மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, August 20, 2011

மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்

மதிகெட்ட மத்தியஅரசும், அரசாங்கத்துக்கு(ஆரோக்கியம் பற்றி) ஆலோசனை கூறும் மதியில்லா அரசியல் ஆலோசகர்களும்(பாகம்2)அன்புள்ள பதிவு வாசகர்களே,
நமது அரசு அணு ஆயுத பரிசோதனை செய்த போது அமெரிக்கா நமது நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது.ஆனால் இந்தத் தடை நமக்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


எனவே அதன் காரணத்தை ஆராய்ந்த அமெரிக்கா நமது விவசாயம்தான் நம்மை கவசம் போல காக்கிறது என்பதை கண்டு கொண்டது.எனவே நமது விவசாயத்தை தொலைத்துக் கட்டும் முயற்சியில் இறங்கியது.அதற்காகவே நமது நாட்டில் நுழைந்தது மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி.


நமது நாடு பல்லுயிரினப் பெருக்கம் உள்ள நாடு. அதாவது நமது நாட்டில் பலவிதமான தாவர, விலங்கு, கடலுயிரினங்கள் கொண்ட நாடு. வேறெந்த நாட்டுக்கும் இந்தச் சிறப்பு இல்லை. இறைவன் அவ்வாறு நம் நாட்டை படைத்துள்ளான். இப்படி ஒரு இறைவனின் கொடையை கொடூரமாக சிதைக்க வந்த அரக்கன்தான் மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி.

மான்சான்ட்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி பல தற்கொலை விதைகளை சந்தைப்படுத்தி வருகிறது.இதனால் நேரும் விளைவென்ன தெரியுமா?இந்த தற்கொலை விதைகள் ஒரு முறை மட்டுமே விளைச்சல் கொடுக்கும்.மறுமுறை இந்த விதைகளை விதைத்தால் அவை முளைக்காது. அவை மலடாகிப் போகும்.


இந்த மலட்டு பயிர்களின் மகரந்தம் மற்ற பயிர்களில்,தாவரங்களுடன் மகரந்தச் சேர்க்கை நடந்தால் அனைத்து பயிர்களும்,தாவரங்களும் மலடான இதே போன்ற விதைகளைத்தான் உற்பத்தி செய்யும்.இந்த மலட்டு விதைகள் பல சத்தான அமோக விளைச்சலைக் கொடுக்கும் என்றும்,அதிக மகசூலைத் தரும் என்றும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படுகிறது.


இறைவனுக்குத்(இயற்கைக்கு) தெரியாதா எதை எப்படிப் படைக்க வேண்டும் என்று??????சத்துக் கூடிய விளை பொருட்கள் என்று, வீரியக் கம்பு, கேழ்வரகு, என்று பலதை மரபணு மாற்றியதன் விளைவு ஒன்றிலும் அதன் ருசியும் வாசனையும் இன்றி மண்ணைத் தின்பது போல் உள்ளது.


பலவிதமான சத்துக்களை,தேவையில்லாமல் உடலில் சேர்த்ததன் விளைவு பல பெயர் தெரியாத வியாதிகள்.(எடுத்துக்காட்டாக வீரியப்படுத்தப்பட்ட சோயாவை சாப்பிட்டவர்களுக்கு சிறு நீரக செயலிழப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதைவேறு  தனி இணைப்புகளாக வெளியிட வேண்டாம் என்று எண்ணுகிறேன். தேடியந்திரத்தில் தேடிக் கொள்க!!!) 


தற்போது சர்க்கரை வியாதியும், குழந்தையின்மையும், இதயத் தாக்கு, சிறு நீரக செயல் இழப்பு, பக்க வாதம், இரத்தக் கொதிப்பு சர்வ சாதாரணமாகக் காணப்படும் காரணம் புரிகிறதா?????


நம் பாரம்பரிய விதைகளை நாம் பயிர் செய்யாமல் விட்டுவிட்டதே காரணம்.அவற்றில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை காக்கும் கவசம் இருந்தது. அவற்றை தொலைத்துவிட்டு ஆரோக்கியமற்றவர்களாக அலையத் தயாராக்கிவிட்டதற்கு காரணம் யார்????வேறு யார்???நமது திருவாளர் மத்திய அரசாங்கம்தான்.இந்த மான்சான்ட்டோவின் மலட்டு விதைகளை விளைவிக்கும் நிலங்கள் விஷத்தன்மை அடைந்து விவசாயத்திற்கு தகுதி அற்ற நிலங்களாக மாறிப் போகும்.இவற்றை உண்டால் மனிதர்களும் மலடாகிப் போவார்கள்.(PT பருத்தி விதை, PT கத்திரிக்காய் போன்றவை எல்லாம் இந்த ரகங்கள்தான்)


பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த நம் நாடு மலடான உயிர்களை உற்பத்தி செய்தால் விளைவு நம் நாடு உயிர்களே இல்லாத பாலைவனமாகும்.ஒரு முறை விளையும் விதைகளை வாங்கிப் பயிர் செய்த நம் விவசாயிகளுக்கு அடுத்த முறை விதைக்க விதையின்றி,விதைக்காக மான்சான்ட்டோவிடம் கையேந்த வேண்டும்.


கடைசியில் நிலம் பாழான பின் தற்கொலை செய்து சாவதைத் தவிர வேறு வழியில்லை நம் இந்திய அப்பிராணி விவசாயிக்கு.இந்த நிலையை உண்டாக்கியது யார்???? வேறு யார்???நமது திருவாளர் மத்திய அரசாங்கம்தான்.கீழ்க்கண்ட காணொளிகளைக் காணுங்கள்.  
http://www.youtube.com/watch?v=2UVMLTk8Z4U&feature=related
http://www.youtube.com/watch?v=xy-Tyg_d88A&feature=related
மரபணு சம்பந்தமான பொறியியல்G.E(GENETIC ENGINEERING),மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் GMO'S (GENETICALLY MODIFIED ORGANISMS) நமது மனித சமுதாயத்திற்கு பெரும் கேடாய் முடியப் போகிறது.பல நாடுகளில் இவற்றைத் தடை செய்திருக்கும் சூழ்நிலையில் விவசாயத்தை பெரும் அளவில் செய்து வரும் நம் நாட்டில் இதற்கு வழி வகுத்தால் விளைவு பெரும் சீரழிவு என்பதில் ஐயம் இல்லை.கீழ்க்கண்ட இணைய தளத்தை பார்வையிடுங்கள். 
கீழே கொடுத்திருக்கும் இணைப்புக்கு சென்று இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கும்,தாவர விளை பொருள்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒரு ஓட்டை பதிவு செய்யுங்கள்.இது ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கட்டாயக் கடமை.நிறைவேற்றுங்கள்.
http://www.greenpeace.in/take-action/save-your-food/stop-the-brai-bill-tyf.php
கீழ்க்கண்டவற்றையும் பாருங்கள்.


நன்றி பூவுலகு


அடுத்து இதே போன்ற விஷயத்தின்(விஷங்களின்) தொடர்ச்சியை அடுத்தடுத்த நோயணுகா விதிகள் பதிவுகளில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

5 comments:

 1. கடையில் இருந்து எந்த காய் கறியும் வாங்கவே
  ரொம்ப பயமா இருக்கு ஜி

  இதனால தான் நாங்க எங்க வீட்டில் சிறு இடத்தில்
  முருங்கை, தக்காளி, வெண்டை, கத்திரி, கீரை
  போன்றவைகளை இயற்கையாக பயிரிட்டு
  நாங்களும் பயன்படுத்தி கொண்டு
  நண்பர்களுக்கும் கொடுக்கின்றோம்

  பதிவுக்கு நன்றி சாமீ ஜி

  ReplyDelete
 2. படித்தவர்கள், படித்தவர்கள் என்று சொல்லி இந்த உலகை விஷமாக்கி விட்டோம் இன்னும் வெடிக்க காத்திருக்கும் விபரீதங்களாய் அணு ஆயுதங்கள் வேறு, நமது அடுத்த சந்ததிகளை சக்தியற்றவர்களாய், அரக்கர்களின் கையில் வாழ விட வேண்டிய நிலையில் இருக்கிறோம், உடல், உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய எதையும் கற்பிக்காமல், ஒழுக்கம், நேர்மை எதை பற்றியும் கவலைப்படமால், பணம் சம்பாதிக்கும் கல்வியை திணித்துக்கொண்டிருக்கிறோம்,

  குருவருள் காக்க,
  சரவணன்,
  நன்றி,

  ReplyDelete
 3. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  சொந்தமான இடத்தில் தனது வீட்டுக்கு,கீரைகள் காய்கறிகள்,நமது பாரம்பரிய விதைகளைக் கொண்டு,உரம் போடாமல்,பூச்சி மருந்து அடிக்காமல் பயிர் செய்பவர்களே பெரும் பணக்காரர்களாகத் திகழப்போகிறார்கள்.மற்றவர்கள் எல்லாம் நோய்க்கு வித்திடும் உரம் போட்ட,பூச்சி மருந்தடித்த,மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஆரோக்கியத்தை தொலைத்தவர்களாகவே திகழப் போகிறார்கள்.இதில் அணுவளவும் சந்தேகம் இல்லை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. அன்பு ஐயா,
  தமிழவேள் வணக்கங்கள்.

  கடந்த வாரம் மாடித்தோட்டம் குறித்த கோவைப் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சியில் கலந்து கொண்டேன்.
  Dr . வேல்முருகன் அவர்களின் தடையற்ற பேச்சும், எடுத்தாளும் திறனும் அனைவரையும் கவர்ந்தது....
  ஆனால் பங்கேற்றவர்கள் அவரது திறமை முழுமையையும் அன்னிய கொள்ளை நிறுவனங்களின் விசத்தை நமது மண்ணில் விதைப்பதற்காகவே பயன் படுத்துவதாக உணர்ந்தோம்.

  இயற்கை வேளாண்மை மீதும் இந்திய மக்களின் அறிவியல் மீதும் இந்த நவீன அறிவியல் படித்தவர்கள் காட்டும் வெறுப்பும், பயமும் அவர்களது தோல்வியை குறிக்கிறது.

  தங்கள் பிழைப்புக்காக உப்பை உரமென்றும், விசத்தை மருந்தென்றும், சொத்தையை - மலடை வீரியமென்றும் பொய்கூறித் தன் வாரிசுகளுக்கும் சேர்த்தே சமாதி கட்டும் கல்வியாளர்கள் எப்போது திருந்துவார்கள்.

  நமது வரிப்பணத்தில் படிக்கும் இவர்கள் நம் மண்ணை நஞ்சாக்குபவர்களுடைய எலும்புத்துண்டுகளுக்கு சோரம் போய் விட்டார்களே.

  நாங்கள் இயற்நகை வேளாண்மை குறித்து கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலே வந்த்து. பல்கலை(ளை)க் கழகங்கள் இயற்கை அறிவர்களுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக வேறு வெட்கமில்லாமல் கூறினார்.

  இன்றைய தினமணியின் தலையங்கத்தில் கொள்ளை வணிகர் நலனுக்கான அரசின் சட்டமியற்றும் முயற்சியை கேட்க ஆளில்லை என மனம் வெதும்பியுள்ளார் தினமணி ஆசிரியர்.

  மக்கள் நலனுக்காக மக்கள் பேசுவதைத் தடுக்க சட்டம் வருகிறதாம். இந்த அறிவியல் கோமாளிகள் மக்கள் மருத்துவத்தை சாப்பிட்டு விட்டார்கள் (சாவதற்கும் இவர்களிடம் தான் போக வேண்டும்) இப்போது மக்களின வேளாண் அறிவியலை அழித்து மொத்த குத்தகை வாங்கத் துடிக்கிறது கொள்ளை வணிக கூட்டம்.

  இவர்களிடம் இருந்து நாட்டைக் காக்க சித்தர்கள் தான் மனம் வைக்க வேண்டும். மனம் வையுங்கள்.

  அன்பை மறவா,
  ந.தமிழவேள்

  ReplyDelete
 5. அன்புமிக்க திரு தமிழவேள் நளபதி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  சபாஷ் சரியானபடி சவுக்கடி கொடுக்கிறீர்கள்.எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால் படித்த மேதாவிகளிடையேயும் இன்னும் விழிப்புணர்வு வந்தபாடில்லை என்பதுதான் மிக்க வேதனை அளிப்பதாக இருக்கிறது.பின்னால் விதைகளுக்கே அன்னிய நிறுவனங்களை கையேந்தினாலும் நிலம் பாழ்பட்டுவிட்டால்,சோற்றுக்கும் கையேந்தும் நிலை வந்தே தீரும்.இதை இப்போதும் உணர்ந்து விழிப்புணர்வு பெறவில்லையானால் நாம் சீரழியும் நாள் வெகு சீக்கிரம் என்பதில் சந்தேகம் இல்லை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்