மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, January 27, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 9

அக்கு பஞ்சர் அறிவோமா:-
பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

நான் ஒரு முறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறு கைக்குழந்தையை தூக்கி வந்திருந்தார்கள்.அப்போது அங்கு கிராமத்து மருத்துவச்சி அங்கே வந்திருந்தார்.

அந்தக் குழந்தைக்கு குடல் ஏறியிருக்கிறது என்று குழந்தையின் தாய் கூறினாள்.அந்த மருத்துவச்சியும் குழந்தையின் முழங்கையின் மேல் பகுதியில் கையின் பின் பக்கத்தை பிடித்தவுடன் குழந்தை வீரிட்டு அழுதது.

ஆமாம் குடல் ஏறியிருக்கிறது. இனிமேல் குழந்தையைப் யாரையும் பார்த்து தூக்கச் சொல்லுங்கள்.சிறு குழந்தைகளைவிட்டுத் தூக்கச் சொல்லாதீர்கள் என்றார் மருத்துவச்சி.

நான் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அந்த மருத்துவச்சியைப் பார்த்துக் கேட்டேன்.குடல் ஏறி இருந்தால் வயிற்றையல்லவா பார்க்க வேண்டும், நீங்கள் மேற்கையின் புறத்தை அழுத்தி பார்த்துவிட்டு குடல் ஏறி இருக்கிறது என்று கூறுகிறீர்களே! என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெண்மணி கூறினார்கள்,இது போன்றே நாங்கள் பல தலைமுறையாக வைத்தியம் பார்த்து வருகிறோம்.நாங்கள் சொன்ன சொல் தப்பினது இல்லை,மிகச் சரியாக இருக்கும் என்றார்கள்.அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு வயிற்றின் மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் விளக்கெண்ணெய் தடவி மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் சீவினாற் போல அழுத்தி தேய்த்து தடவி விட்டவுடன் குழந்தை குணமானது.பிறகு அதே இடத்தை தொட்டால் அழவில்லை. குழந்தை குணமானதைப் புரிந்து கொண்டோம்.  

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் அக்கு பஞ்சர் கற்றுக் கொண்ட பின் இதற்கான விளக்கம் கிடைத்தது.

பெருங் குடல் சக்தி நாளம் 
சிறு குடல் சக்தி நாளம்

படத்தைப் பாருங்கள்.சிறு குடல் மற்றும் பெருங்குடல் சக்தி நாளங்கள் கையின் மேல் புறம் மற்றும் கீழ்ப் புறம் ஓடுவதைக் கவனியுங்கள்.

அக்கு பஞ்சரில் அஹ் - ஷி புள்ளி (AH - SHI POINT) எனக் கூறுவார்கள்.அதாவது அந்தப் புள்ளியைத் தொட்டாலோ அழுத்தினாலோ அஹ் வலிக்கிறதே என்ற  வேதனையொலி வாயிலிருந்து கிளம்பும்.இதே சிறு குழந்தையாக இருந்தால் வீரிட்டு அழும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கான அஹ் - ஷி புள்ளிகள் (AH - SHI POINT) இந்த இடத்தில் நிலை கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேலும் பெருவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட வர்மப் பகுதியை கவளி வர்மம் என்று கூறுவார்கள்.வெற்றிலைக் கவளி என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.கைக்கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்குமிடையே வைத்திருக்க முடியும் அளவு வெற்றிலையே ஒரு கவளி வெற்றிலை என்பார்கள்.

இந்த கவளி வர்மம் எல்லா வர்மங்களை இளக்கும் பகுதியாகும்.இது அக்குபஞ்சரில் பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளியாகும்(HOKU).அதை LI 4 என்பார்கள்.அதற்கு உடம்பில் உள்ள கெட்டதை நீக்கும் பெரிய புள்ளி(GREAT ELIMINATOR) என்றழைக்கிறார்கள்.

பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளி(HOKU)
LI 4 (LARGE INTESTINE 4)
மேற்கண்ட புள்ளியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்தலாம்.இது உடலிலுள்ள முக்கியமான 6 தொலைவுப் புள்ளிகளில் ஒன்று.
(1)HEADACHE தலைவலி(2)TOOTHACHE பல்வலி 3)MIGRAINEஒற்றைத் தலைவலி(4)TRIGEMINAL NEURALGIA கடும் நரம்பு வலியால் ஏற்படுவது (5)PAIN AND PARALYSIS OF THE UPPER EXTREMITY இடுப்பின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகள் மற்றும் வாதம்.  (6)RHINITIS(7)PHARYNGITIS(8)FACIAL PARALYSIS முகவாதம்(9)GOUTமுன் கழுத்து கழலை(10)PAINFUL CONDITIONS OF EYE கண்வலி (11)HYPERHYDROSIS (12) MANDIPULAR ARTHRITIS(13)LARYNGITIS(14)BRONCHITIS சுவாச காசம்(இரைப்பிருமல்)

IF YOU WANT TO USE SINGLE POINT IN THE BODY FOR PAIN LI 4 IS THE POINT.IT IS USEFUL IN ALL TYPES OF ARTHRITIS.IT TONES UP THE ENTIRE LARGE INTESTINE FUNCTION.IT ACTS AS AN ELIMINATOR OF PHYSICAL AND MENTAL TOXINS OR TENSIONS. IT IS USED FOR PAIN AND PARALYSIS OF UPPER LIMB.
IT IS ALSO USEFUL IN
(1)ALL KIND OF HEADACHE ARISING OUT OF FAULTY ELIMINATION
(2) INFLAMMATION OF MOUTH, EYES, NOSE, SINUSES, AND TEETH.
(3) FEVER WITH THIRST AND FEVER WITH SHIVERING.
(4) IN SKIN CONDITIONS LIKE BOILS AND ACNE.
(5) PAIN RELIEF POINT IN SURGICAL ANESTHESIA.
(6) IT IS USED AS A MAJOR ANALGESIC POINT IN PAINLESS CHILDBIRTH.

சித்த வைத்தியத்தில் எந்த வியாதிக்கும் முதலில் நாடி பார்க்கும் போது கால் பங்கு வியாதி குணமாகும் .அந்த வியாதியும் வைத்தியன் உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமானால்,நாடி பார்க்கும் கையில்  பட்டுத் துணி போர்த்தே பார்க்க வேண்டும்.பார்த்த பின் நாடி பார்த்த கையை தரையில் மூன்று முறை தட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த வியாதி வன்மை (NEGATIVENESS OF THE PATIENTS BODY) வைத்தியரைத் தாக்காது பூமிக்குப் போய்விடும் (GROUNDED) என்று அகத்தியர் நாடி சாஸ்திரம் கூறுகிறது.

மலக் குடலான பெருங்குடலைச் சுத்தப்படுத்த பெரு மலம் போக்கிகளைக் (PURGATIVES) கொடுத்து மீதி வியாதியில் அரைப் பங்கை குணம் ஆக்குகிறார்கள் சித்த வைத்தியர்கள்.பின் மீதி உள்ள கால் பங்கு வியாதியைத்தான் சித்த வைத்தியர் மருந்தைக் கொடுத்து குணம் அளிக்கிறார்கள்.

பெருங்குடலை ஏன் சித்த வைத்தியர்கள் ஏன் சுத்தப்படுத்தினார்கள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு புரிந்ததா! கருத்துரையிடுங்கள்! 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

6 comments:

 1. Good one. thanks for sharing.

  ReplyDelete
 2. நல்ல பதிவு. ஓர் அளவுக்கு மட்டுமே எனக்கு புரிந்தது. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் புத்தகம் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

  ReplyDelete
 3. Colon Hydrotherapy இங்கே அமெரிக்க, கனேடிய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  தண்ணீரை ஆசன வாய் மூலமாக உட் செலுத்தி சுத்தம் செய்வார்கள்.
  இதனை தொடர்ந்து வாரம் ஒருமுறை என்று பத்து வாரங்களுக்கு செய்யும் பொழுது
  பலதரப்பட்ட நோய்கள் குணமாகின்றன.
  அவசர வாழ்க்கையில், ஒழுங்காக மலம் கழிக்காமல், வாழும் மனித இனம்
  பல நோய்களுக்கு ஆட்படுகின்றது.
  தண்ணீர் அருந்தாமல், கோக் அருந்தினால் எத்தனை தீமைகள்?
  நல்ல காற்றை சுவாசிக்காமல்---------பல வியாதிகள்.
  நல்ல காற்று- நல்ல தண்ணீர்- நல்ல உணவு (மூன்று தூய்மைகள்)
  நன்கு வியர்வை நீங்கி- சிறுநீர்கழித்து- மலம் போனால்-
  நோய் ஒன்றும் அணுகாது.
  இஞ்சி- கடுக்காய்- சுக்கு இந்த மூன்றையும் தினந்தோறும் எடுத்தால்
  என்றும் இளமையோடு வாழலாம்.
  உடற்பயிற்சி- உறக்கம்-உணவு அளவோடு வேண்டும்.
  உடல் உறவு நலமோடு வேண்டும்.
  குடித்து-உண்டு- உறங்கி-உடலுறவு கொண்டு பின்னர் செத்துப் போ!
  இதைவிட மேலான இன்பம் பெற- மும்மலமும் நீங்கப் பெற வேண்டும்.
  அது என்ன என்பதை - சாமீ அழகப்பன் அவர்கள் சொல்லித்தருவார்கள்.
  "ARISE & SHINE"
  Dr.Rajasekar Athiappan ,M.D.,
  www.ayurvetha.com
  - Enrich New Life-

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி அவர்களே, வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கு நன்றி.
  அடிக்கடி வந்து பார்த்து கருத்துரை இடுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தூத்தன் அவர்களே, மீண்டும் மீண்டும் வலைப்பூவைப் பாருங்கள்.அவ்வப்போது பல கருத்துக்களை இடுகிறேன். பார்த்து தெளிவு பெற்று கருத்துரை இடுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ARISE & SHINE" Dr.Rajasekar Athiappan ,M.D. www.ayurvetha.com, அவர்களே,
  நீங்கள் யோகா ஆசிரியர்கூட என்று நேற்றுத்தான் தெரிந்து கொண்டேன்.உங்களைப் போன்ற பல துறை விற்பன்னர்கள்,ஆன்மீக உயர்வு பெற்றவர்கள் எனது வலைத்தளத்துக்கு வருவதும்,உங்களைப் போன்றவர்களுடன் நான் பேசுவதும்,எனக்கு மிகவும் மகிழ்வாகவும்,உபயோகமாகவும் இருக்கிறது.உங்கள் கேள்விகளும்,கருத்துரைகளும் மேலும் மக்கள் ஆரோக்கியமாக வாழ பல வழிகள் உள்ளதை மேலும்,மேலும் எழுத என்னைத் தூண்டுகிறது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்