மொழி பெயர்ப்புக் கருவி

Friday, September 10, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 2

சென்ற மடலில் நாம் அக்கு பஞ்சரில் இரண்டு முக்கிய சக்திப் பாதைகள்(GOVERNING VESSELLS ) நமது நடு நாடிகளான இடகலா,பிங்கலா,சுழிமுனை என்பவை நமது முதுகுத்தண்டு வடத்தின் நடுவே அமைந்துள்ளன.
இவையே ஞானத்திற்கு உதவுபவை.இவையே காமத்திற்கும் உதவுகின்றன.

 பிறப்புறுப்பில் ஆரம்பித்து உதட்டின் கீழ் உள்ள இடத்தின் வரை செல்வது (REN-MERIDIAN) ரென் மெரிடியன்.குதத்தின் அருகில் ஆரம்பித்து உச்சந்தலை வழியாக மேல் உதடு வரை வருவது டூ மெரிடியன் (DU-MERIDIAN) ,ஆகையால் இவை இணையும் இடங்களில் உடல் இணையும் போது சக்தி ஓட்டப் பாதை பூர்த்தி ஆகி இன்பம் உண்டாகிறது.அதாவது உடலுறவின் போது பிறப்புறுப்புக்கள் இணைவதாலும் , உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடும் போதும் இன்பம் கிளர்ந்தெழுகிறது.

இந்த இரண்டு முக்கிய சக்திப் பாதைகள் சுய இன்பத்தின் போதும் இணைகின்றன.. ஒரு பேட்டரியின்(ஒரே உடலில்) பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் முனைகளைச் சேர்த்திணைத்தால் மிகஅதிக மின்னோட்டம்(I=V/R=V/0= INFINITE CURRENT FLOWS) ஏற்பட்டு அந்தப் பேட்டரி சக்தியிழந்துவிடுவதைப் போல, இது குற்றிணைப்பாகி (SHORT CIRCUIT) ஆகி உடலின் சக்திப்பாதைகள் தன் சக்தியை வெகு சீக்கிரம் இழந்துவிடும்.உயிர் வாழ்வதற்கு ஆதாரமான கடவுளின் சக்தி(VITAL FORCE) 'QI' சீக்கிரம் தீர்ந்து மரணமும் வெகு சீக்கிரம் நெருங்கி வந்துவிடும்.

 அதே போல உடலுறவின் போது இருபேட்டரிகள் (இரு உடல்கள்)சேர்ந்திணைப்பு(SERIES CONNECTED) இணைக்கப்பட்டு மின்தடை இணைக்கப்பட்டு இருப்பதைப் போல மட்டுப்படுத்தப்பட்ட மின்னோட்டம் ஏற்பட்டு இன்பம் ஏற்படுகிறது.இந்த இன்பமும் அடிக்கடி துய்க்கப்படும் போது உடல் நலம்,ஆன்ம பலம்,இவை குறையும். ஆனால் சுய இன்பத்தில் செலவாகும் அளவு செலவாவதில்லை.ஆனாலும் இங்கும் செலவு என்பது உண்டு.

எனவேதான் சித்த வத்திய நோயணுகா விதிகளில்
1) ஒரு நாளுக்கு இருமுறை (மலம் கழிக்க வேண்டும்)(கழிவுகள் அன்றன்று வெளியேறியே ஆக வேண்டும்.மலம் கழிக்கும் முன் மூன்று முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு மலமோ,சிறுநீரோ கழித்தால் அனைத்துக் கழிவுகளும் வெளியேற்றப்பட்டு உடலும் குடலும் சுத்தமாகும்)

2) ஒரு வாரத்துக்கு இருமுறை( புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும்)(தோலில் உள்ள அக்கு பஞ்சர் புள்ளிகள் அனைத்தும் ஈரத்தன்மையோடு வைக்கப்பட்டால்தான் அவை வான் காந்தத்தின் சக்தியை ஈர்த்து உடலின் சக்தியோட்டப் பாதையில் கடத்தப்பட்டு(CONDUCTIVITY)  உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.அப்படி இருந்தால்தான் உடலுக்கு நோய் எதுவும் வராமல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

3)ஒரு மாதத்திற்கு இருமுறை மட்டுமே உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.(காமத்தினால் உடலின் சக்தி விரயமாகிறது எனவே இனவிருத்தி முடிந்தவுடன்(அதாவது தேவையான குழந்தைகள் பிறந்தவுடன்) உடலுறவை  மாதத்திற்கு இருமுறை என்று ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏனெனில் 21 நாட்களுக்கு மேல் தேக்கப்பட்ட விந்து நோய் செய்யும்.எனவேதான் 15 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு)

4)ஒரு வருடத்திற்கு இருமுறை பேதி மருந்துகளைச் சாப்பிட்டு குடல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (உடலில் சேரும் கழிவுகள் பேதியின் மூலம்  வெளியேற்றியே தீர வேண்டும்.இதற்கு அகஸ்தியர் குழம்பு, கௌசிகர் குழம்பு,கோரோசனை மாத்திரை, பால சஞ்சீவி மாத்திரை,கஸ்தூரி எண்ணெய் போன்றவற்றையே உபயோகிக்க வேண்டும்).

எந்த விலங்கினமும் வருடம் முழுவதும் உடலுறவு இச்சையுடன் இருப்பதில்லை.(எ-கா நாய்கள் புரட்டாசி மாதம் மட்டுமே உடலுறவு வேட்கையுடன் இருக்கும்).மனிதன் மட்டுமே உண்ணும் அறுசுவை உணவுகளாலும், பகுத்தறிவாலும் எப்போதும் வாரிசுகளை உண்டாக்கும் வல்லமையை இயற்கை தந்திருக்கிறது.

எனவே இந்த சக்தியை நெறிப்படுத்தி அளவோடு உபயோகித்தால் மட்டுமே நோயின்றி வாழ முடியும்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நன்றி
சாமீ
அழகப்பன்

Post Comment

3 comments:

 1. Ayya
  Vanakkam,
  This boovargan ( manjula ) from srirangam.
  How to increase life force by using mulaikattiya paasi payaru?

  what is the procedure for participate in 19th Naturopathy porgramme in kulasekarapattinam.
  is it very near to Thiruchendur.
  Where to accomodate?

  ReplyDelete
 2. Ayya,
  Vanakkam, this is boovaragan, srirangam.
  Shall i keep seeragam and vendayam in water at night and drink that water in the morning?
  how much quantity daily to use?
  while taking seeraga / vendaya water in the morning whether to eat the seeragam and vendyam also or to remove it?

  ReplyDelete
 3. ஐயா பூவராகவன்& மஞ்சுளா அவ்ர்களே, எனது வலைப் பூவில் SUBSCRIBE VIA E-MAIL என்ற கட்டத்தில் உள்ள ENTER YOUR EMAIL ADDRESS என்ற இடத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியை ஒட்டிவிடவும்.தானாகவே எனது இடுகைகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை,தேடி ஓடி வரும்.தங்களின் கேள்விக்கு பதில்,சீரகமும் வெந்தயமும் இரவில் ஊற வைத்து காலையில் அவற்றை நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தவும்.அடுத்த மாதம் 19 ம் தேதி நடக்கும் இயற்கை நல்வாழ்வு முகாமுக்கு ரூபாய் 500/= நுழைவுக் கட்டணம்,தங்குமிடம் இயற்கை உணவு உட்பட அனைத்தும் சேர்த்தேதான்.எனவே தங்குமிடத்தைப் பற்றிய கவலை தங்களுக்கும்,எனக்கும் இல்லை.திரு ஆனை அப்பன் ஐயா அவர்களுக்குத்தான் அந்தக் கவலை.தற்போது திரு ஆ.அப்பன் அவர்கள் காலில் மூன்றாவது க்ட்டுப் போட்டிருக்கிறார்,அவ்ர் நலம் பெற இறைவனிடம் வேண்டுவோம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  அன்பன்
  சாமீ அழகப்பன்
  By சாமீ அழகப்பன் on அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 2 on 10/19/10

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்