மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, March 23, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.


கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால் 
அதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.

மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த   வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.


ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

1 comment:

  1. இந்த பதிவு இப்பதான் புரியுது
    நன்றி சாமி ஜி

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்