மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, March 30, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுகண்ணியும்

அழுகண்ணியும் தொழுகண்ணியும்
அன்புள்ள பதிவு வாசகர்களே,
சித்தர்களின் மரணம் மாற்றும் மூலிகைகளை(காய கற்பங்கள்) பல நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.சதுரகிரித் தல புராண வரலாறு,போகர் மலை வாகடம் ,கோரக்கர் மலை வாகடம், புலஸ்தியர் கற்பம் 300, போகர் கற்பம் 200 , திருவள்ளுவ நாயனார் கற்பம் 200, போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மலை வாகடம் என்பது என்னென்ன மூலிகைகள் எந்தெந்த இடங்களில் கிடைக்கும் என்பதற்கான குறிப்புக்கள் ஆகும். அந்த மூலிகைகளை தேடி பல காலம் பல இடங்களுக்கு அலைந்துள்ளேன்.


சில அற்புத மூலிகைகளையும் கண்டேன்.அவற்றில் சில வாசக அன்பர்களுக்காக இங்கே தருகிறேன். இதில் தொழுகண்ணி என்ற மூலிகை மனிதன்,மனிதனைக் காணும் போது கை கூப்பித் தொழுவது போல இரு இலைகளையும் ஒன்று சேர்த்து தொழுவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.ஒளிக்காட்சியைக் காணுங்கள்.


சூரியன் உச்சியில் இருக்கும் போது தொழுகண்ணியின் இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது.  


தொழுகண்ணி, அழுகண்ணி, கொட்டைக் கரந்தை (கொட்டைக் கரந்தை மட்டும் பூப்பதற்கு முன் எடுக்க வேண்டும்)இவை மூன்றையும் நிழலிற் காய வைத்து சம எடை எடுத்து கலந்து வைத்துக் கொண்டு தேனிற் குழைத்து உண்ண யானை பலம் உண்டாகும்.நரை திரை மாறும்(வயதாவதால் நரைத்திருக்கும் முடியும், தோலில் விழுந்த சுருக்கமும் போகும்).   இதில் கோரக்கர் மலை வாகடம் 37 ம் பக்கம் ,54 எண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணை எருமை விருட்சம் என்பது இரவில் 12 மணிக்கு எருமை மாடு போல கத்தும் என சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.தித்திப்பான பால் தருவதால் அதற்கு கண எருமை விருட்சம் என பெயரிடப்பட்டதா என்று தெரியவில்லை. 

அந்த இடம் கடுமையான வன விலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் மரம் கத்துமா என்று என்னால் சோதித்துப் பார்க்க இயலவில்லை. அந்த முயற்சி பின்னால் ஒரு வேளை சாத்தியம் ஆகலாம். பொதுவாக சித்தர் நூல்களில் கூறியிருப்பவற்றை கடும் பிரயாசைக்கப்புறமே சோதித்து செய்து பார்த்து அறிய முடிகிறது.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

12 comments:

 1. வனக்கம் ஐயா,
  தங்களின் பதிவு என்னை மிகவும் ஆச்சர்ய படுத்துகிறது சித்த்ர்கள் மனிதனுக்கு உதவ இந்த மூலிகைளை
  எவ்வளவு கடினபட்டு கன்டு பிடித்தார்கள் ஆனால் மனிதர்கள் இவற்றை எல்லாம் மறந்து விட்டு ஆங்கில மருத்துவத்தை
  பின்பற்றுகின்றனர், இவர்களை சித்த வைத்திய முறைக்கு மாற்ற நாம் என்ன செய்ய வேன்டும்.

  தங்களின் அருளாசி விரும்பும்,

  ந.ராஜசேகர்

  ReplyDelete
 2. சாமீ ஜி
  ரொம்ப அதிசயமாக படித்த முதல் பதிவு.
  .
  இன்னும் நிறைய மூலிகைகளை
  தங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆவலாய்

  காத்திருக்கும்
  உங்கள் அன்பன்
  ஷரீப்

  ReplyDelete
 3. அது ஏன் சாமி ஜி சிறிய இலைகள் மட்டும் ஒன்று சேர்கின்றன
  பெரிய இலைகள் அப்படியே இருக்கிறது ?

  ReplyDelete
 4. இன்னும் இது போல் தங்கள் அனுபவங்களை
  எங்களை போன்றவர்களுக்காக தொடர்ந்து
  பதிவிடுமாறு அன்புடன் கேட்கிறேன்

  ReplyDelete
 5. அரசன் புதைத்த புதையல் யாருமே எடுக்க முடியாது
  என்று இருக்கிறதே உண்மையா சாமீ ஜி

  வைரவன் காவல் என்றால் என்ன ஜி ?

  ரொம்ப திகிலா இருக்கு......

  ReplyDelete
 6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ந.ராஜ சேகர் அவர்களே, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இயற்கை மனிதனை அவன் சுய நலத்தால் என்றும் வெறுக்கிறது,அழிக்கவே பார்க்கிறது. ஏனென்றால் மனிதனின் சுய நலத்தால் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான்.சித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்ததால் இயற்கை தன் ரகசியங்களைத் திறந்து காட்டியது.சித்தர்கள் சுய நலமில்லாத நபர்களுக்கு இன்றும் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
  பெரிய இலைகளும் உச்சி வெயிலில் நன்றாக பிரிந்து சேரும்.அப்போது புகைப்படக் கருவியில் நிழல் அதிகமாக விழும்.என்பதால் மாலையில் எடுக்கப்பட்டுள்ளது.இன்னும் பல அற்புத மூலிகைகள் பற்றி பதிவுகள் தொடரும்.மூலிகை பற்றிய விடயம் மட்டுமே கவனிக்கவும்.புதையல் பற்றிய விடயம் நமக்குத் தேவையில்லை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. சாமீ ஜி
  தொட்டால் சிணுங்கி செடியும் இதே போல்
  இரண்டு இலைகளும் ஒன்றாக சேருமே
  சிறு வயதில் அந்த செடிக்கு அருகில் அமர்ந்து
  தொட்டு தொட்டு விளையாடியது மனதில் வந்தது

  நன்றி ஜி

  ReplyDelete
 9. அற்புத இயற்கை படைப்பினைப்பற்றி அரிய தகவல் நன்றி ஐயா

  ReplyDelete
 10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
  தொட்டால் சிணுங்கி,நின்றால் சிணுங்கி,ஆட்காட்டிச் செடி,சேர்ந்தாடும் பாவை,தொட்டாச் சுருங்கி,நேத்திரஞ் சிமிட்டி,நிலம் புரண்டி போன்ற செடிகள் இதே போல சூரியனின் சக்தியைக் கொண்டே பகலில் இயங்குகின்றன். இவற்றைப் பார்த்திருந்தாலும் நான் புகைப்படக் கருவிகளில் பதிந்து வைக்க வேண்டும் என்றோ பின்னாளில் இப்படி ஒரு வலைப்பூ ஆரம்பிப்பேன் என்றோ நினைக்கவில்லை.இப்போது மீண்டும் முயற்சி எடுத்து சேர்த்து வருகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 11. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
  அற்புத இயற்கைப் படைப்பை நான் வியக்காத நாளே இல்லை.மனிதன் இயற்கை கொடுத்திருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டே,இயற்கை விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏதோ செய்து பார்த்துவிட்டு கண்டுபிடித்துவிட்டேன் கண்டுபிடித்துவிட்டேன் என்று உளறுவது எவ்வளவு பெரிய மதியீனம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 12. very interesting and rare medisons swami .

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்