மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 16, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 4)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 3) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.

வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழுந்தருளும் காலங்கள்.


இந்தப் பதிவை படிக்கும் முன்னர் சித்தர் விஞ்ஞானம் பாகம்(4) பதிவை ஒரு பார்வை பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.அப்போதுதான் இந்தக் கணக்குகள் புரியும்.


சித்திரை மாதம் 10ந் தேதி (5 நாழிகை) காலை 8மணி முதல் 9 1/2 வரை (3 3/4 நாழிகை=ஒன்றரை மணி நேரம்=ஒரு முகூர்த்தம்),


வைகாசி மாதம் 21ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம்,


ஆடி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை,


ஆவணி மாதம் 6 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


ஐப்பசி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் காலை 8 மணி 18 நிமிடம் வரை,


கார்த்திகை மாதம் 8 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


தை மாதம் 12 ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


மாசி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


பங்குனி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


வாஸ்து புருஷன் விழித்திருக்கும் காலம் ஆகும்.

வாஸ்து புருஷன் எழுந்திருந்து மீண்டும் உறங்கப் போகும் நேரமே வாஸ்து நேரம் என்றழைக்கப்படுகிறது. வாஸ்து புருஷன் எழுந்து மீண்டும் உறங்கப் போகும் நேரத்தை ஐந்தாகப் பிரித்துள்ளார்கள்.


வாஸ்து புருஷன் எழுந்தவுடன்

(1)தந்த சுத்தி(பல் விளக்குவது)(பாகம் 1)
(2)ஸ்நானம்(குளிப்பது)(பாகம் 2
(3)பூஜை புனஸ்கார இறைவழிபாடு(பாகம் 3)
(4)உணவுண்ணல்,ஊர் விசாரணை(பாகம் 4)
(5)தாம்பூலம் தரித்தல்(பாகம் 5)


இந்த வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவினுள் கடைசி இரண்டும் வாஸ்து செய்ய உகந்தது. அவை இரண்டும் 
ஊர் விசாரணைபாகம் 4 ),

தாம்பூலம் தரித்தல் பாகம் 5 ).


அதாவது எழுந்து உறங்கப்போகும் கால அளவான 3 3/4 நாழிகையில் (அதாவது ஒன்றறை மணி நேரமான ஒரு முகூர்த்தம்,அதாவது 90 நிமிடம்,அல்லது 1 1/2 மணி நேரம்)கடைசி ஐந்தில் இரண்டு பாகமான3.75 நாழிகை /5 பாகம் = 0.75 நாழிகை/ஒரு பாகத்துக்கு


எனில் இரண்டு பாகத்துக்கு =  0.75 * 2 = 1 1/2


1 1/2 நாழிகை,அதாவது 1.5 நாழிகை * 24 நிமிடங்கள் = 36 நிமிடங்கள்


அல்லது


மொத்த வாஸ்து கால அளவு 90 நிமிடங்கள்/5 பாகம் = 18 நிமிடங்கள் ஒரு பாகத்துக்கு எனில்


கடைசி இரு பாகம் ஊர் விசாரணை(பாகம் 4), தாம்பூலம் தரித்தல் பாகம் 5 )

 2 * 18 = 36 நிமிடங்கள்


இந்த கடைசி 36  நிமிடமே வாஸ்து செய்ய உகந்தது.அதாவது வாஸ்து நேரக் கடைசியில் இருந்து 36 நிமிடங்கள் முன்னால் ஆரம்பித்து வாஸ்து செய்ய வேண்டும்.புரியவில்லை எனில் கேளுங்கள்.


பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் ஐந்தில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

4 comments:

 1. Am an engineer of age 23. Your blog is really wonderful and am learning a lot about sidhars. Please do continue your service in this blog. Thanks a lot.


  Regards,
  Satish

  ReplyDelete
 2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சத்தி அவர்களே,
  மிக்க மகிழ்ச்சி.படித்தவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதும்.அவர் தன்னைச் சுற்றி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திவிடுவார்கள்.தங்களின் முதல் கருத்துரை எனது வலைப்பூவில் எழுதியதற்கு எனது நன்றிகள் பல.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனது சந்தேகங்களை இ மெயில் செய்கிறேன்.தயவு செய்து பதில் அனுப்பவும்.மிக்க நன்றி

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராம்பாரதி அவர்களே, தங்களின் சந்தேகங்களை எழுதுங்கள் பதில் அனுப்புகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்