மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, September 29, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 8

சில புலவர்கள் பொறாமையின் காரணமாக அவ்வையார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்து வந்தனர். ( இந்தக் காலத்தில் இவ்வளவு பெண்ணடிமைத்தனம் இருக்கும்போது, அந்தக்காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும்).
கம்பர் சிலம்பி என்றொரு தாசியை ஐந்நூறு பொன் பெற்று ஏழையாக மாற்றியதை அவ்வையார் பணக்காரியாக மாற்றியதால் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை இப்போது பார்ப்போம்.

மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த பின் கம்பர் அவ்வையாரைப் பார்த்து  அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக

'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' 

கம்பர் கேட்க

அவ்வையார் கம்பரைப் பார்த்து 

'எட்டேகால் லட்சணமே ! எமனே றும்பரியே !
மட்டில் பெரியம்மை வாகனமே !;-முட்டமேற்
கூறையில்லா வீடே ! குலராமன் தூதுவனே !
ஆரையடா சொன்னா யது ! ' 

அவ்வையார் சொல்ல கம்பர் வெட்கித் தலை குனிந்தார்.

 {கம்பர் அவ்வையாரைப் பார்த்து அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' என்று கேட்டது ஒரு கால் அடியாகவும் நாலிலைப் பந்தலடியாகவும் இருப்பது ஆரைக் கீரை.

அதற்கு அவ்வையார் கம்பரைப் பார்த்து எட்டு என்பது தமிழ் எழுத்துக்களில் 'அ' ,அதே போல் கால் என்பது தமிழ் எழுத்துக்களில் ' வ '
அதன்பின் உள்ள லட்சணமே சேர்ந்தால் அவலட்சணமே! என்றும், எமனேறும் பரி என்பது எருமை மாடே! என்றும், மட்டில் பெரியம்மை வாகனமே !என்பது மூத்த தேவியான மூதேவியின் வாகனமான கழுதையே! என்றும்,முட்டமேற் கூறையில்லா வீடே !, என்பது கூறையில்லா வீடு குட்டிச்சுவரே! என்றும், குலராமன் தூதுவனே !என்பது குல ராமன் தூதுவன் அனுமன் குரங்கு என்பதால் குரங்கேஎன்றும், ஆரையடா சொன்னாய் அது! என்பது ஆரைக் கீரையைத்தானடா சொன்னாய்! என்றும், பொருள் தரும்.
நண்பர் யோகன் பாரிஸ் அவர்கள் மூதெவியின் வாகனம் விளக்குமாறு என்று கூறியிருப்பதற்கான கருத்து விளக்கத்துக்கான அகராதியின் நகல்

வலது கீழ் மூலையில் கீழிருந்து இரண்டாவது சொல்.
எனது மற்றொரு வலைப் பூவில் இது போன்ற இலக்கிய சம்பந்தமான வெளியீடுகள் இடம் பெறுவதால் தயவு செய்து நமது வலைப்பூ அன்பர்கள் http://kavithaichcholai.blogspot.com/
என்ற வலைப்பூவில் பார்வையிடலாம்.எனவே இந்த வலைப்பூவில் உள்ள சில தனிப்பாடற்காட்சிகள் 7 நீக்கப்படுகிறது.வரும் காலத்தில் சில தனிப்பாடற்காட்சிகள் 8 ம் நீக்கப்படும்.இவற்றையும் இவற்றுடன் பழைய இடுகைகளையும் மேற்படி வலைப் பூவில் பார்க்கலாம்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

Post Comment

2 comments:

 1. மூதேவியின் வாகனம் விளக்குமாறு என அறிந்தேன்.
  அத்துடன் கூரை எனவும் மாற்றிவிடவும்.
  இச்சிலேடைப் பாடல்களை ரசித்தேன்.

  ReplyDelete
 2. தங்களின் திருத்தம் கூறை என்பதை கூரை என்று மாற்றப்பட்டுவிட்டது.மூதேவியின் வாகனம் விளக்குமாறு அல்ல.விளக்குமாறு என்பது வெளிநாட்டுக் கதைகளில் சூனியக்காரிகளுக்கு வாகனமாக சித்தரிக்கப்படுவது.மேலே உள்ள எனது வலைப்பூவில் மூதேவியின் வாகனம் கழுதை என்பதற்கு ஆதாரமாக எனது தாத்தா காலத்து தமிழ் அகராதியில் இருந்து நகல் எடுத்து பிரசுரித்துள்ளேன்.
  இப்படிக்கு
  என்றென்றும் நட்புடன்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்