மொழி பெயர்ப்புக் கருவி

Friday, August 12, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 41)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
இப்போது சிறு குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத பரம்பரை சித்த மருந்துவசாலை தயாரித்தளிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.


எனது அம்மாவின் தாத்தா தயாரிக்கும் மருந்துகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் தலையாய மருந்துகளும் உண்டு.அவற்றுள் ஒரு சிறந்த மருந்து கஸ்தூரி மாத்திரை.

கஸ்தூரி என்பது கஸ்தூரி மானின் உடலில் இருந்து கிடைக்கும் ஒரு பொருள்.இதை ஊசியால் குத்தி முகர்ந்து பார்த்தாலும் ஊசியில் வாசனை இருக்கும். இதுதான் சுத்தமான கஸ்தூரிக்கான சோதனை.இதை சேர்த்து செய்யப்படும் மருந்தே கஸ்தூரி மாத்திரை.

சீர் பொருந்திய பார்வதி தேவியானவள் சிவனிடம் ஓடோடி வந்து உலகில் உள்ள குழந்தைகளுக்கு வியாதிகள் பல உண்டாகின்றன.அவை தீர்ந்து குழந்தைகள் நலமாக வாழ ஒரு சிறந்த மருந்தை கூறுவீர்களாக!!!!என்று கேட்கிறார்.

அதற்கு சிவன் உலகக் குழந்தைகளிடம் அன்பு மிக அதிகமாகி மருந்து கூறுகிறார்.கஸ்தூரி குளிகை என்ற மாத்திரையைப் பற்றி கமல முனி என்ற சித்தர் எனக்குக் கூறியுள்ளார்.அதன் விவரம் பூராவும் உனக்குச் சொல்லுகிறேன், என்று சொன்னார்.


பச்சைக் கற்பூரம், கடுகு ரோகணி, கஸ்தூரி, நேர்வாளம்(சுத்தி செய்தது), இலுப்பைப் பூ, குங்குமப்பூ, இவற்றை எல்லாம் சம எடை எடுத்துக் கொண்டு கத்தாழை வேர்ச்சாற்றால் கல்வத்தில் அரைத்து எடுத்து குண்டுமணிப் பிரமாணம் உருட்டி வைத்துக் கொண்டு தக்க அனுப்பானத்தில் கொடுத்து வர திருச்செந்தூரானாகிய முருகனின் கருணா கடாட்சத்தால் பழம்பிறவித் தீவினைப் பயனால் விளைந்த அனைத்து வியாதிகளும் தீரும்.


ஆனால் தற்போது வன விலங்குகள் பாதுகாப்புத் தடைச் சட்டத்தால் சுத்தமான அசல் கஸ்தூரி கிடைப்பதில்லை.இதற்கு சித்தர்கள் வேறு சில பொருள்களைச் சேர்த்து வைப்புச் சரக்காக தயாரிக்கும் முறைகளை சொல்லி இருக்கிறார்கள்.


அத்தகைய வைப்புச் சரக்குடன் மேற்கண்ட மருந்துகள் அனைத்தையும் சேர்க்காவிட்டாலும், கீழ்க்கண்ட சில மருந்துகளைச் சேர்த்து செய்யும் ஒரு பரம்பரை சித்த மருந்துவசாலை பழனி மலையப்பசாமி வைத்தியசாலை.அவர்கள் இதே மருந்தை கஸ்தூரி வைப்பு, சுக்கு, அக்கிராகாரம், கிராம்பு, சாதிக்காய், கோஷ்டம்,  சேர்த்துச் செய்கிறார்கள்.


அதுவும் இப்போதுள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பது நம் கடன்.அதற்கு இந்த மருந்து கைகண்ட மருந்து. 
     
எதிர் காலக் குழந்தைகள் எல்லா உடல் நலமும் மன நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

ஆன்மீக அன்பர்கள் நிறைய பேர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து ,அடுத்த பதிவு ஞானம் பற்றிய முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

1 comment:

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்