மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, November 14, 2010

அன்புக்குரிய அன்பருக்கு ஓர் இரங்கல்

என் அன்புக்குரிய அன்பர் திரு அருணாசலம் அவர்கள் காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் மருந்தாளுநர் ஆக பணி புரிந்து வந்தார்.அவர் ஒரு அருமையான நண்பர்.தன்னலமில்லாத அருமையான மனிதர்.

இந்தக் காலத்தில் அரசுத் துறையில் கையூட்டு பெறாமல் பலருக்கும் உதவிய கரங்கள் இவர் கரங்கள்.இப்படி ஒரு தன்னலமில்லாத மனிதரை நான் வாழ் நாளில் பார்த்ததில்லை.


அவர் இளமைக் காலத்தில் தந்தை இல்லாமல் கடும் கஷ்டப்பட்டு தானே வேலை பார்த்து படித்துபாளையங் கோட்டையில் சித்த மருந்தாளுநராக படித்து அவரே பணியில் அமர்ந்தவர்.  அவர் இன்று மதியம் 2.30 க்கு இறைவனடி சேர்ந்தார்.


இவர் மகன்கள் இருவரும் இன்னும் எந்தப் பணியிலும் அமரவில்லை.அவருக்கு இந்த துயரம் அவர் இறக்கும் வரை கடுமையாக இருந்தது.

இவரின் மூத்த மகன் திரு அ.இராஜ நாயகம் கம்யூட்டர் படிப்பில் M.C.A படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறார்.அவருடைய கைபேசி எண் கீழே உள்ள எண்களில் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எண்+919942707400.அவருக்கு உதவும் மனம் உள்ள அன்பர்கள் யாரேனும் இருப்பின் அவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவவும்.

அவர் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு இது பேருதவி புரிந்ததாகும்.     

அவருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கலை என் குடும்பத்தாருடன், கண்களில் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்.
அவர் சபை அன்பர். எனவே சபை அன்பர்கள்(மட்டுமல்ல எல்லோரும்) அவர் பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலை கீழ்க் கண்ட எண்ணில் தெரிவிக்கலாம்.
+919788981005
+919842056820
+919942707400

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்    

Post Comment

4 comments:

 1. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அந்த துயரத்தில் இருந்து மீளவும்,உங்கள் நண்பரின் மகனுக்க்கு நல்லதொரு வேலை கிடைத்திடவும் எல்லாம் வல்ல குருநாதரை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 2. இரங்கலுக்கு மிக்க நன்றி திரு தோழி அவர்களே,தங்கள் தங்கள் இரங்கல் அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. அன்பர் ,திரு அருணாசலம் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறேன் ., அவரின் மகன் ராஜ் அவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்க சித்தரை பிராத்திக்கிறேன் .,

  ReplyDelete
 4. இரங்கலுக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,தங்கள் தங்கள் இரங்கல் அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.உங்களைப் போல் பலரும் தங்கள் இரங்கலை அலைபேசியின் மூலமும்,மின்னஞ்சல் மூலமும் தெரிவித்துள்ளார்கள்.தெரிவித்துக் கொண்டும் உள்ளார்கள்.அவர்களுக்கும் என் நன்றி.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்