மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 31, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 6(ஆன்மீக கேள்வி மற்றும் பதில்களும்))அக்கு பஞ்சர் என்பது நம் உடலில் தடையான உயிர்ச் சக்தி ஓட்டத்தை மீண்டும் சரியாக ஓட வைப்பதே ஆகும்.எனில் ஏன் அது தடை ஆகிறது.ஓடிக் கொண்டே இருந்தது,ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே!ஏன் தடை ஆகிறது.தடை ஆக வேண்டிய காரணம் என்ன?

இது பற்றி அக்கு பஞ்சர் என்ன காரணம் சொல்கிறது?மற்றொருவர் மேல் கொள்ளும் வெறுப்பு,துவேஷம், காழ்ப்புணர்ச்சி, ஆழ்ந்த பகை நமது உயிர்ச் சக்தி ஓட்டத்தில்தடையை ஏற்படுத்துகிறது.


நான் இது பற்றி ஆராய்ந்து சித்தர்களின் கொள்கை அடிப்படையில் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன்.அதை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.இது என்னுடைய பல பல்லாண்டு சித்தர் தத்துவங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில்,ஏற்படுத்தப்பட்டுள்ள இயற்கை நியதிகளை அப்படியே கூறுகிறேன்.மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறலாம். 

நேயர்கள் பெயர் வெளியிடாமல் சில சந்தேகங்களை நிவர்த்தி பண்ண சொல்லிக் கேட்டுள்ளார்கள்.அதற்கான விடையாகவும் இது அமையட்டும்.
கேள்வி  01;-
ஆன்மா பரிசுத்தமானது, ஆதி அந்தம் இல்லாதது நித்தியமானது. அதனுடன் ஆணவம் சேர்ந்ததாலேயே அது உலகில் பிறந்தது, அறியாமை தான் அதன் வீழ்ச்சிக்கு காரணம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. புனிதமான இறைநிலை ஆன்மாவே ஆணவமயப்பட்டது என்பது தானே அதன் அர்த்தம். உலகில் பிறந்த ஆன்மாக்கள் மிகுந்த சிரமப்பட்டு முன்னேறி தன்னைப்புரிந்துகொண்டு புனிதமாகி இறைநிலை எய்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, இத்தனை சிரமத்தின் பின் புனிதமடைந்த ஆன்மா மீண்டும் ஆணவமயப்படாது, அறியாமை வசப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்இதன்படி பார்த்தால் பிறப்பது பின் இறைநிலை அடைவது பின் பிறப்பது என்று சுழன்றுகொண்டிருக்க வேண்டியது போலல்லவா உள்ளது? ஆன்ம விடுதலைக்காக பட்ட கஷ்டமெல்லாம் வீண் தானே?
பதில்;-
இறைவனுடன் நாமும் இணைந்திருந்து, நாமும் ஈடில்லாத இன்பத்தை பேரான்மாவோடு இணைந்து அனுபவித்திருந்தோம். ஆனால் இனிப்பு சாப்பிட்டவுடன் காரம் சாப்பிடுவதுதான் நம் இயல்பல்லவா?

அதுபோல அந்த ஈடில்லாத இடைவெளி இல்லாத இன்பம் திகட்டிவிட்டது! உடனே நாம் எப்படி கஷ்டங்களையும், துன்பங்களையும்,நோய்களையும் அனுபவிக்க வேண்டும் என்று வரமாக இறைவனிடம் வேண்டி கேட்டுப் பெறுகிறோம்?காரத்தில் எத்தனை வகைகள்?கார வகைகளில் மிக்சர்கார சேவுபக்கோடாகார சீவல் அது போல கஷ்டங்களையும்துன்பங்களையும்நோய்களையும் வகை வகையாய் கேட்டுப் பெறுகிறோம்.

கிராமத்தில் இன்றும் 'நான் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்' என்று சொல்வார்கள்.அதுபோல வரமாய் வாங்கி வந்த துன்பங்களை அனுபவிக்கிறோம்.எனவேதான் தான் வாங்கி வந்த நோயை எந்த நோயாளரும் அவ்வளவு எளிதாக விடுவதில்லை?

சித்த வைத்தியம் இது போன்ற கஷ்டத்தை வரமாக வாங்கி வந்த நோயாளர்களுக்கு மருந்து சொல்லவில்லை. இந்த சுழலில் இருந்து விடுபட முயற்சிக்கும் ஆன்மாக்களுக்கே மருந்துகளும் வழிமுறைகளும் கூறியிருக்கிறார்கள்.

யாராவது வியாதியையும் துன்பத்தையும் வரமாகப் பெறுவார்களா? என்று கேட்பீர்கள்.ஆன்மாவின் இந்த நிலைதான் கேவல நிலை என்று சைவ சித்தாந்தத்தில் வர்ணிக்கப்படுகிறது.

தான் எங்கேயிருந்து வந்தோம்?எதற்காக வந்தோம் எங்கே போகப் போகிறோம்?தான் என்னவாக இருந்தோம்?எப்படி இந்த சுழலில் இருந்து மீள்வதுஎன்பது தெரியாத நிலையே கேவல நிலை.

உண்மையில் யோசித்துப் பாருங்கள் இது புரியும்.மறுபடியும் பதில் எழுதுங்கள்.

இப்போது மேலே கேட்ட அக்குபஞ்சர் கேள்விக்கு வருவோம். நாம் அடுத்தவர் மேல் செலுத்தும் வெறுப்பு,துவேஷம்காழ்ப்புணர்ச்சிஆழ்ந்த பகை  நம்மீது நாமே செலுத்திக் கொள்ளும் வெறுப்பு, துவேஷம்காழ்ப்புணர்ச்சி,  ஆழ்ந்த பகைதான்,ஏனென்றால் நானும் அடுத்தவரும் ஒரே பிரம்மமான பேரான்மாவில் இருந்து தோன்றியவர்கள்தான்.

எனவே நாம் அடுத்தவர்மேல் கொள்ளும் இந்த வெறுப்பு, துவேஷம்காழ்ப்புணர்ச்சிஆழ்ந்த பகை நம்மையே தண்டிக்கிறது.இதையே கணியன் பூங்குன்றனார்,
'யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!'
என்று கூறுகிறார்.

இதையே பகவத் கீதை கர்ம யோகத்தில் 'நாம் மனம் வாக்கு,காயத்தால் செய்யும் நல்ல மற்றும் கெட்ட மற்றும் நல்ல காரியங்கள் பல மடங்காக பெரிதாக மாறி,நம்மிடமே திரும்பி வருகின்றன'என்று கூறுகிறது.

அதென்ன மனம், வாக்கு, காயம்.பதிவு பெரிதானால் படிப்பவருக்கும் சிரமம்,எனவே அடுத்த பதிவில் மீதியை பார்ப்போம்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்  

Post Comment

4 comments:

 1. can the breast cancer cured by this treatment.
  Kindly send your reply to vagaiprabhu001@gmail.com
  Thanks and regards.
  Prabhu.S

  ReplyDelete
 2. அய்யா ,
  சித்தர் வணக்கம்
  தாங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடு உண்டு ., எண்ணங்கள் தூய்மையானால் ., அதன் கதிர் வீச்சு உடலில் உள்ள அனைத்து ஜீன்களையும் சீராக செயல்படுத்தும் ., அனைத்து ஜீன்கள் செயல்பட்டாலே போதும் ., உடலில் நோய்கள் வரவே வராது . சில ஜீன்கள் செயல்யிலப்பதாலேயே நோய்வாய்படுகின்றோம் .
  ---------------------- x ------------------
  ஆனால் ? எனக்கு தெரிந்த பல நண்பர்கள் உள்ளதாலும் , உடலாலும் தூய்மையாக் இருக்கிறணர் ., ஆனாலும் பல நோயிகளால் அவதிபடுகிறனர் ., ஏன் சென்ற இரு நூற்றாண்டுகளில் பல மகான்களும் , ஞானிகளும் (வள்ளலார் தவிர ) நோயிகளால் தான் உயிர் விட்டனர் . பிறவிப்பயன் தானே ? .
  ------------------- x ------------------
  முன்னுரையும்,முடிவுரையும் இல்லா -பொருளுரை!

  ஆன்மா சுத்தம்/அசுத்தம் அற்றது , மனம் , அறிவு - இவை ஆத்மாவில் இனைந்து உடம்பில் கலக்கிறது . உலகியலில் பரிநாமவளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது ., ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ., அறிவோடு ஒடுங்கி ஞானத்தை தேடி ., ஜோதியில் கலக்கிறது ., மீண்டும் ஜோதியில் இருந்து தெரித்து ., ஆன்மாவில் மீண்டும் மனம் , அறிவு இனைகிறது ..................................... .

  பிண்ட சுகமும் , அண்ட சுகமும் ஒன்றே காலம் ஒன்றே வித்தியாசம் !!!

  தானாயிருக்கும் பிரமத்தின்
  தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
  வானாகி நின்று மறைபொருள்
  ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ ??

  இப்படிக்கு .,
  புலிப்பானி சித்தர் அடிமை .,
  சித்தர் பைத்தியம் .,

  ReplyDelete
 3. கருத்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
  நான் கூறி வரும் விஷயங்களெல்லாம் வேறு.நான் கூறுவது உடல் ரீதியான விஷயங்கள் அல்ல.உடலுக்கும் முந்திய ஆன்ம ரீதியான விஷயங்கள்.உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் இருந்தாலும் நாம் வரமாக வாங்கி வந்த வியாதிகளை அனுபவிக்காமல் விட மாட்டோம்.மேலும் ஞானிகளும்,ரிஷிகளும் இது போன்று தான் கேட்ட வரத்தால்தான் துன்பப்படுகிறோம் என்பது புரியாமல் அந்த ஆன்மா துன்பத்தில் உழலும்போது அந்தத் துன்பத்தை தாங்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.அந்த அளவு மிகும்போது அது கர்ம வியாதிகளாக உருவெடுத்து அந்த ஞானிகள் உடல் ரீதியாக துன்பம் உறுகிறார்கள்.ஆன்ம ரீதியாக அல்ல.உடலை உகுப்பது அவர்களுக்கு சட்டை மாற்றுவது போல,எனவே நீங்கள் கூறிய விஷயங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திருவாகை பிரபு அவர்களே, நீங்கள் குறிப்பிடுவது போல் புற்று நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாதாரண வியாதிகளுக்கு நீங்கள் சாப்பிடும் அல்லோபதி மருந்துகளும்,இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளை,விளைவிக்க அடிக்கப்படும் பூச்சி மருந்துகளும்,ரசாயன உரங்களும் நம் உடலை விஷமித்த நிலைக்கு கொண்டு செல்கின்றன.விளைவு உடலில் உள்ள செல்களில் இப்படித்தான் வளர வேண்டும் என்ற தகவல் அழிந்து,எப்படி வேண்டுமானாலும் வளர ஆரம்பிப்பதே புற்று நோய் என்ற கேன்சர்.முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கேன்சர் என்பது வெளியில் இருந்து வரும் ஒரு கிருமியல்ல.உடலில் விஷமித்த நிலையில் இருந்து மீண்டு வந்தால் உடல் நலம் பெறும்.ஆனால் உடல் விஷமித்த நிலையில் வரும் நோயாளியை மேலும் மருந்துகள் என்ற பெயரில் கெமோதெரபி,ரேடியோ தெரபி போன்றவைகளை கொடுத்து மேலும் நோயாளரின் உடலை விஷமித்த நிலைக்குத் தள்ளி கொன்றேவிடுகிறார்கள் அல்லோபதி மருத்துவ புண்ணியவான்கள்.விஷமித்த நிலையில் இருந்து உடலை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி இயற்கை உணவு முறை.எனவே இதைவிடச் சிறந்த முறை எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே சொல்லலாம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்