உண்டவர் ருத்திரர்கள்,கற்பம் 1000 உண்டவர்கள் இந்திரன் முதலான தேவாதி தேவர்கள், கற்பம் 100 உண்டவர்கள் சித்தர்கள், ரிஷிக்கள், ஞானிகள், மற்றைய எல்லா முற்றிய நிலை ஞானிகளும்தான்.


அப்போது கற்பம் உண்டால் நான் சிவன் ஆகலாமா?என்று கேட்டால் ஆகலாம்.எப்படி என்றால் அதற்கு பொறுமை, அவசியம் தேவை.பொறுங்கள் அடுத்த பதிவு வரை.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்    


    

Post Comment

13 comments:

  1. காயகற்ப மூலிகைகளையும், அதை உண்ணும் முறைகளையும் எளிதில் புரியும் படி சொல்ல வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  2. // சுய நலம் மிக்கவர்கள் நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னோடு போகட்டும் என்று எண்ணுபவர்கள். //

    மன்னிக்கவும் ஐயா, இந்த பார்வை வேண்டாம். ஒவ்வொரு முறை நான் பார்த்து கருத்து சொல்லாமல் செல்வது வேலைபலுவின் காரணமே தவிர வேறெந்த வக்கிர எண்ணமும் கிடையாது.

    இனி கண்டிப்பாக எனது கருத்தை பதிகிறேன். வழக்கம்போல இந்த பதிவும் நன்றாகவே இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஜகதீஷ் அவர்களே, காயகற்பம் என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.ஆரம்ப கட்ட கற்பங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.அடுத்த கட்ட காய கற்ப மூலிகைகளை,சாப்பிட ஆரம்பித்த உடன்,காமம் அறவே நீக்க வேண்டும்,அறுசுவை உண்டி நீக்கியே ஆக வேண்டும்.பாசிப் பருப்பும்,சோறு,மிளகுப் பொடி,கட்டுப்பு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.(இதை சொன்ன பிறகு கவுண்ட மணி கேட்டது போல பின்ன என்ன மயித்துக்கு நூறு வருடம் வாழணும்.என்று கேட்காதீர்கள்)ஞானம் என்பதே ஆசைகளைத் துறப்பதே.துறந்த பின் வரும் இனபம் என்ன,அதன் சக்தி என்ன என்பது பின்னால்தான் தெரியும்.செய்த வேலைககளையே செய்து கொண்டே இருக்கிறோம்.சுவைத்த இன்பம்,உணவுகளையே சுவைக்கிறோம்.ஆனாலும் சலிப்புத் தட்டுவதில்லை.கனி ரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்,கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்.இப்பிறப்பில் நம்மிடம் இருக்கும் இறைவனைக் காண்பதே இன்பம்.மானிடப் பிறப்பு,மானிட வாழ்வின் நோக்கமே அதுதான்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, உங்களுக்கு பதில் கருத்துரை, இத்தனை நாள் பார்த்துவிட்டு மட்டும் சென்ற நீங்கள் இன்று மேற்சொன்ன அத்தனை வேலைப் பழுவுக்கும் இடையே இதோ கருத்துரை எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் பல வேலைகள் இருக்கின்றன, எத்தனையோ தடவை பல நாட்கள் அலுவலக பணி நிமித்தம் தொழிற்சாலையிலேயே தங்க நேரிட்டாலும்,இரவிலிருந்து அதிகாலை 3 மணி வரை வலைப்பூவில் கட்டுரைகள் எழுதிவிட்டு,காலை 5 மணிக்கு எழுந்து இரண்டு மணி நேரத்தூக்கத்துடன்,எழுந்து காலைக்கடன்கள் முடித்துக் கிளம்பி இரு சக்கர வாகனத்தில் 23 கி.மீ.சென்று அங்கே 8.00 மணிக்கு வேலை நேரத்தை துவங்குகிறேன்.எனில் படிக்க நேரம் இருக்கும் நபர்கள்,கருத்துரை எழுதத் தவறினால்,எனக்கு எழுத உத்வேகம் எப்படி வரும்.இது போன்ற மன்ச் சோர்வு வந்து,நான் வலைப் பூவை இவ்வளவு கடினமான சூழ்நிலையைத் தாங்கி,தொடர்ந்து எழுத வேண்டாமென எண்ணி, நிறுத்த எண்ணி கடையை ஏறக்கட்டப் போகிறேன் என்றபோது,வினொதினி,ஜாய் மாணிக்கா இருவரும் எழுதிய ஊட்டக் கருத்துக்கள் இந்த வலைப்பூ ஆரம்பித்திலேயே கருகாமல் காத்தது.எனவே வேலைப் பழு அதிகம் இருந்தால்,படிக்கவே படிக்க மாட்டீர்களே!எத்தனையோ பேர்கள் என்னைவிட அதிகம் தெரிந்தாலும்,வெளிப்படையாக கருத்துக்கள் எழுதவோ,புத்தகம் வெளியிடவோ பேசவோ கூட தயாராக இல்லை,என்பதுதான் உண்மை.நான் எத்தனையோ பேரிடம் என்னிடமிருந்து பலவற்றைச் சொல்லி ஒரு விஷயத்தைக் கஷ்டப்பட்டுக் கரந்திருக்கிறேன். எனவே என் கருத்தில் மாற்றம் இல்லை.ஆனால் நான் கூறிய விதம் தங்களுக்கு வருத்தத்தைத் தந்திருந்தால்,அதற்காக மன்னிக்கவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. பதிலுக்கு மிக்க நன்றி. என்னுடைய நீண்ட ஆயுளுக்காக இதைக் கேட்க வில்லை, அய்யா. யோகத்தில் முன்னேறவும், அதற்க்கு உடல் பண்பாட்டால் தானே முடியும். யோகத்தில் வெற்றி பெற்று, பேரின்பத்தை சுவைக்கவே கேட்டேன். அதற்காக சிற்றின்பத்தை விடத் தயார்.

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஜகதீஷ் அவர்களே,
    உங்கள் கருத்துரைக்குப் பின் உங்கள் வலைப்பூ தளத்திற்குச் சென்றேன்.தகுதியான நபர்தான், தகுதியான கேள்விகளைக் கேட்க இயலும்.நீங்கள் மூலிகைக் காய கற்பம் சாப்பிடத் தகுதியானவர்தான்.
    உங்களுக்கென ஒரு முழுப் பதிவு உண்டு.காயகற்பம் பற்றி தெளிவாகக் கூறுகிறேன்.காயகற்பம் உண்ண உண்ண மூச்சு தானாகக் குறைந்து(பிராணாயாமம் முதலியன செய்யாமலே)தன் வயமாகிவிடும்.பிறகென்ன எப்போதும் சதாசிவம்தான்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. சாமீ ஜி கோவபடாதீர்கள்

    மூலிகைகளையும் அதனை அறிந்த மனித புனிதர்களையும் அறியாத
    அருமை தெரியாத ......கள்

    நீங்கள் தொடருங்கள் தங்கள் சேவையை

    என்றும் அன்புடன்
    தங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  8. சாமீ ஜி

    காய கற்ப பதிவை எதிர்நோக்கி
    தங்களின் வலை வாசலில் காத்திருக்கும்

    என்றும் அன்புடன்
    தங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  9. சாமீ ஜி

    கவுண்டரின் நகைச்சுவையை தாங்கள் சொன்னது கண்டு
    கவலை மறந்து சிரித்தேன்

    கனி ரசம் என்றவுடன் தங்கள் பதிவில் பார்த்த பட்டினத்தார் வசனம்
    நினைவில் வந்தது

    என்றும் அன்புடன்
    தங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    என்ன இந்தப் பதிவில் இன்னும் நீங்கள் எழுத வரவில்லை என்று எண்ணினேன்.இன்னும் மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்.எனவே இந்தப் பக்கம் வர இயலாது.எனவே கருத்துரை எழுத இயலாது.வந்த பின் கருத்துரைகள் எழுதுகிறேன்.தாமதத்திற்கு பொறுத்தருள்க.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. அருமையான பதிவு அன்பரே ,
    கற்பம் பற்றிய உண்மையான விழிப்புணர்வு அவசியம் தேவை . ஆவளுடன் எதிர்பார்கிறோம் .!!!! .

    மேலும், நம்மிடம் யாரவது கதைசொல்லும் போது கூட கதை கேப்பவர் " ம்ம்ம் .., " என்று சொல்லவேண்டும் ., இல்லையனில் கதைசொல்லபவர் கதையை கேக்கறையா இல்லையா நான் என்ன லூசா " ம்ம்ம் மும்னு " சொல்லு என்ன அதட்டுவார் இது இயற்க்கை ..!!
    கதை கேப்பதர்கே இப்படியென்றால் நம் " திரு. சாமீ அழகப்பன் " அவர்கள் கோடி ருபாய் கூடுதாலும் கிடைக்காத விஷியங்ககளை எவ்வித தர்பெருமையும் இன்றி பகரிந்து கொள்கிறார் . நமது பல பிறவிகளை மிச்சபடுத்தி கொடுகிறார் ., என்பது தான் உண்மையிலும் உண்மை .!! ஆக வாசக அன்பர்களே கருத்துரை எழுதுங்கள் !!!

    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை ,
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  12. கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே, தாங்கள் திரு தேவன்,அவர்களிடம் தாங்கள் ஒலிப்பேழைகளைக் கொடுத்து,அவர் திரு தோழி அவர்களிடம் கொடுத்ததாக திரு தோழி தனது வலைப்பூவில் கூறியுள்ளார்.இவ்வாறு நல்லதை பரப்பும் எண்ணம் கொண்ட,எதையும் தாராளமாகத் தரும்,சுய நலமில்லாத உயர் குணமுள்ள நபர்கள் ஆயிரக் கணக்கில் தேவை.அதற்காக நம் மனத்தையும் பக்குவம் செய்வோம்.சுற்றுப்புறத்தையும் மாற்றுவோம்.மக்கள் மனம் மாற பாடுபடுவோம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  13. Very much impressed on seeing your blogspot.. Good informations.. I have gone to Sathuragiri about 4-5 times in my lifetime, since my native is Srivilliputtur... Nice and Auspicious place really..

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்