மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 3, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 1

இயற்கை வாழ்வியல் முகாம்! நோயில்லாம வாழ எளிமையான வழி இதுவே!
October 1ல் - 7 முடிய, 7 நாட்கள் யோக, இயற்கை 
மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை
முகாம் நடக்கிறது. (Yoga &Camp; Naturopathy -
 Treatment cum Awareness Pro gramme )
அம்மணி போல் ஆரோக்கியமாக வாழ வழி இதோ....
இந்த ஏழு நாட்களும், அங்கேயே தங்கி உங்க ஆரோக்கியத்திற்கான வழிகளைத் தெரிந்து 
கொள்ளலாம் . நோய் ஏன் வருகிறது? அவை
நம்மை தாக்காத விதமா எப்படி நம்மை
பாதுகாத்துக் கொள்ளலாம் போன்ற பல பல
புது புது விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்!
நம் உடல் விஷத்தன்மை அதிகரிக்கும் போது உடல் உள்ளுறுப்புக்கள் தங்களையே காத்துக்கொள்ள 
முடியாமல் போராடும்போது நோய்கள் 
உருவாகின்றன. வாழையிலை குளியல், 
மண் குளியல் போல உடலின் விஷத்தன்மைகளை
நீக்கும் பல குளியல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோமே செய்முறை விளக்கங்களோட சொல்லித் தருகிறார்கள்.
இயற்கை உணவு நிபுணர்: திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள்
இவரு இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
இது நடைபெறுகிற இடம்: 
இயற்கை நல வாழ்வு நிலையம் (Natural Life Centre 
125, கீழத் தெரு, குலசேகரன்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206
செல்பேசி: +91 - 9944042986, 9380873645

நன்கொடை: இந்த ஏழு நாட்களும் தங்குற வசதிக்கும், உணவுக்கும்,
சிகிச்சைக்கும் சேர்த்து வெறும் 500/- ரூபாய். இந்த காலத்தில இவ்வளவுக் குறைவான கட்டணமான்னு மலைப்பு வருகிறதா? இதற்கு பல நல்ல உள்ளங்கள் ஆதரவு தருகின்றார்கள்!அது தாங்க மனுஷன நேசிக்கிற குணம். இயற்கை வாழ்வு ஆர்வலர்கள் எப்போதும் எதற்காகவும் பேராசைப் படுவதில்லை.
இந்த முறைதான் பல நல்ல உள்ளங்கள் ஆதரவுடன் இவ்வளவு குறைவான தொகையில் முகாம் நடத்துகிறார்கள். இது போன்ற முகாம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த இடம் இயற்கை சூழலிலே, கடற்கரைக்கு பக்கத்தில அமைந்திருக்கிறது . நினைக்கும் போதே மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா!
இந்த இடம், 3 ஏக்கர் நிலம். முழுசுமே பழ முதிர் சோலையா, வெறும் இயற்கை விவசாய முறையில(பூச்சி மருந்துகள் அடிக்காத விஷத் தன்மையில்லாத முறையில்)மட்டுமே மரங்களை வளர செய்திருக்காங்க. கற்பனை செய்யும் போதே ரொம்ப நன்றாக இருக்கிறது அல்லவா? 

இன்னொரு முக்கியமான தகவல்!

ஒவ்வொரு மாதமும் 3வது வாரம் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு 3 நாட்கள் முகாம் நடத்துகிறார்கள். இந்த நவம்பர் மாசத்தில ஒரு முகாம் நடத்துகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கிறது.அடுத்த மாதம் முகாம் 19-ம் தேதி காலையில 8 மணிக்கு தொடங்கி 21-ம் தேதி மாலை 6 மணிக்கு முடியும். வெளியூர்ல இருந்து வர்றவங்க முதல் நாளே வந்திடலாம். அதேப் போல கிளம்பறதும் முகாம் முடிஞ்ச மறுநாள் கூட கிளம்பி வரலாம்.
இதற்கும் நன்கொடை வெறும் 500 ரூபாய் மட்டுமே.  உங்களுக்கு யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவங்க கட்டாயம் கலந்து கொண்டு பயன் அடையலாம்!
வேறு உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் ஏதாவது இருந்தாலும்(LIFE THREAT DISEASES) தொடர்ந்து சிகிச்சை தருகிறார்கள்.  உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க.அவர்களுக்கு இதைவிட நீங்கள் ஏதும் நன்மை செய்துவிட முடியாது. 
உங்க புண்ணியத்தோட அகௌண்ட்ல கொஞ்சம் புண்ணியம் சேரட்டும்.
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

Post Comment

3 comments:

 1. WOW VERY VERY V V V V V V...,,,,, HAPPY NEWS AT THIS CULTURAL WORLD. BLESS UR'S SERVICE BY ULUNDERPET SANKARLINGA SWAMYGAL & VALLALAR. THANK U UR'S SERVICE I CONVEY ALL MY FRIENDS.

  ReplyDelete
 2. அன்புமிக்க திரு பன்னீர்செல்வம் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்