மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 16, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 3)


வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.

பரமாணு என்பது உலகங்கள் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒன்று.இதையே ரெய்-கி ல் குணமளிக்க ரெய்-கி ஹீலர்கள் உபயோகிக்கின்றனர்.அது பற்றி மற்றொரு பதிவில் இடுகிறேன்.இந்த பரமாணுக்கள் நிலத்தில் வந்து குவியும் நேரமே வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் நேரமாக சித்த புருஷர்களும்,நம் தமிழர் விஞ்ஞானமான சிற்ப சாஸ்திர சிந்தாமணியில் குறிப்பிடுகின்றனர்.

இந்த பரமாணுவே இயங்கு சக்தியாகவும், இயக்க சக்தியாகவும்,(கிரியா சக்தி, KINETIC ENERGY ) , நிலைச் சக்தியாகவும்(இச்சா சக்தி,POTENTIAL ENERGY ), திகழ்கிறது. இவையிரண்டையும் உணர்வது ஞானசக்தி(WISDOM). முருகன் (ஞான சக்தி),வள்ளி (இச்சா சக்தி),தெய்வானை(கிரியா சக்தி).

மேற்கூறிய இவற்றை வடிவங்களில் கொடுத்தால் நம் மக்கள் புரிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள் என்றுதான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.இது போலவேதான் ராசி மண்டலங்களையும் அந்தந்த வடிவங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்வினி(முழுவதும்),பரணி(முழுவதும்),கார்த்திகை(முன் கால் பகுதி மட்டும்) சேர்ந்தது மேஷம்(ஆட்டின் தலை வடிவில் இருக்கும்) இது ஒரு நட்சத்திரக் கூட்டமே இந்த வடிவத்தில் இருப்பதால் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.இது 30 பாகை அளவில் இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே.இது போல பனிரெண்டு ராசிகளுக்கும் சேர்த்து 30*12 = 360 பாகைகள் கொண்டது ஒரு வட்டம்.

ஒரு கதையை இங்கே கூற வேண்டும் அகத்தியர் என்று குறுமுனி இருந்தார் எனவும்(இவர் பதிணெண் சித்தர்களில் ஒருவர்) அவர் ஏழு கடல்களையும் ஒரு கையில் எடுத்துக் குடித்தார் எனவும்,அவர் மனைவி லோபா முத்திரை எனவும் கதையாக கூறியுள்ளனர்.

பெரியது என்ன என்று முருகன் ஔவையாரிடம் கேட்க அவர் கூறிய பாடல் இதோ

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ, நான் முகன் படைப்பு!
நான்முகனோ, கரிமாலுந்தியில் வந்தோன்!
கரிய மாலோ, அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி யங்கையில் அடக்கம்!  
குறுமுனியோ, கலசத்திற் பிறந்தோன்!
கலசமோ, புவியிற் சிறுமண்!
புவியோ, அரவினுக் கொருதலைப் பாரம்!
அரவோ, உமையவள் சிறுவிரன் மோதிரம்!
உமையோ, இறைவர் பாகத் தொடுக்கம்!
இறைவரோ, தொண்டர் உள்ளத் தொடுக்கம்!
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஔவையார்

நீல நிறத்தில் கொடுத்துள்ளவைகள் அகத்தியரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்கள்,கவனியுங்கள்.  
கதையில் உள்ளபடியே லோபாமுத்ரா நட்சத்திர மண்டலம் அகத்திய நட்சத்திர மண்டலத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது.கணவனைத்தானே மனைவி சுற்றுவாள்.அப்போது அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை.இப்படிச் சொன்னால் உங்களுக்கு மறக்காதுதானே!

மேலும் அகத்தியருக்கு கும்ப முனி என்றும் பெயர்.
அகத்திய மண்டலம்,கும்ப ராசியும்,சூரியனும் ஒரே நேர் கோட்டில் வரும்போது ஏழு கடல்களிலும் நீர் மட்டம் குறைகிறது என்று இப்போது புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.எனவே தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள், என்பதை நிரூபணம் செய்ய இதைக் கூறவில்லை.நம் முன்னோர்கள் கூறிய கதைகளின் மூலம் எதைக் கூற விரும்புகிறார்கள் என்று நாம் ஆராய்ச்சி செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மக்களை சிந்திக்கத் தூண்டுவதே எனது பதிவுகளின் நோக்கம்.தவிர மூடத்தனமாக பழக்க வழக்கங்களை அப்படியே கடைப் பிடிக்காமல் ஆராய்ச்சி செய்து பொருள் புரிந்து பின் கடைப் பிடித்தால் அதில் தவறுகளும் நேராது.எதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்பதும் புரியும்.  

பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் நான்கில் காணுங்கள்)அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

4 comments:

 1. நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (அவ்வையார்
  பாடல் ) , எனக்கு தெளிவாகப்
  புரியவில்லை.தயவுசெய்து இன்னும் விளக்க முடியுமா?

  ReplyDelete
 2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு JAIMANIKA அவர்களே,
  அலைகடல் என்பது ஏழுகடல்களைக் குறிக்கும்.அவை குறு முனியான அகத்தியர் கையில் அடக்கி குடித்தார் என்பதுவேயாகும்.குறு முனியாகிய அகத்தியர் கலசமான கும்பத்தில் பிறந்தவர்.அந்தக் காலத்தில் டெஸ்ட் டுயூப் குழந்தை போல பிறக்க குடத்தில் இட்டு கருவை வளர வைத்து பின் குழந்தை பிறக்க வைப்பார்கள்.அப்படி கலசமான குடத்தில் பிறந்தவர் என்று அகத்தியரை ஔவையார் கூறுகிறார்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. vanakkam ayya,
  thanks for sharing u r spirtual knowledge to all.endha mathiri thakavalakalai(news) solla oru "nalla mansu vanum" athu yunkakida eruku..no stop u r service due to any reason please continue u r work and guide more people to reach god.like me nowdays many people searching god..somebody one get true guru or a person i think i will get correct path..still i am beginning stage please guide as to attain superior level in spirtual. thank a lot...we are waiting more knowledge from u..
  sorry ennku tamil typing antha allavuku varathu..i read ,speak tamil but while in writing error occur. once again thanks a lot by ramkumar.p

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராம்குமார் அவர்களே,
  பரவாயில்லை முடிந்த வரை தமிழ் எழுதி கொண்டு எழுதுங்கள்.சிறிது நாளில் நன்றாக வந்துவிடும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்