மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, November 23, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 3


நமது முன் பதிவான இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் http://machamuni.blogspot.com/2010/10/blog-post.html என்ற பதிவில் குறிப்பிட்டது போல இம்மாதம் நவம்பர் 19,20,21 ம் தேதி நடந்த இயற்கை நல வாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.


மிக மிக அற்புதமான அனுபவம்,எத்தனையோ பேர்கள் இயற்கை உணவு என்றால் என்னென்னவோ விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.ஆனால் திரு மூ.ஆ.அப்பன் அவர்கள்,கொடுக்கும் விளக்கம் போல இது வரை கேட்டதுமில்லை.கண்டதுமில்லை.
NATURAL FOOD SHOULD BE IN NATURAL FORM.அதாவது இயற்கையில் உள்ள உணவு இயற்கையாகவே அதன் வடிவம் தன்மை மாற்றப்படாமல் மனிதர்களுக்கு தரப்பட வேண்டும். அவ்வாறே உண்ணப்படவும் வேண்டும். 

திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள குறள்கள் அனைத்தும் மருந்தைப் பற்றி இல்லை.உணவைப் பற்றியும் நோயணுகா விதியைப் பற்றியும்,எது செய்ய வேண்டும்(நியமம்),எது செய்யக்கூடாது (இயமம்) என்பது பற்றியும்தான் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
941
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
943
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
945
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
947
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.
950 இதில் 
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

என்ற குறளை எடுத்து திரு மூ.ஆ.அப்பன் அவர்கள் சொன்னது,பிறந்ததில் இருந்தே இயற்கையில் இருந்து மாறுபாடு இல்லாத வடிவத்தில் கிடைக்கும் உணவை மட்டுமே உண்டால் உயிருக்கு ஊறுபாடில்லாமல் சாகாமல் வாழலாம்.மற்ற உணவை மறுத்துண்டு வாழ வேண்டும்.இவ்வாறு வாழ்ந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்கிறார் இந்த தேங்காய்ப் பழச் சித்தர்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்