மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, March 13, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 2) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.
கடுக்காய்க் பருப்பு
கண்பார்வைப் பலகீனம், கண்பார்வை மந்தம், கண்புகைச்சல், கண்ணில் நீர்வடிதல், கண்ணில் நீர் ததும்புதல், திரை கட்டினது போல் தோற்றும் பார்வை முதலிய இந்த ரோகங்களுக்கு கடுக்காய்க் பருப்பை முலைப்பாலில்(தாய்ப்பாலில்) இழைத்து உபயோகித்து வந்தால் மேற்கண்ட ரோகங்கள் தீரும். பார்வையைப் பலப்படுத்த இது சஞ்சீவிக்கொப்பானது.

கடுக்காய்ப் பெருமை

நாம் முன்னர்ச் சொன்ன பாடலில் சொல்லி இருப்பது போல் கடுக்காயின் மகிமை முழுவதையும் எழுதுவதானால் அதிகக் கஷ்டமே!அநுபான(மருந்துடன் சேர்த்து சாப்பிடுவது, இது மருந்தின் வீரியத்தை அதிகரிக்கும், மருந்தின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவது ) விஷேஷங்களுடன் இது எல்லா வியாதிகளுக்கும் உபயோகமாம். இதனை எப்போதும் கையாள்பவர்கள் எல்லா வியாதிகளிலிருந்து நீங்கியிருப்பார்கள்.

கடுக்காயை உபயோகிக்கும் விதம்
கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக்(கடுக்காயின் பருப்பை நீக்கி வெறும் கடுக்காய்த் தோலும் கடுக்காய்ச் சதைப்பற்றும் மட்டுமே சூரணம் செய்ய வேண்டும்) கற்கண்டுத் தூளுடன் கலந்துட் கொண்டு வரவேண்டும்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.(சுக்கை வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பை தடவி கரியடுப்பில் சுட்டு தோலைச் சீவிவிட்டு, பால் ஆவியில்{பசுவின் பாலை ஒரு வாயகன்ற உயரமான பாத்திரத்தில் ஊற்றி பாத்திரத்தின் வாயை ஒரு வெள்ளைத் துணியை அதன் மேல் கட்டி,சுக்குப் பொடியை அதன் மேல் பரப்பி புட்டை அவிப்பது போல் அவித்து நிழலில் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்} வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்) 

இப்படி சுத்திகரிக்கப்பட்ட சுக்கை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். சுக்கை சுத்தி செய்யாமல் உபயோகித்தால் மூலரோகங்களைத் தூண்டுவதுடன் அல்சர் போன்ற தொல்லைகளையும் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து தரும். எனவே மேற்கூறிய முறையில் சுக்கை சுத்தி செய்தே உபயோகப்படுத்த வேண்டும்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள வேண்டும்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரை தேனிற் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரை வெல்லத்துடன் சம்பந்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.

ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் உப்புடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 


இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)'' என்ற பதிவில் தொடரும்.



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

  1. ரொம்ப நாளா எதிர்பார்த்த பதிவு
    நன்றி ஜி

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. வனக்கம் ஐயா,

    தங்களின் பதிவு என்னை மிகவும் கவர்கிறது உங்கள் படைப்புகள் வியப்பில் அழ்த்துகிறது,

    மிகவும் நன்றி

    ந.ராஜசேகர்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ந.ராஜ சேகர் அவர்களே, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பதிவின் கவர்ச்சி இறைவனின் அருளாசி.இறைவனின் எண்குணங்களில் ஒன்றான வசித்துவம் இறைவன் அருளுவது.அது என் முன்னோர் செய்த பாக்கியம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்