மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, November 28, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்7


என்னுடைய சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம்6) ஆன கீழ்க்கண்ட பதிவில்

ஈரலை இப்படிக் கொடுத்தால் கண் எப்படி சரியாகும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுவது போல் எனக்கும் ஏற்பட்டது.அதற்கு அக்கு பஞ்சர் விடை அளித்தது.

அக்குபஞ்சர் தத்துவத்தில் ஈரல் கண்களில் திறக்கிறது(LIVER OPENS IN EYE) என்பார்கள்.ஒரு சோடா புட்டி கண்ணாடி அணிந்திருக்கிறார் என்றால் அவர் ஈரல் பழுதுள்ள மனிதர் என்று பொருள்(LIVER MAN).ஈரலை சரி செய்தால் கண் சரியாகத் தெரியும்.

அதை விட்டு விட்டு அல்லோபதி மருத்துவம் கண்ணில் லேசர் போன்றவற்றால் பொசுக்கி (கண்ணில் நின்று இயங்கி வரும் பிராணனை கெடுத்து உயிரை நாசம் செய்கிறது.இதன் விளைவால் கண் தெரிந்தாலும் உயிரின் ஆயுள் குறையும்.)

இப்போது புரிகிறதா கண் சரியாக தெரியவில்லை என்றால் ஈரலில் இருக்கிறது குறைபாடு.சித்த வைத்தியத்தில் 'ஊனுக்கு ஊன்என்ற சித்தாந்தம் உண்டு.எந்த உறுப்பு மனிதனுக்கு பழுதாகி இருக்கிறதோ அந்த உறுப்பையே வேறு மிருகத்தில் இருந்து(ஏற்றது வெள்ளாடு,நாட்டுக் கோழி) மூலிகைகளின் மூலம் பக்குவம் செய்து கொடுக்க அந்த உறுப்பின் குறைபாடு நீங்கும்.அதன் விளைவாக அந்த பேறுறுப்பின்(ORGAN) பாதுகாப்பில் உள்ள உறுப்புக்களின் குறைபாடுகளும் நீங்கும். 

அக்கு பஞ்சரில் இந்தக் குறைபாட்டிற்கு கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகளில் சிகிச்சை அளிக்க மண்ணீரலும்,கல்லீரலும் பலப்பட்டு நோய் நீங்குகிறது.

மேலும் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு கால் பெருவிரலில் எந்தக் காயமும் அடியும் படாமலே பெருவிரலில் புண் உண்டாவதும்,பெருவிரல் அழுகுவதும் கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகள் உயிரோட்டம் அற்றுப் போவதேயாகும்.

இதை அல்லோபதி மருத்துவம் கால் பெருவிரல் இதயத்தில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால்தான் கால் பெருவிரல் இரத்தம் கிடைக்காமல் புண் வருகிறது என்று கற்றுத் தருகிறது.அதையே அல்லோபதி மருத்துவர்களும் சொல்லி வருகிறார்கள்.

ஆமாம் நான் கேட்கிறேன் இத்தனை நாளும் அதே தூரத்தில் இருந்த கால் பெருவிரல் நகம் சர்க்கரை நோய் வந்தவுடன் இதயத்தில் இருந்து மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம், அதிகம் ஆகிவிட்டதா!சர்க்கரை நோய் வருவதற்கு முன்னாலும் பின்னாலும் தூரம் மாறாதபோது எப்படி இந்த விஷயம்(LOGIC)சரியாக இருக்க முடியும்.

இப்படி முட்டாள்தனமான கோட்பாடுகளைக் கொண்ட அல்லோபதி வைத்தியத்தை மக்கள் பின்பற்றி அதன் பக்க விளைவுகளையும்,பின் விளைவுகளையும் பார்க்க பார்க்க கண்களில் இரத்தக் கண்ணீர்தான் வருகிறது.'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்' என்ற பாரதியாரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

புண் வந்து எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாதபோது,(ஏனெனில் அல்லோபதி மருந்துகள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உபயோகித்துத்தான் குணப்படுத்தும்.அதற்கென தனியாக எந்த குணப்படுத்தும் சக்தியும் கிடையாது)கால் பெருவிரலை வெட்டி எடுப்பதோ,காலையே வெட்டி எடுப்பதோ நடக்கும்.பாவம் சர்க்கரை நோயாளர்கள்.


சர்க்கரை நோயாளர்களுக்கு புண்,மற்றும் புரை வரும்போது மத்தன் தைலம் என்ற தைலம்,TAMPCOL,IMPCOPS போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான மருந்து.இதை வெளிப் பிரயோகமாக பிரயோகித்து புண்ணை ஆற்றிக் கொள்ளலாம்.


அல்லோபதி மருத்துவத்தில் உபயோகிக்கும் மருந்துகளில் பல ANTI-BIOTIC.அதாவது உயிர்ச் சக்திக்கு எதிரானது என்று பொருள். அப்படி உயிர்ச் சக்திக்கு எதிரானதை தலைவலி,காய்ச்சல்,உடல்வலி(நமது உயிர்ச்சக்தி கிளர்ந்து எழுவதே இவை) போன்றவற்றிற்கு உபயோகித்து,நமது உடலில் உள்ள  உள்ளுறுப்புகளை சேதாரம் ஆக்கி பல பெரிய வியாதிகளை வலுவில் வாங்கிக் கொள்கிறோம்.

மண்ணீரல் மற்றும் கல்லீரல்(SPLEEN,LIVER), பூச்சி மருந்தடித்த,உரம் போட்ட உணவுகளை உண்பதாலும், அல்லோபதி மருந்துகளை உண்பதாலும் சீரழிகிறது.அதுவே இந்த உறுப்புகளின் சக்திப் பாதையில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக PARACETAMOL என்பது PARA- ACETO-AMINO-PHENYL ஆகும்.அதன் பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகளைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்.


அப்போ அல்லோபதி மருந்துகள் சாப்பிடாவிட்டால் எப்படி வியாதிகளை குணப்படுத்திக் கொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.பதிவுகளைப் பாருங்கள்,அனைத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதில்கள் கொடுத்து வருகிறேன்.பயன் பெறுங்கள்.
  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்


  

Post Comment

17 comments:

  1. சூப்பர் சாமீ ஜி அருமையான விளக்கம்

    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  2. எனக்கு கடந்த 7 ஆண்டுகளாக எதிரி செய்த பில்லி சூன்யத்தின் காரணமாக
    வலது காதில் தொடர்ந்து 24 மணி நேரமும் இரைச்சல்
    (tube லைட்ல choke இல்லைனா வருமே ஒரு சவுண்ட்)
    கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நானும் பார்க்காத ent டாக்டர் இல்ல மாத்திரை சாபிட்டால்
    அலர்ஜி ஆகின்றது

    இதற்க்கு மருத்துவம்
    சொல்ல முடியாமா சாமீ ஜி

    ReplyDelete
  3. ஐயா தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. தாங்கள் சித்த மருத்துவம் மூலம் தீராத மாலைக்கண் நோயை குணப்படுத்தியது பற்றி எழுதியுள்ளதை படித்தேன் என்னால் நம்ப முடியவில்லை சித்த மருத்துவம் மூலம் இதெல்லாம் சாத்தியம் தானா. இதன் அருமைகளை உணராமல்தான் நாம் இவ்வளவு ஆண்டுகளாக ஆங்கில மருத்துவத்தை பின்பற்றுகிறோமா. திரு. சாமீ ஐயா அவர்களே எனக்கு பிறவியிலிருந்தே இரண்டு காதுகளும் கேளாது. எவ்வளவோ ஆங்கில வைத்திய முறைகளை செய்தும் சரியாகவில்லை, அறுவை சிகிச்சை செய்தாலும் குணமாகாது என ஆங்கில மருத்துவம் கைவிட்டுவிட்டது எனவே எனது இடது காதில் காதொலி கருவியை 12 வயது முதல் தற்போது(31 வயது) வரை பயன்படுத்தி வருகிறேன். எனது வலது காது முற்றிலும் கேட்காது. இடது காதில் கருவி பொருத்தினால் தான் நன்றாக கேட்கும். எனக்கு காதொலி பெற சித்த மருத்துவத்தில் ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா. தாங்கள் அதுபற்றி அறிந்திருப்பின் தயவு செய்து எனக்கு தெரிவிக்கவும். தங்களின் மருத்துவத்தால் நான் காதொலி பெற்றால் என்றென்றும் நான் தங்களுக்கு சேவகனாக இருப்பேன். மருத்துவ செலவு எவ்வளவு ஆனாலும் செய்ய தயாராக உள்ளேன். தயவு செய்து எனக்கு பதில் தரவும். நன்றி.

    ReplyDelete
  4. ஐயா எனது மின்னஞ்சல் முகவரி தர மறந்துவிட்டேன்.
    கீழே கொடுத்துள்ளேன். தயவு செய்து எனக்கு விபரம் அனுப்பவும். நன்றி.

    email : manidakshu@gmail.com

    ReplyDelete
  5. " அருமை மிக அருமை .,கோடான கோடி புண்ணியம் தங்களையே சாரும் "

    "S.மணிகண்டன்," அவர்களுக்கு உரிய திர்வினை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .!!!

    ReplyDelete
  6. அய்யா, ஒரு சின்ன திருத்தம். இது பாகம் 7. Raghav

    ReplyDelete
  7. திரு. புலிப்பாணி அவர்களுக்கு எனது நன்றிகள் பல. தாங்கள் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி. திரு.சாமீ அழகப்பன் அவர்கள் எனக்கு சரியான தீர்வினை தருவார் என நம்புகிறேன். நன்றி.

    S. மணிகண்டன்
    நெய்வேலி.

    ReplyDelete
  8. எனக்கு கடந்த 7 ஆண்டுகளாக எதிரி செய்த பில்லி சூன்யத்தின் காரணமாக

    வலது காதில் தொடர்ந்து 24 மணி நேரமும் இரைச்சல்(tube லைட்ல choke இல்லைனா வருமே
    ஒரு சவுண்ட்)
    கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நானும் பார்க்காத ent டாக்டர் இல்ல மாத்திரை சாபிட்டால் அலர்ஜி ஆகின்றது

    இதற்க்கு மருத்துவம்
    சொல்ல முடியுமா சாமீ ஜி

    மிகுந்த ஆவலுடன் இரண்டு நாட்களாக உங்கள் வலைப்பதிவை மிகுந்த ஆவலுடன் தங்கள் பதிலை
    எதிர்நோக்கும்

    உங்கள் அன்பன் ஷரீப்
    bawashareef786@gmail.com

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரிஃப் அவர்களே, இறைவனுக்கே நன்றி.தங்களைப் போன்றவர்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படுத்திய இறைவனுக்கு என் நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி,ஷரீஃப் அவர்களே, மக்கள் குறை தீர்ப்பதே கடமை என்று இறைவன் விதித்த பின் எங்கு மக்கள் துயர் கண்டவுடன் துடைக்கவே நான் தயாராக உள்ளேன்.இது போல செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்றவற்றால் துயர் உறும் நமது நேயர்களுக்காக எனது தாத்தாவும் பாண்டியூர் சித்த ஞான சபையின் ஸ்தாபகருமான திருமெய்த்திரு கோட்டைச் சாமி அய்யா அவர்களின் ஆசியுடன் ஒரு பதிவை பதிவிடுகிறேன்.பார்த்து உய்ய வேண்டுகிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. ஐயா மணி கண்டன் அவர்களே,
    தங்களுக்கு பதில் தங்கள் மெயிலுக்கு எனது தொலைபேசி எண்ணும் அனுப்பி வைத்துள்ளேன்.பேசவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  12. கருத்துரைக்கு மிக்க நன்றி திருராகவன் சாமீ அவர்களே, அழகுத் தமிழில் எழுதியதற்கு நன்றி.உங்கள் கருத்துப்படியே அக்கு பஞ்சர் அறிவோமா பாகம் 7 ஆக மாற்றப்பட்டுவிட்டது. முளைக்கட்டிய பாசிப்பயறு பற்றியும் அதன் சக்தி பற்றி தனிப் பதிவிட இருக்கிறேன்.இடுகைகளை கவனித்து வாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    By

    ReplyDelete
  13. திரு. சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு எனது நன்றிகள். தங்களின் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். தாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
    நன்றி
    S. மணிகண்டன்

    ReplyDelete
  14. மிக்க அருமையான பதிப்பு ஐயா.
    எனக்கு ஒரு சந்தேகம், மன்னீரல் மற்றும் கல்லீரல் சக்தியை அதிக படுத்த என்ன உனவு உட்கொல்லாம்?

    ReplyDelete
  15. மிக்க நன்றி சாமீ ஜி
    மிக விரைவில் தீர்வினை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  16. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு Srikkanth அவர்களே, கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் தனித்தனியாக சுவைகள் உள்ளன,அவற்றின் அடிப்படையில் உணவுகள் உள்ளன.அக்கு பஞ்சர் அறிவோமாவில் அவை ஒரு பதிவாக வெளியிடப்படும்.இடுகைகளை கவனித்து வாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  17. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷெரீஃப் அவர்களே உறுதியாக உங்களுக்கு பதிவு உண்டு.இடுகைகளை கவனித்து வாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்