மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, September 15, 2010

மனப் பெரு வெளி(1)






மனப் பெருவெளி என்பது நம் மனங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ள '''உலகப் பெரு மனமே''' ஆகும்.இந்த மனப் பெருவெளியில் நம் எண்ணம், சொல் ,செயல் இவற்றால் செய்யும் காரியங்களின் அழுத்தம் பதிவாகிறது.நாம் செய்யும் காரியங்களின் நேர் விளைவுகளையும்(POSITIVE ACTION), எதிர் விளைவுகளையும்(NEGATIVE ACTION) தீர்மானிப்பது இந்த மனப் பெருவெளியே.

மெஸ்மரிசம்(MESMERISM),ஹிப்னாடிசம்(HYPNOTISM),ஏவல் பில்லி சூனியம் என்பவற்றை(PSYCHIC ATTACKS)செயல்படுத்தவும் இதுவே தொடர்புக் கருவியாக வேலை செய்கிறது . ஆனால் மனப் பெருவெளி இந்தத் தொடர்பை மட்டுமல்லாமல் இந்தத் தொடர்பால்,விளைவிக்கப்படும் விளைவுகளையும் பதிவு செய்கிறது,அந்த விளைவுகளால் உண்டாகும் பதில் விளைவுகளையும் உண்டாக்குகிறது (EVERY ACTION HAS AND EQUIL AND OPPOSITE REACTION-NEWTONS THIRD LAW,கர்ம(வினை செயல் வகை என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளவை இதுவே) வினைகளின் பதில் கர்மங்களை உண்டாக்குவது . மெஸ்மரிசம்(MESMERISM) , ஹிப்னாடிசம் (HYPNOTISM) , போன்றவற்றை நல்வழிகளுக்கு உபயோகிக்கும் போது நேர் விளைவுகளையும் (POSITIVE ACTION) , தீய வழிகளுக்கு உபயோகிக்கும் போது எதிர் விளைவுகளையும் ( NEGATIVE ACTION ), உண்டாக்குகிறது.

இதையே

 '''கணியன் பூங்குன்றனாரின்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா'''

'''யாதும் ஊரே யாவரும் கேளிர்'''  என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்கப்பட்டுள்ளது.'தீதும் நன்றும் பிறர் தர வாரா'என்பதற்குப் பொருள் நமக்கு வரக் கூடிய நல்ல விஷயங்களும் ,கெட்டவிஷயங்களும் மற்றவர் நமக்குச் செய்பவை அல்ல.நாமே நமக்கு விளைவித்துக் கொள்வது என்பவை இந்த தமிழ் சித்தர்களின் அக உளவியலின் அடிப்படையிலேயே கூறப்பட்டவை. அக உளவியலில் நம் தமிழ் மரபுச் சித்தர் பெரு மக்களின் பங்கு மகத்தானது.
சித்தர் சிவ வாக்கியர்
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா!
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா! 
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

இந்திய ஆயுர் வேத யோக சாஸ்திரம் இதை நன்கு விளக்குகிறது.செய்வினை,ஏவல் பில்லி சூனியம் என்பவற்றை(PSYCHIC ATTACKS),எண்ண விதைப்பு (MIND SEEDING) என்பவற்றை நம் எண்ணம், சொல் ,செயல் இவற்றால் அழுத்தம் கொடுக்க  விளைகிறது .ஆனால் இவை செய்யும் போது அதன் பலன்களையும்   மனப் பெருவெளி விளைவிக்கிறது என்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அக மன உளவியல்(PARA PSYCHOLOGY),MIND SEEDING என்பவை இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே.
நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

Post Comment

1 comment:

  1. It is very useful for the real inner seekers for
    the ever living eternal truth. wonderful , good
    informations. But please use normal font & mild
    colours, Because it is difficult for reading in
    many colours, big fonts.

    Vaazhga valamudan. Always the divine & siddhars will help for extend your service to many & many

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்