மொழி பெயர்ப்புக் கருவி

Friday, September 10, 2010

நமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்

மேலே உள்ள புத்தகத்தில் உள்ள வருடம் என்ன என்பது தெரிகிறதா? ௲=1000,௭=7,௮=8,௬=6,எனவே=சாலிவாகன சஹாப்தம் 1786 ம் வருடம்.இப்போது சாலிவாகன சஹாப்த வருடம் என்பது 1932.எனில் அந்தப் புத்தகத்தின் வயது =1932-1786= 146 வருடம்.இதை எதற்காகத் தருகிறேன் என்றால் தமிழ் எண்கள் பற்றித் தெரியாமல் ஏட்டுப் பிரதிகளைப் படிக்கவே முடியாது .ஏனெனில் ஏடு நேராக இருக்கிறதா, தலைகீழாக வரிசை உள்ளதா என்பதை பக்க எண்களை வைத்தே கண்டு பிடிக்க இயலும்.
சுவாரசியமாக இருக்கிறதா ?
1   2  3  4  5  6   7  8  9  10  1001000
௧௨௩௪௫௬௭௮௯௰௱௲


 • ௧ = 1
 • ௨ = 2
 • ௩ = 3
 • ௪ = 4
 • ௫ = 5
 • ௬ = 6
 • ௭ = 7
 • ௮ = 8
 • ௯ = 9
 • ௰ = 10
 • ௰௧ = 11
 • ௰௨ = 12
 • ௰௩ = 13
 • ௰௪ = 14
 • - 2 -
 • ௰௫ = 15
 • ௰௬ = 16
 • ௰௭ = 17
 • ௰௮ = 18
 • ௰௯ = 19
 • ௨௰ = 20
 • ௱ = 100
 • ௨௱ = 200
 • ௩௱ = 300
 • ௱௫௰௬ = 156
 • ௲ = 1000
 • ௲௧ = 1001
 • ௲௪௰ = 1040
 • ௮௲ = 8000
 • ௰௲ = 10,000
 • ௭௰௲ = 70,000
 • ௯௰௲ = 90,000
 • ௱௲ = 100,000 (lakh)
 • ௮௱௲ = 800,000
 • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
 • ௯௰௱௲ = 9,000,000
 • ௱௱௲ = 10,000,000 (crore)
 • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
 • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
 • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
 • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
 • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
 • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

[தொகு]

நமது பழம் பெரும் நூல்கள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு(மேலே உள்ள புத்தகம் 1884 வருடத்தியது) முன் உள்ள நூல்கள் என்னிடம் பல உள்ளன.அவற்றை மின் நூலாக்க நகல்(SCAN) எடுக்கும் போதே அவற்றை எழுத்து வடிவாக மாற்ற(TEXT DOCUMENT) தமிழில் ஏதாவது மென்பொருட்கள் உள்ளனவா?தயவு செய்து யாராவது உதவவும் அவை அனைத்தும் இந்த வலைப் பூவில் வெளியிடவே!மேலே கண்டுள்ள வலைப்பூ இணைப்பை நமது அன்பர்கள் கண்டு நிறைய விஷயங்களை தெரிந்து தெளிய வேண்டும் என்பது என் மற்றும் அந்த வலைப்பூ நிறுவனர் தோழி அவர்களின் அவா! மற்றும் வேண்டுகோள்.
'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குக் சேர்ப்பீர் ' என்று பாரதி பாடினார்.நாம் புதியதாக கொண்டு வராவிட்டாலும் இருப்பதையாவது காப்பாற்றி வைப்போம்.
நன்றி
இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

3 comments:

 1. There are some Optical Character Recognition based scan softwares available. They can take scanned PDF based files as input and convert them into text based document. They are available for english and other languages so far. Not sure about conversion of scanned docs to tamil text based document. Probably you can have a look at following links:

  http://www.documentlocator.com/capabilities/document-scanning.htm
  http://www.google.com/apps/intl/en-GB/business/docs.html
  http://finereader.abbyyonline.com/en/Account/Welcome
  http://www.irislink.com/c2-1584-189/Readiris-12---OCR-Software-------Convert-your-Paper-Documents-into-Editable-Text-.aspx
  http://www.free-ocr.com/
  http://www.nuance.com/for-business/by-solution/document-imaging-and-scanning/index.htm
  http://www.cvisiontech.com/file-formats/scanned-documents/convert-scanned-document-to-text.html?lang=eng

  ReplyDelete
 2. பழைய நூல்களில் நடைமுறையில் இருக்கும் எழுதுருக்களைத் தாண்டி பழைய முறை எழுத்துக்கள், எண்கள் இருக்குமாகையால் உங்களுக்கு தமிழ் OCR மென்பொருள் கிடைத்தாலும் பிழைகள் பல வர வாய்ப்புண்டு. அதனால் SCAN செய்து PDF ஆக வைத்துக்கொள்வதே சிறந்த வழி.

  ReplyDelete
 3. இது போன்ற நூல்களின் தொகுப்பு இருந்தால் உங்களை நேரில் சந்தித்து ஜெராக்ஸ் நகல் பெற்றுக்கொள்கிறேன் .இதை புதிய வடிவில் வெளியிடலாம் .இப்படிக்கு டாக்டர்.ராம .சிவா.எனது மொபைல் எண் :9840776195 தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் .

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்