மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, September 5, 2010

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2

சென்ற வலைப்பூ வெளியீட்டில் கொடுத்துள்ள இரச மணியை எந்த விதமான நஞ்சையும் முறிக்க உபயோகிக்கலாம்.எந்தக் கடியாக இருந்தாலும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும் .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து பாலில் போட அது நீலநிறமாக மாறும்.

பிறகு மீண்டும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும்  .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து வேறு புதிய பாலில் போட அது நீலநிறமாக மாறும்.இதே போல் சில முறை செய்ய கடைசி முறையில் கடிவாயில் எப்போது ரச மணி ஒட்டாமல் இருக்கிறதோ அப்போது நஞ்சு முழுவதும் நீங்கிவிட்டது என்று பொருள்.

நீல நிற்மாக மாறிய பால் நஞ்சு நிறைந்தது ,எனவே அதை கவனமாக குழி தோண்டி அதில் ஊற்றி மூடிவிடவும்.பிறகு அவருக்கு சுக்குக் கஷாயத்தில் சிறுதும்பை சேர்த்து கொதிக்க வைத்துக் கொடுக்க மீதி ஏதேனும் விஷம் இருந்தாலும் அதுவும் முறிந்துவிடும்

சித்தர்கள் ரசமணியை பலவிதமாக வர்ணிக்கிறார்கள்.பலவிதமான ரசமணியைத் தயாரிக்கும் விதம் பற்றியும் விவரிக்கிறார்கள்.முதலில் சாதாரண மனிதர்கள் நினைப்பது போல் நானும் சித்தர்கள் சொல்லும் விஷயங்கள் சாத்தியம் இல்லாதது ,நம்ம விஞ்ஞானிகள் பாணியில் சொல்வதானால் டுபாக்கூர் என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் சித்தர்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை பரீட்சை செய்து பார்த்தவுடனே எனது அபிப்பிராயம் முழுவதும் மாறி எனது வாழ்க்கைப்பாதையே சித்தர்கள் பாதையில் மாறிவிட்டது.இப்போது இரசமணியின் வகைகளைப் பார்ப்போம்.

சப்தவேதி இரசமணி என்பது அதனிடம் இருந்து வரும் சப்தத்தால் சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தங்கமாக்கும்.என்னங்க சப்தம் தங்கமாக்குமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

" BIG BANG THEORY "  என்பது ஒரு பெருவெடிப்பினால்தான் இந்த கேலக்ஸி என்ற அண்ட பேரண்டங்களே உண்டானது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.அந்த அண்ட பேரண்டங்களையும் தோற்றியது 'ஓம்காரம்' என்று சித்தர்கள் சாத்திரம் கூறுகிறது.இதோ உங்களுக்காக ஒரு யூ ட்யூப் வீடியோ,    


சப்தம் அண்ட பேரண்டங்களையே உண்டாக்கியது என்றால் ,கேவலம் தங்கத்தையா உருவாக்காது? இந்த சப்த வேதி இரசமணி அதன் சப்தம் கேட்குமிடம் வரை உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கமாகும்.

இது போல் ஸ்பரிச வேதி இரசமணி எந்தப் பொருளைத் தொட்டாலும் அந்தப் பொருள் தங்கமாகும்.
கவுனமணி வாயில் ஒதுக்கி அது வாயில் இருக்கும் போது ஊரும் எச்சிலை விழுங்கி வர உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஒதாமல் உணரலாம்.கவுனமணி பற்றி சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி அவரது வலைப்பூவில் விவரமாக கொடுத்துள்ளதால் இங்கு அதை விவரிக்காமல் விடுகிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

  1. தமிழகத்தின் பெருமை தமிழர்ன் பெருமை பேசுகிறது இந்த இனைய பக்கம். http://pesumprapancham.blogspot.com

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்