மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, September 7, 2010

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 1

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள்    உடலில் உள்ளன.அவை சித்த தத்துவத்தின் அடிப்படையில் சஹஸ்ராரா சக்கரம் நீங்கலாக ஆறு ஆதாரங்களாகக் கொண்டுள்ளது.

இதையே விநாயகர் அகவலில்

'ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
 பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே'

நமது முதுகுத்தண்டு(தூண்)வடத்தின் உள்ளே இடகலை,பிங்கலை,சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிஷத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் சஹஸ்ராரா,ஆக்ஞா, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன.அடுத்துள்ள அனாகதம்,மணிபூரகம்,சுவாதிஷ்டானம், இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது.
இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இலங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன.
இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன.இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன.(படு வர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்) இவை தமிழ் மருத்துவத்தின் அக்கு பஞ்சர் போன்ற சிகிச்சைப் புள்ளிகள்.  

அக்கு பஞ்சர் என்பது லத்தீன் மொழியில் உள்ள அகுஸ் (ஊசி)பஞ்சர் (குத்துதல்) என்ற வார்த்தைகளால் உருவான சொல்லாகும். சீன மொழியிலும் ஷான் ஷியு என்றால் ஊசி மருத்துவம் என்றே பொருள்படுகிறது.


அக்கு பஞ்சர் விஞ்ஞானத்தில் இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு சக்தியோட்டப் பாதைகளே மிக முக்கியமான சக்தி ஓட்டப் பாதைகள்(GOVERNING VESSELLS ).இனி இந்த சக்தி ஓட்டப்பாதைகளை G.V என அழைப்போம்.
இதில் கீழே கொடுத்துள்ள படங்களைப் பார்த்தால், பிறப்புறுப்பில் ஆரம்பித்து உதட்டின் கீழ் உள்ள இடத்தின் வரை செல்வது (REN-MERIDIAN) ரென் மெரிடியன்.குதத்தின் அருகில் ஆரம்பித்து உச்சந்தலை வழியாக மேல் உதடு வரை வருவது டூ மெரிடியன் (DU-MERIDIAN).


இவ்விரு சக்தி ஓட்டப் பாதைகளும் நமது சக்கரங்களை இணைக்கிறது.இதன் மூலமே தாவோவின் யோகம் பணியாற்றுகிறது.
இந்த இரு சக்தி ஓட்டப் பாதையின் சக்தி நமது உள்ளுறுப்புக்களுக்கு 12 சக்தி ஓட்டப் பாதைகளின் வழியே ஊட்டப் படுகிறது.அந்த இயற்கைச் சக்தியே நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான கடவுளின் சக்தி(VITAL FORCE).அது 'QI' என்றழைக்கப்படுகிறது.
இரு விதமான சக்திகளை உடல் ஏற்கிறது.ஒன்று உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE).மற்றொன்று கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE). இதில் உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE) என்னதான் கொடுக்கப்பட்டாலும் கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு கிடைக்காவிட்டால் அது உயிர் வாழாது.

கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு கிடைக்காவிட்டால்(இதற்குப் பல காரணங்கள் உண்டு). உயிர் போய்விடும் என்ற பயத்தில் உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE) உடலில் அதிகம் சேகரிக்கப்படுகிறது.எனவே உடல் குண்டாகிறது.உடல் நோயுறுகிறது. இறப்பு என்னும் மரணம் நெருங்குகிறது.மீண்டும் கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு அளிக்கப்படுமானால் உடலும் மெலியும்.ஆயுளும் நீடிக்கப்படும்.இறப்பு என்னும் மரணம் தள்ளிப் போடப்படும்.
ஒரு குறிப்பிட்ட அளவு உடல் வளர்ந்தவுடன் உணவுச் சக்தி இல்லாமலேயே வாழலாம். இதையே சித்தர் தத்துவங்களில் நோய்,பசி,தாகம்,தூக்கம்,மரணம் இவற்றை படிப்படியாக வெல்லலாம்.உடல் பொதுவாக நோய் வாய்ப்படும் இயல்புள்ளது.இதை நோய் அணுகா விதிகளை கடைப் பிடிப்பதன் மூலம் நோய்    
அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.
கீழே கொடுத்துள்ள ஒளிப்படக்காட்சியில் உதட்டுக்குக் கீழ் உள்ள புள்ளியான REN 24 ம், உதட்டுக்கு மேல் உள்ள புள்ளியான DU26 ம் ஒரு சேர மசாஜ் செய்வதால் இந்த இரண்டு முக்கியமான சக்தி ஓட்டப் பாதைகள் வெகு வேகமாக சக்தியூட்டப்பட்டு உடல் வளம் பெருகிறது.வலிப்பு வந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும்,பேய் பிடித்து ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஹிஸ்டீரியா வந்து கத்திக் கொண்டிருப்பவர்களுக்கும்,மன நோயால் கடும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்க உடனே கட்டுப்பாட்டிற்கு வருவார்கள்.



மற்றொரு மடலில் சந்திப்போம்.
நன்றி
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

  1. சித்த மருத்துவத்தை பற்றி பல நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். நானும் Follower ஆக சேர்ந்து விட்டேன். நேரம் இருக்கும் போது உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவல்.

    என் வலைபக்கத்திற்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. உங்கள் வலைப் பூவின் தரம் நன்கு நாலு பேர் பிழைக்கும் வண்ணம்,வழி காட்டும் வண்ணம் இருக்கிறது.எனவே இதற்கு இணைப்பு கொடுத்தேன் என்று கூறுவதைவிட இன்னும் பலருக்கு வழி காட்டினேன் என்பது பொருத்தமானது.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. i have more interest in alternative medicine system in particular accupunture. kodi "Nandrikal" for your sharing mindset Doing well keep going

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு உமா தேவி அவர்களே,
    தெரிந்ததை சொன்னால் அறிவு இரண்டு மடங்கு ஆகிறது.உங்களிடமும் என்னிடமும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அன்புமிக்க அய்யா அவர்களுக்கு,
    மிகத் தெளிவான விளக்கம். தொலைதூர கல்வி போலவே உணர்கிறேன், அதுவும் இலவசமாக.
    நன்றிகள் பல,
    என்றும் அன்புடன்,
    முத்துக்குமரன்

    ReplyDelete
  6. அன்புமிக்க அய்யா அவர்களுக்கு,
    மிகத் தெளிவான விளக்கம். தொலைதூர கல்வி போலவே உணர்கிறேன், அதுவும் இலவசமாக.
    நன்றிகள் பல,
    என்றும் அன்புடன்,
    முத்துக்குமரன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்