மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, October 2, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 3


சென்ற மடலில் நாம் அக்கு பஞ்சரில் இரண்டு முக்கிய சக்திப் பாதைகள்(GOVERNING VESSELLS ) நமது நடு நாடிகளான இடகலா,பிங்கலா,சுழிமுனை என்பவை நமது முதுகுத்தண்டு வடத்தின் நடுவே அமைந்துள்ளதையும்,
இவையே ஞானத்திற்கும் இன விருத்திக்கும் ,உடல் நலத்தோடு எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் , உயிர் உடம்பில் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் , எவ்வளவு காலம் உயிரோடு இருக்க எவ்வாறு உதவுகின்றன,என்பதைப் பார்த்தோம்.


இந்த வைத்திய சாஸ்திரத்திற்கு சீனத்தில் ஹீலிங் புத்தாவையும் ,

ரெய்கி மாதா என்றழைக்கப்படும் குவான்-யின் QUAN-YIN  என்ற சீனத்தில்  வைத்தியத்திற்கும் உதவும் தேவதை,அந்தத் தேவதையையும் ,நமது வைத்தியத்தில் வைத்தியர்களின் தலவரான தேவ வைத்தியர் தன்வந்திரி பகவானையும் வேண்டி அக்கு பஞ்சர் கற்றுக் கொள்ள ஆரம்பிப்போம்.
  
தற்போது பஞ்சபூத சக்திகள் எப்படி உடலை உருவாக்கி வளர்க்கின்றன என்பதையும் YIN, YANG,சக்திகளைப் பற்றியும் QI மற்றும் CHI சக்தியைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

QUAN -YINஎன்பதன் சீனத்து முதல் எழுத்துக்களே'QI' என்பதாகும். 'QI' என்பது நமது உடலில் செயல்படும் அத்தியாவசியமான உயிர்ச்சக்தி(VITAL FORCE) , இந்த உயிர்ச் சக்தி நமது பிறப்பின் போது ஒரு குறிப்பிட்ட அளவு நமக்கு உடலுடன் நமக்களிக்கப்படுகிறது.அந்த உயிர்ச்சக்தி தானாகவே ஒரு விதையிலுள்ள உயிராற்றல் போல இருக்கிறது . தானாகவே இந்த உயிராற்றல் காலப்போக்கில் சிதைகிறது.சில வருடங்கள் ஆன பின்னர் விதைகளின் முளைப்புத்திறன் குறைவது போல இந்தச் சக்தியும் அப்படியே வைத்திருந்தாலும் குறைகிறது. உடல் வளர்ச்சி ஆகும் போதும் உயிராற்றல் காலப்போக்கில் சிதைகிறது. அதை அதிகம் செலவாகாமல் வாழ வழியிருக்கிறதா?பார்ப்போம்!

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதி கெட்டு;-போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

                                                                ;-அவ்வையார்


ஆன முதலான உயிர்ச்சக்தி(VITAL FORCE) அதிகம் செலவானால் மானமழியும்,மதி கெடும், எல்லோருக்கும் திருடனாய்த் தெரிவர்,ஏழு பிறப்பில் தீயவனாகப் பிறக்கவும்,நல்லவர்களுக்கு பொல்லாதனாய் இருக்க நேரும்,என்று நல்வழியில் எச்சரிக்கிறார் அவ்வையார்.


அக்கு பஞ்சர் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த உயிர்ச்சக்தியே YIN, YANG என இரண்டாக அலைவை உண்டாக்குகிறது. இது போலவேதான் இந்த உயிர்ச் சக்தி ஆண்மை -பெண்மை , பகல்-இரவு, வெப்பம்-குளிர்ச்சி, கோடைக் காலம்-குளிர் காலம், வெண்மை-கருமை, உலகின் வட துருவம்-தென் துருவம், ஒரு காந்தத்தின் வட துருவம்- தென் துருவம், உடலின் முன் பக்கம்-பின் பக்கம், உடலின் வலப்பக்கம்-உடலின் இடப்பக்கம், உடலின் மேல்பக்கம்-கீழ்பக்கம் இப்படி இருமைகளாக உள்ளது.


இது போலவே நமது சைவ சித்தாந்தத்தில் சிவன் இருமைகளாக இருக்கிறான்.அவன் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு நடுவே நடனமாடுவதாக வர்ணிக்கிறது. அதாவது இருமைகளாக இருந்து இருமைகளுக்கு நடுவுமாகி நிற்கிறான்.சிவ சக்தி அர்த்த நாரீஸ்வரர் ஆக உள்ள படத்தையும் அக்கு பஞ்சரில் YIN, YANG படத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.


    
      


மேலே உள்ள படத்திலிருந்து YIN, YANG என்பது ஆண்மை -பெண்மை என்ற   இருமைத் தத்துவத்தை உள்ளடக்கியது .நம்முள் இதில் எது குறைந்தாலும் கூடினாலும் நோய்தான். இந்த அத்தியாவசிய உயிர்ச்சக்தி ( VITAL FORCE)'QI' உடலில் இல்லை என்றால் உயிரும் உடலில் இல்லை என்று பொருள். 
இந்த உயிர்ச் சக்தி உடலில் இயங்கு சக்தியாக மாறும் போது அது CHI சக்தியாக உருமாறும், இந்த உயிர்ச்சக்தி ( VITAL FORCE)'QI' உடலில் தேக்கமடையும் போது அது அழுக்கடைந்து தேக்கமடைந்த உயிர்ச் சக்தியாக(CONTAMINATED PRANA) உருமாறுகிறது. இது போல் தேக்கமடைந்த உயிர்ச் சக்தியும் (CONTAMINATED PRANA) வியாதியை உருவாக்கும்.
இனி அக்கு பஞ்சரில் பஞ்ச பூத சக்திகளைப் பற்றியும் அந்த ஆற்றல் எப்படி நியதிக்கும் ,விதிகளுக்கும் கட்டுப்பட்டு இயங்குறது என்பதையும் அடுத்த இடுகையில் பார்ப்பொம்.

நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்