மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, November 2, 2010

தீபாவளி ஸ்பெசல்(பாகம் 1)

தீபாவளி ஸ்பெசல் என்றவுடன் ஏதாவது பலகாரம் என்று நினைத்துவிடாதீர்கள்.தீபாவளியுடன்தான் சந்தோஷம்மகிழ்ச்சிஅத்துடன் இலவச இணைப்பாக எண்ணைப் பலகாரங்கள் காரணமாக வயிறு வேலை நிறுத்தம் செய்தல்பட்டாசுகளினால் தீக்காயங்கள் என பல தொல்லைகளும் வந்து சேரும்.இவற்றைச் சமாளிக்க சில ஹோமியோபதி மருந்துகளை இங்கே விளக்க இருக்கிறேன்

(1) ரெஸ்குயூ ரெமெடி(RESCUE REMEDY);- இந்த மருந்து ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய மருந்து.ஏனெனில் இதன் பெயரிலேயே இருக்கிறது பொருளும்.RESCUE என்றால் விரைவான, REMEDY என்றால் தீர்வு.எந்த வியாதியானாலும் சரி,எந்த அவசரமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி இதைக் கொடுத்தால் உடன் தீர்வு கிட்டும்.

முதலில் இது என்ன மருந்து என்பதையும் பின், எந்தெந்த நோய்களுக்குத் தரலாம்,என்ன அளவீடுகளில் தரலாம், என்பதையும் குறிப்பிடுகிறேன்.

இது மலர் மருந்துகள் என்பவற்றுள் கீழ்க்கண்ட ஐந்து மலர் மருந்துகளை ஒன்றாக கலந்து தயாரிக்கப்படுவது.
(A)செர்ரி ப்ளம்(CHERRY PLUM){தாங்க முடியாத வலி,அதிக உணர்ச்சி வசப்படுதல்}
(B)க்லெமாட்டிஸ்(CLEMATIS){அதிகத் துன்பம்,மயக்கம்,சுய நினைவு இழத்தல்(COMA)}
(C) இம்பேஷன்ஸ்(IMPATIENS){ மனப் பதற்றம்,எதிலும் அவசரம்,எரிச்சலடைதல்,ஏன் இந்த வியாதி சுகமாகவில்லை என்பார்,உடம்பில் அதிக வலி,திடீரென்று ஏற்படும் வலிப்பு,இழுப்பு}
(D) ராக் ரோஸ் (ROCK ROSE){பீதி,திகில்,அதிக பயம்}
(E)ஸ்டார் ஆப் பெத்லஹேம்(STAR OF BETHLEHEM{அதிர்ச்சிகளும் அவற்றின் விளைவுகளும்}

{} என்ற அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பவை அந்தந்த மருந்துகளை எந்தெந்த குறி குணங்களுக்கு கொடுக்கலாம் என்பதே.இந்த ஐந்து மருந்துகளின் குணங்களைக் கவனித்தால்,அவை ஒவ்வொன்றும் ஆபத்துக்கு உதவும் குணங்களாக இருப்பதைக் காணுங்கள்.இந்த ரெஸ்குயூ ரெமெடி(RESCUE REMEDY) ஒரு ஆபத் பாந்தவன்.எந்த ஆபத்துக் காலத்திலும் இதை நீங்கள் நம்பிக்கையுடன் கொடுக்கலாம்.உயிரைக் காப்பாற்றியவர்கள் ஆவீர்கள்.

இருதய தாக்கு(ஹார்ட் அட்டாக்),பாம்புக்கடி,இரத்தம் வரும் அளவு காயம்,விபத்து,அதீத இரத்தப் பெருக்கு,உடல் உறுப்புக்கள் சேதம் அடைந்து அதீத வலியுடன் அரற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு,ஆபரேஷன் பண்ணும் முன்பு இப்படி பல சூழ்நிலைகளில் முதல் உதவி சிகிச்சைக்காக க்ளாபியூல்களாக இருந்தால்(வேறொன்றுமில்லை பார்லி உருண்டைகள் போல் இருக்கும் ஹோமியோபதி மாத்திரைகளைத்தான் இப்படி அழைப்பார்கள்) ஐந்து முதல் பத்து உருண்டைகள் வரை கொடுக்கலாம்.சொட்டு மருந்தாக இருந்தால் ஐந்து சொட்டுகள் அரை டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.விபத்தில் சிக்கியவராகவோ,இரத்தம் அதிகம் வெளியேறியவராக இருந்தாலோ,பாம்புக்கடிபட்டவராகவோ இருந்தால் இருபது சொட்டுக்கள் முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து 50 தடவைக்கு குறையாமல் குலுக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை கொடுக்கவும்.

எங்களது இராஜபாளையத்தில் நெசவுக் கூடங்கள் உள்ளன.அதில் பாவுக்கு ஊடாக ஓடும் ராக்கெட் சில சமயம் நெசவாளர்கள் கையில் அடிபட்டு விரல் நைந்து போய்விட்டால்,அடுத்த கையில் உள்ள அடிபட்ட அதே விரலை வலிக்கும் அளவு அழுத்துவார்கள்(அதாவது வலது கை ஆட்காட்டி விரலில் அடிபட்டால் இடது கை ஆட்காட்டி விரலை அழுத்த வேண்டும்).உடனே அடிபட்டவரின் கை விரல் வலி குறைந்து சரியாகும்.இது நமது உடலின் யின் -யாங்கை சரி செய்யும் தத்துவம்( உடலின் வலது யின்,இடது யாங்-முன் யாங்,பின் யின்) எனவே உடலின் வலது பக்கத்து வலியை இடது பக்கத்தில் உண்டாக்குவதன் மூலம் சரி செய்தல். 

நமது உடலின் யின்,யாங் இரண்டையும் சமப்படுத்துவதில் இந்த ரெஸ்குயூ ரெமெடி(RESCUE REMEDY)யின்  பங்குக்கு ஈடு இணை எதுவும் இல்லை.ஆபரேஷனுக்கு முன் இதை உள்ளுக்கு கொடுத்து,ஆபரேஷன் செய்யும் இடத்தில் இந்த சொட்டு மருந்து வடிவம்( இது ரெக்டிபைடு ஸ்பிரிட்டானதால் தடவிய உடன் ஆவியாகிவிடும் மருந்து மட்டும் தோலில் உள்ளிளுக்கப்பட்டுவிடும் ) தடவிவிட்டால் காயம் விரைவில் ஆறும்,தழும்பும் குறைவான அளவில் இருந்து பின்னர் அதுவும் மறைந்துவிடும்.இன்னோர் முக்கிய பயன்,பொதுவாக எந்த இடத்தில்  ஆபரேஷன் செய்யப்பட்டதோ அந்த இடத்தில் உள்ள தோலில் உள்ள அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால் இதை தோலில் தடவிய பிறகு செய்யப்படும் ஆபரேஷன்களில் இது போன்ற விளைவுகள் நேரிடுவதில்லை.மீண்டும் தோலில்  உள்ள அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் மீண்டும்  உருவாக்கப்படுகின்றன.

இந்த மருந்தை ஆபத்தில் மட்டும்தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை,சிறிய விபத்துக்களிலும்,அடிக்கடி பீதி,திகில்,மனப் பதட்டம்,மயக்கம்,வலிப்பு வருகிறவர்களுக்கு கொடுக்கலாம்.

இது விபத்தில் ஆட்பட்டவருக்கு உடனே சிகிச்சைக்கு முன்பே ஒரு தடவையாகிலும் தரப்பட்டிருந்தால்,விபத்துக்குப் பின் ஏற்படும்,தற்காலிக ஞாபக மறதி{SELECTIVE AMNESIA},நிரந்தர ஞாபக மறதி{AMNESIA}இரண்டையுமே நாம் தவிர்க்கலாம்,கோமா என்பது ஏற்படுவதில்லை.

(2)காந்தாரிஸ்(CANTHARIS-30) இந்த மருந்தின் பெயரைக் கேட்டவுடன் துரியோதனனின் தாய் காந்தாரிதான் ஞாபகத்திற்கு வருவாள்.எனெனில்,கணவனுக்கு கண் இல்லாமல் போனதால் தான் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவள்.துரியோதனாதிகள் இறந்து போன பின் பாண்டவர்கள் முறைப்படி பெரியவர்களின் ஆசியைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர எண்ணி,திருதராட்டினனிடமும்,காந்தாரியிடமும் ஆசி பெற வந்து நின்றார்கள்.அப்போது காந்தாரியின் கண்களில் கட்டியிருந்த துணி கொஞ்சம் விலகியதால் தருமனின் கால் விரல்கள் அவள் கண்களுக்கு தெரிந்ததும்,அவள் உள்ளத்தில் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தன்னிடமே ஆசி பெற வந்துவிட்டார்களே என்ற எண்ணத்துடன் அவள் தீப்பார்வை பட்டவுடன், தருமனின் கால் விரல்கள் பொசுங்கினவாம். கண்ணன் சற்றே தருமனை பின்னுக்கிழுத்து காத்தான் என்பார்கள்.

ஆனால் இங்கே எந்த தீப்பட்ட புண்ணாக இருந்தாலும் இந்த காந்தாரிஸ் உங்களைக் காக்கும்.அரை லிட்டர்( 500 மிலி) தேங்காய் எண்ணெயில் இந்த காந்தாரிஸ் ஐ ஒரு அவுன்சு (30 மிலி)(சொட்டு மருந்து வடிவத்தில் வாங்கவும்) கலந்து ஐம்பது தடவைக்கு குறையாமல் குலுக்கி தீக்காயங்களின் மேல் கோழி இறகாலோ,மயில் இறகாலோ தடவினால் அதுவரை எரிகிறதே!எரிகிறதே! என்று கத்திக் கொண்டிருந்தவர் ஆஹா ஜில்லென்று ஐஸில் இருப்பது போல் இருக்கிறது என்பார்கள்.தீக்காயமும் உள்ளே ஊடுருவிப் போகாது.பத்து அல்லது பதினைந்து நாட்களில் எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறும்.இது வெளிப் பிரயோகத்திற்கானது.

(3)கேலன்டுலா(CALENDULA-30)இந்த மருந்தை எந்தக் காயம் பட்டாலும்,(தீக்காயம் பட்டாலும்) தினமும் ஐந்து முறைக்குக் குறையாமல் ஐந்து முதல் பத்து க்ளாபியூல்கள் வாயில் போட்டு சப்பி சாப்பிடக் கொடுக்கலாம். அல்லது சொட்டு மருந்தாக வாங்கி 20 முதல் 30 சொட்டுக்கள் வரை முக்கால் லிட்டர் தண்ணீரில் விட்டு 50 தடவைக்கு குறையாமல் குலுக்கி பின் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம்.

இது என் நேரடி அனுபவம்;-  நான் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் (என் நிறுவனத்தின் பெயர் வேண்டாம்)பணியாற்றி வருகிறேன்.எனது நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கணேசன் என்பவருக்கு இரண்டு மாதத்திற்கு முன் ஒரு மாலை வேளையில் 7 மணி இருக்கும் ஒரு எலக்ரிக்கல் தவறினால்,ஒரு கடும் மின் நெருப்பு எழுந்து அவரின் வலது கை, மற்றும் வலது பக்க முகம் கருகிவிட்டது.

அப்போது நான் இராஜபாளையத்தில் லட்சுமி விலாஸ் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது இந்த கைபேசித் தகவல் வந்தவுடன்,எனது தம்பி திரு முருகனுக்கு (ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவர்) கை பேசியில் மேற்கண்ட மருந்துகளை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வந்துவிடக் கூறினேன். அவர்  இராஜபாளையத்தில் மருந்துகள் கிடைக்கவில்லை எனக் கூறி திருவில்லி புத்தூரில் இருந்து வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

மருந்துகள் மூன்றையும் இரண்டு வாட்டர் கேன்களில் தண்ணீரை முக்கால் கேன்களாக்கிஅதில் தனித்தனியே முறையே   (1) ரெஸ்குயூ ரெமெடி(RESCUE REMEDY) (2)கேலன்டுலா(CALENDULA-30)  இரண்டையும் 60 சொட்டுக்கள் விட்டு 50 தடவைக்கு குறையாமல் குலுக்கி 15 நிமிடத்திற்கு ஒரு முறை கொடுக்கச் சொன்னேன்.இத்துடன் நம் காந்தாரிஸ்(CANTHARIS-30)  ஒரு அவுன்சு (30 மிலி) எடுத்து அரை லிட்டர்( 500 மிலி) தேங்காய் எண்ணெயில்  கலந்து ஐம்பது தடவைக்கு குறையாமல் குலுக்கி தீக்காயங்களின் மேல் கோழி இறகாலோ,மயில் இறகாலோ தடவி வரச் சொன்னேன்.உடனே அவன் தன் எரிச்சல் அடங்கி சில்லென்று இருப்பதாகக் கூறினான்.

இரவில் கண்கள் எரிகிறது,மணல் போட்டது போல உறுத்துகிறது என்று கூறினார்.கண்களும் அந்த மின் நெருப்பின் பிரகாசத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொண்டேன்.(அவர்கள் அதற்குள் ஒரு பிரபல கண் மருத்துவமனைக்குச் சென்று ஒன்றும் செய்ய முடியாது என்று திரும்பி வந்துவிட்டனர்).பிறகு கண்களில் நன்கு வேலை செய்யும் யூபரேசியா-30(EUPHERASIA-30)மருந்தை, ஒரு வாட்டர் கேனில் தண்ணீரை முக்கால் கேனாக்கி, 60 சொட்டுக்கள் விட்டு 50 தடவைக்கு குறையாமல் குலுக்கி 15 நிமிடத்திற்கு ஒரு முறை கொடுக்கச் சொன்னேன். அத்துடன் இம்ப்காப்ஸ் பன்னீரை கண்களுக்கு விட்டு,பஞ்சில் நனைத்து கண்கள் மேல் வைத்த பத்தாவது நிமிடம் அத்தனை கண் பிரச்சினைகளும் தீர்ந்து சுகம் பெற்றான்.(பன்னீர் கிடைக்கவில்லை என்று மருந்துக் கடைக்குச் சென்றவர் கைபேசியில் தொடர்பு கொள்ள அங்கே அர்க் எ குலாப்(ARK E GULAB) என்ற பெயரில் இதே ரோஸ் வாட்டர் யூனானி மருந்தாக கிடைக்கும் என்று கூறி வாங்கி வரச் சொன்னது வேறு தனிக்கதை.இதே கண்ணுக்கான மருத்துவ முறையை கண்வலிக்கும் உபயோகிக்கலாம்.)

அந்த ஒப்பந்தப் பணியாளரின் தற்போதைய புகைப் படம் இதோ.அதில் ஏதாவது நெருப்பால் சுட்ட வடு தெரிகிறதா?
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
 மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

 1. பயனுள்ள தகவல்!, தொடரட்டும் உங்கள் சேவை!

  புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் நிரூபிக்கப் பட்ட மருந்துகள் ஏதேனும் உள்ளதா!, அப்படி இருப்பின் அதை தங்களால் இந்த வலைப் பதிவில் பகிர இயலுமா?

  ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. ஐயா கருத்துரைக்கு மிக்க நன்றி தோட்டக்காரன் ஐயா அவர்களே, நீங்கள் குறிப்பிடுவது போல் புற்று நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாதாரண வியாதிகளுக்கு நீங்கள் சாப்பிடும் அல்லோபதி மருந்துகளும்,இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளை,விளைவிக்க அடிக்கப்படும் பூச்சி மருந்துகளும்,ரசாயன உரங்களும் நம் உடலை விஷமித்த நிலைக்கு கொண்டு செல்கின்றன.விளைவு உடலில் உள்ள செல்களில் இப்படித்தான் வளர வேண்டும் என்ற தகவல் அழிந்து,எப்படி வேண்டுமானாலும் வளர ஆரம்பிப்பதே புற்று நோய் என்ற கேன்சர்.முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கேன்சர் என்பது வெளியில் இருந்து வரும் ஒரு கிருமியல்ல.உடலில் விஷமித்த நிலையில் இருந்து மீண்டு வந்தால் உடல் நலம் பெறும்.ஆனால் உடல் விஷமித்த நிலையில் வரும் நோயாளியை மேலும் மருந்துகள் என்ற பெயரில் கெமோதெரபி,ரேடியோ தெரபி போன்றவைகளை கொடுத்து மேலும் நோயாளரின் உடலை விஷமித்த நிலைக்குத் தள்ளி கொன்றேவிடுகிறார்கள் அல்லோபதி மருத்துவ புண்ணியவான்கள்.விஷமித்த நிலையில் இருந்து உடலை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி இயற்கை உணவு முறை.எனவே இதைவிடச் சிறந்த முறை எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே சொல்லலாம்.மருந்து என்று கூறப் புகுந்தால் சித்தர் முறைகளில் பல மருந்துகள் உள்ளன.கேன்சர் பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருவதால் அது பற்றி ஒரு தனி பதிவு எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்